NFTECHQ

Wednesday 5 October 2016

தகவல்கள்

போனஸ்
2014-2015ஆம் ஆண்டிற்கான போனஸ் பட்டுவாடா குறித்து நமது மத்திய சங்கம் CMD அவர்களுடன் 04.09.2016 அன்று விவாதித்தது.

"BSNL  MANAGEMENT COMMITTEE ஒப்புதல் அளித்து விட்டது. DOT மற்றும் BSNL அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என CMD தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு REMUNERATION COMMITTEE எனப்படும்.
இந்த்க் குழுவே ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் குறித்து முடிவெடுக்கும் குழுவாகும்.

தீபாவளிக்கு முன் நிச்சயம் போனஸ் கையில் கிடைக்கும்.

JTO தேர்வு

JTO தேர்வில் தவறாகக் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து நமது மத்திய சங் கம் கார்ப்பரேட் அலுவலகத்தில் GM (Recruitment) அவர்களுடன் விவாதித்தது.

இப்பிரச்னை  வல்லுனர்  குழுவுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JAO பயிற்சி வகுப்பு
JAO தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக பயிற்சி வகுப்புகளைத்துவக்குமாறு  ஹைதராபாத்தில் உள்ள NAFTM (NATIOANL
ACADAMY OF TELECOM FINANCE AND MANAGEMENT)  அமைப்பிற்கு கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
நமது மத்திய சங்கம்  இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.


03.11.2016 க்குள் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டு விட்டால் மாநில அலுவலகம் தற்காலிகப் பதவி உயார்வுக்கு விடுப்பம் கேட்டுள்ளது தேவை இருக்காது.

No comments:

Post a Comment