NFTECHQ

Thursday 19 February 2015

ஸ்பெக்ட்ரம் ஏலம்

அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத்துக்கு 8 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்திய முன்வைப்புத் தொகை ரூ. 20,435 கோடியாகும்.
ஏலம் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் அதிகபட்ச காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளது.
மொத்தம் 8 நிறுவனங்களும் செலுத்திய தொகை ரூ. 20,435 கோடி என தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ரூ. 4,500 கோடி, பார்தி ஏர்டெல ரூ. 4,336 கோடி, ஐடியா செல்லுலர் ரூ. 4,000 கோடி, வோடபோன் ரூ. 3,700 கோடி, டாடா டெலிசர்வீசஸ் ரூ. 1,500 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ. 1,175 கோடி, டெலிவிங்ஸ் (யுனிநார்) ரூ. 724 கோடி, ஏர்செல் ரூ. 500 கோடி செலுத்தியுள்ளன.
ஏல விற்பனை மூலம் ரூ. 80 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் லைசென்ஸ் 2015-16-ல் முடிகிறது.
ஐடியா செல்லுலர் 9 வட்டாரம், ஏர்டெல் 6, ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் தலா 7 வட்டாரங்களுக்கான தொலைத் தொடர்பு சேவைக்கு மறு விண்ணப்பம் செய்துள்ளன. ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் ஆகியன 3 ஜி சேவையை 22 தொலைத் தொடர்பு வட்டாரங்களில் அளிக்கின்றன. ஐடியா செல்லுலர் நிறுவனம் 11 வட்டாரங்களில் அளிக்கிறது. வோடவோன் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் 9 வட்டாரங்களில் அளிக்கிறது.
3ஜி சேவை இல்லாத பகுதிகளில் தங்களுடைய சேவையை விரிவுபடுத்துவதற்காக ஏலத்தில் இந்நிறுவனங்கள் பங்கு பெறும். இதன் மூலம் இந்தியா முழுவதற்குமான சேவையை அளிக்க முடியும்.

No comments:

Post a Comment