NFTECHQ

Saturday 9 May 2015

இம்சையடா சாமி

GPF குளறுபடி குறையும் என எதிர்பார்த்தோம்.  ஆனால் அது எவரெஸ்ட் சிகரம் என எழுந்து நிற்கிறது.
ESS ல் விண்ணப்பித்து பிரிண்ட் எடுத்து அனுப்ப வேண்டும் என்ற ஆணையால் விளையும் அவலங்கள் பற்றி சற்றும் சிந்திக்காமல் உத்தரவிட்டுள்ளனர்.
ESS ல் கேசுவல் லீவ் விண்ணப்பிக்கிறோம். பிரிண்ட் எடுக்கிறோமா?
இந்தியாவை டிஜிட்டல் ஆக்குவோம் என்பது ஆட்சியாளர்கள் குரல். ஆனால் சில கோடி ரூபாய்கள் செலவழித்து  ERP  ESS. இந்நிலையில் எதற்கையா பிரிண்ட்?
ஈரோடு மாவட்டத்தின் மலைபகுதியாம் தாளவாடி எரகனஹல்லி போன்ற ஊர்களில் பணியாற்றும் TM தோழர்கள் ESS ல் விண்ணப்பம் செய்யவே வழியில்லை. பிரிண்ட் எடுக்க சத்தியமங்கலம் வர வேண்டும். அங்கு  பிரிண்டர் வேலை செய்யும் என உறுதி உண்டா?
ஏன் தான் இப்படியோ?
ஊழியர்களின் மைன்ட் செட் மாற் வேண்டு என அறிவுரைகள். ஆனால் இந்த நவீன உலகில் என்று மடியும் பேப்பர் மோகம்?
என்று தணியும் இந்த GPF சோகம்?
எஸ்.எம்.எஸ் மூலம் மாற்றல் கேட்டு விண்ணப்பித்தல் மற்றும்
எஸ்.எம்.எஸ் மூலம் கேட்ட மாற்றலை ரத்து செய்தல் என்ற நிலையெல்லம் பார்த்து விட்டோம். ஆனால் ESS ல் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் கேட்கும் அணுகுமுறை அனேகமாக நமக்கண்றி வேறு யாருக்கும் இருக்காது என நினைக்கிறோம். காகிதப்பயன்பாட்டைக் குறைத்து இய்ற்கையைக் காப்போம் என்றெல்லாம் சிலர் அக்கறியோடு சொன்னதைக் கேட்டிருக்கிறோம்.

என்று மாறுமோ?

No comments:

Post a Comment