NFTECHQ

Friday 31 October 2014

31.10.2014



அக்டோபர், 31, 1875, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்
சுதந்திரத்திற்கு பிறகு சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் இதே தினத்தில்தான் பிறந்தார். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம் சாத் கிராமத்தில் கடந்த 1875ஆம் ஆண்டு பிறந்தார் சர்தார் வல்லபாய் படேல். இங்கிலாந்தில் சட்டப்படிப்பு பயின்று தாயகம் திரும்பிய படேல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
பின்னர் காங்கிரஸில் இணைந்த சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்றுள்ளார். சுதந்திர இந்தியாவில் சிதறுண்டு கிடந்த 565 சமஸ்தானங்களை ஒன்றிணைத்த இந்த இரும்பு மனிதரின் பிறந்த தினம் இன்று.
அக்டோபர் 31, 1984, இந்திரா காந்தி கொல்லப்பட்ட தினம்
இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி இதே நாளில் தான் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19 தேதி பிறந்தார் இந்திரா காந்தி. தனது திருமண விசயத்தில் தந்தை நேருவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தயங்காமல் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
கடந்த 1964இல் நேரு இறந்த பிறகு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா காந்தி, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரானார். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்த பிறகு இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மற்றும் உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
தான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு சவாலான விவகாரங்களையும் திறம்பட கையாண்டார். சீக்கியர்களின் சுதந்திர போராட்டக் குழுவை ஒடுக்க அவர் எடுத்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையே மரணத்துக்கு காரணமாக அமைந்தது. கம்பீரத்தின் அடையாளமாக திகழ்ந்த இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு இதே நாளில் காலை 8 மணி அளவில் மெய்காவலர்களாக இருந்த 2 சீக்கிரயர்களால் சுடப்பட்டார்.

தோழர் அன்சர் பணி ஓய்வு
தோழர் அன்சர். நமது இயக்கத்தில் பற்றுடன் பணியாற்றிய தோழர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனிதப் பண்புக்குச் சொந்தமானவர்.
அவர் இன்று பணி ஓய்வு  பெறுகிறார். அவர் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment