NFTECHQ

Friday 5 September 2014

ஆசிரியர் தினம்



 ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...
புது வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன? அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன.
எல்லோருடைய பதில்களையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, பின் நிதானமாக அந்த ஆசிரியர் கேட்டார்: அப்போ உங்கள்ல ஒருத்தருக்கும் உங்களை ரொம்பப் பிடிக்காதா? உங்களை உங்களுக்கே பிடிக்கலைன்னா, வேற யாருக்குப்பா ரொம்பப் பிடிக்கும்?”
கண்கள் விரிய அவரைப் பார்க்கிறார்கள் மாணவர்கள். வகுப்பறையில் துணியால் மூடப்பட்ட கரும்பலகையின் ஒரு பகுதியை அவர் திறக்கிறார். பள்ளிக்கூடத்தைத் தாண்டாத காமராஜர் தமிழ்நாட்டின் கல்விக் கண்ணைத் திறந்தவர், எதற்கும் கலங்காதே... உலகிலேயே முக்கிய மானவன் நீ... உன்னால் முடியும்!
அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் தங்களை மீறி கைதட்டு கிறார்கள். ஆசிரியரும் கைதட்டிக்கொள்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இடம்: தமிழ்நாட்டின் பழமையான பள்ளிக் கூடங்களில் ஒன்றான மன்னார்குடி பின்லே பள்ளி (வயது 169). ஆசிரியர்: வீ. ஜெகதீசன்.
ஒரு மனிதனுக்கு சுயத்தின் மீதான நேசத்தையும் தன்னம்பிக்கையையும் ஆசிரியர்களால் எவ்வளவு அருமையாக உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணங்களில் ஒருவர் ஜெகதீசன்.

No comments:

Post a Comment