NFTECHQ

Tuesday 30 April 2013

மே தின வாழ்த்துகள்

உலகில்  செல்வங்கள் 
உருவாக காரணமான 
பிரம்மாக்கள் கொண்டாடும் 
ஒரே  விழா. 
ஒரு நாள் 
நிச்சயம் விடியும்! 
உழைப்பவர் தலைமையில் 
அமையும் ஆட்சி! 
இல்லாமை, கல்லாமை 
இல்லாமல் போகும். 
வாழ்த்துகள்!!

Friday 26 April 2013

புதிய வரலாறு

ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கத்திற்கு அங்கீகாரம் என்னும் புதிய வரலாறு துவங்கியுள்ளது. அதை வரவேற்ப்போம். ஊழியர் உரிமைகளைக் காத்திட, இழந்த உரிமைகளை மீட்டிட, நிறுவனம் காத்திட ஒன்றுபட்டு செயல்படுவோம். அரோக்கியமான போட்டியாக இருக்கட்டும். வாய்ப்பளித்த ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. 

Sunday 21 April 2013

இது எப்படி இருக்கு?


தலைப்பு புதிதல்ல. ஆனால் செய்தி புதிது. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் போட்டியிட்ட சங்கங்கள் பெற்ற வாக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. 18 சங்கங்கள் போட்டியிட்டன. தமிழகத்தில் சில மாவட்டங்களில் சில சங்கங்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. ஆனால் வித்தியாசமாக ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து சங்கங்களும் குறைந்தது ஒரு வாக்காவது பெற்றுள்ளது!  இதை ஒரு வகையான சோசலிசம் என்று சொல்லலாமா? 

Saturday 20 April 2013

ஊர் கூடி


தேரோட்டம் நடைபெறும் ஊர்களில் ஊர் கூடி தேர் இழுப்பார்கள். அது ஒரு கூட்டு முயற்சி. பங்கேற்போர் தங்கள் சக்திக்கேற்ப இழுப்பார்கள். தேர் நிலை வந்து சேரும். இது நடைபெற்று முடிந்த தேர்தலுக்கும் பொருந்தும். தமிழகத்தில் நமது உறுப்பினர் எண்ணிக்கையை விட  கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். இது ஊழியர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம்.
கடலூர், காரைக்குடி, கும்பகோணம், சேலம், தஞ்சை, நெல்லை, திருச்சி, வேலூர், மாநில அலுவலக மாவட்டங்கள் வெற்றிக்கான கூடுதல் வாக்குகளைப் பெற்று தந்தன.(2126). கோவை, தருமபுரி, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், நீலகிரி, பாண்டி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப வாக்குகளைப் பெற்றன. இவற்றில் BSNLEU சங்கம் கூடுதலாகப் பெற்ற வாக்குகள் 1382. [2126-1382 =744] மொத்தத்தில் அவரவர் சக்திக்கெற்ப பங்களித்துள்ளனர். நாடு முழுவதும் கோலி சங்கத்திற்கு வாக்குகள் கிடைத்துள்ளது. அதற்கு தமிழன் தான் காரணம் என்பது சரிதானா?  தமிழகத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துரோகிகளை தேடிக் கொண்டிருக்கவில்லை என்பதை கவனிப்பது நல்லது.
இது குறித்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம் ஏனெனில் உடனடியான அடுத்த பணி வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப உறுப்பினர் சேர்க்கும் பணி முன் நிற்கிறது.

Friday 19 April 2013

தேர்தல் முடிவு?

புதிய அங்கீகார விதிகளின்படி இது முதல் தேர்தல். முதல் இரண்டு சங்கங்கள் அங்கீகாரத்துடன் செயல்பட ஊழியர்கள் உத்திரவிட்டுள்ளனர். அவர்களின் முடிவினை ஏற்போம். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்பட உறுதியேற்போம். போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்த  பொதுத் தேர்தலில் 49(ஓ) என்ற வாய்ப்பு தரப்பட்டது. அதைப் போலவே இந்த தேர்தலில் எண் 14 பயன்பட்டுள்ளது. நாடு முழுமையும் அந்த எண்ணிற்கு வாக்களித்துள்ளனர். இது ஏன் என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அதை துரோகம் என்று உதாசீனப்படுத்துவது சரியல்ல.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் காக்க, ஊழியர் நலன் காக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே துவங்குவோம். அதுவே அனைவருக்கும் நல்லது.

Thursday 18 April 2013

ஒரு வரலாற்றின் முடிவு


டிசம்பர் 31 ஆண்டுதோறும் வரும் நிகழ்வு. பழையன கழிதல் இயல்பானது. கொண்டாட்டத்துடன் துவங்குகிறது புத்தாண்டு.
1954 நவம்பர் 24 ‘தேசிய தபால் தந்தி தொழிலாளர் சம்மேளனம்’  ஒரே ஒரு சங்கமாக தபால் தந்தி துறையில் துவக்கப்பட்ட நாள். 1968 செப்டம்பர் வரை அது நீடித்தது. கருத்துக்கள் பல என்றாலும் சங்கம் ஒன்றே என்பதை அரசும் தொழிலாளரும் ஏற்று செயல்பட்டனர்.  அரசு தனது அதிகார பலத்தால் அதை உடைத்தது. கருத்துக்கொரு சங்கம் என்ற சகாப்தம் துவங்கியது. பொதுத்துறையான பிறகும் ஒரே சங்கம் என்பது தோழர் குப்தாவின் உண்ணத லட்சியமாக இருந்தது. அனால் அதைக் கொள்வார் இல்லாததால் வீணானது.
அவரது கொள்கைகளை ஏற்க மறுத்தவர்கள் கூட அவர் போட்ட பாதையை விடவில்லை. ஒரே ஒரு சங்கம் – அதற்கு மட்டுமே அங்கீகாரம் என்பது நீடித்தது.
6வது தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும். ஒற்றை அங்கீகாரம் இன்றுடன் முடிவுக்கு வரும். ஆளும் கட்சி – எதிர்கட்சி என்ற நிலை முடிந்து விட்டது.
வரலாற்று தேவைகளை உணர்ந்து ஒன்றுபட்டு சிந்திப்பது, செயல்படுவது கட்டாய தேவையாகியுள்ளது.
காலத்தின் தேவையை உணர்ந்து செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு இது.
நல்ல துவக்கம்! நல்ல முடிவுகளைத் தரட்டும்!!

Monday 15 April 2013

சிந்திப்பீர் வாக்களிப்பீர்!


அடுத்த மூன்றாண்டுகள் மட்டுமல்ல
நம் அனைவரின் வாழ்க்கையே
உங்கள் கையில்.
சிந்திப்பீர் வாக்களிப்பீர்
ஒன்பது கரங்களில்!

Sunday 14 April 2013

தினம் ஒரு கேள்வி – 13.


முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் திரு. ராஜா 2G  அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக ஊழல் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் தோழர் நம்பூதிரி அன்று அமைச்சர் ராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அமைச்சர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கடிதத்தில் கையொப்பம் இட்டு கொடுத்தார். பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் அமைச்சர் ராஜா எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என தெரிவித்தது. இது ஏன்? TEPU சங்கத்துடனான உறவுக்காகவா? அல்லது வெளியில் சொல்லமுடியாத ஏதாவது காரணத்திற்காகவா?
நன்றி: சென்னை இணைய தளம்.

தினம் ஒரு கேள்வி – 12.


தோழர் அபிமன்யூவும் அவரது தோழர்களும் 78.2 சத அகவிலைப்படி இணைப்பு பெறமுடியாமல் இருப்பதற்கு NFTE மற்றும் பிற சங்கங்கள் தான்  காரணம் என் குறை கூறி வருகிறார்கள். இது முற்றிலும் உண்மை கலப்பில்லாத பொய். தவறான பிரச்சாரம். உண்மை என்ன? லாபத்தில் இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களில் 78.2 அகவிலைப்படி இணைப்புடன் ஊதிய நிர்ணயம் மற்றும் 5 ஆண்டுகள் ஊதிய உடன்பாடு போட DPE வழிகாட்டுதல் இருந்தது. ஆனால் தோழர் நம்பூதிரி ஆணவமாய் தனித்து 2010 இல் ஊதிய உடன்பாட்டில் கையொப்பம் இட்டார். இது தெரிந்தே செய்த குற்றம். விளைவு ஊழியர்கள் இதுவரை 75 மாதங்களில் மொத்தமாக ரூ.6000 கோடி ஊதியத்தில் இழந்துள்ளனர். தனது குற்றத்தை, தனது சரணாகதியை மறைத்து NFTE  மீது அவதூறு செய்வது நேர்மை தானா?
நன்றி: சென்னை இணைய தளம்.

தினம் ஒரு கேள்வி – 11.


இந்திய ரயில்வே இலாக்கா ‘தேய்மான’ செலவுகளுக்கு என ரூ.6000 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதே செலவிற்காக ரூ.9000 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் போனஸ் இழந்துள்ளனர். தேய்மான செலவு என்பது உண்மையில் செலவு அல்ல. அது சேமிப்பு. ஆனால் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் செலவு கணக்கு காட்டி நிறுவனம் ரூ.8000 கோடி நட்டத்தில் இருப்பதாகக் கூறுகிறது. இந்த தவறான கணக்கினை தட்டிக் கேட்காமல் மெளனமாக பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. விளைவு அனைவருக்கும் போனஸ் இல்லை. இது பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் தோல்வி அல்லவா?

நன்றி: சென்னை இணைய தளம்.

Saturday 13 April 2013

தினம் ஒரு கேள்வி – பத்து.



மத்திய அரசு ஊழியர்கள் எல்.டி.சியில் போகும் போது 10 நாட்கள் தங்கள் ஈட்டிய விடுப்பினை காசாகப் பெறலாம் என உத்திரவிட்டது மத்திய அரசு. அதற்கு பல காலம் கழித்து BSNL நிர்வாகம் அந்த சலுகையை ஊழியர்களுக்கு வழங்கியது. அனால் தோழர் அபிமன்யூ இந்த சலுகையை எதிர்த்து உடனடியாக நிறுத்துமாறு நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார். நிர்வாகம் ஊழியர்களுக்கு பயன் தரும் உத்திரவை நிறுத்தி விட்டது. ஊழியர்களின் நலங்களுக்கு எதிராக எந்த ஒரு தொழிற்சங்கமாது செயல்படுமா?
நன்றி: சென்னை இணைய தளம்.

தினம் ஒரு கேள்வி – ஒன்பது.



அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் பி.எஸ்.என்.எல் ஊழியர்களாக் கப்பட்டனர். அதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான CGHS மருத்துவ மணைகளில் மருத்துவ வசதி மறுக்கப்பட்டது. எனவே BSNLMRS மருத்துவத் திட்டம் கொண்டு வந்தது NFTE. அந்த அருமையான மருத்துவதிட்டம் BSNLEU காலத்தில் சின்னாபின்னமானது. பல்வேறு கட்டுப்பாடுகள் தன்னிச்சையாக தினிக்கப்பட்டன. அந்த சலுகை இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் என முடிவு செய்யப்பட்டது. ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த மருத்துவப்படி முழுமையாக நிறுத்தப்பட்டது. நிர்வாகத்தின் இச் செயல்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது BSNLEU. வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கு இணையான சிறந்த வசதியினை அபிமன்யூ ஏன் கேட்டுப் பெறவில்லை? நாம் மத்திய அரசு ஊழியர்களாக இல்லாத போது மத்திய அரசு ஊழியர்களுக்கான CGHS கட்டண விகிதங்களை ஏன் ஏற்றுக் கொண்டார்? ஊழியர்கள் தங்கள் மருத்துவச் செலவில் ஒரு பகுதியை மட்டும் ஏற்குமாறு BSNLEU தலைவர்கள் ஒப்புக் கொண்டது ஏன்?
நன்றி: சென்னை இணைய தளம்.

Thursday 11 April 2013

தேர்தல் சிறப்புக் கூட்டங்கள்



தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபிராமன் மற்றும் தோழர் தமிழ்மணி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்றனர். ஈரோடு புறக் கிளை, பொதுமேலாளர் அலுவலகக் கிளை, பவானி கிளை ஆகியவற்றில் சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. மூன்று கூட்டங்களிலும் திரளாக ஊழியர்கள் பங்கேற்றனர். தோழியர்கள் பங்கேற்பு சிறப்பாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் NFTE வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
தோழர் T.ராஜேந்திரன் தலைமையேற்றார். தோழர்கள் பட்டாபிராமன், தமிழ்மணி, குமார், V.செல்வராஜன், K.ராஜமாணிக்கம், யாசின் ஆகியோர் பங்கேற்றனர். தோழர் பட்டாபிராமன் தனது உரையில் 78.2 அகவிலைப்படி இணைப்பு, போனஸ், பதவி உயர்வு, எஸ்.சி, எஸ்.டி ஊழியர்களுக்கான இட ஒதுக்கீடு, நிறுவனத்தை காத்திட வேண்டிய அவசியம் போன்ற பல்வேறு பிரச்னைகள் பற்றி விரிவாகப் பேசினார். அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் தோழர் N.சுந்தர்





சிறப்புரையாற்றினார்.

Monday 8 April 2013

தினம் ஒரு கேள்வி – எட்டு.



போக்கு வரத்து படி உட்பட சில படிகளை 01.04.2013 முதல் நிறுத்திவிட  நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்படிபட்ட உத்திரவை 16.04.2013 க்கு முன் வெளியிட வேண்டாம் என பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையா?   12.06.2012 உடன்பாட்டின்படி படிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க!

தினம் ஒரு கேள்வி – ஏழு



தேர்வு இல்லாமல் TTA பதவி உயர்வு பெற்று தருவதாக டெலிகாம் மெக்கானிக் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் வாக்களித்தது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். அத்தோடு 10+2 கல்வி தகுதி இல்லாத ஊழியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு மூலம் TTA தேர்வு பெறும் வாய்ப்பினை பெற்றுத் தந்த NFTE  சங்கத்தை குறை கூறி வந்தது. பல வாக்குறுதிகளை சாதாரணமாக மறந்து விட்டது போல இந்த வாக்குறுதியையும் மறந்து விட்டது. 10+2 கல்வி தகுதி இல்லாத டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் தேர்வு எழுத முடியாது என பி.எஸ்.என்.எல் நிர்வாகம் உறுதியாக உள்ளது. இப்படியாக டெலிகாம் மெக்கானிக் ஊழியர்களுக்கு துரோகம் இழைத்தது. அதே சங்கம் தேர்தல் வருவதால் எந்த திட்டத்தை குறை கூறி வந்ததோ அதே தகுதி தேர்வு முறை கொண்டு வருவோம் என வாக்குறுதி அளிக்கிறது வெட்கம் இல்லாமல். அதன் இரட்டை வேடத்தை ஊழியர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.