NFTECHQ

Thursday 18 April 2013

ஒரு வரலாற்றின் முடிவு


டிசம்பர் 31 ஆண்டுதோறும் வரும் நிகழ்வு. பழையன கழிதல் இயல்பானது. கொண்டாட்டத்துடன் துவங்குகிறது புத்தாண்டு.
1954 நவம்பர் 24 ‘தேசிய தபால் தந்தி தொழிலாளர் சம்மேளனம்’  ஒரே ஒரு சங்கமாக தபால் தந்தி துறையில் துவக்கப்பட்ட நாள். 1968 செப்டம்பர் வரை அது நீடித்தது. கருத்துக்கள் பல என்றாலும் சங்கம் ஒன்றே என்பதை அரசும் தொழிலாளரும் ஏற்று செயல்பட்டனர்.  அரசு தனது அதிகார பலத்தால் அதை உடைத்தது. கருத்துக்கொரு சங்கம் என்ற சகாப்தம் துவங்கியது. பொதுத்துறையான பிறகும் ஒரே சங்கம் என்பது தோழர் குப்தாவின் உண்ணத லட்சியமாக இருந்தது. அனால் அதைக் கொள்வார் இல்லாததால் வீணானது.
அவரது கொள்கைகளை ஏற்க மறுத்தவர்கள் கூட அவர் போட்ட பாதையை விடவில்லை. ஒரே ஒரு சங்கம் – அதற்கு மட்டுமே அங்கீகாரம் என்பது நீடித்தது.
6வது தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும். ஒற்றை அங்கீகாரம் இன்றுடன் முடிவுக்கு வரும். ஆளும் கட்சி – எதிர்கட்சி என்ற நிலை முடிந்து விட்டது.
வரலாற்று தேவைகளை உணர்ந்து ஒன்றுபட்டு சிந்திப்பது, செயல்படுவது கட்டாய தேவையாகியுள்ளது.
காலத்தின் தேவையை உணர்ந்து செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு இது.
நல்ல துவக்கம்! நல்ல முடிவுகளைத் தரட்டும்!!

No comments:

Post a Comment