NFTECHQ

Saturday 31 October 2015

பாராட்டும்

நன்றியும்

ஈரோடு நகரில் பணிபுரிவோர் 20 சதம் வீட்டு வாடகைப்படியும், ஏப்ரல் 2015 முதல் நிலுவைத் தொகையும் அக்டோபர் 2015 சம்பளத்தில்
பெற்றுள்ளனர்.
தகுதி பெற்ற 21 நகரங்களில் 5 நகரங்க்களில் பணியாற்றுவோருக்கு மட்டுமே இது கிடைத்துள்ளது.
அந்த ஐந்தில் ஈரோடும் ஒன்று.

இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கணக்கியல் அதிகாரி (DRAWAL)

திரு V. சுப்ரமணியம்

அவர்களுக்கும், அவருக்கு துணை புரிந்தோருக்கும் மாவட்டச் சங்க்கத்தின் நன்றியையும் பாராட்டுக்களையும் மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

வாழிய பல்லாண்டு
31.10.2015 அன்று பணி ஓய்வு பெறும்

திரு v.சுந்தரராம்ன் SDE சத்தி
தோழர் K.சுப்ரமணியம் SR TOA பவானி

ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும் பல்லாண்டு
வாழ வாழ்த்துகிறோம்


நல்ல செய்தி

பணி ஓய்வு பெறுவோருக்கு
பணி ஓய்வு பெறும் அந்த மாதத்திலேயே
விடுப்புக்கான பணம் கிடைக்கும்
என்ற உத்தரவு அக்டோப்ர் 2015 முதல்
அமலாகியுள்ளது.
இதற்கு முயற்சி செய்த
நமது சங்கத்தின் தலைவர்களுக்கு
பாராட்டுக்கள்.
மத்திய செயற்குழு

நமது அகில இந்திய சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் 01.11.2015 முதல் 03.11.2015 வரை
மகராஷ்டிர மாநிலம் 
அவுரங்க்காபாத்தில் நடைபெறவுள்ளது.

நமது அமைப்பைப் பற்றியும்,
ஊழியர் பிரச்னைகள் குறித்தும்,
நமது நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும்
மத்திய செயற்குழு
விரிவாக விவாதித்து
நல்ல பல முடிவுகளை எடுக்கும்.

Friday 30 October 2015

10,000 ஜீரோ

லாபமோ-நட்டமோ குறைந்த பட்சம் 10000 ரூபாய் போனஸ் உறுதி. இது ஒரு இமாலய சாதனை.இது ஒரு வரலாறு. இப்படியெல்லாம் படித்தோம். பேச கேட்டோம்.
BSNLEU மட்டுமே அங்கீகாரத்தில்  இருந்த் போது நடந்த்து இது.
அதிகமான  சம்பளம் வாங்கிக் கொடுத்து விட்டோம் போன்ஸ் எதற்கு? இப்படியும் குரல்கள் ஒலித்தன.

தோழர் குபதா உருவாக்கிய பல ஒப்பந்தக்களையும், உத்தரவுகளையும் விமர்சித்து, கேலி செய்து, கிண்டல் செய்து ஏன் அவற்றை எரித்து சாம்பலாக்கிய நிகழ்வுகளும் நடந்தனவே.
NFTE  அங்கீகாரம் பெற்ற பின்பு போனஸ் பெற்றுத் தர எடுத்த முயற்சிகளைக் கெடுத்தொழித்த நிகழ்வுகளும் நெஞ்சில்  நிழலாடுகிறதே.

ஒற்றுமையை விரும்பாதோர் யார்? ஆனால் ஒற்றுமையின் 
பெயரால் உண்மைகள் ஒளிந்து போகக்கூடாது அல்லவா? 

இது போன்ற ஒலிகள் கதிராக வீசவில்லையே என்பதுதான் நமது ஆதங்கம். 


Thursday 29 October 2015

மருத்துவ திட்டம் மாறுமா?


தற்போதுள்ள மருத்துவத் திட்டத்தில் (MRS) மாற்றங்கள் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளும் இக்குழுவில் பங்கேற்பர்.

ஊழியர்கள் உடல் ரீதியாகப் படும் அவதிகள் தீர்வதோடு, மருத்துவத்திட்டத்தால் மன ரீதியாகப் படும் அவதிகள் இக்குழுவால் அகற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.  
மத்திய சங்க கடிதங்கள் 

நமது மத்திய சங்கம் 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 
BSNL  நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது.



இந்த ஆண்டு வருமானம் 800 கோடி உய்ரந்துள்ளதால் BSNL   ஊழியர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும்.
 BSNLலில் பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் அளிப்பதற்கான கொள்கை உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.
  TTA  மற்றும் TELECOM MECHANIC  தோழர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். அதிகாரிகள் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வருவது போல் ஊழியர்களுக்கு தாய்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும்.
 78.2 சத  IDA  அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.
DELOITTEE குழு அமுலாக்கத்தின் போது உபரியாகும் ஊழியர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே விற்பனைப்பிரிவு போன்ற பகுதிகளில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


Wednesday 28 October 2015

மகிழ்ச்சி

GPF  இன்று 28.10.2015 கிடைத்து விட்டது.

மகிழ்ச்சி. நன்றி
ஒரு மாதத்தில்
பணி ஓய்வு பெற்றவர்களின் மெடிக்கல் பில்களை ஒரு மாத்த்துக்குள் தீர்வுகாண வேண்டும் என கார்ப்பரேட் 
அலுவலகம் மாநில நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளாது. 






தட்டுங்கள் திறக்கப்படும்.
கேளுங்கள் கொடுக்கப்படும்.- ஏசுபிரானின் வாக்கு.
தட்டினாலும் திறக்காது.
கேட்டாலும் கிடைகாது என்றால் தட்ட வேண்டிய இடத்தில் தட்ட வேண்டிய வகையில் தட்டினால் கிடைக்கும்.
நாம் தட்ட வேண்டிய வகையில் தட்டுவதில்லை என்பதுதானே ஆதங்கம்.
வல்லமை படைத்த வல்லவன் மட்டுமே வாழ்வான்.
வளர்ச்சி மட்டுமே வலிமை தராது.
துணிவும் வேண்டும்.

Monday 26 October 2015

கடன்
தொலைக்காட்சிப்பெட்டி
ஊழியர் சேமநல நிதியிலிருந்து தொலைக்காட்சிப்பெட்டி வாங்க ரூபாய் 20000/- கடன் வழங்கப்படுகிறது.
மாதம் ரூபாய் 1000/- வீதம் 20 மாதங்களில் கடன் தொகை சம்பள்த்தில் பிடிக்கப்படும்.
வட்டி ரூபாய் ரூபாய் 775/-.
விண்ணப்பங்க்கள் பொதுமேலாளர் அலுவலகத்துக்கு 13.11.2015க்குள் வந்து சேர வேண்டும். 

ஸ்மார்ட்போன்

ஊழியர் சேமநல நிதியிலிருந்து
ஸ்மார்ட்போன்வாங்க ரூபாய் 10000/- கடன் வழங்கப்படுகிறது.
மாதம் ரூபாய் 500/- வீதம் 20 மாதங்களில் கடன் தொகை சம்பள்த்தில் பிடிக்கப்படும்.
வட்டி ரூபாய் ரூபாய் 440/-.
விண்ணப்பங்க்கள் பொதுமேலாளர் அலுவலகத்துக்கு 13.11.2015க்குள் வந்து சேர வேண்டும். 

Sunday 25 October 2015

தகவல் 

 இந்த மாதச் சம்பளத்தில் 5.3 சத அகவிலைப்படி கூடும். 

ஈரோடு நகரத்தில் பணிபுரிவோருக்கு 10 சதம் வீட்டு வாடகைப்படியும் இந்த மாதச் சம்பளத்தில் கூடும்.

Saturday 24 October 2015

வங்கித் துறை விற்பனைக்கு!



 வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே, மக்களுக்குச் சேவை செய்யத்தான்
வங்கித் துறையை எப்படியாவது முழுவதுமாகத் தனியார் கைகளில் ஒப்படைத்துவிட வேண்டும் என்று அடுத்தடுத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
கடந்த ஆகஸ்ட் 14 அன்று இந்திர தனுஷ்என்ற மத்திய அரசின் கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய இரு பெரிய வங்கிகளின் தலைமைப் பொறுப்புக்குத் தனியார் துறையிலிருந்து உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, பேமெண்ட் வங்கிகள் என்ற பெயரில் 11 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பந்தன் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி என்ற பெயரில் இரு புதிய தலைமுறை வங்கிகள் துவங்கப்பட்டுள்ளன. சிறிய நிதி வங்கிகள் என்ற பெயரில் 10 தனியார் வங்கிகள் களம் இறங்கியுள்ளன. முத்தாய்ப்பாக ஐடிபிஐ என்ற பொதுத் துறை வங்கியில் மத்திய அரசின் பங்கு 76%லிருந்து 49%ஆகக் குறைக்கப்பட்டு, தனியார்மயமாக்கப்படப்போகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் மத்திய அரசின் பங்கு 52%ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் கூடவே வெளியாகியுள்ளது.
கிராம மக்களின் நிதிச் சேவையில் 40 ஆண்டுகளாகத் தலைசிறந்த பங்காற்றிவருகின்றன 56 கிராம வங்கிகள். 27 மாநிலங்களில் 639 மாவட்டங்களில் 19,000 கிளைகள் மூலமாக 80,000 அதிகாரிகளும், ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கிராமப்புற எளிய மக்களுக்கு சேவை அளிக்கின்றனர். 3 கோடி சாதாரண மக்களுக்கு 2 லட்சம் கோடிக் கடன் வழங்கியுள்ள இவ்வங்கிகளின் பங்குகளை 49% வரை தனியாருக்கு விற்க இவ்வாண்டு துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தனியார் மயத்தை நோக்கி
நிதியும், நீதியும் மறுக்கப்பட்ட விவசாயப் பெருங்குடியினருக்கு அரும்பணி செய்துவரும் 93,000 பிரதம வேளாண் கூட்டுறவுச் சங்கங்களின் பணி முடக்கப்பட்டு, அவை மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வியாபார முகவர்களாகச் செயல்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசு நபார்டு வங்கி மூலமாக. ஆக, இவை அனைத்தும் தனியார்மயத்தை நோக்கி ஒட்டுமொத்த வங்கித் துறையையும் வேகமாகத் தள்ளிவிடும் முயற்சிகள்.
பாஜகவைப் பொறுத்தவரை அக்கட்சி எப்போதுமே பொதுத் துறைக்கு எதிராகத்தான் செயல்பட்டிருக்கிறது. பாஜகவின் முந்தைய அவதாரமான பாரதிய ஜனசங்கம் வங்கிகள் தேசிய மயத்தைக் கடுமையாக எதிர்த்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது 2000 டிசம்பரில் பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்குகளை 33%ஆகக் குறைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றுபட்ட போராட்ட எதிர்ப்பாலும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பாலும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
வரலாற்றின் இமாலயத் தவறு
பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று 2008-ல் அறிக்கை சமர்ப்பித்த ரகுராம் ராஜன்தான் இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர். வங்கிகள் தேசிய மயம் என்பதே வரலாற்றின் இமாலயத் தவறுஎன்று திருவாய் மலர்ந்தருளியுள்ள அர்விந்த் சுப்ரமணியன்தான் பிரதமர் மோடியின் முக்கியப் பொருளாதார ஆலோசகர். மத்திய அரசும், நிர்வாகத் துறையும் இணைந்து வங்கிகளை 1955க்கு முன்பிருந்தபடி முழுமையாகத் தனியார் கைகளில் சேர்க்க பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றன. “1969-ல் பெரிய வணிக வங்கிகள் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன்னால் தனியார் வங்கிகளின் கட்டுப்பாட்டைக் கைகளில் வைத்திருந்த வியாபார நிறுவனங்கள், வங்கிகளின் மிகப் பெரும் அளவிலான கடனைப் பெரிய, வளர்ந்த வியாபார நிறுவனங்களுக்கே வழங்கிவந்தனஎன்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.
சூறையாடப்பட்ட சேமிப்பு
1947-ல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1969 வரை 557 தனியார் வங்கிகள் திவாலாகி, அவற்றில் போடப்பட்டிருந்த பொதுமக்களின் சேமிப்பு பெரும்பாலும் சூறையாடப்பட்டது. 1969-க்குப் பின்னரும் பேங்க் ஆஃப் தஞ்சாவூர், பேங்க் ஆஃப் தமிழ்நாடு, பேங்க் ஆஃப் கொச்சின், நெடுங்காடி பேங்க் உள்ளிட்ட 20 தனியார் வங்கிகள் திவாலாகின. ஒரு வித்தியாசம் - இவ்வங்கிகளெல்லாம் பொதுத் துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டதால் பொதுமக்களின் சேமிப்புக்குப் பங்கம் வரவில்லை. ஆனால், தனியார் வங்கிகளின் நஷ்டம் முழுவதையும் பொதுத் துறை வங்கிகளே ஏற்க நேரிட்டன. 1994-ல் துவங்கப்பட்ட புதிய தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் பேங்க்பத்தே ஆண்டுகளில், 2004-ல் ரூ.1,100 கோடி நஷ்டத்துடன் திவாலாகியது. பொதுத் துறை வங்கியான ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்தான் இதனைச் சுமக்க நேரிட்டது.
1960-களின் மத்தியில் விவசாயத் துறை நாட்டின் மொத்த உற்பத்திக்கு 44% வரை பங்களித்து வந்தபோது, அத்துறைக்குத் தனியார் வங்கிகள் வழங்கிய கடன் மொத்தக் கடனில் 0.2% மட்டுமே. 1969-க்கு பிறகுதான் பொதுத் துறை வங்கிகள் வழங்கும் மொத்தக் கடனில் 40% ஏழை, எளிய மக்களுக்கான முன்னுரிமைக் கடனாக இருக்க வேண்டும்; அதில் 18% கட்டாயமாக விவசாயத் துறைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதெல்லாம் நிகழ்ந்தன. அதுதான் நம் நாடு உணவுத் தன்னிறைவை எட்டுவதற்குக் கணிசமாகப் பங்காற்றியது.
மக்களுக்கான வங்கி
தேசிய முன்னுரிமைகளான விவசாயம், சிறுதொழில், ஏற்றுமதி ஆகியவற்றின் அபரிமிதமான வளர்ச்சி, வேலைவாய்ப்பின் பெருக்கம், புதிய தொழில்முனைவோருக்கு ஊக்கம், பின்தங்கிய பிரதேசத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு வங்கித் துறை சேவை புரிய வேண்டும்என்பதே வங்கித் துறை தேசியமயமாக்கப்பட்ட சட்டத்தின் முன்னுரையில் அதன் நோக்கமாகச் சொல்லப்பட்டது. வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் - பெரும் பணக்காரர்களுக்கான வங்கிச் சேவை என்பதிலிருந்து மக்களுக்கான வங்கிச் சேவையாக மாற வேண்டும் என்பதே. அத்துடன் கிராம, சிறு நகர்ப்புறங்களில் ஏராளமான கிளைகள் திறந்து ஏழை மக்களுக்கான கடன் சேவையை அதிகரிப்பதுதான்என்கிறது ரிசர்வ் வங்கி அறிக்கை. மேலும், 2010 ரிசர்வ் வங்கி அறிக்கை “1993 முதலான 17 ஆண்டு காலம் தனியார் வங்கிகள் செயல்பட்டதன் அனுபவத்தைப் பரிசீலித்தால், ஒன்று அவை திவாலாகிவிட்டன அல்லது மற்ற வங்கிகளோடு இணைந்துவிட்டன அல்லது வளர்ச்சி குன்றிவிட்டனஎன்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் அந்த அறிக்கை தனியார் நிறுவனங்களை வங்கிகள் துவங்க அனுமதித்தால் அவை சுயநலத்தோடு பாரபட்சமாகச் செயல்படும். எனவே, உண்மையான கடன் தேவை உள்ள பகுதிகளுக்குக் கடன் கிடைக்காது; அவை வாடிக்கையாளர் தேவைகளைப் புறக்கணித்து தங்களது தேவைக்கு மட்டுமே செயல்படுமாதலால் முரண்பாடு உருவாகும். எனவே, தனியார் முதலாளிகளை வங்கிகள் துவங்குவதைத் தடுப்பதன் மூலமாக இத்தகைய முரண்பாடுகளைத் தவிர்ப்பதோடு, 1969க்கு முன்பு வரை வங்கிகள் சில தனிநபர்கள் கையில் ஏகபோகமாகக் குவிந்திருந்த நிலைமையையும் தவிர்க்கலாம்என்கிறது.
2008 செப்டம்பர் 15-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு அந்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகின. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய அந்நெருக்கடியின் தாக்கம் இந்தியாவில் மட்டுப்பட்டிருந்ததற்குக் காரணம் 75%க்கும் மேற்பட்ட வங்கித் துறை வியாபாரம் பொதுத் துறை வங்கிகளின் கைகளில் இருந்ததால்தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பேருண்மை.
கந்துவட்டிக்குக் கடன்
நம் நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்துக்குப் பிறகு, மொத்த வங்கிக் கிளைகளில் கிராமப்புற வங்கிக் கிளைகள் 1994-ல் 54%-ல் இருந்து 2014-ல் 33%ஆகக் குறைந்துள்ளது. இன்றளவில் 73% விவசாயிகளுக்கு வங்கிக்கடன் கிடைப்பதில்லை. 43% கிராமப்புறக் கடன் கந்துவட்டிக்காரர்களின் பிடியில்தான் உள்ளது. 5.77 கோடி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் 96% நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் மறுக்கப்பட்டுவருகிறது. மறுபுறம் ரூ. 1 கோடியும் அதற்கு மேலும் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பங்கு, மொத்த வாராக் கடனான சுமார் 3 லட்சம் கோடி ரூபாயில் 73% ஆகும்.
ஒரு நாட்டின் பொருளாதார திசை வழியைத் தீர்மானிக்கும் வண்டிக்கான ஸ்டீயரிங் போன்ற நிதித்துறை அரசு கையில் இல்லாமல், தனியார் கைகளுக்குப் போனால் நிலைமை என்னாகும்?
இந்து தமிழ்
தமிழ்

செய்திகள்
GPF
23.10.2015 மாலை 5 மணிக்கு மாநிலச் செயலரிடம் உறுதியளித்தபடி,
27.10.2015 அன்று GPF கிடைக்கும் என்பது வேலூர் இணயதளச் செய்தி. மகிழ்ச்சி.

தீபாவளி
தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை 10.11.2015 அன்று என உத்தரவிடப்படுள்ளது.

விடுப்பு கால சம்பளம்

ஓய்வு பெறுவோருக்கு விடுப்பு கால சம்பளம் தருவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. நமது மாநில, மத்திய சங்க்கங்களின் முயற்சியால் இனி, ஓய்வு பெறுவொருக்கு ஓய்வு பெறும் அந்த மாதத்திலேயே விடுப்புகால சம்பளம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள நமது கார்ப்பரேட் அலுவலக்ம் உத்தரவிட்டுள்ளது.

போராளிப் பெண்ணின்


துயரக் கதை

இது ஆந்திராவில் கடந்த எழுபது ஆண்டுகளாக இயங்கிவரும் இடதுசாரி இயக்கத்தின் வரலாறும் தொண்ணூறு வயது தாண்டிய ஒரு புரட்சியாளரின் சுயசரிதையாகவும் அமைந்த நூல். இருபதாம் நூற்றாண்டின் தென்னிந்திய அரசியல் வரலாறு இதில் வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தீவிரமாக இயங்கி, கொடூரமாக ஒடுக்கப்பட்ட நக்ஸல் இயக்கத்தையும் நினைவுபடுத்துவது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கிட்டத்தட்ட எல்லாத் திசைகளிலும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் இருந்தன. இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது அதை மக்கள் யுத்தமாகக் கருதிய இடதுசாரிகள் யுத்தம் முடிந்த கையோடு அவர்கள் மக்கள் நல இயக்கம்என்று கருதிய பாதையில் சென்றனர். இதில் வன்முறையும் படுகொலைகளும் இருந்தன. இதில் வியப்பென்னவென்றால், இந்த இயக்கத்தில் தீவிரமாக இயங்கிவர்கள் படித்தவர்கள். சிலர் வசதி படைத்தவர்கள். இந்த சுயசரிதையின் நாயகி கோடேஸ்வரம்மா வசதி படைத்த ரெட்டி வம்சத்தைச் சார்ந்தவர். பால்ய விதவை. இவளுடைய பாலகக் கணவன் காசநோயில் இறக்கிறான். ஆயுள் முடியப்போகிறது என்று தெரிந்தவன் கோடேஸ்வரம்மா மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவித்ததோடு தன்னுடைய சொத்தில் ஒரு பகுதியையும் எழுதி வைக்கிறான். கோடேஸ்வரம்மா கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்று ஆவது மறுமணத்தினால்.
கணவன் சீதாராமைய்யாவும் முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர். ரெட்டி சமூகத்திலேயே வேறு ஒரு பிரிவைச் சேந்தவர். இத்தகவல்கள் இந்தச் சுயசரிதையில் வரும்போது சாதி, சாதிக்குள் சாதி என்று எப்படி இந்தியச் சமூகம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் நாகரிகமாக அமைந்தது என்று வியக்கவைக்கிறது. கோடேஸ்வரம்மாவுக்கு முதலில் மகள். அதன் பிறகு மகன். அந்த நாளிலேயே இவர்களின் இடதுசாரிப் போக்கால் பலமுறை தலைமறைவாக வாழ வேண்டிவருகிறது.
ஒரு பெண் போராளி நோயுறுகிறாள். கட்சி ஆணைக்கு இணங்க சீதாராமையா அவளைத் தன் வீட்டில் கவனித்துக் காப்பாற்றுகிறார். வலிப்பு வந்து விழும் அவளைத் தன் இரு கைகளாலும் தூக்கிப் படுக்கையில் கிடத்த வேண்டியிருக்கிறது. சொந்தபந்தங்கள் வெவ்வேறு மாதிரிப் பேசுகின்றன. நோயாளிப் போராளியின் சொத்துக்கு ஆசைப்பட்டு அப்போராளியை அவர் வீட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்று கூடச் சிலர் கூறுகிறார்கள். இதெல்லாம் கோடேஸ்வரம்மாவை அந்த வீட்டை விட்டு வெளியேறச் செய்கின்றன. கோடேஸ்வரம்மா ஆந்திர மகிள சபையில் பணிபுரியச் சென்றுவிடுகிறார்.
ஒரு முறை விரிசல் நேர்ந்த பிறகு கணவன் மனைவி சேர்ந்து வாழவில்லை. மகளின் திருமணத்துக்குக்கூட கோடேஸ்வரம்மாவுக்குக் கணவனிடமிருந்து முறையான அழைப்பு இல்லை.
ஒரு நாவலுக்குரிய நிகழ்ச்சிகளுக்கும் மனப் போராடங் களுக்கும் மத்தியில் இடதுசாரித் தோழர்களின் தீவிரம், கொள்கை முதலியன சொந்த வாழ்க்கையில் முழுக்கப் பிரதிபலிக்கவில்லை. திரும்பத் திரும்ப சாதி, ஒரு விதவையை மணந்து கொண்டதைத் திரும்பத் திரும்ப ஒரு வாதமாகக் கூறுவது இதெல்லாம் நிகழும்போது வருத்தமாக இருக்கிறது.
தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் கசப்பையும் மீறி, கொள்கைப் பற்றிலிருந்து கோடேஸ்வரம்மா சிறிதும் சமரசம் செய்துகொள்வதில்லை. இன்றுவரை ஒரு போராளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். மகன் காவல் துறையினரால் கொல்லப்படுகிறான். அவனும் அவன் சகோதரியும் யார் சிபாரிசும் இல்லாமல் மருத்துவம் படித்தவர்கள். மகளின் கணவனும் மருத்துவர். ஒரு நாள் காரணமே தெரியாமல் அவர் இறந்துவிடுகிறார். சில மாதங்கள் பொறுத்திருந்தாலும் துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறாள். கோடேஸ்வரம்மாவின் இழப்புகளுக்கு முடிவே இல்லை.
கௌரி கிருபானந்தன் இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் சட்டத்துக்குப் புறம்பானது என்று நினைக்கப்படும் கொள்கைகளில் தீவிரப் பற்று கொண்ட வீராங்கனைகள் உண்டு. கோடேஸ்வரம்மா புனைகதை, கவிதை, பாடல் முதலியன இயற்றும் ஆற்றல் பெற்றவர். நல்ல பாடகர். தன்னுடைய படைப்புகளுக்குப் பரிசுகளும் வாங்கியிருக்கிறார். இவ்வளவு ஆற்றல்கள், வாழ்க்கையின் மீது புரிதல் கொண்ட அவர், தன்னைப் போன்றே கொள்கைப் பிடிப்பு கொண்ட சீதாராமையாவுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. மனித இயல்பின் எதிர்பாராத வெளிப்பாடுகளை இந்தச் சுயசரிதை எடுத்துக் கூறுகிறது.
இது நூலில் வந்த ஒரு தகவல் அன்றே மிகவும் பேசப் பட்டது. முதல் இந்தியப் பொதுத் தேர்தலின்போது ஆந்திரத் தையும் உள்ளடக்கிய சென்னை மாநிலத்தில் காங்கி ரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக, கம்யூனிஸ்டுகள் அரசே அமைக்கக் கூடிய அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திப் பிரச்சாரம் செய்ய முடியாத ராவி நாராயண ரெட்டி ஜவாஹர்லால் நேரு பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெற்று வெற்றி பெறுகிறார்!
இந்த தொண்ணூறு வயது வீராங்கனையின் சுயசரிதை பிரமிக்க வைக்கிறது. எத்தனை இழப்புகள், ஏமாற்றங்கள்! ஆனால், தன் வாழ்க்கையைக் கசப்புணர்ச்சி, வெறுப்பு இல்லாமல் திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அசாதாரணப் பிறவியின் அசாதாரண சுயசரிதை இது.



Thursday 22 October 2015

பூஜைக்கு வராத போனஸ்


கடந்த 5 ஆண்டுகளைப் போல்வே இந்த ஆண்டும் கானல் நீராய்ப் போனது போனஸ்.
இந்த ஆண்டு ஊழியர்கள் போனஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.
எதிர்பார்ப்பு பொய்யாய்ப் போனது.
போனஸ் பற்றிய வரலாறுகள் பற்றியே இனி பேசி,கட்டுரைகள் எழுதப் போகிறோமா?
போனஸ் என்ற வர்த்தையையே பறிகொடுத்து இன்செண்டிவ் ஆன கதையை ஆய்வுகள் அலசி, எழுதி,பேசப் போகிறோமா?
PLB (PRODUCTIVITY LINKED BONUS) ஒப்பந்தம் போடப்பட்ட போது தோழர் குப்தா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
PLI (PROFIT LINKED INCENTIVE- இலாபத்தின் அடிப்படையில் இன்செண்டிவ்) ஒப்பந்தம் உருவான போது தோழர் நம்பூதிரியைப் போற்றும் குரல் மேலோங்கி, அதை விமர்சிக்கும் குரல்கள் குன்றிப் போயின.
PLI கமிட்டி கூட்டத்தைக்  கூட  உரிய காலத்தில் கூட்ட வைக்க நிர்ப்பந்தங்கள் உருவாக்கப்படவில்லை.
கடைசி நேரத்தில் கமிட்டி கூடியது. மீண்டும் கூடும் என்றார்கள்.
கலைந்த கூட்டம் மீண்டும் கூடவில்லை.
19.10.2015 அன்று தர்ணா அறிவிக்கப்பட்டது. மாதம் ஒரு தர்ணா என்ற அழைப்பால் மாவட்டச் சங்கங்கள் படும் கஷ்டத்தை யார் உணர்வார்?
போனஸ் அடிப்படை உரிமை, கொடுபடா ஊதியம் என்றெல்லாம் உரக்கக் கூவி விட்டு ஆர்ப்பாட்டம், தர்ணா மட்டுமே அரங்கேற்றி  பின்னர் அமைதி காக்கப் போகிறோமா?
16.10.2015 அன்று நேசனல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
ஊழிய்ரகள் போன்ஸ் பற்றி நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்தனர்.
ஆனால் மிஞ்சியது மீண்டும் ஏமாற்றமே.
எந்த ஒரு பிரசனைக்கும் தீர்க்கமான தீர்வின்றி முடிந்தது நேசனல் கவுன்சில்.
தலமட்டங்களில் போராட்டம். ஆனால் நேசனல் கவுன்சிலில் அது பிரதிபலிக்காதது வேதனையளிக்கிறது.
கண்டனத்தை தெரிவித்து ஒரு வெளிநடப்பு  செய்யக் கூட இயலாதது வருத்தமளிக்கிறது.
போனஸ் கதை சாரி.. இன்செண்டிவ் கதை இப்படியென்றால் GPF கதை அதை விட சோகமாகியுள்ளது.
ஊழியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் மாநாடுகள் நடத்தி  என்ன சாதிக்கப் போகிறோம்?
பதவிகளைத் தக்க வைக்கவா?
இத்தகைய உணர்வு அனேகமாக எல்லோருக்கும் இருக்கும்.
ஆனல் அதை வெளிப்படுத்தமுடியாத  சங்கடங்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் சேர்த்துத்தான்
இந்த செய்தி.

Tuesday 20 October 2015

தர்ணா
19.10.2015 அன்று தர்ணா போராட்டம் NFTE  மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு தலைமைடயில் நடைபெற்றது.

தோழர்கள் பரமேஸ்வரன், (BSNLEU) பரமசிவம்(SNEA),குமர்(NFTE), தண்டபாணி,  (AIBSNLEA) தனுஷ்கோடி(AIBSNLOA),மோகன் (SNATTA) ஆகியோர் உரையாற்றினர்.
நல்ல முகூர்த்த நாள் என்ற போதிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Friday 16 October 2015

அறிந்ததும்

அறிய விரும்புவதும்

கடந்த வாரம் சென்னைத்தொலைபேசிக்கு உட்பட்ட முன்னாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் (SSA) STR பகுதியில் சில தோழர்களுக்கு TTA மற்றும் TM பதவிகளில் பணி நியமனத்திற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவை வெளியிட்டவர் சென்னை தொலைபேசி மாநில தலைமைப் பொதுமேலாளர்.
எனவே இந்த தோழர்கள் நமது இயக்கத்தில் எங்கு உறுப்பினர்களாக இருக்க தகுதிபடைத்தவர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்.

அமைப்பு விதி ஆய்வாள்ர்களிடமிருந்து அறிய விரும்புகிறோம். 
நேசனல் கவுன்சில் கூட்டம்


16.10.2015 அன்று டெல்லியில் நேசனல் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
தர்ணா
போனஸ் வழங்க வலியுறுத்தி 19.10.2015 அன்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக நாடு தழுவிய தர்ணா நடத்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
19.10.2015 அன்று ஈரோடு பொதுமேலாளர் அலுவலகத்தில்
நடைபெற உள்ள தர்ணாவில் அனைவரும் பங்க்கேற்று வெற்றிகரமாகக் வேண்டுகிறோம்.

Thursday 15 October 2015

திருத்தப்பட்ட விதிகள்
நமது மத்திய சங்கத்தின் முயற்சியால் JTO ஆளெடுப்பு விதிகள் திருத்தப்ப்ட்டு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு
01.10.2015 முதல் 5.3 சதம் விலைவாசிப்படி உய்ர்வுக்கான உத்தரவை  BSNL  நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு

TTA தேர்வில் வெற்றி பெற்ற்
தோழர்கள்
1.G.மௌனகுருசாமி-பவானி
2.K.கிட்டுசாமி-  தாமரைக்கரை-
 3.M.P.ராமலிங்கம்-எண்ணமங்க்லம்
4.முத்துசாமி-ஈரோடு
ஆகியோர் 28.10.2015 முதல் TTA
பயிற்சி வகுப்புக்குச் செல்ல உள்ளனர்.
தோழர்களுக்கு மாவட்டச் சங்க்கத்தின்
வாழ்த்துக்கள்

Monday 12 October 2015

மனோரமா

மன்னார்குடியில் பிறந்து
பள்ளத்தூரில் வளர்ந்து
கோடிக்கணக்கான மக்களின்
உள்ளத்தூரில் வாழும்
மனோரமாவின் மறைவுக்கு
அஞ்சலி.