NFTECHQ

Tuesday 16 June 2015

உழைப்பைப் பறி உழைப்பாளர்களைச் சிறையிலடை

தற்போதைய தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்களும் தொழிலாளர்களின் உரிமைகளும் போராட்டங்களும் எதிர்கொண்டுள்ள சவால்களும்

யாருக்கு நல்லகாலம் பொறக்குது?

தொழிலாளர் சட்டச் “சீர்திருத்தங்கள்: தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் வேலையற்ற இளைஞர்கள் மீதும் புதிய தாராளவாதத்தின் தாக்குதல்

கடந்த 3-4 பத்தாண்டுகளில் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் வேலையற்ற இளைஞர்கள் மீதும் ஆளும்வர்க்கத்தின் மிகப்பெரிய நேரடியான தாக்குதல் இப்போது வந்துள்ளது.  தற்போதைய மத்திய அரசு. பணக்காரர்களை மேலும் பண்க்காரர்கள் ஆக்குவது, உழைக்கும் மக்களுக்குக் கசப்பு மருந்தைக் கொடுப்பதுமே அந்தச் சீர்திருத்தங்களின்  தெளிவான நோக்கம் ஆகும்.

முதலாளிகளின் வளர்ச்சிக்கு எஞ்சியிருக்கும் அனைத்துத் தடைகளையும் அகற்றுகிற அதே வேளையில் உழைக்கும் மக்களின் வறுமை நிலையை அதிகரிக்கச் செய்துள்ளார்கள்.

2014 ஜூலை 31 அன்று, அரசாங்கம் அமைக்கப்பட்ட சில வாரங்களுக்குள், மத்திய அமைச்சரவை தொழிற்சாலைகள் சட்டம் 1948 இல் 54 சீர்திருத்தங்களையும்,  1961 ஆண்டு தொழில்பழகுனர் சட்டம்,  1988 ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டங்களில் (ஆண்டு அறிக்கை சமர்ப்பிப்பது, பதிவேடுகள் பராமரிப்பது ஆகிய்வற்றிலிருந்து சில வகை நிறுவனங்களுக்கு விலக்களித்தல்) மாற்றங்களையும் அனுமதித்தது. இவை நிறுவனங்கள் ‘தொழில் நடத்துவதை எளிமைப்படுத்துவதாகும்..  ராஜஸ்தான் அரசாங்கம் தொழிற்தகராறுச் சட்டம் 1947, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970 மற்றும் தொழிற்சாலைகள் சட்டம் 1948 ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டு வந்தது, அதை ஹரியானா
உத்தரப்பிரதேச அரசுகள் அதே போன்ற மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டு
வருகின்றன.

இந்த மாற்றங்களுக்கு என்ன தேவை வந்தது?

தொழிலாளர்களை ‘வேலைக்கு அமர்த்துவதையும் நீக்குவதையும் எளிதாக்கும் தொழிலாளர் கொள்கை.

தொழில்தகராறுச் சட்டம் 1947 இல் ராஜஸ்தான் அரசாங்கம் கொண்டுவந்துள்ள திருத்தங்களின்படி, 300 தொழிலாளர்கள் வரை எத்தனை தொழிலாளர்களை வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்குவதற்கு அரசாங்க அனுமதியைப் பெறவேண்டியதில்லை. முன்பு இது 100 தொழிலாளர்கள் வரை என்று இருந்தது. மத்திய அரசாங்கம்  இதை 1000 தொழிலாளர்கள் வரை உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளது, அதேபோல மலிவா கூலியில் பெணகளைச் சுரண்டுவதற்கு, அவர்கள் இரவு நேரங்களில் சமஅளவு ஊதியம், பாதுகாப்பான வேலைச் சூழல் இவற்றை உத்தரவாதப்படுத்தாமலேயே  வேலைக்கமர்த்தி முதலாளிக்கு அனுமதியளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

வேலைநேரமும் வேலைப்பளுவும் அதிகரித்தல்:

தொழிற்சாலைகள் சட்டம் 1948 இல் கொண்டுவரப்படும் மாற்றம், மிகுதிநேர உழைப்பை (ஓவர்டைம்) 50 மணி நேரத்திலிருந்து 100 மணிநேரமாக உயர்த்தியுள்ளது மேலும் தொடர்ச்சியாக மிகுதி நேர உழைப்புக்கான 7 நாள் வரையறை நீக்கப்பட்டு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தொடர்ச்சியாக மிகுதிநேர உழைப்பை நிர்ப்பந்திக்கலாம். இது தொழிலாளர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது மட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்புக்களைக் குறையச் செய்யும். 2004-05 இலிருந்து 2009-10 வரை முறைசார் தொழில்துறை வேலைவாய்ப்பு உருவாக்கம் 0.1% மட்டுமே, ஆனால் உற்பத்தித்திறன் 34% அதிகரித்துள்ளது. புதிய சட்டத் திருத்தங்கள் இந்தப்போக்கைப் பலப்படுத்தி முதலாளிகளின் இலாபத்தை அதிகரிக்கச் செய்யும்.

தொழிற்சங்கங்கள் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை ஆகியவற்றை பறிப்பது:

ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்குக் குறைந்தபட்சமாக அது 15% தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று இருந்ததை 30% ஆக இராஜஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது ஒரு குறிப்பிட்ட அளவு ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்கம் அமைப்பது உடபட தொழிலாளர் சட்டங்களின் அனைத்து உரிமை விதிமுறைகளையும் இல்லாமல் செய்வது குறித்து மத்திய அரசாங்கம் திட்டமிடுகிறது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப்பேர உரிமை ஆகியவை எவ்விதம் தொழிலாளர் நலத்துறை மற்றும் சட்ட நிறுவன்ங்கள் உதவியுடன் பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை மாருதி தொழிலாளர்கள் போராட்டத்தில் பார்த்து வருகிறோம்.

குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான ஊதியத்தை நிர்ணயிப்பது, தொழில் பழகுனர்கள் மூலம் பாதுகாப்பாற்ற தொழிலாளர் படையை அதிகரிப்பது:

தொழில்பழகுனர் சட்டம் 1961 இல் கொண்டுவரப்படும் மாற்றங்களால் தொழில்பழகுனர் என்ற பெயரில் நிறுவனங்கள ஏராளமான தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளலாம். பி.ஏ.,பி.காம் போன்ற தொழில்தொடர்பற்ற பட்டதாரிகளைக் கூட, தொழிற்சங்க உரிமைகள் இல்லாமல், நிரந்தரவேலை இல்லாமல், வேலைப்பாதுகாப்பு இல்லாமல், இஎஸ்ஐ-பிராவிடன்ட் பண்ட் இல்லாமல், தொழில்தகராறுச் சட்டப்படியான பாதுகாப்பு இல்லாமல் வேலையில் அமர்த்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தில் முதலாண்டு 70%  மூன்றாம் ஆண்டு 90% வரை வழங்கினால் போதும். தொழில்பழகுனர்களை அமர்த்திக்கொள்ள 500 புதிய தொழில்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணத்திலிருந்து பெருங்குழுமங்களுக்கு மானியம் அளித்தல்:

தொழில்பழகுனர் சட்டம் 1961 இல் திருத்தங்கள், அடிப்படைத் தொழில்பயிற்சி பெறுனர்க்கு அளிக்கப்படவேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அளிக்கவேண்டிய கடப்பாடுகளை அகற்றுகின்றன. அந்த வசதிகளை அரசாங்கமே செய்யும், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் குறைவான சுற்றுமுதலைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அனைத்திலும் முதலாண்டில் தொழில்பழகுனர்களின் பாதியளவு உதவித்தொகையை அரசாங்கமே வழங்கும்.

‘அமைப்புசார் தொழில்துறை அழிவு  தொழிலாளர் சட்டங்கள்
1988 அதிகபட்சம் 40 தொழிலாளர்கள் உள்ள (முன்பு இந்த எண்ணிக்கை 19 ஆக இருந்தது) நிறுவனங்கள், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழில்தகராறுச் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் உட்பட, 16 சட்டவிதிகளின் கண்காணிப்புக்கு (முன்பு இந்த எண்ணிக்கை 9 ஆக இருந்தது) விலக்களிக்கபட்டுள்ளன, அதன்மூலம் ஏராளமான தொழிலாளர்கள் அமைப்பாக்கப்பட்ட துறையின் சலுகைகளை இழப்பார்கள். ராஜஸ்தான் அரசு தொழிற்சாலைகள் சட்டத்தில் செய்த அண்மைக்கால மாற்றங்களில், மின்சக்தி பயன்படுத்தப்படும் நிறுவனங்களில் 10 தொழிலாளர்கள், மின்சக்தி பயன்படுத்தப்படாத நிறுவனங்களில் 20 தொழிலாளர்கள் என்று இருந்த வரையறை முறையே 20, 40 என்று மாற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு முதலாளிகளுக்கு ‘சட்டபூர்வ அனுமதி:

முன்பு தொழில்பழகுனர் சட்டம் 1961 படி அதை மீறுகிற முதலாளிக்கு ஆறுமாத சிறைத் தண்டனை என்று இருந்தது, இப்போது எந்த ஒரு சட்டமீறலுக்கும் அதிகபட்சம் ரூ.1000 அபராதம் மட்டுமே என்று மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்தைப் பின்பற்றுவதை விட சட்டத்தை மீறுவது இலாபகரமானதாகும். முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அவர்களைத் தொல்லைப்படுத்தக் கூடாது என்று தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் நடைமுறை கட்டுப்படுத்தப்பட்டு, மேலதிகாரிகளின் அனுமதியின்றி ஆய்வுசெய்யச் செல்லக்கூடாது என்று ஆய்வாளர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

அடிப்படையான உற்பத்தியில் ஒப்பந்தமுறையை சட்டபூர்வமாக்கல்: ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970, ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கான வசதிகள் பற்றிப் பேசுகிறது, அடிப்படை உற்பத்தி நடவடிக்கைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதைத் தடைசெய்கிறது. ஆனால் இப்போது ஆட்டோமொபைல், ஆடைத் தயாரிப்பிலிருந்து   ஏறத்தாழ எல்லா அடிப்படைத் தொழில்துறைகளிலும் தொடர்வண்டித்துறை வரை மலிவான, அமைப்புசாரா, பாதுகாப்பில்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இப்போது அந்தச் சட்டத்தையே ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 20 தொழிலாளர்களுக்கு மேலுள்ள நிறுவனங்களுக்கு செல்லாது என்று இருந்ததை 50 தொழிலாளர்களுக்கு மேலுள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று இராஜஸ்தான் அரசு திருத்துகிறது. மத்திய அரசாங்கமோ சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தேசிய முதலீட்டு மற்றும் உற்பத்தி மண்டலங்கள், தொழில்துறைப்பகுதிகள் ஆகியவற்றுக்கு அந்தச்சட்டம் பொருந்தாது என்று அறிவிக்க விரும்புகிறது.

தொழிலாளர்கள் மீதான ஆளும் வர்க்கங்களின் மிகப்பெரிய நேரடித் தாக்குதல் ஒட்டுமொத்தமாக உழைக்கும் மக்களின் உண்மையான ஊதியத்தைக் குறைத்து, அவர்களுடைய வேலைகளை மேலும் பாதுகாப்பற்றதாகச் செய்து, அதன்மூலம் அவர்களுடைய அடிப்படைத் தேவையான உணவு, உடல்நலம், கல்வி ஆகியவற்றைப் பெறுவதையே மோசமாகப் பாதிக்கச் செய்வதாகும். முதன்மையாக ஒப்பந்தத் தொழிலாளர்களையும், தினக் கூலிகளையும், இப்போது குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக் ஊதியம் பெறும் தொழில்பழகுனர்களையும் கொண்டுள்ள  அமைப்பாகப்பட்ட தொழில்துறை நிலைமையே இப்படி, என்றால் அமைப்புசாராத் தொழில்களில் உள்ள கோடிகணக்கான தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமான பாதிப்புக்குள்ளாகும் என்பது உறுதி.

அமைப்புசாராத் தொழிலில் தொழிற்சங்க இயக்கமே இல்லாத நிலையில், அமைப்பாக்கப்பட்ட தொழில்துறையில், உற்பத்தியைத் தனித்தனியாகப் பிரித்து, பல சிறு அலகுகளில் நடத்துவது., உற்பத்தியை நாடு கடந்து மேற்கொள்வது, எல்லைகடந்த மூலதன முதலீடு அதிகரிப்பு, அடிப்படை உற்பத்தித்துறையை   அமைப்புசாரா முறைக்கும், ஒப்பந்தமுறைக்கும் மாற்றுவது போன்ற நடவடிக்கைகளால் தொழிற்சங்க இயக்கம், கடந்த சில பத்தாண்டுகளாகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இப்போது இந்தத் தொழிலாளர் சட்ட ‘சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம், தொழில்தகராறு சட்டம் 1947, தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற்சாலைகள் சட்டம் 1948, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் மற்றும் இன்னபிற சட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமைகளும் வசதிகளும் பறிக்கப்படும் நிலை தொழிற்சங்க இயக்கத்திற்குப் பெருத்த அடியாக இருக்கும். ஏனென்றால் இந்த உரிமைகளுக்காவும் வசதிகளுக்காகவும் தொழிற்சங்கம் எண்ணிறந்த போராட்டங்கள் மூலமும் உயிர்த்தியாகங்கள் மூலமும் கொடுத்த விலை மிகவும் அளப்பரியதாகும்.

இந்தியாவின் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் முதன்மையாக அமைப்புசாராததாக, ஒப்பந்தவேலையாக, குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான ஊதியமளிப்பதாக, பாதுகாப்பற்றதாக  இருக்கும் என்பதையே இந்த முயற்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன, ‘திறன்மிக்க இந்தியா, ‘இந்தியாவில் தயாரிப்பீர்,  ‘வளர்ச்சி போன்ற போலியான பிரச்சாரத்திலிருந்து, பரந்துபட்ட மக்களுக்கு கசிந்து ‘வரப்போவது நல்லகாலமல்ல ஒரு இருண்ட எதிர்காலமே என்பது தெளிவாகிறது. வேலைக்காக காத்திருக்கும் மாணவர்கள், இளைஞர்களுக்கு, குறிப்பாக, உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வருவோருக்கு அடுத்த 4-5 ஆண்டுகளில் கடுமையான அதிர்ச்சி காத்திருக்கிறது; நிலையான வேலை என்பது இனி எப்போதும் இல்லை. நமது நிலைக்கு நமது ‘தனிப்பட்ட தவறு தான் காரணம் என்று நம்பச் செய்யப்படுகிறது, ஆனால் ‘வரும் நல்ல காலத்தில் அடிமை உழைப்பு நிலையில், பயனேதுமின்றிக் கடுமையான உழைப்பில் உழன்று கிடப்பது பெரும்பான்மை மக்களின் தலையில் ஆளும்வர்க்கங்கள் எழுதிவரும் தலையெழுத்தாகும்.

இதை எப்படி மாற்றப்போகிறோம்?

தொழிலாளர் சட்டங்கள் என்பவை ஆளும்வர்க்க நலன்களின் நெருக்கடியான முரண்பாடு மற்றும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பே தவிர வேறல்ல. வரலாற்று ரீதியாக, தொழிலாளர்கள் தமது தீவிரமான  போராட்டங்கள் மூலம் பெற்றுப் பாதுகாத்து வருபவைதாம் தொழிலாளர் சட்டங்கள். இன்று நாம் எதிர்கொண்டுள்ள இந்தச் சவால்களுக்கிடையில், போர்க்குணமிக்க போராட்டத்திற்கும் எதிர்ப்புக்குமான தேவைகள் தேவைகளும் சாத்தியங்களும் அதிகரித்து வருகின்றன. கத்வடைப்புக்கள், வேலைநீக்கங்கள் மூலம் தொழிற்சங்க உரிமைகள மீது முதலாளிகள் பயங்கரமான தாக்குதல்களை நடத்திவரும் அதேவேளையில், தொழிலாளர்களின் போராட்டங்களையும் பார்த்துவருகிறோம். எடுத்துக்காட்டாக, கர்கொவான்-மானேசர்-பவால்  தொழில்துறைப் பகுதியில் 2014 இல் மட்டும் 30 வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன, மேலும் அவற்றில் தொடர்ச்சியாக பல மாதங்களாக நடந்துவருகின்றன. செய்தி ஊடகங்கள் வெளியிடாவிட்டாலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பேக்ஸ்டர் தொழிலாளர்களுக்குத் தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், 2014 ஆகஸ்டு 12 அன்று கர்கொவான்-மானேசர் பகுதியில் 15 தொழிற்சாலைகளில் 20,000 தொழிலாளர்கள் ‘சட்டவிரோத ஒற்றுமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பதை நாம் அறிவோம். மானேசரில் மாருதி சுசுகியிலிருந்து பிவாடியில் சிரிராம் பிஸ்டன் வரை ‘சட்டவிரோத வேலைநிறுத்தம், மிதமான உற்பத்தி, ஆகியவற்றுடன், ‘சட்டபூர்வத் தொழிற்சங்க அமைப்புக்களுக்கு அப்பால் நிரந்தர-தினக்கூலி-ஒப்பந்த-தொழில்பழகுனர் தொழிலாளர்கள் ஒற்றுமை விரிவடைந்து வருவதைக் காண்கிறோம். தொடங்கியுள்ள இந்தப் புதிய வடிவங்கள் வட்டார மட்டங்களைத் தாண்டிச் செல்லவேண்டியிருக்கிறது,  அமைப்பாக்கப்பட்ட தொழில்துறைகளில் உள்ள ஒப்பந்த-தினக்கூலித் தொழிலாளர்கள் அவர்களுடைய முழு வலிமையோடும் அமைப்பாக்கப்பட வேண்டியுள்ளது, மிகப்பெரிய அமைப்புசாராத் தொழில்துறை எந்த வகையிலாவது அமைப்பாகி அதன் காலில் எழுந்து நிற்க வேண்டியுள்ளது,  தொழிலாளர் வர்க்கம் அதன் அரசியல் நலன் மற்றும் போராட்டத்துடன் விழித்தெழ வேண்டியுள்ளது, ஆனால் தொழிற்சாலை மட்டத்திலும், பகுதி அளவிலும், துணிச்சல் மிக்க தொழிலாளர்கள் போராட்டங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உயிரோட்டத்துடன் வைத்திருக்கின்றன.



No comments:

Post a Comment