NFTECHQ

Tuesday 20 September 2016

விளக்கம்
அன்பிற்குரியவர்களே  வணக்கம்.

ஈரோடு மாவட்டத்தில்
AIBSNLEA உடன் NFTE அணி சேரலாமா?
AIBSNLOA உடன் NFTE அணி சேரலாமா?
இப்படிப்பட்ட  கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு விளக்கம் தர வேண்டியது கடமை.

கடந்த மூன்று ஆண்டு காலமாக தலமட்டத்தில்
எந்த ஒரு போராட்ட இயக்கமும் நடைபெறவில்லை. பிரச்னைகள் வந்தது. பேசித் தீர்வு கானப்பட்டது.

அதற்கு முன்பு NFTE  இரண்டு முறை காலவரையற்ற பட்டினிப்போர் இயகத்தை தனித்து நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டது.

எந்த ஒரு போராட்டத்தையும்  தொழிற்சங்கங்கள் தனித்தோ கூட்டாகவோ விரும்பி செய்வதில்லை. போராட்டங்கள் திணிக்கப்படுவதால் மட்டுமே நடைபெறும் என்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இந்த ஆண்டு மாற்றல் கொள்கையில் நிர்வாகத்தின் அணுகுமுறையில் கருத்து மாறுபாடுகள் வந்தன.

கடந்த பல ஆண்டுகளாக மாற்றல் கொள்கை அமலாக்கம் குறித்து உதவிப் பொது மேலாள்ருடன் பேசுவோம். தேவைப்பட்டால் அவரே பொது மேலாளருடன் கலந்து பேசி தீர்வு வரும். தவிர்க்க முடியாமல் ஓரிரு முறை மட்டுமே பொது மேலாலரைச் சந்திதுள்ளோம். ஆனால் 2016 ல் நிலைமை மாறியது.

TM மாற்றல் குறித்து பேச்சு வார்த்தையின் துவக்கக் கட்டம்.
அப்போது ஒரு பொறுப்புள்ள அதிகாரி தனது அறிமுகவுரையில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அவரது பெயரையோ அவர் தெரிவித்த கருத்துக்களை யோ இங்கு வெளியிடுவது நாகரீகம் அல்ல.

தனிப்பட்ட முறையில் கேட்டால் விளக்கமளிக்கும் கடமையும் பொறுப்பும் உண்டு.

விதிகளுக்கும், நியாயத்திற்கும் உட்பட்டு TM மாற்றலில் NFTE கோரிய மூன்று அமசங்கள் ஏற்கப்படவில்லை.

உறுதியாகவும் தெளிவாகவும் வலியுறுத்திய பின்பும் அவை ஏற்கப்படாதது வருத்தமளித்தது.

SR TOA மாற்றல் பிரச்னையிலும் குழப்பங்கள்.

ஏழாண்டு காலமாக மாற்றல் பிரச்னையில் வராத குழப்பங்க்கள் வந்தன.

காது கேளாத வாய் பேச இயலாத ஒரு தோழியர் மாற்றலில் சென்றார்.

ஈரோட்டிலிருந்து  100 கி.மீ தூரத்தில் கோவிந்தாபுரத்திற்கு ஒரு தோழியர் மாற்றலில் சென்றார்.

இருதய அறுவை சிகிச்சை, கடுமையான சிறுநீரகக் கோளாறு, மனைவிக்கு கடுமையான கேன்சர் நோய் என பல்வேறு கடுமையான சூழ்நிலயில் உள்ளவர்களும் மாற்றலில் சென்றார்கள்.

நிர்வாகத்தின் உத்தரவை மதித்தார்கள்.
இம்முறை நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காமல் நடந்து கொண்டவர்களை நிர்வாகம் கையாண்ட முறை அதிர்ச்சியையும் வருத்தத்தையு அளித்தது.

ஒரு துணைக்கோட்டப் பொறியாளர் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பதும்
இது குறித்த விபரங்களும் அனைவரும் அறிந்ததே.

நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காமல்
ஒரு ஊழியரை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திற்குச் செல்லுமாறு ஒரு அதிகாரி அறிவுரை கூறியது சரியல்ல என்பது தாழ்மையான கருத்து.

டெலிபோன்பவன்  முதல் தளத்தில் செயல்படும் NFTE இயக்கத்தின் அலுவலகத்திற்கு ப்ராட்பேண்ட்
வசதியுடன் கூடிய ஒரு புதிய தொலைபேசி இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

நிறுவன விதிகளுக்கு உட்பட்டு இந்த விண்ணப்பம் தரப்பட்டது. ப்ராட்பேண்ட் மூலம் நிறுவனத்துக்கு வருவாய் வரக்கூடிய இந்த் இணைப்பைத் தருவதில் கூட அக்கறையில்லாத ஒரு அதிகாரியின் செயல்[பாடு சரிதானா?

மாதக்கணக்கில் ஏற்பட்டுள்ள இந்த தாமதத்திற்கு  யார் பொறுப்பு?

இப்படிப்பட்ட  நிகழ்வுகளுக்காக ஒரு இயக்கம் நடத்த வேண்டும் என NFTE மாவட்டச் சங்கம் திட்டமிட்டு வந்தது. மாவட்ட மாநாட்டிற்குப்பிறகு SEWA BSNL, TEPU மற்றும் பிற இயக்கங்களோடும் இணைந்து களம் கான திட்டமிட்டோம்.
BSNLEU இயக்கத்துடனும் இது குறித்து பேசினோம்.

இந்த சூழலில் தான் அதிகாரிகள் அமைப்புகளுக்கும் மாற்றல் கொள்கையில் பிரச்னைகள் இருப்பதாக அறிந்தோம்.

அதிகார்கள் சங்க அமைப்புகளும் NFTE இயக்கத்துடன் தொடர்பு கொண்டார்கள். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்க்களைப் புரிந்து கொண்டோம்.

மாற்றல் கொள்கையில் உருவான சிக்கல்களும் நிர்வாகத்தின் பாரபட்சமான அணுகுமுறையுமே அணி சேர்க்கைக்கும் கூட்டு இயக்கத்துக்கும் வழி வகுத்தன.

அதிகாரிகள் சங்கங்க்களும் ஊழியர் சங்கங்க்களும்
அணி சேர்வது பாவமான செயலா?

AITUC, CITU அமைப்புகள் INTUC மற்றும் BMS அமைப்புகளோடு சேர்ந்து களம் கண்டதில்லையா?

கோரிக்கைகளின் அடிப்படையில் அமைப்புகள் அணி சேர்ந்து களம் காண்பது என்பது நியாயம்தான்.

அதிகாரிகள் சங்கத்தோடு
தான் அணி சேர்ந்தோமே அல்லாமல்
அம்பானியோடா அணி சேர்ந்தோம்.

கோரிக்கை அடிப்படையில்அணி சேற்ந்தோம்.

தனிப்பட்ட நபர்களைத் தாக்குவது நோக்கமும் அல்ல. அது கொள்கையும் அல்ல.

நியாயத்திற்க்காக இந்த அணியோடு SNEA  மற்றும் BSNLEU அமைப்புகளுடனும் அணி சேர்ந்து களம் காணும் சூழல் உருவாகலாம்.

NFTE இயக்கம் கொள்கைக்காகவும்.
கோரிக்கைக்காகவும் அணி சேரும்.


அதிகாரிகள் நிர்வாக நடைமுறைக்கும் விதிகளுக்கும்  எதிராகச் சென்றால் அது யாராக இருப்பினும் NFTE நாகரீகமான முறையில் உறுதியுடனும் களம் காணும்.

No comments:

Post a Comment