NFTECHQ

Sunday 17 May 2015

லோக்கல் கவுன்சில்

லோக்கல் கவுன்சில் கூட்ட முடிவுகள்
இதுவரை கையாளப்பட்ட முறையிலேயே இந்த ஆனண்டும் மாற்றல் கொள்கை அமலாக்கப்படும்.
தற்போது உள்ள ஊழியர்கள் மற்றும் பணிகள்  குறித்து நிர்வாகம் மற்றும் ஊழியர் தரப்பு இணைந்து ஒரு ஆய்வு (WORK STUDY ) நடத்தி அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும்.
நிலுவையில் உள்ள ஊழியர் களின் TA பில் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்.
ஈரோடு மாவட்டத்துக்கு ஒதுக்கப்ப்பட்ட  பேட்டரிகள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி மே மாதத்துக்குள் முடிக்கப்பபடும்ஒதுக்கப்பட்ட பேட்டரிகளின் தரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது..
ஊழியர் குடியிருப்புகளில் செய்ய வேண்டிய  பராமரிப்பு பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும். குறைகளைத் தெரிவிக்க குடியிருப்புகளில் பதிவேடு வைக்கப்படும். குறைகள் தெரிவிக்கப்பட்டால் மிகக் குறுகிய காலத்துக்குள் சரி செய்யப்படும். குறை களையப்பட்டவுடன் பதிவேட்டில் குறை தெரிவித்தவரின் கருத்தும் பதிவு செய்ய வேண்டும்..
பதவி உயர்வு, சம்பள  நிர்ணயம் குறித்து தெரிவிக்கப்பட்ட பிரசனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டன.
அனைத்து  தொலைபேசி நிலையங்களிலும் 30.05.2015க்குள் தரமான குடிநீர் வசதி செய்து தரப்படும்.
பவர் ஷூ, செருப்பு மற்றும் டூல்ஸ்பேக் 30.05.2015க்குள் உரியவர்களுக்குத் தரப்படும்.
விரிவாக்கம் ஆகும் பகுதிகளில் கேபிள் பதிக்கும் பணி தேவை அறிந்து மேற்கொள்ள ப்படும்.
சிம் கார்டு பிரச்னை தற்போது இல்லை. தேவைக்கேற்ப பகிர்ந்து தரப்படும்.
ப்ரிபெய்டு சேவையில் கணக்கில் உள்ள தொகை காலக்கெடு தேதி ஆகியவற்றை எளிய முறையில் அறிய உரிய மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
பென்சன் செக்சன்,, மெடிக்கல் செக்சன் டெலிபோன்பவனில் உள்ள பவர் செக்சன் வாடிக்கையாளர் சேவை மையம் போன்ற அத்தியாவசியமான பகுதிகளுக்கு கூடுதல் ஊழியர் பணியில் அமர்த்தப்படுவர்.
டெலிபோன் பவனில் உள்ள இரண்டு வாடிக்கையாளர் சேவை மையங்கள் இணைப்பு பற்றி பொதுமேலாளர் ஆய்வு செய்வார்.
பயிற்சிக் காலத்தில் வழங்க்கப்படும் ஸ்டைபண்ட் அரியர்ஸ் மே 2015ல் பட்டுவாடா செய்ய உறுதியளிக்கப்பட்டது.
நமது நிறுவனத்திலிருந்து வெளியே செல்ல விரும்பும் மொபைல் வடிக்கையாளர்களின் குறைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவர்களை நம்முடன் தக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதிக வருவாய் தரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய தொலைபேசிக் கருவி வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு நகரில் உள்ள கேபிள் டக்ட் பகுதியில் உள்ள பிரைமரி கேபிள் பழுதுகள் சரி செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உரிய தேதிக்குள் சம்பளம் தருவதை உறுதி செய்திட வலியுறுத்தப்பட்டது.
ரங்கசமுத்திரம் தொலைபேசி நிலையத்தில் AC யூனிட் பழுது  விரைவில் சரிசெய்யப்படும்.
சேவைப்பபதிவேடு சரிபார்க்கும் பணி முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்படும்.
கோபி பகுதியில் வில் சேவையில் உள்ள குறைகள் களையப்படும்.
ERP ESS பற்றி ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சி தரப்படும்.
சில ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கும்   பணி விரைந்து முடிக்கப்பபடும்.
ஈரோடு  மாவட்டத்துக்கென ஒரு கால் செண்டர் அமைக்க வலியுறுத்தினோம். அது ஏற்கப்பட்டது.
ஈரோடு மாவவட்டத்தின் வருவாய், பணிக்கல்லாச்சாரம் போன்ற்வை குறித்து பொது மேலாளர் பாராட்டு தெரிவித்தார். அவரது அணுகுமுறை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.


No comments:

Post a Comment