NFTECHQ

Monday 31 August 2015

போனஸ்
31.08.2015 அன்று பேச்சு வார்த்தை முடிந்தது.
நேர்மறையானமுடிவும் இல்லை.
எதிர்மறையான முடிவும் இல்லை.

இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday 30 August 2015

உள்ள்ம் நிறைந்த வாழ்த்துக்கள்

நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் தலைவர் 

தோழர் லட்சம்

31.08.2015 அன்று பணி ஓய்வெ பெறுகிறார்.
அவரது பணி ஓய்வுக்காலம்
சிறப்புடன் அமைய 
ஈரோடு மாவட்டச் சங்கம் 
வாழ்த்துகிறது

வாழிய பலாண்டு
31.08.2015 அன்று பணி ஓய்வு பெறும்

1.திரு மயில்சாமி  SDE HR
2.தோழர் முருகானந்தம் TM அஞ்சூர்
ஆகியோர் பல்லாண்டு இன்பமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறோம்.

Thursday 27 August 2015

மீளும் BSNL
கடந்த சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வரும் BSNL நிறுவனம் மீளத் துவங்கியுள்ளது.
“இரவு நேர இலவச அழைப்புகள்”
திட்டம் லேண்ட்லைன் சரண்டரைக்
குறைத்துள்ளது.
“ரோமிங்கில் இலவச இன்கமிங் அழைப்புகள்” திட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மை.
ஜூலை 2015ல்  16 லட்சம்
மொபைல் இணைப்புகளை BSNL நிறுவனம் புதிதாகக் கொடுத்துள்ளது.
இதே ஜூலை 2015ல் ஏர்டெல் 11.9 லட்சம் இணைப்புகளையும், ஐடியா 10.25 லட்சம் இணைப்புகளையும் கொடுத்துள்ளன.
BSNL நிறுவனத்திலிருந்து MNP மூலம் வெளியே செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, MNP  மூலம் BSNL நிறுவனத்துக்கு உள்ளே வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது நிச்சயம் மீண்டு எழுவதற்கான பாதையின் துவக்கமே.
இது போன்று வளர்ச்சிக்கான திட்டங்களை
அறிவித்து தேவையான உபகரணங்க்களையும், சிம் கார்டுகளையும் தர வேண்டியது நிர்வாகத்தின் கடமை.
சூழ்நிலையறிந்து பணியாற்ற வேண்டியது ஊழியர்கள் கடமை
பேசப் பேச “க்ட்”
மொபைல் போன் மூலம் பேசும் போது அடிக்கடி இணைப்பு தூண்டிக்கபடும் நிலையை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இது கவலை தரக்கூடியதாக உள்ளது என்று தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் தெர்வித்தார்.
வோடாபோன் நிறுவனத்தின் தலைவர் “இது அமைச்சரின் கருத்துதான் அரசாங்கத்தின் கருத்து அல்ல” என்று தெரிவித்தார்.
(எங்ப்பன் குதிருக்குல் இல்லை என்பது போல்)

தற்போது பிரதம அமைச்சரின் அலுவலகக் குறிப்பும் அழைப்புகள் துண்டிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளது.
பயனுள்ள மாவட்டச்  செயற்குழு
25.08.2015 அன்று மாவட்டச் செயற்குழு பயனுள்ள முறையில் சிறப்பாக நடைபெற்ரது.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின் செயற்குழுவைத் துவக்கி வைத்து பயனுள்ள உரையாற்றினார்.
மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
AITUC ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் செல்வராஜன் செப்டம்பர் 2 பொதுவேலை நிறுத்தத்துக்கான் கோரிக்கைகள் குறித்த விளக்கவுரையாற்றினார்.
முடிவுகள்
செப்டம்பர் 2  பொது வேலைநிறுத்த்தை வெற்றிகரமாக நடத்த திட்டமிடப்பட்டது.
மாவட்டம் முழுதும் ஊழியர்களைச் சந்தித்து வேலைநிறுத்த்த்தை வெற்றியாக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.
உதவும் உள்ளங்கள் NFTE BSNL ஈரோடு மாவட்டம் சார்பாக உதவி வழங்கும் விழாவை  உறுப்பினர்கள் பங்க்களிப்போடு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
15.09.2015 அன்று நடைபெறவுள்ள லோக்கல் கவுன்சில் கூட்டத்துக்கான பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டன.
GM அலுவலகக் கிளை மாநாட்டை அக்டோபர் மாதம் நடத்திட வேண்டும்
எக்ஸ்டர்னல் கிளை மாநாட்டை நவம்பர் மாதம் நடத்திட வேண்டும்
மாவட்டச் சங்கத்தின் நிதி நிலை குறித்து மாவட்டப் பொருளர் தோழர் ராஜேந்திரன் எடுத்துக் கூறி வரும் காலச் செயல்பாட்டுக்காக ஒவ்வொரு உறுப்பினரிடமும் குறைந்த பட்சம் ரூபாய் 500/- நன்கொடை கேட்கலாம் என் தெரிவித்தார். இதை மாவட்டச் செயற்குழு ஏற்றது. இப்பணியை அக்டோபர் மாதத்துக்குள் செய்து முடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்ட அளவில் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பிரச்னைகள் இல்லை.
தெரிவிக்கப்பட்ட ஒரு சில பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும்.
வரும் காலச் செயல்பாட்டுக்கு நல்ல வழிகாட்டிய பயனுள்ள செயற்குழுவாக் அமைந்தது.
ஈரோடு ரூரல்

கிளை மாநாடு
25.08.2015 அன்று ஈரோடு ரூரல்

கிளையின் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

தோழர் K.மாதேஸ்வரன் TTA (அரச்சலூர்) கிளைத்தலைவராகவும்,
தோழர் K.பால்ராஜ் TM (மொடக்குறிச்சி)
கிளைச் செயலராகவும்,
தோழர் P.தங்க்கராஜ்  TM (எழுமாத்தூர்)
கிளைப் பொருளராகவும் ஒரு மனதாகத் தேர்வு செய்யபாட்டனர்.
தேர்வு செய்யப்ப்பட்ட கிளை நிர்வாகிகள் செயல்பாடு சிறக்க மாவட்டச சங்கத்தின் வாழ்த்துக்கள்

சொஸைட்டி வட்டிப் பிரச்னையும் BSNLEUவின் கபட நாடகமும்:



சென்ற முறை,  சொஸைட்டி  BSNLEUவின்  முழுக் கட்டுப்பாட்டில் இருந்தபோது சாதாரண கடனுக்கான  வட்டி விகிதம் 16.5 சதம். அப்போது, வட்டியை குறைக்க வேண்டும் என்று நமது சங்க ஆதரவு   டைரக்டர்கள் மற்றும்  RGB உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது, " ஐயோ அது சாத்தியமில்லை ! வட்டியை குறைத்தால்  சொஸைட்டி திவாலாகிவிடும் ! " என்று  பேசியவர்தான் முன்னாள் இயக்குனர்( BSNLEU) அன்புமணிசென்ற RGB  தேர்தலுக்கு பிறகு  காட்சிகள் மாறின
BSNLEU
கூட்டணி சொஸைட்டி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. நமது  கூட்டணியின் வசம் சொஸைட்டி நிர்வாகம் வந்தது. ஒவ்வொரு சதமாக, இருமுறை வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. மொத்தத்தில்  வட்டி விகிதம் 14.5 சதமாக ஆனது. உறுப்பினர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.சென்ற ஆண்டு நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியைப்  பிடித்தார். நல்ல காலம் பிறக்கும் என்றும் வாக்குறுதி அளித்தார்.ஆனால், நாட்டு  மக்களுக்கு மட்டுமல்லாது, நமது  சொசைட்டி உறுப்பினர்களுக்கும் நல்ல காலம் பிறப்பதற்கு பதிலாக கெட்ட காலம் பிறந்தது. இதுநாள் வரை விவசாயிகளுக்கு வழங்கிய சலுகை வட்டியிலேயே வங்கிகள் நம்மை போன்ற ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கும் கடன் வழங்கி வந்தது. அந்த முறையை அடியோடு மாற்றி, சலுகை வட்டி தரக் கூடாது என்று உத்திரவு பிறப்பித்தது மோடி அரசு. அதன் காரணமாக நமது கூட்டுறவு சங்கமும் ஏற்கனவே  வாங்கிய கடனுக்கு அதிக வட்டி தர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. தவிர்க்க முடியாமல் உறுப்பினர்களுக்கு வழங்கிய கடனுக்கான  வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுவெறும் வாயை மெல்பவனுக்கு  அவல் கிடைத்ததுபோல, தோல்வியில் துவண்டு போயிருந்த அன்புமணி கம்பெனி உயிர்த்தெழுந்தது.ஆகா ! வட்டி உயர்வு அநியாயம் !!   ஏற்க மாட்டோம் !!  என்று  நீட்டி முழக்கி தமிழக சொஸைட்டி உறுப்பினர்களிடம் மட்டுமல்லாது, உறுப்பினர் அல்லாதவர்களிடமும் தங்களது வழக்கமான கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் மோடிதான் காரணம் என்று மேடை தோறும் பிரசங்கம் செய்பவர்கள்,  இந்த வட்டி உயர்வு பிரச்னையில் மட்டும் மோடி அரசின் மோசடித்தனத்தை தோலுரிக்காமல்,  அன்புமணி தலைமையில் தற்போதைய இயக்குனர் குழுவை சந்தித்து கையெழுத்து படிவத்தை கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பது ஏன் ?வட்டி குறைப்பில் இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை  இருக்குமானால்  இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியது, மோடி அரசை எதிர்த்து அல்லவாஅதை விட்டுவிட்டு, பொறுப்பேற்றவுடன் வட்டியை குறைத்த இயக்குனர் குழு மீது பாய்வது ஏன் !!வெள்ளானூர் நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு என்பது சென்ற இயக்குனர் குழு காலத்திலேயே முடிவாகிவிட்டதோடு, சென்ற தேர்தலில் ஆகப் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட்ட,  இனி மாற்ற முடியாத முடிவு....  சோழியன் குடுமி சும்மா ஆடுமாஇவர்களது உள்நோக்கம் அடுத்த அங்கீகாரத் தேர்தல் !இந்தியாவெங்கும் பொய்ப்பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் பெற்றாலும்  தமிழகத்தில இவர்களது பாச்சா இது நாள் வரை பலிக்கவில்லை  ! 
BSNLEU
வின் பன்னிரெண்டாண்டு  அங்கீகார காலத்தில் சொல்லிக்  கொள்ள சாதனை ஏதுமில்லை...போனஸ் இல்லை,  ஊதிய 
மாற்றத்தில் குளறுபடிகள் என்ற வேதனைகளே தொடர்கதையாகி வருகிறது.  இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் ஜெயிக்க 
வேண்டும் என்ற நப்பாசையில்தான் இந்த வட்டி குறைப்பு 
ஆர்ப்பாட்டம் எனும்  கபட நாடகம்  ! 
BSNLEU
வின்  பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம் !! 
உண்மையை எடுத்துரைப்போம்
தமிழகத்தில் NFTE-BSNL சங்க வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் 



Monday 24 August 2015

வாழ்த்துக்கள்

TTA தேர்வில் வெற்றி பெற்ற்
தோழர்கள்
1.G.மௌனகுருசாமி-பவானி
2.K.கிட்டுசாமி-  தாமரைக்கரை
3.M.P.ராமலிங்கம்-எண்ணமங்க்லம்
4.R.லோகனாதன்-பவானிசாகர்
5.முத்துசாமி-ஈரோடு
6.S.அர்ஜுணன்-சென்னிமலை
ஆகியோருக்கு
மாவட்டச் சங்க்கத்தின்

வாழ்த்துக்கள்

பொதுவேலை நிறுத்தம்

செப்டம்பர் 2
பொதுவேலை நிறுத்தத்திற்கான கோரிக்கைகள்
1.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடு. 
2.வேலைகளைஉருவாக்கி வேலையின்மையைப் போக்கு.
3.நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை கறாராக அமல்படுத்து. தொழிலாளர் நலச் சட்டங்க்களை மீறும் செயல்களை அனுமதிக்காதே.
4.அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு உரிமையை வழங்கு.
5.ரூபாய் 15000/- என்பதை குறைந்த பட்ச
சம்பளமாக நிர்ணயம் செய்.
6.குறைந்த பட்ச மாத ஓய்வூதியம்
ரூபாய் 3000 என்பதை உறுதிப்படுத்து
7. பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை நிறுத்து.
8. நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த ஊழியப் பணியை அமலாக்காதே
9.போனஸ், வைப்புந்தி, பணிக்கொடை- இவற்றிற்கானஉச்ச வரம்பை உயர்த்து. 
10. தொழிற்சங்களின் பதிவு செய்யும் கோரிக்கையை, விண்ணப்பித்த  45 நாட்களுக்குள்  பதிவு செய்.
11. தொழிலாளர் விரோத சட்டங்க்களை அமல்படுத்துவதை கைவிடு.
12.ரயில்வே, இராணுவம், காப்பீடு போன்ர துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டத்தைக் கைவிடு.
மத்திய தொழிற்சங்கங்க்கள் அனைத்தும் இணைந்து இந்திய தேசத்தையும்,
இந்திய தேசத்து மக்களையும்,
தொழிலாளிகளையும் பாதுகாக்க இந்த வேலை நிறுத்த அறைகூவலை விடுத்துள்ளன.
ஒரு இந்தியன் என்ற உணர்வோடும்,

தேசபக்த உணர்வோடும்  இந்த் வேலைநிறுத்தத்தில் பங்க்கேற்க வேண்டுகிறோம்.

Saturday 22 August 2015

சிறப்புக் கூட்டம்



செப்டம்பர் 2
பொதுவேலை நிறுத்த்த்திற்கான கோரிக்கை விளக்கக் கூட்டம் 24.08.2015 அன்று
மாலை 4 மணிக்கு GM அலுவலகத்தில் நடைபெறும்.
NFTE சார்பாக
மாநில உதவிச் செயல்ர்
தோழர் L.சுப்பராயன்

பங்கேற்று உரையாற்றுவார்.
அனைவரும் பங்க்க்ற்போம்

போனஸ்



புதிய போனஸ் திட்டத்தை (PLI)
உருவாக்குவதற்கான கூட்டம்  31.08.2015 அன்று நடைபெறவுள்ளது.
NFTE சார்பாக தோழர் இஸ்லாம் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
BSNL நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்பர்.
01.09.2015 போனஸ் பற்றிய நல்ல செய்தியுடன் புலரும் என நம்புவோம்.