NFTECHQ

Monday 25 March 2013

மறைப்பது ஏன்?


வங்கி ஊழியர்களைக் காட்டிலும் இன்று BSNL ஊழியர்கள் கூடுதலாக சம்பளம் பெறுகிறார்கள் என பட்டியலிட்டு மகிழ்கிறார் தோழர் அபிமன்யூ. அப்படி ஒரே ஒரு மகிழ்ச்சியாவது அவருக்கு தேவைதான்.

ஒன்பதாவது உடன்பாட்டின் அடிப்படையில் 01.11.2007 முதல் 31.12.2012  வரை ஐந்தாண்டுகள் வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உடன்பாடு அமுலில் இருந்தது. 01.01.2007 முதல் BSNL ஊழியர்களுக்கான ஊதியம் அமுலில் உள்ளது. அது 2017 வரை நீடிக்கும். 01.01.2013 முதல் வங்கி ஊழியர்களுக்கு 10வது ஊதிய உடன்பாட்டின்படி புதிய ஊதியம் கிடைக்கும். அது இன்று அவர்கள் வாங்கு வதைக் காட்டிலும், நாம் இன்று பெற்று வருவதைக் காட்டிலும், கூடுதலாக இருக்கும். ஆகவே தோழர் அபிமன்யூவின் மகிழ்ச்சி சிறிது காலம் மட்டுமே இருக்கும். 2017 இல் மீண்டும் BSNL ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் ஏற்படும். 2018 இல் வங்கி ஊழியர்கள் புதிய சம்பளம் பெறுவார்கள் அப்போதும் அவர்கள் நம்மை விட கூடுதலாகப் பெறுவார்கள். எனவே இன்று நாம் கூடுதலாகப் பெறுகிறோம் என்பதில் எந்த பெருமையும் இல்லை.

உண்மையில் வங்கி ஊழியர்கள் பெறாத மருத்துவப்படியை மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெற்று வந்தோம். இன்று அதை இழந்துள்ளோம் அதுவும் தோழர் அபிமன்யூவின் அங்கீகார காலத்தில். LTC, விடுப்பைக் காசாக்குவது, இன்செண்டிவ், போனஸ் ஆகியவற்றை இழந்து விட்டோம். இவைகளை இழக்காமல் இருந்திருந்தால் நாம் எப்போதும் வங்கி ஊழியர்களைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்றுக் கொண்டிருப்போம். அங்கீகார சங்கத்தின் நல்ல தூக்கத்தினால் ஏராளமாக இழந்து விட்டோம். அது தொடராது இருக்க, இழந்தவைகளை மீட்டிட வாக்களிபோம் NFTE க்கு வளமான வாழ்வு காண்போம்!

No comments:

Post a Comment