NFTECHQ

Tuesday 27 January 2015

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண் மறைவு



தமிழகத்தில் உள்ள ராசிபுரத்தில் பிறந்த R.K.லக்ஷ்மண் 94வது   வயதில்  26.01.2015 அன்று காலமானார்.
பல்வேறு பத்திரி கைகளில் முதன்மை கார்ட்டூ னிஸ்டாக பணியாற்றியவர்.
பணியில் ஒழுக்கத்தை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றியவர்.
காலை 9 மணி முதல் 1 மணி வரை அனைத்து பத்திரிகைகளையும் படிப்பார். பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை கார்ட்டூன்களை வரைய நேரத்தை ஒதுக்குவார். இரவு 8.30 மணி வரை அலுவலகத்திலேயே தவம் இருப்பார். நாளொன்றுக்கு 10 மணி நேரம் உழைத்தால்தான் தரமான கார்ட்டூன்களை அளிக்க முடியும் என்றார்.
அவர் உருவாக்கிய திருவாளர் பொதுஜனம்கார்ட்டூன் பத்திரிகை உலகில் அழிக்க முடியாத ராஜ முத்திரையாக பதிந்துவிட்டது.
பக்கவாதத்தால் இடது கை செயல் இழந்தாலும் வலது கையால் கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தார்.
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அவரின் பத்திரிகை பணியைப் பாராட்டி மகாசேசே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment