NFTECHQ

Tuesday, 25 October 2016

மருத்துவமனை அங்கீகாரம்

தமிழ் மாநில நிர்வாகம் ஒரு உத்தரவை 25.10.2016 அன்று வெளியிட்டுள்ளது.

"அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தொழிற்சங்கங்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளை நமது நிர்வாகமும் அங்கீகரிக்க வேண்டும்.

இப்பணியை 15.11.2016க்குள் முடிக்க வேண்டும்.


இந்த மருத்துவமனைகளில் கடன் அல்லது ரொக்கம் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாலாம்"  
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசே!
பி எஸ் என் எல்
நிறுவனத்தின்
60000 செல் டவர்களை உள்ளடக்கிய தனி "டவர் கார்ப்பரேசன்"
அமைக்கும் திட்டத்தைக்  கைவிடு
என வலியுறுத்தி

ஆர்ப்பாட்டம்
நாள்  27.04.2016 வியாழக்கிழமை
காலம் மாலை 4 மணி
இடம் GM அலுவலகம்
அனைவரும் திரளாகப்
பங்கேற்க வேண்டுகிறோம்
தோழமையுடன்
AIBSNLEA   AIBSNLOA   AIGETOA
NFTEBSNL     TEPU   SEWABSNL   BSNLAU
மாவட்டச் சங்கங்கள்

ஈரோடு மாவட்டம்
சிறப்பான தர்ணா
24.10.2016 அன்று ஈரோடு GM அலுவலகத்தில் NFTE-TEPU-SEWA BSNL அமைப்புகளின் சார்பாக 11 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிறப்பான தர்ணா நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.


பங்கேற்று சிறபிபித்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

Sunday, 23 October 2016

வாழ்த்துபோம்
பாராட்டுவோம்
கபடி உலககோப்பை யில்
தொடர்ந்து 3-வது முறையாக
சாம்பியன் பட்டம் வென்று
இந்தியா சாதனை.

சாதனை படைத்த
 இந்திய அணி வீரர்களைப்

பாராட்டி வாழ்த்துவோம்.

Saturday, 22 October 2016

எங்கேயும் எப்போதும்

தாமதம்...
இந்தச் சொல்லின்  மிகச் சரியான
இலக்கனம் தான்  நமது நிர்வாக செயல்பாடா?

பல ஆண்டுகள் வனவாசத்துக்குத் துரத்தப்பட்ட போனஸ் இந்த ஆண்டில் திரும்பி வந்தது.

07.10.2016 அன்று போனசுக்கான
உத்தரவு வெளியானது.

"போனஸை விட்டுக்கொடு
அல்லது தள்ளிப்போடு" என்று இயக்குனர் (மனிதவளம்) 10.10.2016 அன்று வேண்டுகோள் விடுக்கிறார்.

நான்கு நாட்கள் கஷ்டப்பட்டு உழைத்து
14.10.2016 அன்று அந்த வேண்டுகோளின் படிவம் வெளியிடப்படுகிறது.


போனசை விரைபில் பட்டுவாடா செய்யுமாறு 14.10.2016 அன்று உத்தரவிடப்படுகிறது.

24.10.2016க்குள் விட்டுக் கொடுத்தல்/தள்ளிப் போடுதல் குறித்த விருப்பம் தருமாறு 21.10.2016 அன்று உத்தரவு வெளியாகிறது.

07.10.2016 அன்று வெளியான உத்தரவுக்கு 21.10.2016 வரை காகித உத்தராவுகள் மட்டுமே வருகிறது.
காந்தி சிரிக்கும் காகிதம் கைகளில் வரவில்லை.

"புன்னகையுடன் சேவை செய்து
போட்டியைச் சந்திக்க வேண்டும்"
ஊழியர்களுக்குத் தரும் அறிவுரை இது.

ஆனால் 3000 ரூபாயைக் கொடுக்கும்
உத்தரவுக்கு 18 நாட்கள் சிகிச்சையா?
டிஸ்சார்ஜ் தேதியும் தெரியவில்லை.

எப்போதுதான் வரும்? என்று
சொல்ல முடியாத ஒரு நிலை.

எங்கேயும்
எப்போதும்
தவறுகளும்
தாமதமும்
தொடர்கதை.

என்று தணியும்
இந்த தாமத சோகம்?

எப்போது விடியும்

விரைவான செயலாக்கம்?

Friday, 21 October 2016

பெருந்துறையில் மாற்றம்

பெருந்துறை கிளையின் பொதுக்குழுக்கூட்டம் 20.10.2016  அன்று நடைபெற்றது.

கீழ்க்கண்ட முடிவுகள் ஒரு மனதாக எடுக்கப்பட்டன.

கிளைச்செயலர் தோழர் மெளனகுருசாமி
மாவட்டப் பொருளராகத் தேர்வு செய்யப்பட்டதால் கிளைச்செயலர் பதவியிலிருந்து
விலகுவதாகத் தெரிவித்த விருப்பம் ஏற்கப்பட்டது.

தோழர் P.சுப்ரமணியம் OS
கிளைச்செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தோழர் L.பரமசிவம் TT
உதவிச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வு செய்யப்பட்ட  புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

பதவியை விட்டுக் கொடுக்கும்
மனப்பான்பையுடன் செயல்பட்ட

தோழர் மெள்னகுருசாமிக்கு பாராட்டுக்கள்.

Thursday, 20 October 2016

தகவல்கள்
வதந்திகளை நம்பாதீர்

போனஸ் பற்றி பல வதந்திகள் உலவுகின்றன.

போனஸ் பட்டுவாடாவுக்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

கார்ப்பரேட் அலுவலகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

25.10.2016க்குள் போனஸ் கிடைக்கும்.

இந்த மாத சம்பளம்

தீபாவளி பண்டிகை 28 மற்றும் 29 தேதிகளில் வருவதால் இந்த மாதச் சம்பளத்தை 25.10.2016 அன்று பட்டுவாடா செய்யுமாறு ந்மது மத்திய் சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

NFTE அணியில் இணைந்த
 மேலும் ஒரு அமைப்பு


BTEU BSNL அமைப்பு நமது NFTE-TEPU-SEWA-PEWA கூட்டமைப்பில் இணைந்துள்ளது.