NFTECHQ

Saturday 26 July 2014

தண்ணீருக்கு வெற்றி



24.07.2014 அன்று பவானி தொலைபெசி நிலையத்திலும் ஊழியர் குடியிருப்பிலும் தண்ணீர் வசதி கோரி  பவானி கிளைத் தோழர்களும் தோழியர்களும்  குடியிருப்பில் உள்ள மகளிரும் திரண்டிருக்க பவானி கிளைச் செயலர் தோழர் நாகராஜன் மற்றும் மாவட்ட உதவிச் செயல்ர் மெளனகுருசாமியும் காலை 10 மணிக்கு காலவரையற்ற பட்டினிப் போரைத் துவக்கினர். கோட்டப் பொறியாளருடன் அவரது அறையில் அனைவரும் திரண்டு பிரச்னை  குறித்து விவாதிக்கப்பட்டது. துணைப்பொது மேலாளர் (DGM EB) திரு சாமிதாஸ் அவர்கள் தொடர்பு கொண்டு தானும்
துணைப்பொது மேலாளர் (DGM CFA) திரு ராமச்சந்திரன் அவர்களும் மதியம் ஒரு மணிக்கு பவானி வருவதாகத் தெரிவித்தார்
சொன்னபடி
அவர்கள் இருவரும் பவானி  வருகை தந்தனர். தண்ணீர் வழங்குவதற்கான பணிகள் 25.07.2014 அன்று துவங்கும் என்று பட்டினிப் போர் நடைபெற்ற இடத்திற்கே வருகை தந்து வாக்களித்தனர். பட்டினிப்போரை முடித்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
நகராட்சி குடிநீர் குழாய்களில் உள்ள பழுதுகளைச் சரி செய்ய  நகராட்சி அதிகாரி ஒருவரும் ஊழியர்களும் வந்தனர். பழுதுகளை ஓரிரு நாட்களில் சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.
நமது அதிகாரிகள் தந்த உறுதிமொழி நம்பிக்கை தரும் வகையில் அமைந்ததால் பட்டினிப் போர் விலக்கிக் கொள்ளப்பட்டது.
போராடிய பவானி கிளையின் தோழர்களுக்கு பாராட்டுக்கள்.
ஊழியர் குடியிருப்பிலிருந்து பங்கேற்ற தோழியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வுக்கு உதவிய துணைப் பொதுமேலாளர்கள் இருவருக்கும் நமது  நன்றி.
பிரச்சினை தீர்வில் அக்கறை காட்டிய கோட்டப் பொறியாளர்,   துணைக் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கும் நன்றி.
உறுதிமொழியின் அடிப்படையில் தண்ணீர்ப் பிரச்னை தீர்வுக்கான பணிகள் துவங்கி  நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment