NFTECHQ

Wednesday 27 May 2015

சுமுகமான தீர்வு

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாற்றல் கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அமலாக்கப்பட்டுள்ளது. NFTE-BSNLEU சங்கங்க்கள் சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது.
குழு உறுப்பினர்கள்
1.தோழர் குமார் (தலைவர்)
2.தோழர் பரமேஸ்வரன் (BSNLEU)-ஒருங்க்கிணைப்பாளர்)
3. தோழர் பழனிவேலு (NFTE)
4.தோழர் மணியன் (BSNLEU)
5. தோழர் நாகராஜன் (NFTE)
6. தோழர் வேலுச்சாமி (BSNLEU)
7.தோழர் புண்ணியகோட்டி (NFTE)
8. தோழர் பழனிசாமி (BSNLEU)
விதிகளுக்குட்பட்ட விவாதங்கள்
இருந்தன.  முடிவுகள் ஒரு மனதாக அமைந்தன. நமது நிலைபாட்டை நிர்வாகமும் ஏற்றது.
எவருக்கும் சாதக பாதகமில்லாத வகையில் மாற்றல் கொள்கை அமலாக்கப்பட்டு 26.05.2015 அன்று உத்தரவுகள் வெளியிடப்பட்டன.
2013ல் மாற்றலில் சென்ற 47 TM தோழர்கள் மீண்டும் அதே ஊருக்கோ அல்லது அவர்கள் விருப்பத்திற்கேற்ப காலியிடம் உள்ள ஊருக்கோ மாற்றல் பெற்றனர்.
47 தோழர்கள் நிர்வாக மாற்றலில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோட்டிலிருந்து மாற்றலில் செல்பவர்களுக்கு (24 தோழர்கள்) கவுன்சிலிங் முறை பின்பற்றப்பட்டது. 
மற்ற 23 தோழர்கள்க்கு அந்த உட்கோட்டம் அல்லது அருகாமையில் உள்ள உட்கோட்டத்துக்கு மாற்றல் உத்தரவிடப்பட்டது.
ஒத்துழைப்பு தந்த தோழரகளுக்கு நன்றி.

சுமுகமான தீர்வுக்கு உதவிய பொது மேலாளர், துணைப்பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர் அவர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment