NFTECHQ

Saturday 21 February 2015

மனசு

இன்று நள்ளிரவு தாண்டிய பின் அந்த நிகழ்சி நிறைவு பெற்றது. குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி. இறுதியில் ஆறு குழந்தைகள் பங்கேற்றன. அதில் முதல் மூன்று குழுந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் புதிது என்ன எனக் கேட்கத் தோன்றுகிறதா? ஆம் இதில் புதுமை ஏதுமில்லை. இரண்டாம் பரிசு பெற்ற பெண் குழந்தை பெயர் ஜெசிக்கா ஜூட். கனடா வாழ் இலங்கை தமிழர். அந்த குழந்தைக்கான பரிசு ஒரு கிலோ தங்கம். அதை பெற்றுக் கொண்ட பின் அந்த குழந்தையின் தந்தை ஒரு அறிவிப்பினை உடனடியாக அறிவித்தார். அது தான் புதிது. நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாங்கள் ஒரு முடிவு செய்தோம் அதை முழு மனதுடன்  எங்கள் குழந்தை ஜெசிக்கா ஜூட் ஏற்றுக் கொண்டாள் என்று அவர் தங்கள் முடிவினை அறிவித்தார். பரிசு என்ன கிடைத்தாலும் அதில் பாதியை சென்னையில் ஜெசிக்கா ஜூட் அடிக்கடி சென்று வரும் அனாதை குழந்தைகள் இல்லத்திற்கும் மீதியை இலங்கையில் உள்ள அனாதை குழந்தை இல்லத்திற்கும் வழங்க முடிவு செய்ததாக அறிவித்தார். கிராம் ரூ.2500 என கணக்கிட்டால் ரூபாய் இருபத்தைந்து லட்சம் பரிசு தொகை. அது முழுவதும் குழந்தைகளுக்காக வழங்கப்படுகிறது. கேட்டதும் நெஞ்சு நெகிழ்து போனது.கனடாவிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள அவர்கள் வெறும் கையுடன் சென்னை வந்தார்கள். திரும்பிச் செல்கையில் மீண்டும் வெறும் கையுடன் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் செல்லும் போது இந்திய மக்களின் சென்னை குழந்தைகள், இலங்கை குழந்தைகளின் அன்பை, பாசத்தை, வாழ்த்துக்களை சுமந்து செல்வார்கள் அது ஜெசிக்கா ஜூட் குடும்பத்தினருடன் அவர்கள் வாழ்நாள் முழுக்க நீடிக்கும். நாமும் வாழ்த்துவோம் அவர்களின் பரந்து விரிந்த மனதை

No comments:

Post a Comment