NFTECHQ

Saturday 15 October 2016

செப்டம்பர் 17
பெரியார் பிறந்த நாள்
ன்னலமற்ற பொதுத்தொண்டு  செய்பவர்கள் - பிரதிபலன்  கருதாது உழைக்கக் கூடியவர்கள்
எண்ணிக்கை நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும்.
அவர்களின் சீரிய குணங்கள்  பொதுமக்களுக்கு வழிகாட்டியாக  அமைய வேண்டும்.
மனிதனாகப் பிறந்தவர்  பொதுவாழ்வில் எப்படி  நடந்துகொண்ண வேண்டுமென்பதற்கு
அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும். 


பிறப்பதும் சாவதும் இயற்கை,
ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு   உகந்தவகையில் வாழ்தல் வேண்டும்.
 மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற  மாட்டார்கள்.  நாம் மற்ற மக்களும் போற்றும்படியான
வகையில் காரியமாற்ற வேண்டும். 
சுகபோகத்தினால் இன்பம்  காண்பதில் பெருமை இல்லை.
தொண்டு காரணமாக இன்பம் காண்பதே  சிறந்த இன்பமாகும். வாழ்வு  என்பது தங்களுக்கு மட்டும்  என்று கருதக் கூடாது.
மக்களுக்காகவும் தொண்டுக்காகவும்  நம் வாழ்வு இருக்க வேண்டும்  என்று கருத வேண்டும். 


ஒருவன் தன்னுடைய சொந்தக்  காரியத்தைப் பொருத்த மட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும்  கவனிக்க வேண்டும்.
 பொதுநலம், பொதுத்தொண்டு  என்று வந்துவிட்டால்
அவை இரண்டையும் பார்க்கக்கூடாது. 

பொதுத்தொண்டு பற்றி பெரியார்




No comments:

Post a Comment