NFTECHQ

Sunday 31 August 2014

வருக வருக

செப்டம்பர் 2
ஈரோட்டில் பணிக்குழு உறுப்பினர்கள் கூட்டம்
தலைவர்கள்
மாநிலச் சங்க  நிர்வாகிகள்
மாவட்டச் செயலர்கள்
பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என உளமார வரவேற்கிறோம்
எங்களால் இயன்ற அளவுக்கு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துள்ளோம்
உதவும் உள்ளங்கள்   NFTE BSNL  ஈரோடு மாவட்டம் சார்பாக ஆண்டு தோறும் நடைபெறும் விழாவினையும் இத்துடன் இணைத்துள்ளோம்
இப்பணிக்குழுக் கூட்டம் பயனுள்ளதாக, ஓரடியேனும் ந்மது நிறுவனம்முன்னேறுவதற்கு வழி அமைப்பதாக அமைந்தால் அதுவே மன நிறைவை அளிக்கும்
வாருங்கள் தோழர்களே
நாம் முயற்சி செய்வோம்
நமது முயற்சி வெல்லும் என்று நம்பிக்கையுடன சந்திப்போம்
வாருங்க்கள்

செழுமையைத் தந்த சேலம் சந்திப்புக்குப் பின் ஈரோட்டுச் சந்திப்பு ஈர்ப்பினை உருவாக்கட்டும்

வரலாறு மன்னிக்காது.

தலைமைப் பொதுமேலாளர் மாநாட்டில் நமது அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத்  அவர்கள் ஆற்றிய உரையின் சில பகுதி
நான் ஒரு வெளிப்படையாகப் பேசும் அமைச்சர். BSNL   நிறுவனத்துக்குப் புத்துயிரூட்டி அதை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதே எனது செயல்பாட்டில் முன்னுரிமையாகக் கொண்டிருக்கிறேன்.

அனைத்து உதவிகளியும் செய்ய நான் தயாராக உள்ளேன்.

2008ம் ஆண்டிலிருந்து BSNL நிறுவனம் சரிவைச் சந்தித்து வருகிறது. இது ஒரு மோசமான, துரதிர்ஷ்டமான காலமாக இருந்து விட்டுப் போகட்டும். இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வருவாயைக் கூட்ட வேண்டும். வாடிக்கையாளர்களுக்குத் திருப்தியான சேவையை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் குறைகளை உடனடியாகக் களைய வேண்டும்.
BSNL     நிறுவனத்தின் செயல்பாட்டை நான் தினமும் கண்காணித்து வருகிறேன்.
நாடு முழுதும் பரந்துபட்ட நெட் ஒர்க், நல்ல அனுபவம் மிக்க திறமையான அதிகாரிகள் ஊழியர்கள் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட  நிறுவனம் BSNL.
ஆரோக்கியமான  போட்டிக்கு அரசுத் துறை நிறுவன்ம் தேவை என்பது எனது உறுதியான நிலைப்பாடு. அரசுத் துறை நிறுவனம் இல்லாவிட்டால் போட்டி திசை மாறி மக்கள் துன்பத்துக்கு ஆளாவார்கள்.
அரசுத் துறை நிறுவனமான BSNL  சிறப்பாகச் செயல்பட வேண்டும்
இதுவே மிகப்பெரிய பொதுந்ல இலட்சியமாகும். இதையே உங்களிடம் எதிர்பார்க்கிறேன.
இதுவே மக்களின் நலன். தேசத்தின் நலன். வாடிக்கையாளர் நலன்.

அமைச்சர் எந்த கட்சியைச் சேர்ந்தவர். அந்தக் கட்சியின் கொள்கைகள் என்ன என்பதைப் பற்றி ஆராய்வதை விட அவரது பேச்சு செயல்பாடு அவர் சொல்லும் அவரது நோக்கம் இதைக் கண்க்கில் கொண்டு சிந்திப்போம்.
ந்மது துறையில் அங்கீகாரத்துடன் செயல்படும் தொழிற்சங்கங்க்கள் இரண்டுமே இடதுசாரி சிந்தனை கொண்டவை.
தேசப்பற்று தேசநலன் மக்கள் ந்லன் இவற்றில் இடதுசாரிகளுக்கு உள்ள அக்கறையை பற்றி யாரும் குறை சொல்ல முடியாது. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தியாக உணர்வோடு செயல்படுவதில் இடதுசாரிகளைக் குறை சொல்லும் தகுதியும் எவருக்கும் கிடையாது..
இதை உணர்ந்து
காலச் சக்கரம் சுழலும் வேகத்துக்கிணையாகச் சிந்தித்து செயல்பட்டால் BSNL  நிறுவனத்தைச் சரிவிலிருந்து மீட்டு சாதனை நிறுவனமாக மாற்ற முடியும்.
ஒருவர் காலை மற்றவர் வாருவது என்பதை சிந்தனையிலிருந்து அகற்றி, நானே பெரியவன் என்ற சிந்தனையையும் ஒழித்து செயல்பட்டால் வருங்க்காலச் சந்ததி போற்றும்..
சிந்தனை மாறுமா?
செயல்வடிவம் பெறுமா?
மாறினால் ந்ல்லது. இல்லையேல் வரலாறு மன்னிக்காது.

இந்தக் கருது குறித்து

விமர்சனங்களை  உளமார வரபவேற்கிறோம்.

Friday 29 August 2014

'குணவதி'யின் கதை

ஏளனப் பேச்சுகள் என்னை ஒன்றும் செய்யாது: ஒரு 'குணவதி'யின் கதை
ஏளனப் பேச்சுகள் என்னை ஒன்றும் செய்யாது என சொல்கிறார் குணவதி.
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் வார்டில் பரபரப்பாக இயங்கும் குணவதியைப் (24) பார்க்கலாம். 2013 மே மாதம் அவர் இந்த வேலையைப் பெற்றிருக்கிறார்.
எம்.ஏ. ஆங்கிலம் பயின்ற குணவதி, பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த வேலையை பெற்றுள்ளார். அவ்வளவு சிரமங்களுக்கும் காரணம் அவர் திருநங்கை என்பதே. (அவர் குற்றம் அல்ல)
'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
"ஒரு வேலைக்காக நான் ஓடாத இடமில்லை. பார்க்காத நபர் இல்லை. மனு மேல் மனு என நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே இந்த வேலையைப் பெற்றேன்.
எனக்கு இந்த வேலை கிடைத்ததற்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டுப் புகார் அதிகமாக வந்து கொண்டிருந்த நேரம் அது. அப்போதுதான், கலெக்டர் என்னை அழைத்து, தமிழ்நாடு ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் எனக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் பாதுகாவலராக பணி ஒதுக்கப்படுவதாக கூறினார்.
அன்று முதல் இன்று வரை இங்கே இனிதே வேலை பார்க்கிறேன். ஏனென்றால் எனக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டம். நான் இங்கு வந்த நாள் முதல் இந்த மருத்துவமனையில் உள்ள சக ஊழியர்கள் என்னை உறவுக்காரர் போலவே பார்க்கின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். பெரும்பாலோனோர் என்னை வித்தியாசமாக பார்ப்பதில்லை. ஆனால், ஒரு சிலர் என்னை பார்த்ததும் கிண்டலாக சிரிப்பதும், வெறுப்பாக முறைப்பதுமாக இருக்கின்றனர். சில நேரங்களில், மிகவும் தரக்குறைவாக என்னை விமர்சிப்பார்கள்.
அத்தகைய விமர்சனங்கள் என்னை காயப்படுத்தும். ஆனால், எவ்வளவு சிரமத்திற்குப் பிறகு இந்த வேலையை பெற்றிருக்கோம் என்பதை நினைக்கும்போது அந்த அவமான பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என தீர்மானித்துக் கொண்டேன்.
இனி, ஏளனப் பேச்சுகள் என்னை ஒன்றும் செய்யாது. என்னைப் போன்ற ஏராளமான திருநங்கைகள் இருக்கின்றனர். ஏளனங்களுக்கு அஞ்சி, அஞ்சியே அவர்கள் இழிவான தொழிலை தேர்ந்தெடுக்கின்றனர். என் துணிச்சல் மூலம் அவர்களுக்கு நான் ஒரு முன் உதாரணமாக இருக்க விரும்புகிறேன்" என்றார்.
நல்லதொரு குடும்பம்:
நான் என்னை திருநங்கையாக உணர்ந்தபோது, அதை தைரியமாக என் பெற்றோரிடம் எடுத்துரைத்தேன். அவர்களுக்கு முதலில் அது பேரதிர்ச்சியாக இருந்தது. பின்னர், நாளடைவில் என்னை புரிந்து கொண்டனர். என்னை ஏற்றுக்கொண்டதற்காக என் குடும்பமும் ஏளனத்துக்குள்ளானது. அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. எனக்கு அவர்களிடம் இருந்தே அந்த பண்பு வந்தது. என் குடும்பம் போல் நல்லதொரு குடும்பம் என்னைப் போன்ற திருநங்கைகளுக்கு கிடைத்தால் யாரும் தவறான வழியில் செல்ல மாட்டார்கள் என கூறுகிறார் குணவதி.
இலக்கு:
எப்படியாவது ஒரு ஆசிரியர் ஆவதே தன் இலக்கு என கூறும் குணவதி. பி.எட். படிப்பிற்காக ஒரு தனியார் கல்வி நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் வேதனைப்படுகிறார்.
ஆனால், எப்பாடுபட்டாவது பி.எட் படித்து என் லட்சியத்தை நிறைவேற்றுவேன் என உறுதிபட கூறுகிறார்.

திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறார். கூடவே, திருநங்கைகள் மீதான சமூகப் பார்வை மாறவும் குரல் கொடுக்கிறார், இந்த குணவதி.

Tuesday 26 August 2014

கவனத்திற்கு



ஊழியர் சேமநலத் திட்டத்தில்  BOOK AWARD, MERITORIOUS AWARD, TECHNICAL SCHOLARSHIP, NON TECHNICAL SCHOLARSHIP, CASH AWARD வழங்குவதற்கான விண்ணப்பங்க்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்க்கள் SSA INTRANET இணையதளத்தில் உள்ளன.    

Sunday 24 August 2014

மெளனமே பதிலாக

ஏர்டெல்  நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் BE (EEE)  படித்த பொறியியல் பட்டதாரி அவரது பணியிடம் சென்னை. தொலைபேசி பழுதுகளைச் சரி செய்வது அவரது பணி. பணிக்காலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை. 12  மணி நேரப் பணி. ஒரு பழுது 24 மணி நேரத்திற்கு மேல் சரி செய்யப்படவில்லையெனில் அதனால் நிறுவனத்துக்கு ஏற்படும் சராசரி வருமான இழப்பை அந்த ஊழியர் ஈடு செய்ய வேண்டுமாம்.
அவருக்கு தொழில் உண்டு தொழிற்சங்கம்  கிடையாது
அவரது மாதச் சம்பளம் ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு.
இது வரை 23 முறை நிர்வாகம் அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளதாம்.
வேலை நேரம் மேலும் ஒரு மணி நேரம் கூடவுள்ளதாம். சம்பள்ம் கூடுமா என்ற கேள்விக்கு அவரால் பதில் பதில் கூற இயலவில்லை.
BSNL நிறுவனத்தில் ஏதேனும் பணி கிடைக்க வாய்ப்பு உண்டா என அவர் கேட்டார். மெளனத்தைத் தவிர வேறு என்ன பதில் தர இயலும்?

என்று மடியும் இந்த சுரண்டல் அவலம்?

Friday 15 August 2014

தில்லையாடி வள்ளியம்மை

காந்தியடிகளுக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டிய தில்லையாடி வள்ளியம்மை
இந்திய சுதந்திர போராட்டத்தின் முதுகெலும்பு அண்ணல் காந்தியடிகள். காந்தியடிகளுக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டியவர் தில்லையாடி வள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக பல பரிமாணங்களில் இந்திய சுதந்திர தாக்கத்திற்கு வித்திட்டவர் தில்லையாடி வள்ளியம்மை. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் உயிர் விட்ட முதல் பெண்மணியும் அவரே.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி முதலியார். நெசவுத் தொழிலாளியான இவர் பிழைப்புத் தேடி தென்னாபிரிக்காவின் ஜோகனாஸ்பர்க் சென்றார். அங்கு 1898-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி பிறந்தவர் வள்ளியம்மை.
கனவுகளோடு தென்னாபிரிக்கா சென்ற இந்தியர்கள் வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். தனியார் நிறுவனம் ஒன்றின் வழக்குகளை முடிக்க அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வந்த காந்தியடிகள், இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு மனம் வெதும்பினார். இதனை எதிர்த்து போராடவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டுத்தரவும் துணிந்தார்.
இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் சிறுமி வள்ளியம்மை தவறாமல் கலந்துக்கொண்டார். காந்தியடிகளின் சொற்பெழிவுகளால் பெரிதும் கவரப்பட்ட வள்ளியம்மை பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படையில் அங்கமானார்.
தென்னாபிரிக்காவிற்கு வரும் இந்தியர்களை தடுத்து நிறுத்த ஆங்கிலேயர்கள் கடுமையான சட்டங்களை அமல்ப்படுத்தினர். இதனை எதிர்த்து 1913 -ம் ஆண்டு, ஜோகனாஸ்பர்க்கில் நடைபெற்ற போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வள்ளியம்மை.

போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கால சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறையில் எண்ணிலடங்கா கொடுமைகளை அனுபவித்தார் வள்ளியம்மை. சுகாதாரமற்ற சூழல் வள்ளியம்மையை நோய் தாக்குதலுக்கு உட்படுத்தியது. அபராத தொகையை கட்டி விட்டு சிறையிலிருந்து செல்லும் படி ஆங்கிலேயர்கள் கூறியதை பொருட்படுத்தாத வள்ளியம்மை, சிறையிலேயே உயிர் விடவும் துணிந்தார்.
வள்ளியம்மையின் உடல் நிலை மோசமாவதை கண்ட ஆங்கிலேயே போலீசார், அவரது தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவித்தனர். விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த வள்ளியம்மை என்னும் தீபம் 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து அணைந்து போனது.
இந்தியாவின் புனித மகள் ஒருத்தியை இழந்துவிட்டோம் என அண்ணல் காந்தியடிகள் மனம் உருகினார். ஆங்கிலேயருக்கு எதிராக போராடி உயர்நீத்த முதல் பெண் போராளி ஒரு தமிழர் என்பது நமக்கும் பெருமை தானே.


சுதந்திரம்

நமது தேசத்தின் விடுதலைக்கு வயது 68
மக்கள் ஜனநாயகம் நிலைத்து நீடிப்பது பெருமைக்குரியது.
சமூக ஜனநாயகமும் முழுமையாக மலர்ந்தால் பெருமை கூடும்

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் 

Thursday 14 August 2014

ஆகஸ்ட் 14


ஆகஸ்ட் 14  இன்று உலக உறுப்பு தான தினம்
உலகம் முழுவதும் இன்று உடல் உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாற்று உறுப்புகள் வேண்டி காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அவசியமாகியுள்ளது.
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் அளிக்கலாம் என்ற போதிலும், 1954 ஆம் ஆண்டு முதல் சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. விபத்தில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தால், அந்த நபருடைய நெருங்கிய உறவினரின் ஒப்புதலின் பேரின் 25 வகையான உறுப்புக்களையும், திசுக்களையும் தானமாக பெற்றுகொள்ளலாம்.
 தமிழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு, மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்பு தான திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு உறுப்புகளை தானமாக அளிப்போரின் எண்ணிக்கை ஓரளவு உயர்ந்துள்ளதாக, திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் 14, 1947, பாகிஸ்தான் சுதந்திரம்
சுதந்திரப் போராட்டத்தின்போது, மத வேறுபாடுகள் இன்றி தொடக்கத்தில் ஒற்றுமையுடன் போராடிய இந்தியர்களிடையே 1910-க்குப் பிறகு, தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் 1940-ம் ஆண்டு லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில்தான், முகமது அலி ஜின்னா இரு நாட்டுக் கொள்கையை முதன் முதலாக அறிவித்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைய, சர்வதேசச் சூழலும் சுதந்திரம் அளிக்க வேண்டிய நெருக்கடியை பிரிட்டனுக்கு ஏற்படுத்தியது.
அதன்படி, 1947-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, மௌன்ட் பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடாக மலர்ந்தது.

Wednesday 13 August 2014

கைவிளக்கேந்திய காரிகை



 ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் மறைந்த தினம்
 1820-ல் இத்தாலியின் ஃப்ளாரன்ஸில் பிறந்த நைட்டிங்கேல், நவீன செவிலியியல் முறையை உருவாக்கியவர். 1853-ல் ஏற்பட்ட கிரிமிய போரின்போது, காயமடைந்த வீரர்களுக்கு இரவு நேரத்தில்கூட கையில் விளக்குடன் சென்று ஓய்வின்றி மருந்துவ உதவிகள் செய்தவர்.
இதனாலேயே கைவிளக்கேந்திய காரிகை என்று நைட்டிங்கேல் அழைக்கப்படுகிறார். செவிலிகளுக்கான பயிற்சிப் பள்ளியை முதன் முதலில் துவங்கினார். பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம், அனைத்துத் செவிலிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் நைட்டிங்கேல்.
இவரின் பிறந்த தினம் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. விக்டோரியா மகாராணியிடமிருந்து செஞ்சிலுவை விருது பெற்ற நைட்டிங்கேல், 1907-ல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதைப் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. செவிலியர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய நைட்டிங்கேல், 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் இதே நாளில் தான் உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 13
மாயன் நாட்காட்டி தொடக்கம்
ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய அமெரிக்க நாடுகளில் வாழ்ந்த மாயா இனத்தவர்கள், சோல்டன், சோலப், சோல்கிஜ் என்ற 3 வகை நாட்காட்டிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இவற்றுள்சோல்டன்எனப்படும் நீண்ட கால அளவு நாட்காட்டி, சூரியக் குடும்பத்தின் ஒட்டுமொத்த அசைவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இந்த நாட்காட்டிக்காக, இவர்கள் பயன்படுத்திய அச்சு இயந்திரம் முழுவதுமாக ஒரு சுற்று சுற்ற 5125 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாறு 5 சுற்றுகள் முடிந்தால் பூமி அதன் இறுதிக் காலத்தை அடையும் என மாயன்கள் கணித்திருந்தனர்.
அதன்படி, 5-வது சுற்று, கி.மு. 3114-ம் ஆண்டில் இதே நாளில்தான் தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நாட்காட்டிபடிதான், 2012-ம் ஆண்டு உலகம் அழியும் என நம்பப்பட்டது.

Tuesday 12 August 2014

விழாக் காலச் சலுகை



14.08.2014 முதல் 11.11.2014 வரை 90 நாட்களுக்கு
ரூபாய் 100க்கு டாக்டைம் ரூபாய் 100
ரூபாய் 150க்கு டாக்டைம் ரூபாய் 150
ரூபாய் 250க்கு டாக்டைம் ரூபாய் 250
ரூபாய் 350க்கு டாக்டைம் ரூபாய் 350
ரூபாய் 550க்கு டாக்டைம் ரூபாய் 575
ரூபாய் 750க்கு டாக்டைம் ரூபாய் 790
டேட்டா சலுகை
14.08.2014 முதல் 11.11.2014 வரை 90 நாட்களுக்கு

ரூ561   5 GB  60 நாட்கள்
ரூ821   7 GB  90 நாட்கள்
ரூ1011  10 GB  90 நாட்கள்
ரூ1949 20 GB  90 நாட்கள்

Monday 11 August 2014

மாவட்டச் செயற்குழு



13.08.2014 அன்று மாவட்டச் செயற்குழு நடைபெறும்.
02.09.2014 அன்று நடைபெறவுள்ள பணிக்குழு பயிலரங்கம் மற்றும் உதவும் உள்ளங்கள் NFTE BSNL ஈரோடு மாவட்டம் சார்பான விழா

ஆகியவற்றைச் சிறப்பாக நடத்துவது பற்றி திட்டமிடப்படும்.

Saturday 9 August 2014

வி ஆர் எஸ் VRS



பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு

பிஎஸ்என்எல் செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு சேவைக்குரிய நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துப்பூர்வ பதில் வருமாறு:இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சில முறையீடுகளை செய்துள்ளன.நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன் சேவைக்கு வேகமாக மாறி வருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.பிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,411 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்

Wednesday 6 August 2014

கோரிக்கைகள்




கூட்டுப் போராட்டக் குழு



07.08.2014
 ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகள்


1.போனஸ்  வழங்கு 2.01/01/2007க்குப்பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு ஊதிய நிர்ணயத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளைக் களை
3ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை பிரஸ்னைக்கு தீர்வு காண்
4.பரிவு அடிப்படையிலான பணி நியமனத்தில் விதிகளை தளர்த்து
5.மருத்துவப்படி,
L TC  க்காக விடுப்பைக் காசாக்குதல் ஆகியவற்றை மீண்டும் கொடு
6.BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
7.  01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்கு.
8.அனைத்து அலவண்ஸ்களையும்  உயர்த்தி வழங்கு.
9.பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான  E1 சம்பள விகிதம் வழங்கு
10.SRTOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
11.பதவிகளுக்கான பெயர் மாற்றம் செய்
12.JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்து
13.இலாக்கா தேர்வுகளில் SC/ST  தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு செய்
14.JTO  மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்
15. ஆளெடுப்பு மூலம் புதிய ஊழியர்களை நியமனம் செய்
16.விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்
17.ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
18.MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கு
19.TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
20.மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்கு.
21.SC/ST இட ஒதுக்கீட்டில்  நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்பு
22.SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்து
23. 01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதி.
24.ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை இனியும் தாமதமின்றி வழங்கு
25.முதலாம் சம்பள மாற்றத்தில் உருவான அனாமலிகளை நீக்கு
26.JTO/JAO/TTA/TM தேர்வுக்கான தகுதிகளைத் தளர்த்து.
27.அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்து.
28. ஊழியர்கள் அனைவருக்கும்க் இலவச சிம் கார்டு வழங்கு
29.TELECOM FACTORYகளை மறு சீரமைப்பு செய்
30.01.10.2000 க்கு முன் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை   DOT ஊழியராக கருது.

Tuesday 5 August 2014

சொத்து



நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின்  அளவு 48,52,02,459 சதுர அடிகள். 11,128.497 ஏக்கர்.

நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுர அடிகள். 301.6802 ஏக்கர்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த தகவல்

Saturday 2 August 2014

விற்பனை நிலவரம்



ஜூலை 2014ல் ஈரோடு மாவட்டத்தில் 5045 புதிய ப்ரி பெய்டு மொபைல் இணைப்புகள் வழங்க்கப்பட்டுள்ளன. இதில் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக 3045 (60.4%) இணைப்புகளும் FRANCHISEE மூலாமாக் 2045 (39.6) இணைப்புகளும் வழங்க்கப்பட்டுள்ளன.
ஈரோடு MCCC 1134 இணைப்புகள் வழங்கி முதலிடம் பெறுகிறது.
66 புதிய போஸ்ட்பெய்டு இணைப்புகள் ஜூலை 2014ல் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக் மட்டுமே வழங்க்கப்பட்டுள்ளன.
இதிலும் 36 இணைப்புகள் வழங்கி ஈரோடு MCCC  முதலிடம் பெறுகிறது.
டேட்டா கார்டு, டம்மி சிம், GSM FWP கருவி விற்பனையிலும்
ஈரோடு MCCC  முதலிடம் பெறுகிறது.
கோபி வெங்க்கடேஸ்வரா FRANCHISEE  637 ப்ரிபெய்டு இணைப்புகள் வழங்க்கியுள்ளது.
ஈரோடு MCCC யில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. மேலும் 3 ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டால் செயல்பாடுகள் மேலும் சிறக்கும். இது குறித்து ந்மது மாவட்டச் சங்கம் பொது மேலாளரிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

Friday 1 August 2014

நல்ல செய்தி



நமது நாட்டின் மிகப் பெரிய
பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) நமது BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளைப் பெறுவதற்கான ஒப்பந்த்ம் உருவாகியுள்ளது. இந்த  
ஒப்பந்தத்ம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும்.
மற்ற பொதுத்துறை நிறுவனங்க்களும் அரசுத் துறைகளும் இப்படி ஒரு முடிவை எடுத்தால், மகிழ்ச்சி கூடும்.
அதற்கான முயற்சியை ந்மது நிறுவனமும் எடுக்க வேண்டும். அனைத்து மத்திய் சங்க்கங்களும் இதற்கான முற்சியை மேற்கொள்ள வேண்டும்.