NFTECHQ

Thursday 27 August 2015

பயனுள்ள மாவட்டச்  செயற்குழு
25.08.2015 அன்று மாவட்டச் செயற்குழு பயனுள்ள முறையில் சிறப்பாக நடைபெற்ரது.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின் செயற்குழுவைத் துவக்கி வைத்து பயனுள்ள உரையாற்றினார்.
மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
AITUC ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் செல்வராஜன் செப்டம்பர் 2 பொதுவேலை நிறுத்தத்துக்கான் கோரிக்கைகள் குறித்த விளக்கவுரையாற்றினார்.
முடிவுகள்
செப்டம்பர் 2  பொது வேலைநிறுத்த்தை வெற்றிகரமாக நடத்த திட்டமிடப்பட்டது.
மாவட்டம் முழுதும் ஊழியர்களைச் சந்தித்து வேலைநிறுத்த்த்தை வெற்றியாக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.
உதவும் உள்ளங்கள் NFTE BSNL ஈரோடு மாவட்டம் சார்பாக உதவி வழங்கும் விழாவை  உறுப்பினர்கள் பங்க்களிப்போடு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
15.09.2015 அன்று நடைபெறவுள்ள லோக்கல் கவுன்சில் கூட்டத்துக்கான பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டன.
GM அலுவலகக் கிளை மாநாட்டை அக்டோபர் மாதம் நடத்திட வேண்டும்
எக்ஸ்டர்னல் கிளை மாநாட்டை நவம்பர் மாதம் நடத்திட வேண்டும்
மாவட்டச் சங்கத்தின் நிதி நிலை குறித்து மாவட்டப் பொருளர் தோழர் ராஜேந்திரன் எடுத்துக் கூறி வரும் காலச் செயல்பாட்டுக்காக ஒவ்வொரு உறுப்பினரிடமும் குறைந்த பட்சம் ரூபாய் 500/- நன்கொடை கேட்கலாம் என் தெரிவித்தார். இதை மாவட்டச் செயற்குழு ஏற்றது. இப்பணியை அக்டோபர் மாதத்துக்குள் செய்து முடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்ட அளவில் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் பிரச்னைகள் இல்லை.
தெரிவிக்கப்பட்ட ஒரு சில பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும்.
வரும் காலச் செயல்பாட்டுக்கு நல்ல வழிகாட்டிய பயனுள்ள செயற்குழுவாக் அமைந்தது.

No comments:

Post a Comment