NFTECHQ

Saturday 4 January 2014

சொர்க்கபுரியின் (?) சோகங்கள்



அமெரிக்கா. இது சொர்க்கமென்று தன்னை வர்ணித்துக் கொள்கிறது. உலகில் உள்ள முதலாளிகளும் அமெரிக்காவை ஒரு மாதிரி தேசம் என்று புகழ்கின்றனர். எங்களுடைய முதலாளித்துவக் கொள்கையே அனைத்துப் பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணி என்று தொடர்ந்து அமெரிக்க நாட்டு ஆளும் வர்க்கமும் ஆலாபனம் இசைக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அளவுக்கு பொருளாதாரச் சிக்கல் உருவாகி அரசு அலுவலகங்கள்  மூடப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு வழங்கப்பட்டது.

தற்போது வேலையில்லாத வாலிபர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு  வந்த  நிவாரணத் தொகையான ரூபாய் 72000 இனி கிடையாது என அமெரிக்க அரசு அறிவித்து விட்டது. இதனால் பல லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படுவர்.

முதலாளித்துவத்தின் முகம் தொடர்ந்து கிழியும்.

சோசலிசம் மெல்ல மலரும்




No comments:

Post a Comment