NFTECHQ

Friday 31 October 2014

31.10.2014



அக்டோபர், 31, 1875, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்
சுதந்திரத்திற்கு பிறகு சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் இதே தினத்தில்தான் பிறந்தார். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம் சாத் கிராமத்தில் கடந்த 1875ஆம் ஆண்டு பிறந்தார் சர்தார் வல்லபாய் படேல். இங்கிலாந்தில் சட்டப்படிப்பு பயின்று தாயகம் திரும்பிய படேல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
பின்னர் காங்கிரஸில் இணைந்த சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்றுள்ளார். சுதந்திர இந்தியாவில் சிதறுண்டு கிடந்த 565 சமஸ்தானங்களை ஒன்றிணைத்த இந்த இரும்பு மனிதரின் பிறந்த தினம் இன்று.
அக்டோபர் 31, 1984, இந்திரா காந்தி கொல்லப்பட்ட தினம்
இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி இதே நாளில் தான் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19 தேதி பிறந்தார் இந்திரா காந்தி. தனது திருமண விசயத்தில் தந்தை நேருவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தயங்காமல் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
கடந்த 1964இல் நேரு இறந்த பிறகு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா காந்தி, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரானார். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்த பிறகு இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மற்றும் உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
தான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு சவாலான விவகாரங்களையும் திறம்பட கையாண்டார். சீக்கியர்களின் சுதந்திர போராட்டக் குழுவை ஒடுக்க அவர் எடுத்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையே மரணத்துக்கு காரணமாக அமைந்தது. கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு இதே நாளில் காலை 8 மணி அளவில் மெய்காவலர்களாக இருந்த 2 சீக்கிரயர்களால் சுடப்பட்டார்.

தோழர் அன்சர் பணி ஓய்வு
தோழர் அன்சர். நமது இயக்கத்தில் பற்றுடன் பணியாற்றிய தோழர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனிதப் பண்புக்குச் சொந்தமானவர்.
அவர் இன்று பணி ஓய்வு  பெறுகிறார். அவர் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

Monday 27 October 2014

தொழிற்சங்க இயக்கம் கண்ட தோழர்!



மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்தில், செல்வச் செழிப்பான குடும்பத்தில் 19.5.1914-இல் தங்கமணி பிறந்தார்.
மேல்நாடு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று, கேரள காந்தி என்று அழைக்கப்பட்ட கே.பி. கேசவன் மேனன் மூலம் வழக்குரைஞராக பதிவு செய்யப்பட்டு, சிங்கப்பூரில் அவருடன் பணியாற்றியவர். இரண்டாம் உலகப் போர் காரணமாக தாயகம் திரும்பி, மதுரை நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டார்.
வாழ்க்கையில் நல்லவராகவும், வழக்குகளில் வல்லவராகவும் பேரெடுத்தவரை, பாதிக்கப்பட்டோர் பெருமளவில் அணுகினர். வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் பெற்றுத் தந்தார்.
1942இல், "வெள்ளையனே வெளியேறு' இயக்கம், நாடெங்கிலும் பரவியது. தீப்பிழம்பாக செயல்பட்டவர்கள் கடுமையான தண்டனைகளை பெற்று, கொடுமைபடுத்தப்பட்டனர்.
அவர்களுள் இளம் வயதிலிருந்தே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தியாகி சிவஞானத்தை கொன்றுவிட, சிறை அதிகாரிகள் முடிவு எடுத்து அவரை வழக்கு மன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது, தப்பிக்க முயன்றார் என்ற காரணத்தைக் காட்டி சுட்டு கொன்று, உடலை அப்புறப்படுத்தினர்.
இதனை தங்கமணிக்கு தெரிந்த உயர் காவலர் ராமையா கூறக் கேட்டு துடித்த தங்கமணி, இப்படிப்பட்ட இழிசெயலை செய்த அரக்கமனமுடைய சிறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தார். தண்டனை பெற்றுத் தந்தார். போராட்டத்தில் பங்கு கொண்ட பலர் விடுதலை பெறவும் வழிவகுத்தார்.
தொழிலாளர்களின் அழைப்பை ஏற்று மதுரை வந்திருந்த திரு.வி. கல்யாணசுந்தரனாரை, தங்கமணி சந்தித்தார்.
திரு.வி.க. தங்கமணியிடம், தொழிலாளர்களுக்காக சங்கங்கள் அமைக்க உதவிடுமாறும் அவர்களுக்கு தக்க வழிகளில் வழிகாட்டியாகவும் இருக்க கோரினார். தங்கமணி அதனை ஏற்று, சிதறி கிடக்கும் தொழிலாளர்கள் உழைக்கும் தொழிற்சாலைகளில் சங்கங்கள் நிறுவி அவர்களுக்கு பாடமும், பயிற்சியும் அளித்து, தன்னம்பிக்கையை விதைத்தார்.
மதுரை மாநகரில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட பெரிய நிறுவனமான எஸ்.ஆர்.வி.எஸ்.இல் தொழிலாளர்களின் உழைக்கும் நேரம் வரம்பின்றி நீடிக்கப்பட்டதை அவர்கள் நடத்தும் விதத்தையும், குறைந்த ஊதியமும், நிரந்தரமற்ற பணியும், மாற்ற, தங்கமணி பேச்சுவார்த்தை வாயிலாக விரும்பியும், நிர்வாகம் ஏற்க மறுத்த பின், காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை முறைப்படி துவக்கினார்.
தொழிலாளர்களின் எழுச்சி நிர்வாகத்தை மருளச் செய்ததால், அரசின் உதவியுடன் "தீர்ப்பாயம்' அமைத்தது.
அடுத்து டி.வி.எஸ்.ஸில் நடந்த போராட்டத்தில், குடும்பத்தோடு, தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டு சிறை சென்றனர். தங்கமணி, நிர்வாகத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார்.
தொழிற்சங்க இயக்க வரலாற்றில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தனியாக சட்டம் இயற்றச் செய்தவர் தங்கமணி. அந்த சட்டத்தின் பெயர் "மோட்டார் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் ஆக்ட், 1961.
பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி தலைவராக இருந்த "சோவியத் யூனியன் நண்பர்கள்' சங்கத்தில் சேர்ந்து, அதன்மூலம் பொதுவுடமை தத்துவத்தில் ஈடுபட்டு, கட்சியின் முழுநேர ஊழியரானார்.
1957-இல் மதுரை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனாவில் நடைபெற்ற "உலக தொழிலாளர் யூனியன் காங்கிரஸ்' மாநாட்டிற்கு நாடாளுமன்ற குழுவில் சென்றார்.
அம் மாநாட்டை துவக்கி வைத்த சீன அதிபர் மா சே துங் எதிரில் அமர்ந்திருந்த தங்கமணியை கண்டதும் பாதுகாப்பு விதிகளை மீறி அவரை கட்டியணைத்து கை குலுக்கினார்.
ஓய்வு நேரங்களில் நாடாளுமன்ற நூல் நிலையத்திலுள்ள நூல்களை படித்தார். தேசிய பிரச்னைகளில் பங்கு கொண்டு தெளிவாக பேசினார். கடமை உணர்வும், கட்டுப்பாடும் கொண்டவர்.
1971-இல் மதுரையிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் பெண்கள் கல்லூரிக்கு மீனாட்சி பெண்கள் கல்லூரி என்று பெயரிட்டார்.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழகப் பிரிவுக்கு பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் இருந்தவர், பொதுவுடமை கட்சி பிளவுபட்டபோது, தாய் ஸ்தாபனத்தில் தொடர்ந்தார்.
அடுத்து, அதன் பாதிப்பினால், தொழிற்சங்கம் பிரிந்தபோது, மனம் வெதும்பினார். தங்கமணி மக்களின் மேம்பாட்டுக்காகவும், தொழிலாளர் வாழ்வு மேம்படவும், ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் சிறையிலிருந்தார்.
இவரது வாழ்க்கை துணைவி வள்ளியம்மா பிரபல தொழிலதிபர் ராமசாமி நாடாரின் தவப்புதல்வி. முற்றும் துறந்தவர்களை பற்றி படித்திருக்கிறோம். ஆனால் பார்த்ததில்லை. இவ்விருவரும் இப்படிப்பட்ட தவ வாழ்க்கையை மனம் உவந்து, வலிந்து ஏற்றவர்கள்.
எல்லா சுகங்களையும் உதறி எறிந்து, எளிய வாழ்வில், இறுதி வரை எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் கட்சி அலுவலகமான சென்னை தியாகராயநகர் பாலன் இல்லத்தில், ஓர் அறையில் தங்கியதை தொண்டர்களே கண்டு வியந்தனர்.
கே.டி.கே. என்று தோழர்களால் அழைக்கப்பட்ட கே.டி.கே. தங்கமணி, 2001-இல் மறைந்தார்.
இவ்வாண்டு அவரது நூற்றாண்டு.

Saturday 25 October 2014

ஏன் இந்த தனியார் மோகம்?



நிலக்கரித் துறையில் சமீப காலமாக நிலவிவந்த அசாதாரணச் சூழலில், பல்வேறு விமர்சனங்களுக்கிடையில், மத்திய அரசு துரித நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது
நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக 214 நிலக்கரி உரிமங்களை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிலக்கரித் துறையே ஸ்தம்பித்துப்போயிருந்த நிலையில் மத்திய அரசு சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், யாருக்காக இந்தச் சுறுசுறுப்பு என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ரத்துசெய்யப்பட்ட ஒதுக்கீடுகளெல்லாம் இணையத்தின் மூலம் ஏலம் விடப்படவிருக்கின்றன. ஏலத்துக்குப் பின், பழைய உரிமையாளர்களிட மிருந்து புதிய உரிமையாளர்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களைக் கைமாற்றிவிடுவதற்கேற்ப அவசரச் சட்டமொன்றும் அமல்படுத்தப் படவிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப் பதற்காகத்தான் எல்லா ஏற்பாடுகளும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், தனியாரின் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்று நிதியமைச்சர் நம்புகிறார் போலும். எனினும், தேவையானபோது தனது அதிகாரத்தை அரசு பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அவசரச் சட்டத்தில் இடம் இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.
உலகில் அதிக அளவு நிலக்கரி வளத்தை பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று: சுமார் 30,100 கோடி டன்கள். அப்படி இருந்தும், சென்ற ஆண்டும் மட்டும் 17.4 கோடி டன்கள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய். இந்தியாவில் இவ்வளவு நிலக்கரி வளத்தை வைத்துக்கொண்டு இறக்குமதி செய்வதற்குக் காரணம் நிலக்கரித் துறையின்மீது அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு இருக்கும் மேலாதிக்கம்தான் என்று குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்குப் போதுமான சுதந்திரத்தையும், அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிப்பதன் மூலம் இந்திய நிலக்கரித் துறைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட கதிதான் நிலக்கரித் துறைக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. இதன் உள்ளார்ந்த நோக்கமே அரசுத் துறையால் எதையும் செய்ய முடியாது, தனியார் துறையே திறம்படச் செயலாற்றும் என்று நம்பவைப்பதுதான். தகவல்தொடர்புத் துறையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உலகத்திலேயே இல்லாத வகையில் பிரம்மாண்டமான தகவல்தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டது இந்தியா. ஆனால், களத்தில் தனியார் துறைக்கு வழிவிட்டு வேண்டுமென்றே பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது அரசுத் துறை. நிலக்கரித் துறையும் இன்று இந்த இடத்தை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.
ஒருபுறம், அரசுத் துறை சரியாகச் செயல்படவில்லை என்றால், மறுபுறம் தனியார் நிறுவனங்கள் அதீதமாகச் செயல்பட்டு லாப வேட்டையை நிகழ்த்துகின்றன. அதற்கு வழி விடவே அரசுத் துறை நிறுவனங்கள் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யப்படுகின்றன. அரசு மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொள்ள முடியும். ஆனால், அரசு மந்தமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தனியாருடைய ஒரே நோக்கம் லாபம் என்பதால் தனியார்மயமாக்குவதில் முதல் பலி மக்கள் நலன்தான். இந்த உண்மை திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டும் அரசு சளைக்காமல் தனியாரை நோக்கியே நகர்வது எதற்காக?

Thursday 23 October 2014

ராஜம் கிருஷ்ணன்:



முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் காலமானார்.
நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் கடைசிக் கட்டத்தில் வளர்ந்து, விடுதலை பெற்ற இந்தியாவின் வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து பயணித்த அவர், தம் சம காலத்தின் அரசியல், சமுதாய நிலைமைகளை உற்றுக் கவனித்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் தம் எழுத்துகளில் பதிவு செய்தார்.
பெண்ணடிமைத் தனத்திற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான ஆவேசம் அவரது எழுத்துகளில் உயிர்ப்புடன் வெளிப்பட்டது. பலரது உரிமைப் போராட்டங்களுக்கும் தோள் கொடுத்தவர்.
சாகித்திய அகாதமி விருது, நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் சர்வதேச விருது, கலைமகள் விருது, சோவியத் லாண்ட் நேரு விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்தன.
சமத்துவ சமுதாய இலக்கை நோக்கி  நடைபோடும் படைப்பாளிகளுக்கும் களப்போராளிகளுக்கும் ஒரு உந்துசக்தியாக என்றென்றும் திகழ்ந்திருப்பார்"

Friday 17 October 2014

EPF



EPF  பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு UAN (UNIVERSAL ACCOUNT NUMBER) வசதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கீழ்க்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் இரண்டை மாவட்ட நிர்வாகத்திற்கு வழிமுறையாக (Through Proper Channel) உடனடியாக அனுப்ப வேண்டுகிறோம்.
1.                              குடும்ப அட்டை
2.                              வாக்காளர் அடையாள அட்டை
3.                              ஆதார் அட்டை
4.                              ஓட்டுநர் உரிமம்
5.                              பாஸ்போர்ட்

ஈரோடு மாவட்டத்தில் ACCOUNTS OFFICER (PC) அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
01.10.2000க்குப்  பிறகு நமது நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு இது பொருந்தும்.
இனி வரும் காலத்தில் EPF சம்பந்தப்பட்ட விபரங்க்களை www.epfindia.com என்னும் இணைய தளத்தில் பார்க்கலாம்.

போனஸ்



போனஸ் வழங்க வேண்டும் என்று நமது ஜபல்பூர் அகில இந்திய மாநாட்டுக்கு 11.10.2014 அன்று வருகை தந்த நமது துறையின் தலைவர் (CMD ) அவர்களிடம் தலைவர்கள் வலிய்றுத்தினர். இது குறித்து 16.10.2014 அன்று நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம்  மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தீபாவளிக்கு முன் இந்த மாதத்திற்கான GPF பட்டுவ்வாடாவை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமது மாவட்டச் சங்கம் மத்திய சங்கத்தை க் கேட்டுக் கொண்டுள்ளது.

வீணாகும் மனித வளம்



வேலையில்லாத் திண்டாட்டம் தீர்ந்தபாடில்லை. இது, எல்லா நாடுகளிலும் உள்ளதுதான் என்றாலும் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் வேலை தேடுவோர் எண்ணிக்கை சுமார் 11 கோடிக்கும் மேல். இந்தியக் குடும்பங்களில் சுமார் 28% வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நேரடியாகப் பாதிக்கப் பட்டுள்ளன. 15 வயது முதல் 60 வயது வரையிலான வேலை செய்யக் கூடிய பருவத்தினரில் வேலை கிடைக்காதோர் எண்ணிக்கை மட்டுமே 7.5 கோடிக்கும் மேல். இவர்கள் மொத்தம் 7 கோடி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தரவுகளெல்லாம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிடப் பட்டிருக்கின்றன.
2001-ல் இதே போன்ற கணக்கெடுப்பின்போது 23% குடும்பங் களைத்தான் வேலையில்லாத் திண்டாட்டம் பாதித்திருந்தது. 2011 கணக்கெடுப்பின்படி, அந்தப் பிரச்சினை 28% குடும்பங்களைப் பாதித்திருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவில்லை என்பது ஐமுகூ அரசுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முக்கியமான காரணங்களுள் ஒன்று. எனவே, மத்திய அரசு உடனடியாக வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். அரசின் செலவைக் குறைக்க ஆள்குறைப்பு செய்வது, காலியிடங்களை நிரப்பாமல் பதவிகளையே காலிசெய்வது, துறை களைக் குறைப்பது, நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை சுருக்குவது போன்ற செயல்களில் இறங்கக் கூடாது. வேலைவாய்ப்பு பெருகினால் நுகர்வும் பெருகும்; அது தொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை வளர்ச்சிக்கு நேரடியாக உதவும்.
கடந்த 3 ஆண்டுகளாக வேலைவாய்ப்பில் முன்னேற்றமே இல்லாமல் இருப்பதால்தான் அரசு எத்தனை சலுகைகள் தந்தாலும் உற்பத்தித்துறை மீட்சி அடையவில்லை. இப்போது விவசாயத்தில் நிரந்தர வருமானம் இல்லை, கிடைக்கும் வருமானமும் போதவில்லை என்பதால் இளைஞர்கள் கிராமங்களை விட்டு வெளியேறவே நினைக்கின்றனர். கிராமப்புறங்களில் 30% வீடுகளில் வேலை கிடைக்காதவர்கள் உள்ளனர். நகரங்களில் இதே அளவு 23% ஆக இருக்கிறது. கிராமப்புற, நகர்ப்புற வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கு இடையே அதிக வித்தியாசம் இருப்பது சூழலின் பேரபாயத்தை நமக்கு உணர்த்துகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் என்பது அந்த 11 கோடி மக்களை மட்டும் பாதிப்பதல்ல; ஒட்டுமொத்த இந்தியாவையும் பல வழிகளில் பாதிப்பது.
பணத்தையும் தங்க நகைகளையும் வீட்டிலேயே வைத்துப் பூட்டினால் எப்படி யாருக்கும் எந்தப் பலனையும் கொடுப்பதில்லையோ அதே போல, வேலைசெய்யும் உடல் தகுதி/மனநலம் இருந்தும் சுமார் 11 கோடிப் பேருக்கு வேலைகொடுக்காமல் வைத்திருக்கிறோம். தேசத்தின் அரிய செல்வமான மனித வளத்தை எப்படியெல்லாம் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம் நாம்!

Thursday 16 October 2014

இணைவோம்.



யாரையும் அதிகாரம் செய்வது என் நோக்கம் அல்ல…. நாம் அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாக நேசிக்கிறோம். புத்திசாலித்தனத்தை விடவும் நமக்குத் தேவை மனிதநேயமே. ஜனநாயகத்தின் பெயரால் நாம் இணைவோம். விரோதம் விடுத்து அன்பு கொள்வோம்நகைச்சுவைக் கலைஞர் சார்லி சாப்ளின்.

Tuesday 14 October 2014

புயலுக்கு பெயர்



புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம், அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது? 
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.
 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம் செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954-ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.
 இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில் உருவானது. இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்துள்ளன.
 நாம் கடந்து வந்த புயல்களில் லைலா என்ற பெயர் பாகிஸ்தான் கொடுத்தது. ஜல் என்ற பெயர் இந்தியா கொடுத்திருந்த பெயர். தானே என்ற பெயரை மியான்மரும், மகாசேன் என்ற பெயர் இலங்கையாலும் கொடுக்கப்பட்டதாகும்.
 இதே போல் தாய்லந்து கொடுத்த பெயரான பைலின், மாலத்தீவு பெயரிட்ட மாதி புயலைத் தொடர்ந்து ஓமன் கொடுத்துள்ள பெயரைத் தாங்கி தற்போது ஹூட் ஹூட் புயல் உருவாகியுள்ளது.
 ஹூட் ஹூட் என்பது இஸ்ரேலின் தேசியப் பறவை என கூறப்படுகிறது. இதற்கு அரபிய மொழியில் தாலாட்டு என்று அர்த்தமாம். ஆனால் நிச்சயம் இந்த ஹூட் ஹூட் தாலாட்டி நம்மை தூங்க வைக்கப்போவதில்லை.

Monday 13 October 2014

நிர்வாகிகள்


அகில இந்திய மாநாட்டில் தோழ்ழர்கள் இஸ்லாம் அகமது, சிங், ராஜ்மெள்லி ஆகியோர் முறையே தலைவர், பொதுச் செயலர், பொருளர் பதவிகளுக்கு ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத் தோழர்கள் ஜெயராமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செயலர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர் ககாமராஜ் சிறப்பு அழைப்பாளாராக
தேர்வு செய்யப்பட்டார்.
தோழர் C.K. மதிவாணன் நிர்வாகிகள் பட்டியலை முன் மொழிந்தார்.

சென்னைத் தொலைபேசி  சார்பாக ராஜசேகரன் எனும் இளைய தோழர் செயலராக தேர்வு செய்யப்பட்டார்.
தோழர் C.K. மதிவாணன்
இளமைக்கு வழி விட்டு, வழிகாட்டி பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தோழர் C.K. மதிவாணன் இலக்கணம் வகுக்குக்ம் முன்னோடித் தலைவராக பரிணமித்துள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இனி வரும் காலம் இனிதாக அமைய பொறுப்புணர்ந்து செயல்பாட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.
விபரங்க்களும், விமர்சனங்க்களும் விபரமறிந்து.



Leaders become great not because of their power.
But because of their ability to empower others.
 


Saturday 11 October 2014

எதற்கு? ஏன்?



செய்ய வேண்டிய காரியத்தை,
செய்ய வேண்டிய நேரத்தில்
செய்யாமல் இருப்பதும் குற்றம்.

செய்யக் கூடாத காரியத்தை,
செய்யக் கூடாத நேரத்தில்
செய்வதும் குற்றம்.


வரும் 27.11.2014 அன்று JAC  சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்தம் என நிர்வாகத்துக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பூஜாவுக்கு முன்னர் ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்கு என்பது முப்பதில்  முதல் கோரிக்கை.

பெற வேண்டிய உரிமையை உரிய காலத்தில் பெற்றுத் தர வேண்டியது கடமை.
பெற்ற உரிமையை இழப்பதை மெளனமாக வேடிக்கை பார்ப்பது வெட்கம்.
இழந்த உரிமையைப் பெற முடியாமல் இருப்பது அவமானமாகும்.
போனஸ் என்பது ஒரு உரிமை என்பதைக் கூட உரக்கச் சொல்லாமல் நஷ்டம் என்றும் சம்பளம் அதிகமாகப் பெறுகிறோம் என்றும் சமாதானம் சொல்வதும் சகித்துக் கொள்ளவே முடியாத ஒன்று.
இது ஊழியர்களின் குற்றமா?
தலைமையின் குற்றமா?
ஊழியர்களின் குற்றம் என்று சொல்வது உளறல்.
தலைமையின் குற்றம் என்பது சத்தியம்.

Friday 10 October 2014

நோபல் பரிசு

இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர்.
குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக
கைலாஷ் சத்யார்த்தி
டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள் பல்வேரு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உண்டு. இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவை நிறைய ஆவணப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் என்று தாக்கம் செலுத்தியுள்ளது.
இவரது இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் இவரது அமைப்பினால் மீட்கப்பட்ட ஏகப்பட்ட சிறார்களுடன் புது டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.
மலாலா
இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் அமைதி நோபல் பரிசைப் பெறுகிறார் சிறுமி மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானில் மகளிர் கல்விக்காக போராடி, அதனால் பல இன்னல்களையும், தாலிபான்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ல மலாலாவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது நோபல் கமிட்டியின் ஒரு திட்டமிட்ட பார்வையின் விளைவினால் என்று கூறப்படுகிறது.

அதாவது, ஓர் இந்து மற்றும் ஒரு முஸ்லிம், அதிலும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசினை அளிக்கும்போது கல்வி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகக் கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்களிப்பு செய்ய முடிவதாக நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

அகில இந்திய மாநாடு



நமது சங்கத்தின் அகில இந்திய மாநாடு இன்று
10. 10.2014 அன்று துவங்குகிறது.

நிறுவனத்தின் வளம் பேண்வும், ஊழியர்களின் நலன் காக்கவும்
நல்ல பல விவாதங்க்களை நடத்தி ஒன்றுபட்ட வெற்றிகரமான மாநாடாக அமைய வாழ்த்துகிறோம்.

Monday 6 October 2014

ஈகை

அன்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை பக்ரீத் திருநாள், சமுதாயத்தில் ஒருமைப்பாடும், இரக்க சிந்தனையும் மேலோங்க  உருவான இந்த தியாகத் திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Sunday 5 October 2014

வள்ளலார்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற கூற்றின் சொந்தக்காரர் வள்ளலார் இதே தினத்தில் தான்
(அக்டோபர் 5)
பிறந்தார். 1823ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மருதூரில், பிறந்தார்ன் ராமலிங்க அடிகளார். சிறு வயதிலேயே அவரது தந்தை உயிரிழந்ததால் கடலூரில் இருந்து சென்னைக்கு குடியேறியது அவரது குடும்பம்.

சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர் , சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களை கொண்டவர் வள்ளலார். சன்மார்க்கத்திற்காக வாழ்வை அர்பணித்த வள்ளலார் 1867ஆம் ஆண்டு வடலூரில் தர்ம சாலை ஒன்றை தொடங்கி அனைவருக்கும் உணவு வழங்கினார். மக்களின் பசியை போக்க வழி கண்டவர் வள்ளலார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துக்கள் அனைத்தும் முற்போக்காகவே பார்க்கப்பட்டன.
 

Thursday 2 October 2014

மனசாட்சி

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பதவிகளை வகிக்க இருப்பவர் எடுத்துக்கொள்ளும் ரகசியக் காப்புப் பிரமாணங்களைச் சத்தியம் என்ற வகையில் கொண்டுவர முடியாது. அவை உறுதி ஏற்புகள். ஆனால், எதன் பேரால் உறுதி தருகிறார்கள் என்பதில் வருகிறது சத்தியம் என்ற உணர்வு. இந்த உறுதி ஏற்புகள் பெரும்பாலும் கடவுளின் பேரால் எடுக்கப்படுவதே உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. கடவுள் நம்பிக்கை அற்றவர் மன சாட்சியின் பேரால் உறுதி எடுக்கும் நடைமுறை உருவானது. கடவுளை நம்பாதவர் கடவுளின் பேரால் உறுதி எடுப்பது சத்தியத்தை மீறியதாகிவிடும். சத்தியம் கடவுளைவிட உயர்ந்தது என்று மனிதர்கள் உண்மையாகவே நம்பியிருக்கிறார்கள். நக்கீரன் தமிழ் உதாரணம். சார்லஸ் பிராட்லா இங்கிலாந்து சான்று.
கடவுளைத் தவிர்த்து, மனசாட்சியின் பேரால் அரசாங்க உறுதிமொழிகள் அமையும் நடை முறைக்குக் காரணமானவர் சார்லஸ் பிராட்லா (1833-1891). இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட அவர், ‘கடவுள் பேரால்உறுதி
மொழி ஏற்க மறுத்துவிட்டார். நாடாளுமன்ற விதி, உறுதி ஏற்காமல் அவரை அவையில் அமர அனுமதிக்கவில்லை. அவரும் உறுதியாக நின்றார். தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. மறபடியும் நின்றார். மறுபடியும் மறுத்தார். இப்படி மூன்றுமுறை நடந்த பிறகு வேறு வழியில்லாமல் நாடாளுமன்றச் சட்டத்தைத் திருத்தி அவரை உறுப்பினராக்கிக்கொண்டது அரசு. மனசாட்சி முறை இப்படித்தான் உலகத்தில் தொடங்கியது. பெர்னார்ட்ஷா உட்பட பலர் பிராட்லாவின் பக்கம் நின்றனர். 1891-ல் காலமான பிராட்லாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட 3,000 பேரில் நம்முடைய 22 வயது காந்தியும் ஒருவர்.
அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் இன்று அக்டோபர் 2. ந்டக்கும் நிகழ்வுகளைக் கண்டு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சரியத்தையும் வேதனையையும் அளிக்கிறது என்று காந்தியடிகள் 1947ல் மனம் உடைந்து எழுதினார். மதத்தை விட மனிதத்தின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர். வாழச் சொன்னவர். அகிம்சை, உண்மை, நேர்மை எளிமை, சத்தியம்   அனைத்திற்கும் உலகத்தின் சாட்சியாக திகழ்பவர்.
இன்று தூய்மை தினமாக அவரது பிறந்த நாள் அணுசரிக்கப்படுகிறது. அவர் நினைக்கப்படுகிறார் என்பது மகிழ்ச்சி. ஆனால் மனதில்,செயலில், அரசியலில்,நிர்வாகத்தில் என்று தூய்மை வரும் என்பதே காந்தியை நேசிப்போரின் எதிர்பார்ப்பு.
அது ஒரு நாள் நிறைவேறும்.

காந்தியடிகள் ஆயிரக்கணக்கான ஆலைத் தொழிலாளர்கள்  வேலை நிறுத்தம் ஒன்றை தலைமை தாங்கி 30 நாட்கள் நடத்தினார். போராட்டம் வெற்றி. தொழிலாளிகளின் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன. அதன் பிறகு காந்தியடிகள் அந்த ஆலையின் முதலாளிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இப் போராட்டத்தால் தங்களுக்கு  ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் பண இழப்புக்கும் நான் மன்னிப்பு கோருகிறேன் எனக் குறிப்பிட்டார்.
ஒரு மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் என்பதே அவரது நோக்கம்.


வாழ்க்கை

எளிமையான வாழ்க்கைக்கு உதாரணமாகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் ஒரு முறை கட்சிக்காகத் திரட்டப்பட்ட நிதியுடன் வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ரிக்‌ஷாக்காரர் ‘‘ஏன் ரிக்‌ஷாவில் போகலாமே?’’ என்று கேட்க அதற்கு என்னிடம் பணமில்லை’’ என்றார் ஜீவா. ‘‘ஏன் உங்கள் கையில் இருக்கும் உண்டியலில் அவ்வளவு பணமிருக்கிறதே, அதிலிருந்து கொஞ்சம் கொடுக்கலாமே’’ என்று ரிக்‌ஷாக்காரர் சொல்ல அதற்கு ஜீவா அது என்னுடைய பணமில்லை. கட்சிக்காகத் தொண்டர்கள் கொடுத்த நிதிஎன்றாராம்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் அரசுத் தொழிற்சாலை ஒன்றுக்காக இயந்திரங்கள் வாங்கியபோது அந்த நிறுவனம் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கமிஷனாகத் தர, அதை லஞ்சம் எனக் கருதி வாங்க மறுத்தார் காமராஜர். இது எங்கள் நிறுவனத்தின் வழக்கம், லஞ்சம் அல்லஎன்று அந்த நிறுவனத்தின் தலைவர் கூற அப்படியானால், அந்த கமிஷன் தொகைக்கு உரிய எந்திரம் ஒன்றைத் தந்துவிடுங்கள்என்று காமராஜர் கூறினாராம்.
அனண்ணா முதல் அமைச்சரான போது விலை உயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் அவரது வீட்டுக்கு ஒரு லாரியில் கொண்டு வரப்பட்டன.  அவர் மிகவும் கோபத்துடன் அவற்றை திருப்பி அனுப்பி விட்டார். அப்போது அவர் தனது உதவியாளரிடம் உறுதியாகச் சொன்னார் அரசாங்கப் பொருள் என்ற ஒன்று எனது வீட்டுக்கு வருமேயானால் அது தொலைபேசி ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும்
மறைந்த தமிழக அமைச்சர் கக்கன தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் நோயுற்று சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார்.அவரது பெயரைக் கேட்டு அதைப் பதிவும் செய்து கொண்டு அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறார். படுக்கை வசதி இல்லாத காரணத்தால் வெராண்டாவில் படுக்க வைக்கப்படுகிறார்.
ஒரு அரசு விழாவுக்காக  மதுரை வந்த அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திடீரென மதுரை மருத்துவமனையைப் பார்வையிட வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவிக்கிறார். மருத்துவமனை முழுமையும் ஆய்வு செய்கிறார். அப்போது வெராண்டாவில் படுக்க வைக்கப்பட்டுள்ள கக்கனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவருக்கு வழக்கமான கோபம் வ்ருகிறது. மருத்துவமனையின் பொறுப்பாளர்களைப் பார்த்து இவர் யார் தெரியுமா என வினவுகிறார். அங்கு  மெளனம் நிலவுகிறது. பிறகு அவர் யார் அவர் யார் எனக் கூறி விட்டு கக்கனின் அருகில் சென்று அவர் அருகில் அமர்ந்து அவரது உடல் ந்லம் குறித்து விசாரிக்கிறார். தனது ஆட்சியில் தங்க்களை இப்படி ந்டத்தி விட்டார்களே எனக் கூறி அதற்காக வருத்தம் செரிவிக்கிறார். மருத்துவமனைக்குள் காலி படுக்க்கைகளே இல்லையா என வினவுகிறார். அனைத்து படுக்கைகளிலும் நோயாளிகள் இருக்கிறார்கள் என பதில் வருகிறது.  வழக்கமான தயாள குணத்துடன்  தனது சட்டைப் பையிலிருந்து பணத்தை அள்ளி எடுத்துக் கொடுத்து கக்கன அவர்களுக்குப் படுக்கை வசதி செய்யச் சொல்கிறார்.

இப்போதும் இபடிப்பட்ட சில நல்லக்கண்ணுகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.