NFTECHQ

Tuesday 10 February 2015

நிகழாத நிகழ்வு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில்

ஆம் ஆத்மி  மொத்த்ம் 70 தொகுகளில் 67 தொதிலகளில்வெற்றி பெற்று

சுத்ந்திர இந்தியாவில் இதுவரை நிகழாத ஒரு நிகழ்வை வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மிக்கு மொத்தம் 54.3 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

மக்கள் கொடுத்த வாய்ப்பை மக்களுக்காக பயன்படுத்தாமல் “நானே சர்வ வல்லமை படைத்த சக்தி” என்ற எண்னத்துடன் நடப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதே ஜனநாயகத்தின் மாண்பு.

வெற்றிக்கான காரணங்கள் என்ன?

கடந்த முறை ஆம் ஆத்மி 49 நாட்களில் தன் ஆட்சியை நடத்தியது. முதலில், ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெரிந்தாலும், வாக்குகள் வித்தியாசம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எதிர்மறை வாக்குகள் ஆம் ஆத்மி சார்பாக விழுந்துள்ளதாகக் கூற வாய்ப்பில்லை. 
இத்தகைய வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள். குறிப்பாக டெல்லியில் உள்ள பெரும்பான்மை மக்கள், குறிப்பாக சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ளவர்கள் ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாட்கள் ஆட்சி தங்களுக்கு நல்லது செய்ததாக உணர்ந்தனர். குறிப்பாக போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளின் சில்லறை லஞ்சம் ஒழிக்கப்பட்டது. மின்சாரக் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் மக்களுக்கான முறையில் அமல் செய்யப்பட்டது. நல்லதைச் செய்யும் கட்சி என்ற நம்பிக்கையை அடித்தட்டு மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. 

இரண்டாவது மிக முக்கிய காரணம், லோக்சபா தேர்தல் முடிவுகளால் அந்தக் கட்சி ஒன்றும் ஆடிப்போய்விடவில்லை. அதன் பிறகு கட்சியை ஒருங்கிணைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஒதுக்கப்பட்ட தொகைகளில் திட்டங்களை நடைமுறைப் படுத்தினர். இதனால் தொண்டர்களின் செயல்பாடுகள் புது உத்வேகம் பெற்றன. இதனால்  சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினர்களுடன் கட்சிக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.  பொதுவாகக் கூறவேண்டுமெனில், ஆம் ஆத்மியின் அரசியல் செயல்முறை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதே. இதில் பயனடைந்தவர்கள் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களே. வாக்களிப்பது என்பது தங்களது அன்றாட வாழ்வை  மாற்றியமைக்கும் ஒரு விஷயம் என்பதை ஆம் ஆத்மியின் செயல்பாட்டு அரசியல் எடுத்துரைத்துள்ளது..
ஆம் ஆத்மி பேசிய வர்க்க அரசியல் மொழி நடுத்தர வர்க்கத்தினரை அச்சுறுத்துவதாக இல்லை. தங்களது நிலைக்கு ஆபத்து வராத நிலையில் ஏழைகளுக்கான அரசியலை அவர்கள் ஆதரிக்கவே செய்தனர். அதாவது செய்து முடிப்பது என்ற இந்த நடைமுறை பல்வேறு வர்க்கத்தினரையும் ஒன்று திரட்டியுள்ளது.

No comments:

Post a Comment