NFTECHQ

Sunday 31 March 2013

தினம் ஒரு கேள்வி - மூன்று

“போனஸ்  என்பது கொடுபடா ஊதியம்” என்பதை அனைவரும் அறிவர். ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்கினாலும், நட்டத்தில் இயங்கினாலும் 13 வது மாத ஊதியம் என்ற அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு உண்டு. அது சி.ஐ.டி.யூ சங்கத்தின் வழிகாட்டுதல்படி  செயல்படுகிறது. அப்படிப்பட்ட சங்கம் போனஸ் வழங்கப்படுவதை லாபத்துடன் இணைந்து உடன்பாடு போட்டது. தன்னை இடதுசாரி, புரட்சிகர சங்கம் என பறைசாற்றிக் கொள்ளும் ஒரு சங்கத்தின் செயல்பாடு சரியானது தானா?  தோழர் குப்தா உற்பத்தியோடு இணைந்த போனஸ் உடன்பாடு கண்ட போது அவரை அவதூறு செய்தார்கள். ஆனால் அங்கீகார அதிகாரம் கிடைத்தவுடன் போனஸை லாபத்துடன் இணைத்து உடன்பாடு போட்டார்கள். இந்த ஒரு மாபெரும் தவறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்தபட்ச போனஸ் கூட பி.எஸ்.என்.எல்.ஊழியர்களுக்கு இல்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் பொதுத்துறை நிறுவன இலாக்கா பி.எஸ்.என்.எல். நிறுவனம் “மிகச் சிறப்பாக” செயல்படுவதாக சான்றளித்துள்ளது. போனஸை லாபத்துடன் இணைத்த காரணத்தால் நிர்வாகம் போனஸ் தர மறுக்கிறது. இதை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளது. இது சரியா?
நன்றி: சென்னை இணைய தளம்.

Saturday 30 March 2013

தினம் ஒரு கேள்வி - இரண்டு


புதிய பதவி உயர்வு திட்டம் குறித்து பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் மிகப் பெரும் சாதனையாக சொல்லிக் கொள்கிறது. பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதவி பெறுகிறார்கள். ஆனால் ஊழியர்களுக்கோ 8 ஆண்டு இடைவெளி என்பதால் இரண்டு பதவி உயர்வுகள் மட்டுமே பெறுகிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்? பதவி உயர்வு காரணமாக பெறவேண்டிய ஊதிய நிலுவையை  பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சரண்டர் செய்தது ஏன்? பதவி உயர்வில் நியாயமாக எஸ்.சி / எஸ்.டி ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டினை நிர்வாகம் மறுத்ததை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஏன் ஏற்றுக் கொண்டது? பதவி உயர்வுக்கான சேவையில் 2000 க்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் 2000 க்குப் பின் வேலையில் சேர்ந்தவர்கள் என வேறுபாடு காட்டுவதை பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஒப்புக் கொண்டது ஏன்?
நன்றி: சென்னை இணைய தளம்.

Friday 29 March 2013

தினம் ஒரு கேள்வி


2000 அக்டோபர் முதல் தொலைத் தொடர்பு துறை பொதுத் துறையானதுதான் இன்று பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அனைவரும் எதிர் கொள்ளும் அனைத்து கஷ்டங்களுக்கும் காரணம் என பிரச்சாரம் செய்கிறார் தோழர் அபிமன்யூ. அது உண்மையானால் அவர் ஏன் 6வது தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்கிறார்? பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர்ந்து மத்திய பொதுத் துறையாக நீடிக்கும் என்பதோடு அது மீண்டும் அரசு துறையாக மாறப் போவதில்லை. நலிவடைந்த நிறுவனத்தில் ஊழியர் பிரச்னைகள் எதையும் அபிமன்யூ தீர்க்கப் போவதில்லை. அப்படியானால் ஊழியர்கள் ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? பொதுத் துறை நிறுவனத்தில் ஊழியர் பிரச்னைகளை தீர்க்க முடியாத சங்கத்திற்கு வாக்களித்து தங்களின் வாக்குகளை வீணாக்குவானேன்?  நம்முடைய கேள்வி: டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசில் எல்லாம் சரியாக இருக்கிறது என்கிறாரா அபி?
நன்றி: சென்னை இணைய தளம்

Thursday 28 March 2013

தேர்தல் சிறப்புக் கூட்டம்


தேர்தல் சிறப்புக் கூட்டம்

         02.04.2013 செவ்வாய் கிழமை
      மாலை சரியாக 5 மணி.
      டெலிபோன் பவன், ஈரோடு

தலைமை
தோழர் கே.ராஜமாணிக்கம்


சிறப்புரை 

தோழர் C.K.மதிவாணன்
துணைப் பொதுச் செயலர்.  



சங்க முழக்கம்
 தேர்தல் சிறப்பிதழ். வெளியீடு
அனைவரும் வருக!
_________ஈரோடு மாவட்ட சங்கம் _______


   

Monday 25 March 2013

மறைப்பது ஏன்?


வங்கி ஊழியர்களைக் காட்டிலும் இன்று BSNL ஊழியர்கள் கூடுதலாக சம்பளம் பெறுகிறார்கள் என பட்டியலிட்டு மகிழ்கிறார் தோழர் அபிமன்யூ. அப்படி ஒரே ஒரு மகிழ்ச்சியாவது அவருக்கு தேவைதான்.

ஒன்பதாவது உடன்பாட்டின் அடிப்படையில் 01.11.2007 முதல் 31.12.2012  வரை ஐந்தாண்டுகள் வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாடு அமுலில் இருந்தது. 01.01.2007 முதல் BSNL ஊழியர்களுக்கான ஊதியம் அமுலில் உள்ளது. அது 2017 வரை நீடிக்கும். 01.01.2013 முதல் வங்கி ஊழியர்களுக்கு 10வது ஊதிய உடன்பாட்டின்படி புதிய ஊதியம் கிடைக்கும். அது இன்று அவர்கள் வாங்கு வதைக் காட்டிலும், நாம் இன்று பெற்று வருவதைக் காட்டிலும், கூடுதலாக இருக்கும். ஆகவே தோழர் அபிமன்யூவின் மகிழ்ச்சி சிறிது காலம் மட்டுமே இருக்கும். 2017 இல் மீண்டும் BSNL ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் ஏற்படும். 2018 இல் வங்கி ஊழியர்கள் புதிய சம்பளம் பெறுவார்கள் அப்போதும் அவர்கள் நம்மை விட கூடுதலாகப் பெறுவார்கள். எனவே இன்று நாம் கூடுதலாகப் பெறுகிறோம் என்பதில் எந்த பெருமையும் இல்லை.

உண்மையில் வங்கி ஊழியர்கள் பெறாத மருத்துவப்படியை மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெற்று வந்தோம். இன்று அதை இழந்துள்ளோம் அதுவும் தோழர் அபிமன்யூவின் அங்கீகார காலத்தில். LTC, விடுப்பைக் காசாக்குவது, இன்செண்டிவ், போனஸ் ஆகியவற்றை இழந்து விட்டோம். இவைகளை இழக்காமல் இருந்திருந்தால் நாம் எப்போதும் வங்கி ஊழியர்களைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்றுக் கொண்டிருப்போம். அங்கீகார சங்கத்தின் நல்ல தூக்கத்தினால் ஏராளமாக இழந்து விட்டோம். அது தொடராது இருக்க, இழந்தவைகளை மீட்டிட வாக்களிபோம் NFTE க்கு வளமான வாழ்வு காண்போம்!

Thursday 21 March 2013

தேர்தல் சிறப்பு செயற்குழு 21.03.2013


ஈரோடு மாவட்ட சிறப்பு செயற்குழு அந்தியூர் குருநாதசாமி வனத்தில் இயற்கை சுழலில் நடைபெற்றது. தோழர் கே.ராஜமாணிக்கம் தலமை ஏற்று எதிர் வரும் சரிபார்ப்பு தேர்தல் தொடர்பான பணிகள் பற்றி விரிவாக விளக்கினார். மாநில துணைச் செயலர் தோழர் யாசின் வரும் தேர்தலில் NFTE சங்கம் வெற்றி பெற்று முதன்மைச் சங்கமாக ஆக்கிட ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி பட்டியலிட்டார். ஆய்படுபொருளை அறிமுகம் செய்து நடைபெற்ற தேர்தல் தொடர்பான பணிகள், கடமைகள் பற்றி விளக்கினார்.
கிளைச் செயலர்கள் தோழர்கள் தங்கமணி, செந்தில், பத்மநாபன், நாகராஜன், வெங்கடேசன், சுப்பிரமணி, முருகசாமி, மகேந்திரன், ஆறுமுகம், கிருபாகரன், பால்ராஜ்  மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் லாசர், ஆறுமுகம், ராஜேந்திரன், புண்ணியகோட்டி, ராமன், குலோத்துங்கராயன், ஈஸ்வரன், ஜெயராமன், மெளனகுருசாமி, ரங்கநாதன் ஆகியோர் தேர்தல் பணிகள் பற்றி தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.
அறிக்கைகள், நோட்டீஸ்கள், பேனர்கள் கிளைகளுக்கு வழங்கப்பட்டன. முன்னணி தோழர்கள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
தோழர் மாலி வரும் தேர்தலின் சிறப்பு, வாக்கு எண்ணிக்கையை உயர்த்துவதற்கான உத்திகள் பற்றி விளக்கினார்.
தொடர்ந்து கூடுதல் வாக்குகள் பெற்று வருவது ஈரோட்டின் சிறப்பு. இம்முறை மாவட்டத்தில் முதன்மை சங்கமாக வெற்றி பெற அனைவரும் சபதம் ஏற்றனர்.
செயற்குழுவிற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்த அந்தியூர் கிளைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Friday 15 March 2013

தேர்தல் கால அவசரம்!


கில இந்திய தலைவர் நம்பூதிரி மற்றும் துணைத் தலைவருடன் கடந்த மார்ச் 12 அன்று டெலிகாம் தொழிற்சாலை பொதுமேலாளர் திரு ராஜேஸ் குமார் அவர்களை டெல்லி தலைமை அலுவலகத்தில் சந்தித்து டெலிகாம் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்தனர் என்கிறது அந்த சங்கத்தின் இணைய தளம்.  சங்க பிரதிநிதிகள் சில மிக மிக முக்கியமான பிரச்னைகள் அதுவும் கடந்த தேசிய குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டவை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாம். அத்தோடு மும்பை டெலிகாம் தொழிற்சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது குறித்து குறிப்பிட்டு விரைவில் பதவி உயர்வு வழங்குமாறு கேட்கப்பட்டதாம்.  இவை செய்திகள்.

நமது கேள்வி கடந்த 8 ஆண்டு அங்கீகார காலத்தில் மிக மிக முக்கியமான டெலிகாம் தொழிற்சாலை பிரச்னைகள்  பற்றி தேசிய குழுவின் கடைசி கூட்டத்தில் தான் பேச முடிந்ததா?  அங்கு பேசி முடிவு காண முடியாமல் போனது ஏன்?  தேசிய குழுவில் பேசி தீர்வு காண முடியாத பிரச்னைகளை ஒரு பேட்டியில் தீர்வு காண முடியுமா? யாரை திருப்திப் படுத்த இந்த நாடகம்?  டெலிகாம் தொழிற்சாலை பிரச்னைகளை அக்கறையுடன் தீர்வுகாண தங்கள் சங்கம் முயற்சி செய்வதாகக் காட்டிக் கொள்வது தேர்தல் கால தேவை என்பது புரிகிறது. தொழில்பற்றி, தொழிலாளர்கள் பற்றி உண்மையான அக்கறையுடன் பல காலம்  செயல்படாமல் இருந்தார்கள் என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமே அவர்களின் இணையதளச் செய்தி.  மீண்டும் மீண்டும் சிரிப்பு பார்க்கலாம் ரசிக்கலாம். ஆனால் வீணாகப் பொழுதைக் கழித்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கலாமா? எனவே NFTE க்கு வாக்களிபோம்! புதிய வரலாறு படைப்போம்!

Saturday 9 March 2013




நல்ல துவக்கம்!

       ஈரோடு மாவட்டத்தில்  உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் பிரச்சார இயக்கம் இன்று துவங்கியது. கோபிசெட்டிபாளையத்தில் முதல் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கிளையின் துணைத் தலைவர் தோழர் நாகராஜ் தலைமையேற்றார். மாவட்ட துணைச் செயலர் தோழர் லாசர் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் தோழர் கே.பங்காரு துவக்க உரையாற்றினார். கோவை மாவட்டச் செயலர் தோழர் என்.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில துணைச் செயலர் தோழர் எல்.சுப்பராயன் சிறப்புரையாற்றினர். திரளாக ஊழியர்கள் பங்கேற்றனர். தோழர் கணேசன் நன்றி கூறினார். நல்ல துவக்கம் இது . . . நல்ல முடிவினையே தரும்! 

முதன்மைச் சங்கமாக



தமிழகத்தில் நமது NFTE பேரியியக்கம் வெற்றி பெற்று
முன்மைச் சங்கமாகப் பரிணமிக்க தலைவர்களின்
சுற்றுப்பயணத் திட்டம்.
மாவட்டம்
நிர்வாகிகள்
கோவை

ஜெயராமன், சுப்பராயன், பரிமளம், அசோக்ராஜன்
கடலூர்
அசோக்ராஜன், சுப்பராயன்
ஈரோடு
ஜெயராமன், அன்பழகன், பரிமளம்
காரைக்குடி
சுப்பராயன், அன்பழகன்
நாகர்கோவில்
சண்முகம், அன்பழகன்
தூத்துக்குடி
பரிமளம், அசோக்ராஜன்
விருதுநகர்
செல்வசுப்ரமணியன்
நெல்லை
ஜெயராமன்.
தஞ்சை
ஜெயராமன், சுந்தரம், சுப்பராயன்
திருச்சி
சுந்தரம், சுப்பராயன், பரிமளம், ஜெயராமன்
வேலூர்
சுப்பராயன், ஜெயராமன்
மதுரை
பாபநாசம், ஜெயராமன்
கும்பகோணம்
சுப்பராயன், ஜெயராமன்

                                               

வாக்களிப்பீர் ! வெற்றி பெறச் செய்வீர்!!

Friday 8 March 2013

போதுமடா சாமி!


 

வங்கி துறையில் ஊழியர்களின் ஊதியங்கள் நிர்வாகத்துடன் நேரடி பேச்சு வார்த்தை மூலம் முடிவு செய்யப்படுகின்றன. அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு காண்பது அங்கு வழக்கம். ஒன்பதாவது உடன்பாடு 01.11.2007 முதல் 31.12.2012  வரை ஐந்தாண்டுகள் அமுலில் இருந்தது.  பத்தாவது உடன்பாடிற்கான பேச்சு வார்த்தை 22.02.13 அன்று அதிகார பூர்வமாக துவங்கி விட்டது. விரைவில் பேசி முடிக்க சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

2002 இல் நமது நிறுவனத்தில் முதல் சம்பள உடன்பாட்டிற்கான பேச்சு வார்த்தை தோழர் குப்தாவின் முன் முயற்சியால் அனைத்து சங்கங்கள் இணைந்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி நான்கே மாதங்களில் உடன்பாடு காணப்பட்டது. நல்ல ஊதிய உயர்வு, ஐந்தாண்டு காலத்திற்கானது. அது ஒற்றுமையின் வெற்றி.

இரண்டாவது ஊதிய உடன்பாடு 01.01.2007 முதல் அமுலாக வேண்டியது. நிர்வாகம் பலமுறை வற்புறுத்தி கேட்ட பிறகே ஊதிய கோரிக்கை பட்டியலை தோழர் நம்பூதிரி தந்தார். அவ்வளவு பொறுமை!  அவர் மட்டுமே தனியாக உடன்பாட்டில் கையொப்பம் இடுவேன் என அடம்பிடித்தார். ஊதிய கோரிக்கை குறித்த சரியான, தெளிவான கொள்கை ஏதும் இல்லாததால் காலம் வீணானது. ஒரு கட்டத்தில் நிர்வாகம் என்ன தருவதாக சொன்னதோ அதையே காலம் தாழ்ந்து 2010 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டு உடன்பாடு கண்டார் நம்பூதிரி. ஒன்றுபடாமல் தனித்து தடுமாறியதன் விளைவு
-      கால தாமதம்
-      78.2 சத அகவிலை இணைப்பிற்கு பதிலாக 68.8 சத இணைப்பு
-      ஐந்து ஆண்டுகளுக்கான உடன்பாடு என்பதற்கு பதிலாக பத்து ஆண்டுகளுக்கான ஊதிய மாற்றம்.
இவை தான் இங்கே அபிமன்யூ, நம்பூதிரி சாதனை.  
போதுமடா சாமி!

Tuesday 5 March 2013

வாழ்த்துவோம்!

இன்று தோழர் க.ராஜமாணிக்கம் - தோழியர் உஷா ராஜமாணிக்கம் தங்களின் 34வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு நமது இனிய வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

Monday 4 March 2013



ஊக்கமது கைவிடேல்!
பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கப் போகிறார்கள். இது அவர்கள் சந்திக்கவிருக்கும் ஆறாவது தேர்தல். எனவே புதிதல்ல. ஆனால் இது கடந்த ஐந்து தேர்தல் போல் அல்ல. ஏனெனில் இம் முறை அதிக வாக்குகளைப் பெறும் ஒரு சங்கத்திற்கு மட்டும் அங்கீகரம் என்ற பழைய நடைமுறை இல்லை. பெறும் வாக்குகளுக்கு ஏற்றவாறு சலுகைகள் உண்டு. இது போட்டியை கடுமையாக்கியுள்ளது. கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டு தங்கள் தனித்தன்மையினை நிலை நாட்டிடும் ஆவல் கூடியுள்ளது. போட்டியிடும் சங்கங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. 18 சங்கங்கள் களத்தில் உள்ளன.

நிர்வாகத்தின் உத்திரவினை மேலோட்டமாகப் பார்த்தால் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் சட்டங்களில் ஓட்டையை கண்டுபிடித்து பயன்படுத்தும் புத்திசாலிகள் உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐம்பது சதத்திற்கு மேல் வாக்குகள் பெற்றுவிட்டால் அனைத்து சலுகைகளையும் ஒரே ஒரு சங்கம் அனுபவிக்க முடியும். எனவே தன் வசமுள்ள அனைத்து ஆயுதங்களையும் முழுமையாக அவர்கள் பயன்படுத்தக் கூடும்.

போட்டியிடும் சங்கங்கள் சமதளத்தில் போட்டியிடவில்லை.  கடந்த எட்டு ஆண்டுகால அங்கீகார வாய்ப்பினை பெற்றதால் அந்த சங்கம் தனது ஆதிக்கத்தை நிறுவன வடிவில் அமைத்துக் கொண்டுள்ளது. எனவே  அந்த பலமான ஆதிக்கத்தை எதிர்த்து போட்டியில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வது அவசியம். அது ஆதிக்கத்தை எதிர்த்து முறியடிப்பதற்கான வாய்ப்பு என்ற உணர்வினைத் தரும். அந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முனைப்புடன் செயல்பட வேண்டும், திட்டமிட வேண்டும்.

கடந்த எட்டு ஆண்டுகளில்  உறுதியான கொள்கைப் பிடிப்பு இல்லாத அணுகுமுறை காரணமாக சிந்தனையில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாம் பலவற்றை இழப்பதற்கு காரணமாகிவிட்டது.

படைப்பாளி என்பவர் யார்? என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? எவற்றை மாற்றிட வேண்டும்? எது சாத்தியம் என்பதை தெளிவாக கூறுபவரே படைப்பாளியாவார்!  அப்படிப்பட்ட படைப்பாளி இல்லாமையால் நாம் பெற்றுக் கொண்டிருந்தவைகளை இழந்து நிற்கிறோம்.  காரணம் என்னவென்று அறிந்தும் கைபிசைந்து நிற்கிறோம். ஆனால் காலம் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினை அளித்துள்ளது.

ஒரு நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் வாய்ப்பு நம் முன் உள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம்.  ஒவ்வொரு ஊழியரையும் நேரில் சந்திப்போம்.  இழந்தவைகள் பற்றி விளக்குவோம். இழப்பதற்கு காரணமானவர்களை சுட்டிக் காட்டுவோம். அவர்களுக்கு மீண்டும் வாய்பளிப்பதா? நம் கை விரலைக் கொண்டு நம் கண்களைக் குத்திக் கொள்வதா? வேண்டவே வேண்டாம் அந்த விபரீதம் என்பதை தெளிவுபட புரிய வைப்போம்.  சிலந்தி விடா முயற்சியுடன் வலை பின்னுவதைப் போல நம்பிக்கையுடன், விடா முயற்சி செய்வோம். மெய் வருந்த கூலி கிடைக்கும். ஊக்கமது கைவிடேல்!