NFTECHQ

Monday 29 September 2014

வேலை நிறுத்தம்



30.09.2014 அன்று காலை 11 மணி முத்ல் 1 மணி  வரை இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

Saturday 27 September 2014

பாரதத்தின் சிங்கம்

பகத்சிங் பிறந்தநாள்: 27.09.1907
இந்திய விடுதலைக்காக மட்டுமல்லஏகாதிபத்தியத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராடியவர்.
இளமையிலிருந்தே வாசிப்பு, சிந்தனை, செயல்பாடு என ஒருங்கிணைந்த இயக்கம் கொண்டிருந்த ஆளுமைதான் பகத் சிங். இதனால்தான் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளித்திடும் நாயகனாக இருந்துகொண்டிருக்கிறார். எனவேதான், உலக அரங்கில்
சே குவேரா வகிக்கும் பாத்திரத்தை இந்தியத் துணைக் கண்டத்தில் பகத் சிங் வகிக்கிறார்.
1919-ல் நூற்றுக் கணக்கான இந்தியர்களின் உயிரைப் பறித்த ஜாலியன் வாலாபாக் படுகொலைதான் பகத் சிங் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படுகொலை நடந்த சமயத்தில் பகத் சிங்குக்கு வயது 12. படுகொலை நடந்த இடத்தில் இருந்த மண்ணை எடுத்துவந்து பாதுகாத்து வைத்திருந்தார் பகத் சிங்.
பகத் சிங்கின் பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், பகத் சிங்குக்குத் திருமண ஏற்பாட்டை அவருடைய தந்தை மேற்கொண்டபோது, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி கான்பூர் சென்றுவிடுகிறார், விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக. அந்தக் கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: என் வாழ்க்கை ஓர் உன்னத லட்சியத்துக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது: இந்திய விடுதலைதான் அந்த லட்சியம். அதன் காரணமாக, வசதிவாய்ப்புகளுக்கும் உலகியல் ஆசைகளுக்கும் என் வாழ்வில் இடமில்லை. நான் சிறுவனாக இருந்தபோதே நாட்டின் சேவைக்காக அர்ப் பணிக்கப்பட்டவன் என்று தாத்தா சபதம் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே, அப்போதைய சபதத்தை மதிக்கிறேன். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பகத் சிங் குடும்பத்தினரே தேசியவாதிகளாக விளங்கியவர்கள்தான். பகத் சிங் பிறந்தபோதுதான் அவரது தந்தை கிஷன் சிங்கும் மாமா சுவரண் சிங்கும் சிறையிலிருந்து விடுதலை ஆனார்கள். இன்னொரு மாமா அஜித் சிங் நாடுகடத்தப்பட்டிருந்தார். 20 வயதில் தூக்கிலிடப்பட்ட கர்தார் சிங் சரபாதான் பகத் சிங்குக்கு முன்மாதிரியான ஆளுமை. சரபாவின் புகைப்படம் அவரது சட்டைப் பையில் எப்போதும் இருக்கும்.
1928-ல் சைமன் கமிஷனைப் புறக்கணிக்க நிகழ்ந்த ஊர்வலத்தில் முதுபெரும் தலைவரான லாலா லஜபதிராய் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகுதான் தீவிரப் போராட்டப் பாதையில் பகத் சிங் ஈடுபடுகிறார். லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்காட் உயிரைப் பறிப்பதற்காக பகத் சிங்கும் அவரது நண்பர்களும் போட்ட திட்டம், ஜே.பி. சாண்டர்ஸ் என்னும் இன்னொரு அதிகாரியின் உயிரைப் பறித்துவிடுகிறது. இதற்கிடையே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மக்கள் விரோத மசோதாக்கள் மீது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் சட்டசபைக்குள் நுழைந்து இரண்டு குண்டுகளை வீசினார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜே.பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில் சுகதேவ், ராஜகுருவுடன் பகத் சிங்குக்கும் சேர்த்துத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பாக, மாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. (வழக்கமாகக் காலையில்தான் தண்டனை நிறைவேற்றப்படும்).
தன் போராட்ட நடவடிக்கைகளுக்கிடையே ஆக்ராவில் 175 புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை பகத் சிங் அமைத்தார். லாகூரில் லஜபதிராய் நிறுவியிருந்த துவாரகாதாஸ் நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்தினார். தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சிறையில் இருந்த இரண்டாண்டு காலத்தில் கவிதை, சட்டம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், சோஷலிஸப் புரட்சி என்று பல்வேறு துறைகள் தொடர்பாக நிறைய வாசித்திருந்தார். தன் எண்ணங்களையும், வாசிப்பைப் பற்றியும், வாசித்ததில் முக்கியப் பகுதிகளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்தார். அந்தக் குறிப்பேடு, ரகசிய ஆவணம் என்பதால் பின்னாளில் அவரது மருமகன் அபே குமார் சிங்கால் படியெடுக்கப்பட்டு, குருகுல் இந்திரபிரஸ்தா என்னும் கல்வி நிறுவனத்தின் நிலவறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 1994-ல் நூலாக வெளியிடப்பட்டது. அவர் சிறையில் இருந்த போது நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ உள்ளிட்ட நான்கு நூல்களை எழுதினார். இது தவிர, ஒரு மொழிபெயர்ப்பையும் செய்திருக்கிறார்.
அரசியல் பரிணாமம்
இளைஞரான பகத் சிங்கின் பரிணாம வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை அவரது சகாவாக உடனிருந்து போராடிய தோழரான சிவவர்மா இப்படிக் கூறுகிறார். அவரது சிந்தனைப் போக்கின் பரிணாமம் தீவிரமானது. 1924-க்கு முன் அவரைப் பார்த்தவர்கள், அவர் பப்பர் அகாலிகளுடன் இருந்ததாகக் கூறினார்கள்; 1925-26 காலகட்டத்தில் அவரைக் கண்டவர்கள் பகுனின், குரோபோட்கின் போன்ற ரஷ்யப் புரட்சியாளர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட அராஜகவாதிகளின் தொடர்பில் இருந்தார் என்றார்கள்; 1927-28 காலகட்டத்தில் அவரை எதிர்கொண்டவர்கள் சோஷலிஸ்ட் என்றழைத்தனர்; 1929-31 ஆண்டுகளில் பார்த்தவர்கள் அவரை மார்க்ஸிஸ்ட்கம்யூனிஸ்ட் என்றனர்.
பிரிட்டிஷாரை வெளியேற்றிவிட்டு இன்னொரு அதிகாரத் தரப்பினரிடம் ஆட்சியை ஒப்படைப்பதால் மக்களுக்கு நன்மை விளையாது. சோஷலிஸ மாற்றத் தால்தான் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்பதுதான் பகத் சிங்கின் நிலைப்பாடு. இதனை அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: புரட்சி என்பது உலகத்தின் ஒரு சட்டம். அது மனிதவர்க்க முன்னேற்றத்தின் ரகசியம். இதிலே புனிதத்துவச் சங்கிலிகள் பிணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. தனிநபர்களைப் பழிவாங்கும் நோக்கம் புரட்சி நடவடிக்கைகளின் அம்சமாகாது. துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும்தான் இதைச் சாதிக்க வேண்டும் என்பதில்லை.
மேலும், பகத் சிங் தன் சிறைக் குறிப்புகளில் வி.என்.ஃபிக்னர் என்பவரின் இந்த மேற்கோளைக் குறித்துவைத்திருந்தார்: ஏசு கிறிஸ்துவின் சரிதத்தால் ஈர்க்கப்பட்டிருப்பவர் நிச்சயமாக ஒரு புரட்சியாளரைப் புரிந்துகொள்வார்.
நினைவில் நிற்கும் மரணம்
தூக்கிலிடப்படுவதற்கு முன்பாகத் தன் குடும்பத் தினரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, பகத் சிங்கின் அம்மா வித்யாவதி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு இப்படிக் குறிப்பிட்டார்: ஒவ்வொருவரும் ஒரு நாள் மடிய வேண்டியவரே. ஆனால், உலகம் நினைவில் வைத்துப் போற்றும் மரணம்தான் மிகச் சிறந்தது.
இயல்பிலேயே கூச்சமும் தயக்கமும் மிகுந்த இளைஞரான பகத் சிங், துரிதகதியில் வளர்ந்து, தீவிரமாகச் செயலாற்றி, சிறிதும் பின்வாங்காது, சாகும் தருணம் வரை படிப்பதும் சிந்திப்பதும் எழுதுவதுமாக இருந்து, தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.
ஒவ்வொருவரும் உலகை மாற்றுவதுபற்றி எண்ணு கிறார்களேயொழிய தன்னை மாற்றிக்கொள்வதுபற்றி யாரும் எண்ணுவதில்லைஎன்பார் டால்ஸ்டாய். அப்படியில்லாமல் தன்னை மாற்றிக்கொண்டு, உலகை மாற்றுவதுபற்றி எண்ணியவராக/ செயல்பட்டவராக பகத் சிங் இருந்திருக்கிறார். ஒவ்வொரு தலைமுறை இளைஞர்களும் அவரை நாயகனாகக் கொண்டாடு வதற்கு அதுதான் காரணமாகிறது.
08.04.1929-ல் சட்டசபை குண்டு வீச்சுக்கு மூன்று நாட்கள் முன்னதாக தோழன் சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில், வாழ்க்கைகுறித்து பகத் சிங்குக்கு இருந்த புரிதலைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்: இந்தக் கடிதத்தை நீ பெறும் வேளையில், நான் முடிவில்லாத தொலைதூரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பேன். வேறெந்த நாளையும்விட இன்று நான் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதைத் தெரியப்படுத்துகிறேன். என் வாழ்வின் எல்லா அழகையும் தாண்டி, எல்லா இனிய நினைவுகளையும் தாண்டி, இந்தப் பயணத்துக்கு நான் தயாராகிவிட்டேன்...
தான் செய்யவிருந்ததில் ஆயிரத்தில் ஒரு பகுதியைக் கூடச் செய்ய இயலவில்லை என்பது மட்டுமே அவரது வருத்தமாயிருந்தது. பல்வந்த் சிங்எனும் புனைபெயரில் எழுதிய பகத் சிங்கை சர்தார்என்று சக தோழர்கள் அழைக்க, ‘பகன்வாலா’ (கடவுளின் அதிர்ஷ்டக் குழந்தை) என்று அவரது பாட்டி அழைத்து மகிழ்ந்தார். ஆனால், இந்தியா முழுவதும் அவரை பாரதத்தின் சிங்கம்என்று அழைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.


Friday 26 September 2014

இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்

இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பாஎன்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006 -ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்து விட்டது.
எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது,கெட்டது,சரி,தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய இணைய உலகில் கூகுள் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. 52 ஆயிரம் பேருக்கும் மேலாக தற்போது இந்த கம்பெனியில் பணியாற்றுகின்றனர்.
அத்தகையப் பெரும் இணைய சாம்ராஜ்யத்தின் முதுநிலை துணைத்தலைவராகத் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார். ஆண்ட்ராய்ட் ஒன்என்பதைப் புதிதாக கூகுள் அறிவித்த போது அவர் பிரபலமடைந்தார்.
சுந்தர் பிச்சை 2004-ம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார். 2011- ல் கூகுள் குரோம் ப்ரவுசர் ,
ஜிமெயில், ஆப்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான உலகளாவிய பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
2013 முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருளுக்கான பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
1998- ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் எனும் இரண்டு நண்பர்களால் இந்த கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.
ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தகவல்கள் கூகுளில் தேடப்படுகின்றன. அதி விரைவாக கூகுள் வளர்ச்சியடைந்துள்ளது.பல புதிய மென்பொருள் சேவைகளும் அதனால் வெளியிடப்பட்டுள்ளன.
ஜிமெயில் எனப்படும் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு கிளைகளை பரப்பி பிரம்மாண்டமான ஆலமரமாய் அது வளர்ந்துள்ளது.ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகள் ரூபாய் மதிப்பில் அதன் வியாபாரம் விரிந்துள்ளது.
சமீபத்தில் குரோம் ப்ரவுசர் என்னும் இணைய உலவியையும் கூகுள் வெளியிட்டது. அது தற்போது இணைய ப்ரவுசர்களின் மார்க்கெட்டில் 32 சதவீதத்தை கைப்பற்றி உள்ளது.
ஆண்ட்ராய்டு என்னும் செல்போனை இயக்கும் மென்பொருள்தளத்தையும் அது வெளியிட்டது. அதனால் செல்போன்களின் துறையில் பெரும்தாக்கம் ஏற்பட்டுள்ளது.
உங்கள் கைகளில் விளையாடும் டச் ஸ்கிரீன் செல்போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் எனும் மென்பொருளும் ஒரு காரணம். தற்போது செல்போன் உள்ளிட்ட 120 கோடி கருவிகளில் ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்படுகிறது.
சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தவர். மேல்படிப்புக்காக மேற்குவங்கத்தை சேர்ந்த கரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து படித்தாவர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்
எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ.
பட்டமும் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.
சுந்தர் பிச்சையைப் பற்றி கூகுள் நிறுவனத்தின் தலைவரான லாரி பேஜ் அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கண்காணிப்பு, தொழில் முனைப்புத் திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்எனப் பாராட்டுகிறார்.
சுந்தர் பிச்சையின் அப்பா சென்னையில் உள்ள பிரிட்டிஷ் பன்னாட்டு கம்பெனியான ஜிஇசியில் எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருந்துள்ளார். சுந்தர் பிச்சைக்கு 11வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மென்பொருள் மூலம் தனது அடுத்த தயாரிப்புகளைத் திட்டமிட்டு வருகிறது. அவற்றில் தானே வழி அறிந்து செல்லும் கார், ஆண்ட்ராய்ட் டிவி மிக முக்கியமானவை கூகுள் திட்டமிடுகிற கார் தெருக்களில் ஒரு போது, இனி நீங்கள் உங்கள் காரில் எந்த இடத்துக்கு போக வேண்டும் எனக் குறிப்பிட்டு விட்டால் போதும்.
செயற்கைக்கோள்கள் மூலமாக உருவான வரைபடங்கள் மூலம் இயங்கும் கூகுள் மேப்ஸ் துணையோடு, உங்கள் கார் உலகின் எந்த மூலைக்கும் தரைவழியாகத் தானே வழிகளை அறிந்து செல்லும்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட டிவிகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது கூகுள் ஈடுபட்டுள்ளது. அப்படிப்பட்ட டிவிகள் வந்தால் அவை தற்போதைய தொழில்நுட்பங்களில் இயங்கும் டிவிகளை காலாவதி ஆக்கும். அவை புதிய தலைமுறை டிவிகளாக இருக்கும். உங்கள் குரல்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படக்கூடியவையாக இந்த டிவிக்கள் இருக்கும்.
கூகுள் கண்ணாடி எனும் கருவியை மாட்டிக்கொண்டாலே போதும் நம்மால் இணையத்தைப் பார்க்க முடியும் என அண்மையில் கூகுள் அறிவித்தது நினைவிருக்கலாம். அத்தகைய கருவிகள் இன்னமும் முழுமையாக மார்க்கெட்டுக்கு வரவில்லை. அவை எல்லாம் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன.

அத்தகைய திட்டங்களில் முக்கிய பங்காற்றுபவராக சுந்தர் பிச்சை உருவாகி உள்ளார். ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என அவர் அழைக்கப்படுகிறார்.

Wednesday 24 September 2014

இப்படியும் ஒரு மாநில முதல்வர் !

திரிபுரா மாநில முதல்வர் தமிழகத்திலுள்ள சேலம்  நகருக்கு 23.09.2014 அன்று வருகை தந்தார். இது குறித்து ஆங்கிலத்தில் HINDU   நாளிதழ்  வெளியிட்டுள்ள செய்தி வருமாறு..
A RARE BREED OF POLITICIANS
Chief Minister of Tripura Manik Sarkar in Salem on Monday.—
In the political atmosphere when the visit of even ordinary politicians create flutter, the one day visit of Tripura Chief Minister Manik Sarkar to Salem city on Monday was a low-key affair, much to the pleasant surprise of all sections of society.
Except a few wall posters and banners displayed by the All India Democratic Women’s Association, for whose conference Mr. Manik Sarkar had come to attend, there was no sign of the visit of a Chief Minister to the city.
There were no traffic diversions, no traffic hold ups and no convoy of vehicles, which are the signs of a visit of a VIP, at any point of time in the city.
A handful of AIDWA representatives and the local leaders of the Communist Party of India (Marxist) who received him at the Salem Junction when he arrived on Monday evening by the West Coast Express, found him travelling all alone with just police escort. No partymen or his personal staff accompanied him.
After a simple reception when he was presented with a single shawl, Mr. Sarkar, who is the Chief Minister for the fourth time, left for the circuit house, where he met the party cadre. Soon he was at the stage, arriving all alone with just a police escort vehicle. There was no commotion of any sort at the venue and only the slogan of red salute welcomed him.
Even after completing his speech, he rushed towards his vehicle without waiting for any AIDWA leaders get down from the dais to see him off.
After a simple dinner at the circuit house, he left for the railway junction to board the Yercaud Express to Chennai, again all alone.
He saw to it that none of the party leaders and cadre accompanied him to the junction to see him off.
Loud applause and lusty cheers rent the air when he was introduced as the ‘the cleanest and poorest’ Chief Minister in the county and like other party members, Mr. Sarkar donates his full salary and subsidiary allowances to the party fund and instead the party pays him Rs. 5,000 a month as subsistence allowance.
In a season of scams, Mr. Sarkar belongs to a rare breed of politicians who maintain a high degree of integrity, honesty and commitment, says a senior AIDWA leader.

தமிழில்

இந்திய நாட்டின்  ஒரு மாநில முதல்வர் சென்னையிலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸில் சேலம் வருகிறார். அவருட்டன் ஒரே ஒரு  காவல் துறை ஊழியர் உடன் வருகிறார். எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் சேலம் சந்திப்பில் இறங்குகிறார். அவரை வரவேற்க விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கட்சித் தொண்டர்கள். அவர் காவல் துறை ஊழியருடன் மட்டும் சேலம் அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். அவர் சென்ற காருக்கு முன்னாலும் கார்கள் இல்லை.  பின்னாலும் கார்கள் இல்லை. அதன்பின் அவர் தான் சார்ந்துள்ள கட்சியின் ஒரு அமைப்பான மாதர் சம்மேளன மாநாட்டில் பங்கேற்கிறார். உரையாற்றுகிறார். அதன்பிறகு மீண்டும் விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். மிக எளிமையான இரவு உணவை முடித்துக் கொண்டு அந்த காவல் துறை ஊழியர் ஒருவர் மட்டும் உடன்வர சேலம் சந்திப்புக்குச் செல்கிறார். ஏற்காடு எக்ஸ்பிரஸில் சென்னைக்குப் புறப்படுகிறார். வழியனுப்ப யாரும் உடன் வரக் கூடாது என்று கண்டிப்புடன் அவர் கூறியதால் கட்சித் தொண்டர்கள் யாரும் வரவில்லை.. போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் ஒரு மாநில முதல்வர் வருகிறார். செல்கிறார். இப்படியும் ஒரு நிகழ்வா? இது கனவல்ல. நடந்த ஒரு நிகழ்வு.  

அவர் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் தோழர் மானிக் சர்க்கார். ஒரு எளிமையான முதல்வர் மட்டுமல்ல. நமது நாட்டின் ஏழை மக்களில் ஒருவராக வாழ்பவர். தான் பெறும் மாதச் சம்பளத்தை தனது கட்சியான இந்திய கம்யூணிஸ்ட் (மார்க்சஸிஸ்ட்) கட்சிக்கு நிதியாகக் கொடுத்துவிட்டு கட்சி தரும் ரூபாய் ஐயாயிரத்தை வைத்து வாழ்கிறார்.


இந்த வாழ்வு வெறும் நிகழ்வல்ல. ஒரு பாடம்

ந்மது தேசத்தின் புதிய வரலாறு

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
சரியாக காலை 7.59 மணிக்கு மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார்.
உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த அரிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பார்வையிடுட்டார்.
மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதைப் பாராட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய வரலாறு படைத்துவிட்டோம்" என்றார்.
தொடர்ந்து பெருமிதம் பொங்க பேசிய அவர்: "நமக்கு தெரியாத ஒன்றை சாத்தியப்படுத்தியிருக்கிறோம். அடைய முடியாததை அடைந்திருக்கிறோம்.
மங்கள்யான் விண்கலத்தை, 65 கோடி கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடக்கச் செய்து, மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டதை செய்து காட்டியிருக்கிறோம். கற்பனைக்கு அப்பாற்பட்ட இலக்கை அடைந்துள்ளோம்.
முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமையை இந்தியாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பெற்றுத் தந்திருக்கின்றனர். அதுவும், மிகக் குறைந்த செலவில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதிக் கட்டுப்பாட்டுகளை நெருக்கடியாக கருதாமல் விஞ்ஞானிகள் இந்த சாதனையை புரிந்துள்ளனர்.
செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் இதுவரை 21 மட்டுமே வெற்றியடைந்துள்ளது. ஆனால், நாம் தடைகளைக் கடந்து வெற்றி கண்டுள்ளோம்" என இஸ்ரோ விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டினார்.
மங்கள்யான் பாதை
கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் பிற்பகல் 2.38 மணிக்கு மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த மங்கள்யான், நியூட்டன் 440 திரவ நிலை இயந்திரம் இயக்கப்பட்டதன் மூலம் 23,550 கி.மீட்டருக்கு மேலே உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு இயந்திரங்கள் படிப்படியாக இயக்கப்பட்டதால் சுற்றுவட்டபாதையில் மங்கள்யான் மெல்ல மெல்ல மேல் எழுந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி புவி ஈர்ப்பு விசையில் இருந்து விலகி 66.6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் தனது பயணத்தை தொடங்கியது. சந்திரனின் சுற்று வட்டப்பாதை உள்ளிட்ட முக்கிய பாதைகள் அடுத்தடுத்த நாட்களில் வெற்றிகரமாக மாற்றப்பட்டன. மங்கள் யானின் ஒவ்வொரு அசைவுக்கும் தேவை யான ஆணைகளை இஸ்ரோ விஞ் ஞானிகள் பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
மங்கள்யான் விண்கலம் கடந்த ஜூன் 12-ம் தேதி 2-வது வழித்தடத்துக்கு மாற்றப்பட்டது. 300 நாட்களை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கடந்த 16-ம் தேதி ம‌ங்கள்யானில் மேற்கொள்ள வேண்டிய தகவல் பரிமாற்ற ஆணைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து 3-வது வழித்தடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
செவ்வாய் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் மங்கள் யானில் கடந்த 10 மாதங்களாக செயல்படாமல் இருந்த இயந்திரங்களை இயக்கி சோதிக்க இஸ்ரோ விஞ்ஞானி கள் திட்டமிட்டனர். அதன்படி கடந்த திங்கள்கிழமை மங்கள்யான் விண் கலத்தில் உள்ள‌ முக்கிய திரவநிலை நியூட்டன் 440 இயந்திரத்தை சுமார் 4 வினாடிகள் இயக்கினர்.
இதற்கு 0.567 கிலோ எரிபொருள் செலவானது. இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இதனையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டது போல், மங்கள்யான் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவொருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்தியா புதிய சாதனை:
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இந்த சாதனையைச் செய்த நான்காவது முகமை என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகியவை ஏற்கெனவே இந்த சாதனையை படைத்துள்ளன.
முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இதுவரை செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே வெற்றியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday 22 September 2014

தர்ணா



23.09.2014 அன்று 30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா.
விடுப்பு கொடுக்காதே
சம்பளம் கிடையாது என வழக்கமான உத்தரவுகள்.
இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் போராடிப் பெற்றவையே.
பல இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும்
பிறகுதான் இந்த உரிமைகளும் சலுகைகளும் கிடைத்தன.
மிரட்டலுக்குப் பணியாமல் தர்ணாவில் பங்க்கேற்போம். போராடுவோம்.

Friday 19 September 2014

நினைத்து நினைத்து

செப்டம்பர் 19. இந்திய தொழிலாளி வர்க்கம் வணங்கித் தொழ வேண்டிய தியாகத் திருநாள்.  பல்லாயிரக்கணக்கானவர்கள் பணிநீக்கம், பணி இடைநீக்கம், சிறைவாசம், உயிர் நீக்கம் எனும் ஒப்பற்ற தியாகங்க்களைச் செய்தனர். இது ஒரு வரலாறு என்பதைத் தாண்டி இன்றைய சூழ்நிலையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய, கற்பிக்க வேண்டிய பல பாடங்களை அள்ளித் தெளித்திட்ட நிகழ்வு.
வெறும் வாய் வார்த்தைகளால் காலம் தள்ளாமல்   சொல்வதை செயலில் காட்ட வேண்டிய தருணம்.

உழைக்கும் வர்க்கமும் அதை வழி நடத்துவோரும் வேகமாகவும் விவேகமாகவும் சிந்தித்து செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அப்படிச் செயல்படுவதே தியாகத்தைப் போற்றும் செயலாகும்.

Thursday 18 September 2014

MICROMAX



MICROMAX announces strategic partnership with BSNL to drive data growth in India      
Micromax Informatics Limited and BSNL, on Tuesday announced a strategic partnership to drive data growth in the country. Under this partnership, Micromax and BSNL will extend unique reverse bundling handset offers of free data usage of up to 2GB per quarter to the Indian consumers. BSNL’s focus on data innovation and its expertise in mobile network, along-with Micromax’s expertise in device marketing will redefine the user experience and take data penetration to the next level.

“At Micromax, it has been our constant endeavor to understand the Indian consumers and come up with products and services which act as a solution for their needs. We are delighted to partner with BSNL, as this collaboration will be an excellent unification of BSNL’s offerings and Micromax’s design capability thus enabling millions of Indian consumers to enjoy seamless connectivity through data usage, affordable call rates and other VAS services,” said Vineet Taneja, Chief Executive Office, Micromax.

“This partnership will further provide a major boost to better connectivity and internet adoption as BSNL’s pan-India network coupled with our innovative devices, backed by a strong channel and retail presence which will take these offerings across length and breadth of the country”, Vineet Taneja added.

“BSNL’s association with Micromax, one of the largest indigenous Mobile handset and data card manufacturers in the country, will create immense opportunities for customers by offering them high speed 3G data. BSNL has already provided 3G coverage in more than 2300 cities and towns of India and is committed to provide 3G coverage to additional towns. BSNL is providing best affordable 3G data services with free roaming facility”, said A. N. Rai, CMD, BSNL.

Under the partnership agreement, six Micromax devices will be bundled with the BSNL offers – X070, X088, P410i, MMX377G, A37 and A37B.

 

Wednesday 17 September 2014

தந்தை பெரியார்



தந்தை பெரியார்
பிறந்த தினம் செப்டம்பர் 17
ஈரோட்டில் பிறந்து,
மனிதனை மனிதனாக மதித்து,
பகுத்தறிவை பறை சாற்றி,
சுய மரியாதை உணர்வூட்டி இறுதி வரை கொள்கையில் பிறழாமல் வாழ்ந்தவர்.
ஈரோடு மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவராக நாணயத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றினார். கடவுளை நம்பாத ஒருவரை அறங்காவலர் குழுவின் தலைவராக செய்ல்பட அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது ஆண்ட காங்க்கிரஸ் கட்சியின் முதல்வர் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரது நாணயமான செயல்பாடுதான் முக்கியம். எனவே அப்பதவிக்கு அவர் முழுமையான தகுதி பெற்றவர். அவரை அப்பதவியிலிருந்து நீக்குவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என உறுதியாகத் தெரிவித்தார்.
ஏற்ற கொள்கைக்கும், பதவிக்கும் பெருமை சேர்த்து வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர்  தந்தை பெரியார்.
ஈரோட்டுப் பெரியார் வழியில் தனிழகம் நடைபோட்டிருந்த்தால் நிலைமை இவ்வளவு சீர்கேட்டுக்கு ஆளாகியிருக்காது.

Tuesday 16 September 2014

ஆறு மாதம்



ஓய்வு பெறப்போகும் தோழர்களது 
ஓய்வூதிய விண்ணப்பங்கள்  
ஆறு மாதங்களுக்கு முன்பே  DOT CELLக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது ஓய்வூதிய விதி. எனவே 31/03/2015க்குள் ஓய்வு பெறப்போவோரின் விண்ணப்பங்கள் 26/09/2014க்குள் DOT CELL க்கு அனுப்பப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

Sunday 14 September 2014

காஷ்மீர் உயிர் பெறட்டும்!

இந்தியாவையே உலுக்கியிருக்கிறது ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் பெருவெள்ளம். அரசியல் காரணங்களால் மிகவும் நைந்துபோயிருக்கும் காஷ்மீருக்கு இந்த வெள்ளம் மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து காஷ்மீர் மீண்டு வருவதற்கு வெகு காலம் ஆகும் என்பதுதான் பெரும் துயரம். ஜம்மு-காஷ்மீரைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கும் இந்த வெள்ளத்தைத் தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்திருப்பது சரியான முடிவு.
ஜம்மு பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் தொடர்ந்து மூன்று நாட்களாகப் பெய்த மழையால் ஜீலம், லிட்டர், சிந்து ஆகிய நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரால் சூழப்பட்டன. மழை, வெள்ளம், நிலச்சரிவால் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. உயிரிழப்பும் சேதமும் இன்னும் அதிகரிக்கக்கூடும்.
தேசியப் பேரிடர் நிவாரணப் படை, தரைப்படை, விமானப்படை ஆகியவை உடனடியாக உதவிக்கு விரைந்துள்ளன. மாநில அரசின் ஊழியர்களும் மக்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடனடியாக காஷ்மீருக்குச் சென்று உதவிப் பணிகளுக்கு உத்வேகம் அளித்திருப்பதுடன் நெருக்கடியான இந்த நேரத்தில், மத்திய அரசும் நாடும் காஷ்மீர் மக்களின் பக்கம் இருக்கின்றனர் என்ற சமிக்ஞையைக் கொடுத்திருக்கின்றனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மத்திய அரசு நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறது. மேலும், நிவாரணப் பணிகளுக்காக அரசு மொத்தம் ரூ. 2,100 கோடியை ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கும் என்று அறிவித்திருக்கிறது.
ராணுவம் 20,000 வீரர்களை மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறது. 15,000-க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் முகாம் களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவும் மருந்துகளும் தரப் படுகின்றன.
இந்தியாவின் பிற மாநில அரசுகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்கூட இந்த நெருக்கடியான நேரத்தில் காஷ்மீர் மக்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை அளிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழக முதல்வரும் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 கோடி தர முன்வந்திருக்கிறார். பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பரஸ்பரம் உதவிகள் செய்துகொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் தயாராக இருப்பது ஒரு நல்ல அறிகுறி.
பிரிவினைவாதத்தால் காலம்காலமாகத் துண்டாடப்பட்டுவரும் காஷ்மீர் மக்கள் நிறையவே ஆயுதங்களையும் அழிவுகளையும் பார்த்துவிட்டார்கள். இந்தக் காரணங்களால் அந்த மாநில மக்கள் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த மக்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாத சூழலை வெள்ளம் ஏற்படுத்திவிட்டிருக்கிறது. காஷ்மீர் யாருக்கு என்ற கேள்வியைவிட, காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற உணர்வே இப்போது மேலோங்கி நிற்கிறது.
நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை காஷ்மீரிகளுக்கு உணர்த்த இந்தத் தருணத்தில் நாம் எப்படிச் செயலாற்றுகிறோம் என்பது முக்கியமானது. ஒட்டுமொத்த தேசமும் காஷ்மீர் சகோதரர்களுக்குத் தோள் கொடுக்கக் கைகோப்போம்.


Friday 12 September 2014

நீதிமன்றம்



நமது நாட்டில் உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமண்றமும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளன. சூழ்நிலையையே தலகீழாகப் புரட்டிப் போட்ட தீர்ப்புகளும் உண்டு. தொழிலலாளிகளுக்காகவும் சில நல்ல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் அப்படி வழங்க்கப்பட்ட சில தீர்ப்புகளை அரசும் சில நிறுவனங்க்களும் மதிப்பதில்லை. அதற்கு உதாரணம் NLC  யில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் பிரச்னை. உச்சநீதிமண்றத் தீர்ப்பினைக் கூட அமலாக்க மாட்டோம் என்று அடாவடித்தனமாகச் செயல்படுவோருக்கு வரலாறு பாடம் புகட்டும்.
தீர்வுக்காக உறுதியுடன் போராடும் ஊழியர்களின் போராட்டம் வெற்றி பெற்று நீதி கிடைத்திட வாழ்த்துகிறோம்.  

Thursday 11 September 2014

மரணத்திலும் கம்பீரம்

"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று முழங்கி முப்பொழுதும் தாய் நாட்டின் மீதும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தனது தாய்மொழியான தமிழின் மீதும் தீராத பற்றுக்கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினம் இன்று. 
 தேசப்பற்றை பரப்பிய பாரதி "காலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் , எந்தன் காலருகே வாடா ,சற்றே உனை மிதிக்கிறேன்" என மரணத்தையும் கம்பீரமாக எதிர்கொண்டு கவிதை பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 93ஆவது நினைவு தினம் இன்று.

சுப்பையா என்கிற பாரதி. இயல்பிலேயே கவி பாடும் ஆற்றல் இருந்ததால் தனது 5ஆவது வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார்.


சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், சமூகத்தின் மீது அளவிலா அக்கறை காட்டிய மனிதர், சாதிப் பிளவுகளை வெறுத்தவர், பெண்ணியத்திற்கு குரல் கொடுத்த நடுநிலையாளர் என இன்னும் பல்வேறு அடையாளங்களுடன் உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆராதிக்கப்படும் மகாகவி பாரதி மறைந்தாலும்
வெறுத்தவர், பெண்ணியத்திற்கு குரல் கொடுத்த நடுநிலையாளர் என இன்னும் பல்வேறு அடையாளங்களுடன் உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆராதிக்கப்படும் மகாகவி பாரதி மறைந்தாலும், அவரது எழுத்தின் வீச்சு என்றும்

கம்பீரத்துடன் வாழும்.ன்

அறம் அரண் ஆகட்டும்!

நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் மௌனம் குற்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. நாட்டையே புற்றுநோயாக ஊழல் சூழ்ந்திருக்கிறது என்று கதறுகிறோம். எங்கும் லஞ்சம் என்று கூப்பாடு போடுகிறோம். ஆனால், ஒரு நேர்மையான அதிகாரி பாதிக்கப்படும்போது மௌனமாகத் திரும்பிக்கொள்கிறோமே, நம்முடைய சத்தியம்தான் எத்தனை சந்தர்ப்பவசமானது?
தன்னுடைய 23 ஆண்டு பணிக் காலத்தில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டு பந்தாடப்பட்டிருக்கிறார் சகாயம். சகாயத்தின் கடந்த கால வரலாறு இது. காஞ்சிபுரத்தில் வருவாய்த் துறை அதிகாரியாக இருந்தபோது மணல் திருட்டைத் தடுத்திருக்கிறார். பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனைக்கு வந்த மென்பானம் அசுத்தமாக இருந்ததாக நுகர்வோர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து விசாரித்து, அந்த நிறுவனத்துக்கே துணிந்து சீல் வைத்திருக்கிறார். மதுரையில் ஆட்சியராக இருந்தபோது, ரூ. 16,000 கோடி கல் குவாரி கொள்ளையை அம்பலப்படுத்தினார். எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் உயர்த்துஎன்று செயல்படுபவர் சகாயம் என்று மக்களே சொல்கிறார்கள். தன்னுடைய சொத்துக்கணக்கைப் பகிரங்கமாக வெளியிட்ட அதிகாரி அவர்.
தொடர் நஷ்டங்களால் நலிவடைந்து நின்றது கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி கூட்டுறவு நெசவுத் துறை. ரூ. 11.5 கோடி நஷ்டத் தொகை அதை அழுத்தி நின்றது. நெசவாளர்களுக்குக் கிடைக்கும் சொற்பக் கூலிகூட உரிய நேரத்தில் சென்றடையவில்லை.
சகாயம் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே ரூ. 13.5 கோடியாக அதன் வருவாயை உயர்த்தினார். நஷ்டத்திலிருந்து மீட்டு ரூ. 2.5 கோடி நிகர லாபம் என்ற நிலைக்கு அதை உயர்த்தினார். வேட்டி தினம் முதல் திருக்குறள் படுக்கை விரிப்பு வரை அவர் கையாண்ட ஒவ்வொரு புது உத்திகளும் கோ - ஆப்டெக்ஸுக்குப் புது மரியாதையைப் பெற்றுத்தந்தன. இரு தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்தன. இப்படிப்பட்ட ஓர் அதிகாரியை நாம் கொண்டாட வேண்டாமா?
ஒரு திறமையான, நேர்மை யான அதிகாரி இப்படிப் பந்தாடப்படக் கூடாது.
மகாராஷ்டிரத்தின் அருண்பாடியா, ஆந்திரத்தின் பூனம் மால கொண்டய்யா, ராஜஸ்தானின் முக்டா சின்ஹா, மகாராஷ்டிரத்தின் ஜி.ஆர். கைர்னார், ஆந்திரத்தின் இ.ஏ.எஸ். சர்மா, ராஜஸ்தானின் சமீத் சர்மா, உத்தரப் பிரதேசத்தின் துர்கா சக்தி நாக்பால், ஹரியாணாவின் கெம்கா, தமிழகத்தின் உமாசங்கர், இப்போது சகாயம்... இவர்களெல்லாம் தனிமனித ஆளுமைகளாக மட்டும் நிற்கவில்லை. நம் சமூகத்தில் அறம் சார்ந்த விழுமியங்களின் மிச்சசொச்ச அடையாளங்களாகவும் நிற்கிறார்கள். சமூகம் இவர்களையெல்லாம் பாதுகாக்க வேண்டும்!

பாதுகாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் துளிர்த்துள்ளது.ன்

Friday 5 September 2014

ஆசிரியர் தினம்



 ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...
புது வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன? அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன.
எல்லோருடைய பதில்களையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, பின் நிதானமாக அந்த ஆசிரியர் கேட்டார்: அப்போ உங்கள்ல ஒருத்தருக்கும் உங்களை ரொம்பப் பிடிக்காதா? உங்களை உங்களுக்கே பிடிக்கலைன்னா, வேற யாருக்குப்பா ரொம்பப் பிடிக்கும்?”
கண்கள் விரிய அவரைப் பார்க்கிறார்கள் மாணவர்கள். வகுப்பறையில் துணியால் மூடப்பட்ட கரும்பலகையின் ஒரு பகுதியை அவர் திறக்கிறார். பள்ளிக்கூடத்தைத் தாண்டாத காமராஜர் தமிழ்நாட்டின் கல்விக் கண்ணைத் திறந்தவர், எதற்கும் கலங்காதே... உலகிலேயே முக்கிய மானவன் நீ... உன்னால் முடியும்!
அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் தங்களை மீறி கைதட்டு கிறார்கள். ஆசிரியரும் கைதட்டிக்கொள்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இடம்: தமிழ்நாட்டின் பழமையான பள்ளிக் கூடங்களில் ஒன்றான மன்னார்குடி பின்லே பள்ளி (வயது 169). ஆசிரியர்: வீ. ஜெகதீசன்.
ஒரு மனிதனுக்கு சுயத்தின் மீதான நேசத்தையும் தன்னம்பிக்கையையும் ஆசிரியர்களால் எவ்வளவு அருமையாக உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணங்களில் ஒருவர் ஜெகதீசன்.

Thursday 4 September 2014

மதுரை பிரச்சினை



மதுரை மாற்றல் பிரச்சினையில் 
இரண்டு தோழர்கள் மதுரை நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டதால்
04/09/2014 அன்று சென்னையில் நடைபெற இருந்த 
மாநிலச்செயலரின் உண்ணாவிரதம் 
விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.