NFTECHQ

Thursday 14 August 2014

ஆகஸ்ட் 14


ஆகஸ்ட் 14  இன்று உலக உறுப்பு தான தினம்
உலகம் முழுவதும் இன்று உடல் உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாற்று உறுப்புகள் வேண்டி காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அவசியமாகியுள்ளது.
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் அளிக்கலாம் என்ற போதிலும், 1954 ஆம் ஆண்டு முதல் சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. விபத்தில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தால், அந்த நபருடைய நெருங்கிய உறவினரின் ஒப்புதலின் பேரின் 25 வகையான உறுப்புக்களையும், திசுக்களையும் தானமாக பெற்றுகொள்ளலாம்.
 தமிழகத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு, மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்பு தான திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு உறுப்புகளை தானமாக அளிப்போரின் எண்ணிக்கை ஓரளவு உயர்ந்துள்ளதாக, திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆகஸ்ட் 14, 1947, பாகிஸ்தான் சுதந்திரம்
சுதந்திரப் போராட்டத்தின்போது, மத வேறுபாடுகள் இன்றி தொடக்கத்தில் ஒற்றுமையுடன் போராடிய இந்தியர்களிடையே 1910-க்குப் பிறகு, தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் 1940-ம் ஆண்டு லாகூரில் நடந்த முஸ்லீம் லீக் மாநாட்டில்தான், முகமது அலி ஜின்னா இரு நாட்டுக் கொள்கையை முதன் முதலாக அறிவித்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைய, சர்வதேசச் சூழலும் சுதந்திரம் அளிக்க வேண்டிய நெருக்கடியை பிரிட்டனுக்கு ஏற்படுத்தியது.
அதன்படி, 1947-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, மௌன்ட் பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடாக மலர்ந்தது.

No comments:

Post a Comment