NFTECHQ

Tuesday 27 September 2016

ஆண்டுக் கணக்காய்
அயராத நல்லவர்கள்
198
தரைவழித் தொலைபேசி பழுதானால்
அந்தப் பழுதினைப் பதிவு
செய்ய பயன்பாட்டில் இரு(ந்த)க்கும் எண்.

இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க
வேண்டாம் என்பது வாய்மொழி உத்தரவு.

ஒருவேளை வாடிக்கையாளர்
தப்பித்தவறி பழுதினை 198ல்
பதிவு செய்து விட்டால்
அந்தப் பதிவு
சில மணி நேரங்களே வாழும்.
அந்தப் பதிவுக்குப்
பிறந்த தேதியும்
மறைந்த தேதியும்
ஒன்றாகவே இருக்கும்.

இரண்டு வாடிக்கையாளர்கள்
ஒரு வருடமாக
ஒரு நாள் கூட
வேலை செய்யாத
தொலைபேசிகளுக்கு தொடர்ந்து
ஓராண்டாக பணம் செலுத்தி
வருகிறார்கள்.
இந்த இணைப்புகள் ஏதோ
ஒரு குக்கிராமத்தில் இல்லை.

ஈரோடு நகர்ப்புறப்
பகுதியில் இயங்கும்(?!?!)
இணைப்புகள்.

ஈரோடு நகர்ப்பகுதியில்
63142 இணைப்புகள்
இயங்கி வந்த காலத்தில்
கூட பழுதுகள் நீக்கம்
காலையும் மாலையும்
கறாராகக்
கண்காணிக்கப்பட்ட
காலமும் உண்டு.

ஆனால் இன்று
யானை தேய்ந்து
குதிரை ஆனதைப் போல்
30,000 இணைப்புகள் மட்டுமே
ஈரோடு நகரப் பகுதியில்
இயங்கி   வருகின்றன.

ஊழியர்கள் கேட்கும்
உதவிகள் தரப்படுவதில்லை.

ஊழியர்கள் கேட்கும்
உபகரணங்களும் வழங்க்கப்படுவதில்லை.

ஊழியர்கள் சொல்லும்
உண்மையான சிரமங்கள்
 சபை ஏறுவதில்லை.

புதிதாக எதுவும்
சிந்திக்க வேண்டியதில்லை.

ஒரு காலத்தில்
எது நன்றாக நடந்ததோ
அது நன்றாக நடந்தால் போதும்.

இப்படியும் சில
நேர்மையான
அரசுத்துறையின் மீது
விசுவாசமான
வாடிக்கையாலர்கள்
உள்ளார்கள் என்பதை
உணர்ந்து செயல்படுவது
காலத்தின் தேவையன்றோ

இருப்பவர்களைத்
தக்க வைப்பதே
வணிகத்தின்

மூல மந்திரம்.

No comments:

Post a Comment