NFTECHQ

Monday 19 September 2016

செப்டம்பர் 19
அஞ்சலியும்
நன்றியும்
1968 செப்டம்பர் 19
ஒரு நாள்
ஒரே நாள்
நாடு முழுமையும்
மத்திய அரசு ஊழியர்கள்
வேலை நிறுத்தம்.

கோரிக்கை என்ன?

குறைந்த  பட்ச ஊதியம் கொடு

பஞ்சப்படி கணக்கீட்டில் உள்ள குறைகளைக் களை

பஞ்சப்படி இணைப்பு

இன்று வேலை நிறுத்தம் என்றால் அதிகபட்ச இழப்பு ஒரு நாள் சம்பள இழப்பு.

ஆனால்
1968 செப்டம்பர் 19 வேலை நிறுத்தத்தில்
பங்கேற்ற 9   பேர்
காவல்துறையால் சுடப்பட்டு தங்கள்  இன்னுயிரை இழந்தார்கள்.

பல்லாயிரக் கணக்கானோர்
வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.

பல்லாயிரக்கணக்கானோர்
தற்காலிக வேலை நீக்கம் (சஸ்பென்சன்) செய்யப்பட்டார்கள்.

பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது வரலாறு.

இப்படிப்பட்ட ஒரு
தியாக வரலாற்றால்தான்
இன்று ஆற்/மூன்று மாதங்க்களுக்கு
ஒரு முறை சத்தமின்றி
பஞ்சப்படி
அறிவிப்பு வருகிறது.
அது கிடைக்கிறது.

தியாகம் இல்லாத
போராட்டங்க்களால்
பஞ்சப்படி இணைப்பும்
நடக்கிறது.

காலம் மாறுகிறது.

நாமும் நமது
யுக்திகளை மாற்றி
போராட வேண்டிய
அவசியம் உள்ளது.

1968 செப்டம்பர் 19
போராட்ட வரலாற்றை நினைவு கொள்வோம்.

அந்தப் போராட்டத்தில்
ஈடுப்ட்டதால் சுட்டுக் கொல்லப்பட
ஒன்பது தோழர்களுக்கு
அஞ்சலி செலுத்துவோம்.

அந்த போராட்டத்தில் ஈடுபட்டு
பினனர்
நம்மை விட்டு மறைந்த
குப்தா மற்றும் ஜெகன் போன்ற
தலைவர்களுக்கும்
தோழர்களுக்கும் அஞ்சலியோடு
 நன்றி சொல்வோம்.

அந்தப் போராட்டத்தில் ஈடுப்ட்டு
இன்றும் நம்மோடு வாழும்
தலைவர் ஞானையா,
மற்றும் காரைக்குடி தோழர் அண்ணாமலை
மற்றும் இன்னும் மற்ற தோழர்களுக்கு
நமது நன்றியையும்
பாராட்டுக்களையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.

போராட்ட உணர்வை

போற்றிப் பாதுகாப்போம்.

No comments:

Post a Comment