NFTECHQ

Thursday 31 December 2015

வருக 2016

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

2016 பல வினாக்களுக்கு விடை தரும் ஆண்டாக இருக்கும்.

சமூகம்,
அரசியல்,
தொழிற்சங்கம்
என பல தரப்பட்ட பகுதிகளில் சவால்களைச் சந்திக்கும் ஆண்டாக இருக்கும்.

தன்னம்பிக்கையுடனும்,
நம்பிக்கையுடனும்,
ஒற்றுமை உணர்வுடனும்
சவால்களைச் சந்திப்போம்.

சாதனைகள் பல படைப்போம்.

மீண்டும்
புத்தாண்டு
வாழ்த்துக்கள்


4.5 சதவிகிதம்
01.01.2016 முதல் விலைவாசிப்படி (DA)
4.5 சதம் உயரும்.

107.5 சதவிகிதத்திலிருந்து

112.4 சதமாக உயரும்.
வாழிய பல்லாண்டு

31.12.2015 அன்று பணி ஓய்வு பெறும்

தோழர் S.நடராஜன் STS காங்கயம்

தோழர் P.செல்லமுத்து STS வெள்ளகோவில்

தோழர் N.காந்தி TM ஈரோடு

ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

Tuesday 29 December 2015

நல் வினையாற்றிய
மாநில நிர்வாகத்துக்கு

பாராட்டுக்கள்


Sunday 27 December 2015

ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் கடிதம்

பெறுதல்

மாவட்ட ஆட்சித் தலைவர்
ஈரோடு மாவட்டம்

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்.

பொருள்: நகரங்களை மறுவகைப்படுத்துதல் ம்ற்றும் உயர்நிலைப்படுத்துதல் --சம்பந்தமாக

தங்களின் மேலான கவனத்திற்கு கீழ்க்கண்ட வேண்டுகோளை பணிவுடன் சமர்ப்பிக்கிறோம்.

2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி
நாட்டில் உள்ள 23 நகரங்களை மறுவகைப்படுத்தியும், உயர்நிலைப்படுத்தியும்  மத்திய அரசின் நிதி அமைச்சகம் 21.07.2015 அன்று உத்தரவிட்டுள்ளது. (உத்தரவின் நகல் தங்களின் மேலான பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது).

இந்த உத்தரவின்படி, ஈரோடு நகரமும் (ERODE UA URBAN AGGLOMERATION) என்ற அடிப்படையில்  தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி
1.ஈரோடு நகரம்
2.பவானி நகராட்சி
3.பிராமண பெரிய அக்ரஹாரம்
4.காசிபாளையம்
5.மேட்டு நாசுவம்பாளையம்
6.பெரியசேமூர்
7. சூரம்பட்டி
8. சூரியம்பாளையம் 
9.வீரப்பன்சத்திரம்
போன்ற பகுதிகளை உள்ளடக்கி ஈரோடு நகரத்தின் கூட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(உத்தரவின் நகல் தங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது)

இந்த உத்தரவின் மூலம் மேற்கண்ட பகுதிகளில் பணியாற்றும் அரசு மற்றும் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சத வீட்டு வாடகைப்படி கிடைக்கும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஈரோடு நகரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மேற்கணட உததரவின் அமலாக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில்,பவானி மற்றும் காளிங்கராயன்பாளையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மேற்கணட உததரவின் அமலாக்கம் மற்றும் அதனால் ஊழியர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் குறித்து  ஈரோடு மாவட்ட பி.எஸ்.என்.எல் நிர்வாகம் வழிமுறைகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்களில்  (பவானி மற்றும் காளிங்கராயன்பாளையம்) பணிபுரியும் தபால் துறை
ஊழியர்களுக்கு இந்த உத்தரவின்படி 20 சத வீட்டுவாடகைப்படி வழங்கப்பட்டுள்ளது.

எனவே தாங்கள் இது குறித்த வழிமுறைகளை வழங்கி
பவானி மற்றும் காளிங்கராயன்பாளையத்தில் பணிபுரியும்
பி.எஸ்.என்.எல் ஊழியர்களும் இந்த உத்தரவின் மூலம் பலன்பெற உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

நன்றியுடன்

தங்கள்   உண்மையுள்ள

(N.பழனிவேலு)
மாவட்டச் செயலர் 
தெற்கு வடக்கு மேற்கு  கிழக்கு

            நவம்பர்-2014       நவம்பர் 2015

தெற்கு    ரூ 717.23 கோடி    ரூ 746.07 கோடி

வடக்கு    ரூ 413.49 கோடி    ரூ 449.34 கோடி

மேற்கு    ரூ 369.25 கோடி      ரூ 362.74 கோடி

கிழக்கு    ரூ 244.57 கோடி    ரூ 239.74 கோடி

மொத்தம்  ரூ 1744.54 கோடி  ரூ 1797.89 கோடி

ஏப்ரல் 2014 முதல் நவம்பர் 2014 வரை ரூ 14780.55 கோடி

ஏப்ரல் 2015 முதல் அக்டோபர் 2015 வரை ரூ 15118.55 கோடி

Thursday 24 December 2015

கிருஸ்துஸ் தின வாழ்த்துக்க்ள




இதைக் கொண்டாடும் அனைவருக்கும்
இனிய நல்வாழ்த்துக்கள்.

அன்பைப் போதித்தவரின் வழியில் நின்று பீட்டர் என்ற ஒரு மனிதன் சமீபத்திய மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்தாராம்.

அங்குள்ள மக்கள் முருகா முருகா என்றோ அல்லா அல்லா என்றோ இயேசு இயேசு என்றோ கூவ வில்லையாம்.

பீட்டர் பீட்டர் என்றே அழைத்தார்ககளாம்.

அன்புக்கு மதமும் இல்லை. சாதியும் இல்லை.

வாழ்க மனிதம்

மீண்டும் அனைவருக்கும்
கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் 
ஒரு கணக்கு

16.04.2013 அன்று  பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை

2,04,468.


மார்ச் 2015 அனறு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை

1,78,818.


ஆக இரண்டு ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவு 25,650.  

ஆக், சராசரியாக ஒரு ஆண்டுகு 12,500 ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவதாக வைத்துக் கொண்டால்,
ஏப்ரல் 2016ல் பணியில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை

                      1,66,500 

ஆக இருக்கக் கூடும்.

இதில் 

99,380ல் எவ்வளவு குறையும்,

61,915ல் எவ்வளவு குறையும் 

என்பது பிறகுதான் தெரியும்.

ஒன்று தெரிகிறது 83,000 என்ற இலக்கைத் தொட முடியுமா? என்பது உறுதியற்ற நிலை என்பது ஆய்விலிருந்து தெரிகிறது.


83,000 என்ற இலக்கைத் தொடாமல் தடுப்பது எப்படி என்பதற்கும் கணக்கு போட வேண்டும்.

நம்மோடு நண்பர்களைச் சேர்க்கும் உத்தி மிக முக்கியமானது.

இது ஒரு கணக்குத்தான்.

ஆய்வாளர்களும், அறிவார்ந்தவர்களும் இணைந்து ஒரு முகமாய், ஒரு மனதாய் செயல்பட்டால்

நன்று ஒன்று விளையும்.



எம்.ஜி.ஆர்

மக்கள் செல்வாக்கு
அதுவும்
சாதாரண ஏழை எளிய மக்களின்
மத்தியில் செல்வாக்கு பெற்று
அவர்களின் வாக்கு வங்கியை  தன்வசம்
இறுதி வரை வைத்திருந்த ஒரு தலைவன் .
இன்றும் அவர் உயிரோடுதான் இருக்கிறார்
என்று நம்பும் மக்கள் இருக்கிறார்கள்.
அவரது வளர்ச்சிக்கு பாட்டுக்கோட்டையார்
பாடல்கள் உதவின என்றால்
அது மிகையாகது.
அந்த மூன்றழுத்து நாயகன்
மூச்சை இறுதியாக விட்ட நாள்
டிசம்பர் 24.

பெரியார்

                         
டிசம்பர் 24
ஒரு மாமனிதன்  மண்ணில் கலந்த நாள்.
ஒரு வேளை பெரியாரோ  அல்லது
பெரியாரைப் போல் ஒருவரோ
அவர் செய்த காரியங்களைச்
செய்யாமல் இருந்திருந்தால்
இன்றைய சமூகம் எவ்வாறு இருந்திருக்கும்
என்று எண்ணிப் பார்த்தால்
பெரியாரின் பணிகள் புரியும்.
ஈரோடு  தந்த அந்த மாமனிதனை
நினைவு கொள்வோம்.
நபிகள் வாக்கும்

நடைபெறும் மனிதமும்



நபிகள் சொன்ன ஐந்து முக்கியமான அம்சங்கள்
1.ஏழைகளிடம் அன்பும் இரக்கமும் காட்டி துன்புறுவோருக்கு உதவ வேண்டும்.

2.இறைவனையும் நபியையும் நம்ப வேண்டும், 

3.ஐந்து முறை தொழ வேண்டும், 

4.ரம்ஜான் நோன்பு இருக்க வேண்டும், 
5.முடிந்தால் ஹஜ் செல்ல வேண்டும்.

எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் அவர் எதையும் சொல்லவில்லை 
என்பதே சத்தியம்.

யூனுஸ் என்னும் இந்துக் குழந்தை


முகமது யூனுஸ் என்னும் இளைய “மனிதன்” சமீபத்திய மழையில் தனது உயிரைப் பணயம் வைத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணை வெள்ளத்தின் பிடியில் இருந்து காபாற்றியுள்ளான்.

அந்த இந்து மதப் பெண் சுகப்பிரசவத்தில் ஈன்ற தனது மகனுக்கு தன்னைக் காபாற்றிய “முகமது யூனூஸ்” நினைவாக
“யூனுஸ்”    என்று பெயர் சூட்டியுள்ளார்.

எல்லாவற்றையும் கடந்து மனிதம் வாழும்.

Tuesday 22 December 2015

துணை நிற்போம்


பணி ஓய்வு பெற்றவர்களுக்கு
78.2 சத பஞ்சப்படி இணைப்ப்பு பலன்
கொடுப்பதை தாமதப்படுத்தும்
போக்கினைக் கண்டித்தும்
உடனே வழங்கக் கோரியும்
22.12.2015 அன்று
ஆர்ப்பாட்டம்
இது FORUM விடுத்த அழைப்பு
சிறப்புடன் நடத்துவோம்

Sunday 20 December 2015

தொடரும் பயணம்

மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு 16.12.2015 அன்று ஈரோடு எக்ஸ்டர்னல் பகுதியில் நமது உறுப்பினர்களைச் சந்தித்தார். தோழர்கள் புண்ணியகோட்டி, ஆனந்தன், கதிர்வேலு ஆகியோர் உடன் சென்றனர்.

17.12.2015 அன்று தோழர்கள் V.செல்வராஜன்,  அன்சர், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் தாராபுரம் பகுதியில் உள்ள நமது தோழர்களைச் சந்தித்தார்.

18.12.2015 அன்று மாவட்டச் செயலர் பழனிவேலு  மாவட்டப் பொருளர் தோழர் ராஜேந்திரன், மாவட்ட உதவிச் செயலர் தோழர் புண்ணியகோட்டி, ஆகியோருடன் காங்கயம், வெள்ளகோவில், கொடுமுடி பகுதியில் உள்ள நமது ஊழியர்களைச் சந்திக்கும் இயக்கத்தை மேற்கொண்டார்.

19.12.2015 அன்று தோழர் புண்ணியகோட்டி  அவர்களுடன் ஈரோடு ரூரல் பகுதியில் உள்ள நமது உறுப்பினர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
உறுப்பினர்களைச் சந்திப்பது, நலம் விசாரிப்பது, அவர்கள் குறை கேட்பது என்ற நோக்கத்தோடு மட்டுமே இந்த சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.



இந்த சுற்றுப்பயணத்தில் தோழர் நாகராஜன் அவர்களின் உதவியும் உறுதுணையும் நன்றிகுகும் பாராட்டுக்கும் உரியது


இப்படிப்பட்ட சந்திப்பு உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கியது.

ஒரு சில சிறிய பிரச்னைகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டன.

அவை அனைத்தும் விரைவில் தீர்வு காணப்படும்.

Sunday 13 December 2015

சுற்றுப்பயணம்

நமது மாவட்டச் செயலர்

தோழர் பழனிவேலு

அவர்கள் நமது மாவட்டம் முழுமையும் உள்ள நமது தோழர்களைச் சந்திப்பது, பிரச்னைகளைக் கேடபது என  முடிவு செய்து சுற்றுப்பயணத்தைத் துவக்கியுள்ளர்,
சத்தியமங்கலம்,

பவானி பகுதிகளில் இப்பணியை முடித்துள்ளார். அவருடன் தோழர்கள் உடன் செல்கின்றனர். 


இப்பகுதிகளில் சுற்றுப்பயணத்துக்கு
             தோழர் நாகராஜன் 
அவருக்கு உற்ற துணையாகசெயல்பட்டார்


Friday 11 December 2015

பாரதியும்


இருபதாம் நூற்றாண்டும்


இருபதாம் நூற்றாண்டின் மகத்தான இந்தியர்களின் பட்டியலைப் பலரும் போட்டிருக்கிறார்கள். காந்தி, நேரு, அம்பேத்கர், ஹோமி ஜஹாங்கீர் பாபா, ராமானுஜன், ரவீந்திரநாத் தாகூர், எம்.எஸ். சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் என்று கலவையாகப் பலரைக் கொண்ட பட்டியல் அது. காந்தி, நேரு, அம்பேத்கர் போலப் பரவலாகப் பலரது வாழ்வில் தாக்கம் செலுத்திய ஆளுமைகள் இந்தப் பட்டியலில் இயல்பாகவே இடம்பிடித்து விடுகிறார்கள். எம்.எஸ்., சச்சின் போன்றவர்கள் தத்தமது துறைகளில் செலுத்திய பங்களிப்புக்காகவும் பொது வெளியில் ஏற்படுத்திய தாக்கத்துக்காகவும் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் யாரும் பாரதியாரைச் சேர்த்ததில்லை. தனது துறை சார்ந்த பங்களிப்பு என்று பார்த்தால் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற பலரைக் காட்டிலும் அதிகமான பங்களிப்புச் செலுத்தியவர் பாரதியார். 39 ஆண்டுகளே வாழ்ந்த அவர் சென்ற நூற்றாண்டில் தமிழில் நடைபெற்ற பல்வேறு மாற்றங்களுக்குத் தொடக்கப் புள்ளியாகவும் முன்னோடியாகவும் இருந்திருக்கிறார்.
பாமரர்களுக்கான பாடல்கள், தேர்ந்த ரசிகர்களுக்கான நுட்பமான கவிதைகள் ஆகியவற்றில் அவரது சாதனைகள் அளப்பரியவை. யாப்பிலிருந்து விடுபட்டுக் கவிதைகளை உரைநடைத் தன்மையுடன் எழுதும் மரபின் முன்னோடி அவர்தான். பல்வேறு விதங்களில் புனைவுகளை எழுதிப்பார்த்த அவரது முயற்சிகள் நவீனத் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தன.
இதழியல் துறையில் முன்னோடிகளுக்கே உரிய பல காரியங்களை அவர் செய்திருக்கிறார். கருத்துப் படங்கள், நாட்டு நடப்புகள் குறித்த கூர்மையான பதிவுகள், உலக விவகாரங்கள் குறித்த அலசல்கள், துணிச்சலான விமர்சனங்கள், ஹைக்கூ உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துதல், பிற மொழிகளிலிருந்து முக்கியமான விஷயங்களைத் தமிழுக்குக் கொண்டுவருதல் எனப் பல விதங்களிலும் சீரிய முறையில் இயங்கியவர். ஒத்துழைக்கவோ ஊக்கம் தரவோ யாருமற்ற சூழலில் தனது உள்ளார்ந்த வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் பெருங்கனவுடனும் இவற்றையெல்லாம் செய்தவர். வறுமை பிடுங்கித் தின்னும் சூழலிலும் மகத்தான கனவுகளைச் சுமந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட்டவர்.
தாகூரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதால் அவரது புகழ், எல்லைகளைக் கடந்தது. ஆனால், பல விதங்களிலும் தாகூருக்கு இணையாகச் சொல்லக்கூடிய பாரதியின் ஆக்கங்களை அப்படிக் கொண்டுபோக நாம் மெனக்கெடவில்லை. இதனால், அவரது பெருமைகள் தமிழக எல்லைக்கு வெளியே அதிகம் தெரியவில்லை.
எனினும், மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழுக்கு அவர் செய்த ஈடிணையற்ற பங்களிப்பு நவீன உலகில் தமிழ் மொழியின் திசைவழியைத் தீர்மானித்ததில் பெரும்பங்காற்றியது. தமிழ் போன்றதொரு மொழிக்குச் செய்யும் தொண்டும் அதன் பரந்துபட்ட தாக்கங்களும் கூட்டாட்சித் தத்துவத்தைக் கைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும் அதன் பன்முகப் பண்பாட்டுத் தளத்துக்கும் முக்கியமானது என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. எனவே, இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவின் மகத்தான ஆளுமைகளில் பாரதிக்கான இடத்தை மறுக்கவே முடியாது.
இந்திய அளவிலான அறிவார்த்த உலகமும் பண்பாட்டுப் பொது மனமும் இதை ஏற்க வேண்டுமானால், இனியாவது நாம் பாரதியாரை, அவரது பன்முக ஆளுமையைச் சீரிய முறையில் இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். பாரதி இறந்து நூறாண்டுகள் நிறைவதற்கு இன்னும் ஆறு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் இதைச் செய்ய முடிந்தால் பாரதியின் பண்பாட்டு, மொழி வாரிசுகள் அவருக்குச் செய்யும் சிறந்த கைங்கர்யமாக அது அமையும்.
நன்றி த்மைழ் இந்து 11.12.2015

இன்று டிசம்பர் 11 பாரதி இந்தப் பூமியை முதலில் பார்த்த நாள்.
பாரத மாதா பாரதியை முதலில் பார்த்த நாள்
அறுபதுக்குப் பிறகும்

அரும்பெரும் பணி

தோழர் மாணிக்கம் அவர்களின் அரும்பெரும் தலைமையில்,
தோழர் ராஜசேகரன் அவர்களின் சீர்மிகு செயல்பாட்டில் சிறப்புடன் செயல்படும் ஈரோடு மாவட்ட ஓய்வூதியோர் சங்கம் கடலூர் மாவட்டத்தில் கதிக்லங்கி நிற்கும் மக்களுக்கு நாங்கள் உங்களோடு என்னும் உன்னத உணர்வோடு
ரூபாய் ஐம்பதாயிரம் (ரூ 50000) மதிப்பில் சமைக்கவும்,
உண்ணவும் உறங்கவும் தேவையான பொருள்களை உரியவர்களுக்கு உரிய முறையில் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இப்பணியில் ஈடுபட்ட ஈரம் நிறைந்த மனதுடையோருக்கு மாவட்டச் சங்கத்தின் நன்றியும் பாராட்டுக்களும்

Tuesday 8 December 2015

மனிதன்....

மனிதன்....

ஈரோடு மாவட்டம் கோபியில் பணிபுரியும் நமது    டெலிகாம் மெக்கானிக்
தோழர் K.K.செல்வராஜ்
அவர்கள் தான் வாங்கிய நவம்பர் மாதச் சம்பளமான ரூபாய் இருபத்து ஓராயிரம் ரூபாயை (ரூபாய் 21,000)
வாடும் மக்களின் துயர் உதவியாக வழங்க்கியுள்ளார்.

அந்தத் தோழரை மாவட்டச் சங்கம்  நன்றியுடன் பாராட்டுகிறது
இயற்கை தந்த
இனிய வரம்
            ஆனால்.......

இயற்கை மக்களுக்கு மழையை வரமாகத் தந்தது.
ஆனால் அதை மகிழ்வுடன் ஏற்க இயலாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

மக்களின் இன்னல்களைத் தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

குறுகிய காலத்தில்,வரலாறு கானாத மழை. ஆகவே என்ன செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் மக்கள் படும் துயரங்களைப் பார்க்கும் போதும், கேட்கும்போதும் கண்களில் நீர்மழை.

அனைத்தையும் இழந்த மக்கள் இனி வாழ்க்கையை புதிதாகத் துவங்க வேண்டிய பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.

பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த அனைத்தையும் ஒரு சில மணித்துளிகளில் இழந்து வாடும் மக்களின் சோகம் ந்ம் மனதை கலங்கடிக்கிறது.


பாதிப்பில்லாத பகுதிகளில் வாழும் நமது தோழர்கள் தங்கள் மனதை விசாலமாக்கி ஏதேனும் ஒரு வகையில் அந்த மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

Monday 7 December 2015

MNP நிலை நவம்பர் 2015


1.கோவை     +816
2.கடலூர்       +93
3.குடந்தை     +76
4.தர்மபுரி       +543
5.ஈரோடு       +411
   6.காரைக்குடி   --141
7.மதுரை        +14
         8.நாகர்கோயில் +881
9.நீலகிரி        +96
10.புதுவை       +71
11.சேலம்        +51
12.தஞ்சை       +38
13.திருச்சி       -12
       14. தூத்துக்குடி   +176
    15.நெல்லை     +767
16.விருதுநகர்   -6
  17.வேலூர்      +204
தமிழகம்        +4078