NFTECHQ

Thursday 6 June 2013

நெஞ்சம் மறப்பதில்லை

அவர் குடியிருந்த வீட்டில் ஒரு வீட்டின் முன்அறை வரவேற்பரையாக, தொழிற்சங்க அலுவலகமாக செயல்பட்டது. அன்று தோழர்களுடன் அவரை சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். தொலைக்காட்சியில் கர்ணாடக இசை வழிந்தது. எங்களுடன் பேசியவாரே அவர் அதையும் வெகுவாக ரசித்தார். சொந்த குழந்தைகளுடன் பேசிட நேரமில்லாமிலிருக்கும் அவருக்கு  இசையில் அதுவும் கர்ணாடக இசையில் இவ்வளவு ஈடுபாடா? அவரிடமே கேட்டுவிடுவோமே என்று எனக்கு தோன்றியது. ஆமாம் கர்ணாடக இசையினை இவ்வளவு ஆர்வமாக ரசிக்கிறீர்களே உங்களுக்கு அந்த இசையில் அவவளவு ஈடுபாடா? இது நான். ஏன் இந்த கேள்வி? இது அவர். இல்லை இந்த பாட்டு எந்த ராகம் என்று சொல்வீர்களா? இது எனது கேள்வி. அவர் அதற்கு பதில் சொல்வதற்கு பதிலாக ஒரு கேள்வி கேட்டார். உங்களில் யாருக்காவது இந்த பாட்டு என்ன ராகம் என்று தெரியுமா என்று கேட்டார். நாங்கள் அனைவரும் அப்பாவிகள் என்று ஒரு சேர சொன்னோம். அப்படியா! இந்த பாட்டு ’காபி’  ராகத்தில் அமைந்தது என்று சொன்னார். எங்கள் தலைவர் சகலகலா வல்லவர் என்ற பெருமிதம் எங்களுக்கு. உங்கள் இசை அறிவுக்கு பாரட்டுகள் என்றேன். அதெல்லாம் இல்லை எனக்கு ஒரு விசயம் முதலில் தெரிந்து விட்டது அதனால் எனக்கு பதில் சொல்வதில் சிக்கல் இல்லாமல் போய்விட்டது என்றார் அவர். அப்படி என்ன தெரிந்து கொண்டீர்கள் என நான் கேட்டேன். வழக்கமான அந்த மந்தகாசமான சிரிப்பு அறை முழுக்க பரவியது. சிரிப்பை நிறுத்தி விட்டு சொன்னார் ‘உங்களில் யாருக்கும் ராகம் பற்றிய ஞானம் ஏதுமில்லை என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிந்து கொண்டேன். எனவே நான் எந்த ராகம் பற்றி சொன்னாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனவே எனக்குத் தெரிந்த ஒரு ராகத்தின் பெயரைச் சென்னேன் அவ்வளவு தான்’ என்றார். கேள்விக்கு எதிர் கேள்வி போட்டு பதில் சொன்ன அவரது திறமை வியப்பாக இருந்தது.  இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்.  அவர் மறைந்து விட வில்லை. அனைவரின் நெஞ்சங்களில் நினைவுள்ளவரை வாழ்வார். 

No comments:

Post a Comment