NFTECHQ

Wednesday 5 October 2016

50 ரூபாய்
பழுது நீக்கியதா?

ஊழியர்களின் ப்ரிபெய்டு சிம் கார்டில் மாதம் ரூபாய் 200 டாப் அப் செய்யப்படுகிறது. இதில் 50 ரூபாய்க்கு மற்ற நிறுவனங்களின் தொலைபேசி மற்றும் செல்போன்களுக்கு பேசும் வசதி தரப்பட்டது.

01.10.2016 முதல் மற்ற போன்களுக்கு பேசும் வசதி நிறுத்தப்பட்டது.

இது குறித்து நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டது.

"இந்த வசதி தரப்பட்டதால் பழுது நீக்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?"
என அனைத்து மாநில நிர்வாகங்களிடமும் கார்ப்பரேட் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது.

MOST IMMEDIATE
MOST URGENT எனக் கேட்டாலே
பதில் கிடைக்க
பல மாதங்கள் ஆகும். இந்தப் பிரச்னைக்கான  கடிதத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகள் இல்லை.

எப்பொழுது விளக்கம் செல்வது? எப்பொழுது முடிவெடுப்பது?

ஒரு வசதியைக் கொடுத்து விட்டு அதன் விளைவுகள் குறித்து விளக்கம் கேட்பது தவறில்லை.

ஆனால்...
அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட  இந்த வசதி குறித்து எந்நாளும் எந்த விளக்கமும் கேட்கப்பட்டதில்லையே. ஏன்? அவர்களின் பழுது நீக்கப் பணி விளக்கமே கேட்கத் தேவையில்லாத அளவுக்கு பிரமிப்பூட்டூம் வகையில் பிரமாதமாக உள்ளதா?

நெறைய சமாச்சாரங்களுக்குள் போகவில்லை. 
ஒரே ஒரு சமாச்சாரம் மட்டும்...


வெள்ளை நிறத்தில் வாகனங்கள் ஓடிக்கிட்டே இருக்கே. ஓடறது அத்தனையும் பழுது நீக்கறதுக்கு மட்டும்தானா?

No comments:

Post a Comment