NFTECHQ

Friday 30 September 2016

5.5

01.10.2016 முதல்
விலைவாசிப்படி
5.5 சதம்
உயரும் என
கணக்கீடுகள்

கணிக்கின்றன.


நலமுடனும் மகிழ்வுடனும்
வாழிய பல்லாண்டு

30.09.2016 அன்று
பணி ஓய்வு பெறும்
1.திரு A.துரைசாமி SDE பெருந்துறை
2.தோழியர் B.சுமதி OS கோபி
        (விருப்ப ஓய்வு)
3.தோழர் K.காசிலிங்கம் JE சத்தி
4.தோழர் M.சுப்ரமணியன் TT ஈரோடு
5.தோழர் A.சுப்ரமணி TT பெருந்துறை

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
மாவட்டச் சங்கம்

சார்பாக வாழ்த்துகிறோம்.
GPF

செப்டம்பர் மாத வைப்பு நிதி  விரைவில் பட்டுவாடா 
செய்யப்படும்  என மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.  

எனவே  வைப்புநிதி விண்ணப்பித்தவர்கள் அதனை ரத்து செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அக்டோபர் மாதம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 02/10/2016க்கு மேல் 
விண்ணப்பிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்து  

அக்டோபர் மாத பட்டுவாடா  செய்யப்படும்.

Thursday 29 September 2016

விருது அல்லது வி.ஆர்.எஸ்


"ஒரு இலட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களை OFC கேபிள் மோலம் இணைக்க வேண்டும்.

2.5 இலட்சம் கிராமங்களை ப்ராட்பேண்ட்  வசதி மூலம் இணைக்க வேண்டும்.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா என்னும் கனவை
குறிப்பிட்ட காலத்துக்குள் நனவாக்க வேண்டும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனம்
புதிய  சிந்தனையோடு
புதிய ஆராய்ச்சிகளோடு,
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி
பிரதமரின் கனவான இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை
உருவாக்க வேண்டும்.

கிராமப் புறங்களில்  தகவல் தொழில் நுட்ப வசதியின்றித் தத்தளிக்கும் மக்களுக்கு அந்த வசதியைத் தர பி எஸ் என் எல் அதிகாரிகளும் ஊழியர்களும் உழைத்திட வேண்டும்.

இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் பி எஸ் என் எல் நிறுவனத்தின் பங்கை 15 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும்.

புதிய தொழில்நுட்பம்,
திறமையான ஊழியர்கள்,
போதுமான உபகரணங்க்கள்
மற்றும் நிதி ஆதாரம்
இவற்றைக் கொண்டுள்ள பி எஸ் என் எல்
தனியார் நிறுவனங்க்களோடு போட்டி போட வேண்டும்.

தரைவழித் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. இது பற்றி
சீரியசாக சிந்திதித்து செயல்பட வேண்டும்.

சேவையின் தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே பிளான் 49 போன்ற பல்வேறு திட்டங்கள் வெற்றி பெறும்.

வாடிக்கையாளரின் குறைகள் உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். இதில் கவனக்குறைவு என்பதைச் சகித்துக் கொள்ள்வே முடியாது. 

வைராக்கியத்துடன் பணியாற்றுவோருக்கு விருது கள் வழங்க வேண்டும்.
தொடர்ந்து எதிர்மறை வளர்ச்சியைக்
(Negative Growth) கொடுத்து வரும் பகுதியில் பணியாற்றுவோர் வி ஆர் எஸ் திட்டத்தில் வெளியேற வேண்டும்."

இப்படி பேசியவர் இந்திய நாட்டின் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா.

சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு 27.09.2016 அன்று நடைபெற்ர விருது வழங்கும் விழாவில்தான் அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளர்ர்ர்.

அமைச்சரின் அக்கறையான சில கருத்துக்களுக்கு பாராட்டுக்கள்.

நமக்கு எழும் கேள்விகள்


போதுமான உபகரணங்க்கள் மற்றும் நிதி ஆதாரம்
இவற்றை பி எஸ் என் எல் நிறுவனம்
கொண்டுள்ளது என்ற அமைச்சரின் கருத்து உண்மையா?

மொபைல்  சேவையில் வாடிக்கையாளர் கணக்கில் உள்ள பணத்தில் ஒரு பகுதி அதிகாலை நேரத்தில் அபகரிக்கப்படுகிறதே. இதற்கு யார் பொறுப்பு?

லேண்ட்லைன்  சேவையில் ஹங்கமா சேவை(?)  என்ற பெயரில் நடைபெறும் திருட்டுக்கு யார் பொறுப்பு?

இப்படிப்பட திருட்டுத் தொழிலைச் செய்யும் நிறுவனங்களில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்று சொல்லப்படுகிறதே. அது உண்மையானால் அதற்கான நடவடிக்கை என்ன?

தியாகங்கள் பல செய்து வெள்ளையனை வெளியேற்றிய நமது சுதந்திர தேசத்தில் இது போன்ற கொள்ளைகளை நடத்தும் கொள்ளையர்க்களை வெளியேற்றப் போவது யார்? (நமது பிரதமர்  மாவீரன் பகத்சிங்கைப் பற்றி உண்ர்வு பூர்வமாகப் பேசினார்.)
இந்தக் கொள்ளளையை ஒழிக்கப் போகும் பகத்சிங் யார்?

உபகரனங்கள்  இல்லாமை,
லோ கொட்டேசனில் வழங்க்கப்படும் உபகரனங்களின் லட்சணம் குறித்து அமைச்சர் அறிவாரா?

கிராமப்புறங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பெருத்த் நட்டத்தோடு இயக்க்ப்படும் பல்லாயிரக்கணக்கான தொலைபேசி நிலையாங்கள் குறித்து அமைச்சருக்குத் தெரியாதா?

கிராமப்புறச் சேவைக்கு இனி USO FUND லிருந்து நிதி உதவி கிடையாது என்று சொல்லிவிட்ட பிரதம அமைச்சரின் அலுவலகச் செய்தி அமைச்சருக்குத் தெரியாதா?

இப்படி இன்னும் பல கேள்விகளுண்டு.

இந்நிலையில்  வருமானக் குறைவு உள்ள பகுதிகளில் பணியாற்றுவோர் விருப்ப ஓய்வில் செல்லட்டும் என்ற அமைச்சரின் பேச்சு  அர்த்தமற்ற ஒன்று.

"பணிப்பாதுகாப்பு" என்ற உறுதிமொழியை திரு வாஜ்பாய் அரசிடம் உத்தரவாகப் பெற்றுத் தந்தவர் எங்களின் ஒப்பற்ற தலைவன் குப்தா.

ஊழியர்களின் உரிமைகளோடு விளியாடினால்
விபரீதங்களுக்கு அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.

சிறப்பாக்ச் செயல்பட்டோரை மக்கள் மதிப்பதூண்டு.


செயல்படாதவர்களுக்கு மக்கள் கட்டாய ஓய்வு கொடுத்த வரலாறும் உண்டு.

பட்டுக்கோட்டையார் பாடல்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை
 காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்... ஊஊஓ....
விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்து விளையாடும்ம்ம்ம்
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளிலாடும்
பல வரட்டு கீதமும் பாடும்
வித விதமான பொய்களை வைத்தது
பிழைக்கும் உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தை குரங்கு தாவும்
அதன் அழகை குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும்
சிலர் குணமும் இதுபோல்
 குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா


அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஒரு வேளை
தோழா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

ஆயிரம் பட்டுக்கோட்டையார்கள் அவதரித்து ஆயிராம் பாடல்கள் இதுபோல் எழுதினால்தான் குறுக்கு வழிக்காரர்கள் திருந்துவார்களோ
பவானி பிரச்னையில் தவறாகப் பயணித்த நிர்வாக்ம் தவறைத் திருத்துவதாகக் கூறியுள்ளது.

பரமக்குடி பாதையில்
ஈரோடு பயணிக்காது என்பதும் நமது நம்பிக்கை.

Tuesday 27 September 2016

ஆண்டுக் கணக்காய்
அயராத நல்லவர்கள்
198
தரைவழித் தொலைபேசி பழுதானால்
அந்தப் பழுதினைப் பதிவு
செய்ய பயன்பாட்டில் இரு(ந்த)க்கும் எண்.

இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க
வேண்டாம் என்பது வாய்மொழி உத்தரவு.

ஒருவேளை வாடிக்கையாளர்
தப்பித்தவறி பழுதினை 198ல்
பதிவு செய்து விட்டால்
அந்தப் பதிவு
சில மணி நேரங்களே வாழும்.
அந்தப் பதிவுக்குப்
பிறந்த தேதியும்
மறைந்த தேதியும்
ஒன்றாகவே இருக்கும்.

இரண்டு வாடிக்கையாளர்கள்
ஒரு வருடமாக
ஒரு நாள் கூட
வேலை செய்யாத
தொலைபேசிகளுக்கு தொடர்ந்து
ஓராண்டாக பணம் செலுத்தி
வருகிறார்கள்.
இந்த இணைப்புகள் ஏதோ
ஒரு குக்கிராமத்தில் இல்லை.

ஈரோடு நகர்ப்புறப்
பகுதியில் இயங்கும்(?!?!)
இணைப்புகள்.

ஈரோடு நகர்ப்பகுதியில்
63142 இணைப்புகள்
இயங்கி வந்த காலத்தில்
கூட பழுதுகள் நீக்கம்
காலையும் மாலையும்
கறாராகக்
கண்காணிக்கப்பட்ட
காலமும் உண்டு.

ஆனால் இன்று
யானை தேய்ந்து
குதிரை ஆனதைப் போல்
30,000 இணைப்புகள் மட்டுமே
ஈரோடு நகரப் பகுதியில்
இயங்கி   வருகின்றன.

ஊழியர்கள் கேட்கும்
உதவிகள் தரப்படுவதில்லை.

ஊழியர்கள் கேட்கும்
உபகரணங்களும் வழங்க்கப்படுவதில்லை.

ஊழியர்கள் சொல்லும்
உண்மையான சிரமங்கள்
 சபை ஏறுவதில்லை.

புதிதாக எதுவும்
சிந்திக்க வேண்டியதில்லை.

ஒரு காலத்தில்
எது நன்றாக நடந்ததோ
அது நன்றாக நடந்தால் போதும்.

இப்படியும் சில
நேர்மையான
அரசுத்துறையின் மீது
விசுவாசமான
வாடிக்கையாலர்கள்
உள்ளார்கள் என்பதை
உணர்ந்து செயல்படுவது
காலத்தின் தேவையன்றோ

இருப்பவர்களைத்
தக்க வைப்பதே
வணிகத்தின்

மூல மந்திரம்.

Saturday 24 September 2016

இரங்கல்


அன்புத் தோழன்
கோவை L.சுப்பராயன்
அவர்களின் துணைவியார்
திருமதி மாலதி
இன்று காலமானார்
என அறிந்து ஆழ்ந்த துயருற்றோம்.

துணைவியாரை இழந்திருக்கும் அன்புத் தோழனுக்கு ஆழ்ந்த இரங்கலைக் காணிக்கையாக்குகிறோம்.

திரு சகாயம் அவர்களின் வேண்டுகோள்
அதிகாரிகள்
மேன்மையுடனும்
நேர்னையுடனும் செயல்பட வேண்டும்.

அப்படிப்பட்ட அதிகாரிகளே 
இன்று நாட்டுக்கு தேவை.

மேன்மையும் நேர்மையும் இல்லாமல்
ஊழல் செய்து லஞ்சம் வாங்கும்
அதிகாரிகளைஎதிர்த்து
இளைய சமூகம் போராட வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை
IAS அதிகாரிகளாக
IPS அதிகாரிகளாக
மருத்துவர்களாக
பொறியாளர்களாக
உருவாக்க வேண்டும் என்று
ஆசைப்படுவதில் தவறில்லை.

அவர்களை மனிதர்களாகவும் 
உருவாக்க வேண்டும்.

Friday 23 September 2016

BSNL உத்தரவு

"சில மாவட்டங்களில் மாற்றல் கொள்கை  முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. இதனால் ஊழியர்கள் மனதில் மனக்கசப்பும், அதிருப்தியும் உருவாகியுள்ளது.
மாவட்டங்களில் மாற்றல் கொள்கை முறையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
மாற்றல் கொள்கையை முறையாக கடைப்பிடிக்காவிட்டால்  அது மிகப் பெரிய தவறாகும்"
என BSNL நிர்வாகம் 23.09.2016 அன்று உத்தரவிட்டுள்ளது

மாற்றல் கொள்கை அமலாக்கப்படுவதில் குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டால் மாநில தலைமைப் பொதுமேலாலர்கள் உரிய விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Thursday 22 September 2016

தொழிலாளர்களை நீக்கி ரோபோக்களை நியமிக்கும் இந்திய நிறுவனம்!

ரோபோக்கள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ரோபோக்களின் வருகையால் பல்வேறு நிறுவனங்களில் உற்பத்தி பெருகுவதுடன் செலவும் குறைகிறது. ரோபோக்கள் மூலம் தரமும் பாதுகாக்கப்படுவதால் பெரும்பாலான நிறுவனங்கள் ரோபோக்களையே பயன்படுத்த முன்வந்துள்ளன.

இந்த நிலையில் இந்திய ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது உற்பத்தி மையங்களில் அடுத்த மூன்று வருடத்தில் ரோபோக்களை நியமித்து 10,000 தொழிலாளர்களைப் பணியை விட்டு நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்ஜய் பெல் கூறுகையில்,"ரேமண்ட்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர்களை நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பணியில் ஈடுபடுத்த இருக்கிறோம். ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் 16 உற்பத்தி ஆலைகளில் மொத்தம் 30,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஒரு ஆலையில் கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை நிறுவுவதால் 20,000 தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவர். ஒரு ரோபோட் 100 தொழிலாளர்களின் வேலையைச் செய்யும். இது சீனாவில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தியாவிலும் இது நடக்கும்" என்றார்.
இந்தியா பெருநிறுவனங்களில் குறிப்பாக உற்பத்தித் துறைகளில் மெதுவாகத் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் 10 சதவிகிதம் வரை வேலையின்மை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்தியாவில் ஐடி மற்றும் உற்பத்தித் துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னும் சில ஆண்டுகளில் 6.4 லட்சம் தொழிலாளர்கள் வரை வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் அச்சுறுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் ரேமண்ட்ஸ் நிறுவனத்தை போல பல நிறுவனங்கள் ரோபோக்களை இந்தியாவில் பணியில் ஈடுபடுத்த தொடங்கினால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாகும்?


நன்றி தோழர் காமராஜ் திருச்சி