NFTECHQ

Tuesday 29 November 2016

வாழிய பல்லாண்டு

30.11.2016 அன்று பணி ஓய்வு பெறும்
திரு M.மகாலிங்கம் SDE
திருமதி L.சரோஜினி JTO
தோழர் R.ஜெயராமன் TT
ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும்

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
அடேங்கப்பா...
ரூ1,100 கோடியை விளம்பரத்துக்கு மத்திய அரசு ரூ1,100 கோடியை விளம்பரத்துக்கு செலவிட்டுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ1,100 கோடியை விளம்பரத்துக்காக செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை 
சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் ராம்வீர் சிங் அனுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பிய பதில் கடிதத்தில், 2014-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி வரை டிவி, இணையம் மற்றும் 
இதர எலக்ட்ரானிக் மீடியாக்கள் மூலமாக 
விளம்பரம் செய்ய ரூ1,100 கோடி செலவிடப்பட்டுள்ளது.


நாளிதழ்களுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரங்களுக்கான 
செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை. 

Saturday 26 November 2016

தோழர் ஜெயராமனின்

கவிதை அஞ்ச்சலி


புரட்சிப் பந்தைப்
புவிக் கோளத்தில்
சுழற்றி விட்டவன்

லெனின் கனவுகளை
நிலப் பரப்பில்
நிஜமாக்கி வாழ்ந்தவன்

அமெரிக்காவின் காலடிகளில்
அமிலக் கரைசலை
அடர்த்தி யாக்கியவன்

புவிப் புரட்சியாளர்களின்
ரத்த நாளங்களில்
வீரியத்தை விதைத்தவன்

சுற்றியிருக்கும் நாடுகளுக்கு
சுகத்தை ஏற்றுமதி செய்த
அகத் தூய்மையாளன்

வாடிக்கனே வலியவந்து
வாழ்த்திய விடியல் இவன்
தோல்விக்கு தோல்வி தந்து
தோள்களைத் தோழமைக்கு ஈந்து

மறைந்தானோ இவனல்லன்
மார்க்சிய மெய்ப்பொருள் ஆனான்.

கொல்லச் சூழ்ச்சிகள் செய்த
குள்ளநரி ஏகாதிபத்தியம்
வெல்ல முடியவில்லை
மெல்ல இயற்கை அணைத்தாள்

வாழ்க நின்புகழ் காஸ்ட்ரோ
வான் வாழும் மட்டில்.


ஒரு புரட்சி

தீபம் மறைந்தது



பிடல் காஸ்ட்ரோ

உலக வரைபடத்தில் ஒரு சின்னப் புள்ளி க்யூபா
உலகையே மிரட்டிய அமெரிக்காவை எதிர்த்து நின்றதில் உலக வரைபடத்தில் பெரும்புள்ளி க்யூபா.

"அடைந்தால் சோசலிசம்
அடையாவிட்டால் மரணம்"
இத்வே அவரது கொள்கையும் கோஷமும்.

மக்களைத் திரட்டினார்.
மாபெரும் புரட்சி இயக்கம் நடத்தினார்.

விடுதலையைப் பெற்றார்.
வீறு கொண்டு எழுந்தார்.

எழுந்தவர் விழவேவில்லை.
ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளுக்குப் பின்னும்

அமெரிக்க ஏகாதிபத்தியம்
638 வழிகளில்
புரட்சியாளனைக் கொல்ல முயன்றது.
அவரது ஆட்சியை அழிக்கத் துடித்தது.
அனைத்தையும் முறியடித்தார்.

மக்களைத் திரட்டினார்.
மக்களுக்க்காக வாழ்ந்தார்.
மக்களோடு வாழ்ந்தார்.

மணிக்கணக்கில் பேசினார்.
மக்களின் பிரச்னைகளைப் பேசினார்.

அனைத்து வகை கல்வியும்
அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும்
முற்றிலும் இலவசம் அவரது ஆட்சியில்.

50 ஆண்டுகள் தொடர்ந்து அதிபர் பதவி.
அதுவும் மக்களின் ஆதரவோடு.
இது வரலாறு
அழிக்க முடியாத வரலாறு.

சிறந்த புரட்சியாளராக மட்டுமல்ல
சீர்மிகு ஆட்சியாலராகவும் திகழ்ந்தார.

அணி சேரா நாடுகளின் தலைவராகவும்
பொறுப்பு வகித்தவர்.
அப்பணியிலும் பரிணமித்தவர்.

இவரது வெற்றிக்குக் காரணம் மார்க்சியம்.
மனிதநேய ஆட்சிக்குக் காரணம் மார்க்சியம்.

பிடல் காஸ்ட்ரோவுக்குச்
செலுத்தும் அஞ்ச்சலியும்
காட்டும் நன்றியும் எவ்வாறு?

மார்சியம் அறிந்தவர்கள்
மார்சியம் புரிந்தவர்கள்
ஒன்றிணைந்து செயல்படுவதே.


மிளிருமா
மின்னணுப் பொருளாதாரம்

"மின்னணுப் பொருளாதாரம்
மிகுந்த முன்ணேற்றமடையும்"

இது நிதி அமைச்சரின் எதிர்பார்ரப்பு.

பொருளாதாரம்
புதைகுழிக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலை நீடித்தால்
மின்னணுப் பொருளாதாரம்

மின்மயானத்துக்குத்தான் போகும்.
தனியார் வங்கியும்
தங்கக் கட்டிகளும்
ஒரு
தனியார் வங்கியில்
தங்கக் கட்டிகள் இருந்தனவாம்.

வங்கிக் கணக்கில் அந்தத்
தங்கக் கட்டிகள் இல்லையாம்.

விசாரிக்கப்பட்டது.
விபரீதம் தெரிந்தது.

500,1000 ரூபாய் நோட்ட்டுக்களை
முறையில்லா முறையில்
மாற்றுவதற்கு
அன்பளிப்பாகப் பெற்ற
தங்கக் கட்டிகளாம் அவை.

கருப்புப் பண காகிதம்
மஞ்சள் நிற கட்டியாக
மாறி விட்டது.

தனியார்மயம்
தள்ளாடும் பொருளாதாரத்தை
தலை நிமிரச் செய்யும்
தாரக மந்திரம் என்றார்கள்.

தனியார்மயம்
தனிப்பட்ட சிலரிடம்
தங்கக் கட்டிகளாய்

தவழ்ந்து கிடக்கிறது.

Friday 25 November 2016

பெருந்திரளான
போராட்டம்
செல் டவர் பிரச்னையில்
இன்று 25.11.2016 ஈரோடு மாவட்டம் முழுமையும் பெரும்பாலான அதிகாரிகளும் ஊழியர்களும் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதிய சிந்தனையும்
புதிய முயற்சியும்
எதிர்பார்ப்புக்கும் மேலாக
நல்ல வெற்றியைத் தந்தது.

Thursday 24 November 2016

சாதனைகள் பல கணட 
சம்மேளன தினம்
நவம்பர் 24
NFPTE சம்மேளனம்
உதயமான நாள்.

மத்திய அரசு ஊழியர்களின் வழிகாட்டும் அமைப்பு என்று வரலாற்றில் இடம் பெற்ற இயக்கம் NFPTE.

இந்த இயக்கம் உருவாகி 63 ஆண்டுகள் ஆகிவிட்டன.

சரித்திரத்தில் இடம் பெற்ற பல
போராட்டங்களை நடத்திய இயக்கம் NFPTE.

1960
1968
வேலை நிறுத்தங்கள்.

"அவர் நினைத்திருந்தால் இந்தியாவில்
ஒரு கட்சி ஆட்சி முறையை உருவாக்கி
இருக்க முடியும்" என்று இன்றும் சொல்லப்படும்
சர்வ வல்லமை மிக்க நேருவின் ஆட்சிக்காலத்திலும்,
இந்தியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட இந்திராகாந்தி காலத்திலும் நடைபெற்றபோராட்டங்கள் அவை.

அந்த போராட்டங்களின்
பழிவாங்குதலகள்
பாதிப்புகள்
தியாகங்கள்
கேட்கும் போதும்
படிக்கும் போதும்
உருவாக்கும் அதிர்வுகளால்
கண்களில் நீர் குளமாகிறது.

NFPTE
NFTE NFPE என மாற வேண்டிய சூழ்நிலை உருவானது.

அரசியல் கருத்துக்கள் அலைமோதிய போதும்
அனைத்தயும்  கடந்து ஒற்றுமையாக
இயங்க முடியும் என்ற வரலாறும் அறிவோம்.

எத்தனை எத்தனை பெருமைகள்
எத்தனை எத்தனை சாதனைகள்

ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்தல்
சகிப்புத்தன்மை போன்ற அரும் பெரும் குணம் கொண்ட தலைவர்களைப் பெற்றிருந்தோம் என்பது நமக்குப் பெருமை.

NFTE இயக்கம் தன் பெருமையைத் தக்க வைக்கும் தகைமையுடன் செயலாற்ற வேண்டிய காலமிது.
அறிவோம் இதை
அதை செயலில் காட்டுவோம்.

அனைவருக்கும்
சம்மேளன தின

வாழ்த்துக்கள்
நல்ல முடிவு

65000 பி எஸ் என் எல் டவர்களைப் பிரித்து தனியாக ஒரு நிறுவனத்தைத் துவக்குவது என்ற அரசின் முடிவை எதிர்த்து
25.11.2016 அன்று தர்ணா
15.12.2016 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் என அனைத்து இயக்கங்களும்
இணைந்து முடிவு எடுத்துள்ளன.

23.11.2016 அன்று ஈரோட்டில் அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் கூடி இந்த அறைகூவல்களை வெற்றிகரமாக  நடத்துவது பற்றி ஆலோசனை செய்தனர்.

"தர்ணா நடத்தினால் வழக்கமாக வருகின்றவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்."  

"வெளியூர்த் தோழர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு செலவு செய்து ஈரோடு வந்து போக வேண்டும்"

"பந்தல், நாற்காலி, மதிய உணவு என மாவட்டச் சங்கங்களுக்கும் செலவு"

"ஒவ்வொரு தர்ணாவுக்கும் சுமார் 10,000 ரூபாய் செலவாகிறது"

"அனைத்து ஊழியரகளுக்கும் கோரிக்கையின் முக்கியத்துவமும் போராட்ட்டத்தின் அவசியம் குறித்தும் கருத்துக்கள் செல்ல வேண்டும்"

"இவற்றைக் கருத்தில் கொண்டு
அனைத்து SDCA தலைநகரக்களிலும் மற்றும் வாய்ப்புள்ள இடங்க்களிலும் அனைத்து அமைப்புகளும் இணைந்து
ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தலாம்" என்ற கருத்தை NATIONAL FPRUM OF BSNL WORKERS" சார்பாக முன்வைக்கப்பட்டது.

ஆய்வுகளுக்குப் பின் இந்தக் கருத்து ஒரு மனதாக ஏற்கப்பட்டது.

"தலைவர்கள் இருக்கும் இடம் தேடி ஊழியர்கள் வருவது  என்பதை விட ஊழியர்களை நோக்கி தலைவர்கள் செல்வது" என்பதுதான் சிறந்தது.

ஒரு நல்ல புதிய சிந்தனை.

இந்த அடிப்படையில் நல்ல முடிவெடுத்த அனைவரையும் பாராட்டுகிறோம்.

Tuesday 22 November 2016

ஒரு நாள் போதுமா
ஒரு நாளும் மறையாது

பிரபல சங்கீத வித்தகர் பாலமுரளி கிருஷ்ணா இயற்கை எய்தினார்.

பாடகர் என்பதுடன் வயலின், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளையும் வாசிப்பார் பாலமுரளி. 

ஒருநாள் போதுமா,
மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே..
சின்னக்கண்ணன் அழைக்கிறான்.
போன்ற பிரபலமான இனிய தமிழ்ப் பாடல்கள் மற்றும் பிற மொழிப் பாடல்களில்
பாலமுரளி கிருஷ்ணா
என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

Monday 21 November 2016

வாழ்த்துக்கள்

தோழியர் S.இந்துமதி
தோழர் J.சதீஷ்பாபு
தோழர் சிராஜுதீன்
தோழர் N.பாலாஜி ஸ்ரீதர்
தோழியர் A.ராஜி

ஆகியோர் JAO தேர்வில் வெற்றி பெற்று 
பயிற்சி முடித்து
ஈரோடு மாவட்டத்தில் 
பணி நியமனம் பெற்றுள்ளனர்.

அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Saturday 19 November 2016

இரங்கல்
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர ஓய்வு
எட்டு மணி நேர உறக்கம்
இவற்றைப் பெற
இன்னுயிர் தந்தோர் பலர்.

24 மணி நேரத்தில்
அன்றாடம் ஏறத்தாழ 16 மணி நேரம்
பணி செய்துள்ளனர்
பாரத தேசத்தின்
வங்கி ஊழியர்கள்.

ஓயாத உழைப்பு
ஓயாத பணிச்சுமை
பணத்தைக் கையாளுவதால்
ஏற்பட்ட மன உளைச்சல்
இவற்றின் காரணமாக
அரியானா, மத்தியப்பிரதேசம் மற்றும் மகராஷ்ட்ரா மாநிலங்க்களை ச் சேர்ந்த
மூன்று வங்கி ஊழியர்கள்
தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

அவர்களுக்கு நமது இரங்கலும் அஞ்சலியும்.

வங்கிகளில்  பனம் பெற
வறுத்தெடுக்கும் வெயிலில் பலமணி நேரம்
செல்லாக் காசை கையில் ஏந்தி
வாடி நின்றவர்களில்
50 பேர் இன்னுயிரை
இழந்துள்ளனர் என்பதும் செய்தி.

அவர்களுக்கும் நமது இரங்கலும் அஞ்சலியும்.

இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை

இனி வரும் காலம் மன்னிக்காது.

Friday 18 November 2016

என்ன கொடுமை சார் இது

சிறுநீர்ப் பையை கையில் பிடித்தபடி ரூபாய் நோட்டை மாற்ற வந்த முதியவர் சிறுநீர்ப் பையைக் கையில் பிடித்தபடி செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற வந்த கேரள முதியவரால் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுநீரகத் தொற்று பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கேரள முதியவர், சிறுநீர் சேகரிக்கும் பையை ஏந்தியபடி, செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்கு வந்து வரிசையில் காத்திருந்தது

இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். 67 வயதாகும் இவர் கடந்த 12 வருடமாக சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். 24 மணி நேரமும் இவர் சிறுநீரை சேகரிக்கும் பையுடன்தான் நடமாடுகிறார்.

இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த அறிவிப்பால் ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தார். தன்னிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயற்சித்தார். ஆனால் வங்கிக்கு நேரில் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால்

இவர் பரணிக்காவு கோயிக்கல் கிளை பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்றார். சிறுநீர்ப் பையுடன் அவர் வங்கிக்கு வந்து வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றினார். சிறுநீர்ப் பையையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவர் பெரும் அவஸ்தையுடன் காத்திருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

சாதாரண பொதுமக்களை மத்திய அரசின் இந்த ரூபாய் ஒழிப்பு எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் இது உள்ளது.


திருமணமாம்
திருமணமாம்
கோவை செட்டிபாளையம் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார் - ரஞ்சிதம். இவர்களுடைய மூன்று வயதுக் குழந்தை தீபஸ்ரீ நேற்று முன்தினம் இறந்துவிட்டாள். குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். சிவக்குமார் கையிலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இன்று செல்லாதவை. மருத்துவமனையில் வாங்க மறுத்திருக்கிறார்கள். மனிதர் பணத்துக்காக அலைக்கழிந்திருக்கிறார். கையில் பணம் இல்லாத உயிருக்கு இந்நாட்டில் மதிப்பேது? பிள்ளை போய்ச் சேர்ந்துவிட்டது.
இரு நாட்களுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் சுரின் தன் பிள்ளையைப் பறிகொடுத்தார். உடல்நலம் குன்றிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊரான மெகபாலில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அவர்கள் அங்கே பார்க்க முடியாது என்று சொல்லி சம்பல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள். சுதர்சனிடம் இருந்த பழைய நோட்டுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்துவிட்டது.
மும்பை, கோவந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் - கிரண் தம்பதி. பிரசவ வலியெடுத்த கிரணுக்கு மருத்துவமனைக்குச் செல்லும் முன்னரே குறைப் பிரசவம் ஆகிவிட்டது. மனைவியையும் சிசுவையும் தூக்கிக்கொண்டு ஓடினார் ஜெகதீஷ். தனியார் மருத்துவமனையில் ரூ.6,000 முன்பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் முன்பணமாகக் கேட்ட முழுத் தொகையும் புதிய நோட்டுகளாக ஜெகதீஷிடம் இல்லை. மருத்துவமனையில் சேர்க்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள். பணத்தை ஏற்பாடு செய்வதற்குள் அந்த சிசு மூச்சை நிறுத்திவிட்டது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் ரகுநாத் வர்மா இன்று இல்லை. திருமணத்தை எதிர்பார்த்திருந்த மகள் செய்வதறியாது நிற்கிறார். பிஹாரைச் சேர்ந்த விவசாயி சோனார் இன்று இல்லை. மகள் சித்தப்பிரமை பிடித்தவரைப் போல மூலையில் முடங்கிக் கிடக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் 11 உயிர்கள்; தெலங்கானா, பிஹார், மஹாராஷ்டிரம், கேரளம், கர்நாடகத்தில் தலா 2 உயிர்கள், ஒடிசா, ஆந்திரம், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், வங்கத்தில் 7 உயிர்கள்; அசாம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத்தில் தலா 3 உயிர்கள் என்று பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்புக்குப் பிறகு, கடந்த 10 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 40 உயிர்கள் போயிருக்கின்றன. ஒவ்வொரு உயிருக்கும் பின்னுள்ள கதைகளைப் படிக்கையில் மனம் நொறுங்கிப்போகிறது.
ஓய்வுபெற்ற ஆசிரியர் ரகுநாத் வர்மா, ஏழை விவசாயி சோனார் போன்றவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் கர்நாடகத்தைச் சேர்ந்த - நாடறிந்த ஊழல் முதலைகளில் ஒன்றான, முன்னாள் பாஜக அமைச்சர் - ஜனார்த்தன ரெட்டிக்கு ஏற்படவில்லை.
கர்நாடக மாநிலமே அதிர ரூ.500 கோடியில் அவருடைய மகளின் திருமணத்தை நடந்தியிருக்கிறார். மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைகள், தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் என்று 50,000 விருந்தினர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.
தங்க ஜரிகையுடன் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்களுக்கான செலவு மட்டுமே ரூ. 1 கோடி என்கிறார்கள்.
ரெட்டியின் மகள் பிராமணி திருமண நாளன்று அணிந்திருந்த சேலையின் மதிப்பு ரூ.16 கோடி என்கிறார்கள். நகைகளின் மதிப்பு ரூ.84 கோடி என்கிறார்கள்.
கள்ளப் பொருளாதாரத்தை முடக்குகிறேன் என்று ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மூன்று மணி நேர அவகாசத்தில் செல்லாததாக்கிய ஒரு அரசு ஆட்சியில் இருக்கும்போது, இந்தத் திருமணம் எப்படி இப்படி நடந்தது?
சுரங்க மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சுமார் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த ஒருவர், தனது மகள் திருமணத்துக்கு இத்தனை கோடி செலவிட எப்படி முடிந்தது?
கர்நாடகத்தைச் சேர்ந்த தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி சொல்கிறார், “வருமான வரித் துறையோ, அமலாக்கத் துறையோ, சிபிஐயோ எப்படி நடவடிக்கை எடுக்கும்? பிரதமர் மோடி உட்பட ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவைக்கும் அல்லவா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார் ரெட்டி!”
கர்நாடகத்தைச் சேர்ந்த தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி சொல்கிறார், “வருமான வரித் துறையோ, அமலாக்கத் துறையோ, சிபிஐயோ எப்படி நடவடிக்கை எடுக்கும்? பிரதமர் மோடி உட்பட ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவைக்கும் அல்லவா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார் ரெட்டி!”

நன்றி தமிழ் இந்து 18.11.2016
தர்ணாவும்
வேலை நிறுத்தமும்
ஒரு தனி டவர் நிறுவனம் அமைக்கும்
திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி
அனைத்து சங்க்கங்க்களின் அறைகூவல்

25.11.2016
தர்ணா

15.12.2016
ஒரு நாள் வேலைநிறுத்தம்

இந்தப் போராட்டத்தோடு
இதற்கு ஒரு முடிவு காண்போம்.

டவர்களைத் தக்க வைப்போம்.

Monday 14 November 2016

நவம்பர் 14

குழந்தைகள் தினம்



குதூகல்ம் தரும்
குழந்தைகளின் இனிமையான
சுட்டித்தனமன பேச்சும்.
இன்றைய குழந்தைகளின்
அறிவும் ஆற்றலும்  
அளப்பரிய வியப்பைத் தருகிறது.

குழந்தைகளைக்  கண்டவுடன்
குதூகல்ம் அடைந்து
அவர்களுடன் கொஞ்சிக்
குலாவியதால் இந்த நாளை
ஆனந்த பவனத்தின்
அரும் புதல்வன்
நேருவின் பிறந்த நாளை
குழந்தைகள் நாளாக்கினர்.

தன் குழந்தைக்கு நேரு சிறையிலிருந்து எழுதிய கடிதங்கள்அடங்கிய அந்த நூல்
இன்றைய குழந்தைகளின்
வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
அற்புதமான
கிளை மாநாடு

13.11.2016 அன்று
GM அலுவலகக் கிளை மாநாடு
மிகுந்த எழுச்சியோடும்,
சிறப்போடும் நடைபெற்றது .

மாநிலச் செயலர் தோழர் நடராஜன்
தோழர் மாலி,
தோழர் ராஜமாணிக்கம்
பொது மேலாளர்
துணைப் பொது மேலாளர்
உதவிப் பொது மேலாளர்
தோழமைச் சங்கத் தலைவர்கள்
மற்றும் நூற்றுக்கும்  மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் பங்கேற்றுச் சிறப்பித்த
சீர்மிகு மாநாடு.

புதிய நிர்வாகிகள்
ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்
தோழர் T.ராஜேந்திரன் OS

உதவித் தலைவர்
தோழியர் R.சிவகாமசுந்தரி OS

செயலர்
தோழர் V.செந்தில்குமார் OS

உதவிச்செயலர்கள்
1.தோழர் அஜீஸ்SRTOA
2.தோழர் செழியன் ATT

பொருளர்
தோழர் C.செந்தில்குமார் OS

உதவிப் பொருளர்
தோழர் குமாரசாமி TT

அமைப்புச் செயலர்கள்
1.தோழர் T.சுதாகர் JE
2. தோழர் S.ஜோசப் அந்தோணிராஜ் OS
3.தோழியர் K.சுதா ATT

தோழியர் வசந்த மல்லிகாசுரேஷ்
தணிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.

புதிய நிர்வாகிகளின் செயல்பாடு

சிறக்க வாழ்த்துகிறோம். 

Saturday 12 November 2016

GM அலுவலகக்
கிளை மாநாடு
13.11.2016
காலை 10 மணிக்கி
மாவட்டச் செயலர்
தோழர் பழனிவேலு
மாநாட்டைத் துவக்கிவைக்க,
பொது மேலாளர்  
திரு.வெங்க்கடசுப்ரமணியன்
துணைப் பொது மேலாளர்
திரு.ஆறுமுகம்
உதவிப் பொதுமேலாளர்
திரு குமாரசண்முகம்
தோழர் மாலி
தோழர் ராஜமாணிக்கம்
மற்றும்
தோழமைச் சங்கத் தலைவர்கள்
வாழ்த்துரை வழங்க
மாநிலச் செயலர்
தோழர் நடராஜன்
சிறப்புரையாற்ற
சிறப்புடன் நடக்கும்
கிளை மாநாட்டில்

அனைவரும் பங்க்கேற்பீர்.

Friday 11 November 2016

ஏழை அழுத கண்ணிர்....

ஆசைகளைத் தவிர்த்து விட்டு வாழமுடியும்
பசியை  எப்படித் தவிர்த்து விட்டு  வாழ முடியும்  என்கிறார்கள்  சாமான்யர்கள் .

"என் குழந்தை சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த  உண்டியலை உடைத்துத்தான்   அடிப்படைத் தேவைகளுக்குப்  பயன்படுத்தி வருகிறேன்"  என்கிறார்  இல்லத்தரசியான   தன்யா .
------------------------------------------------------------------------------------------------
வீட்டு வேலை செய்து  குடும்ப பாரத்தைச் சுமக்கும்  பிரியா
"பொருளாதார கஷ்டம் என்பது எனக்குப் பழக்கம் தான் அவ்வப்போது கிடைக்கும் 500 , 1000- கையில்  வைத்துக்  கொண்டு சிக்கனமாக செலவு செய்து வந்தேன். இப்போது என் கையில் இருக்கும் 500 ரூபாய்  செல்லாது என்று சொல்லி இருப்பது  கஷ்டத்தை கொடுத்துள்ளது. இப்போது என் கணவருக்கும்  குழந்தைக்கும் உடம்பு சரியில்லை . 9-ம் தேதி ரொம்ப கடினமாக  கஷ்மாக இருந்தது.

10-ம் தேதி மாலை வேலை  செய்யற இடத்துல  காசு வாங்கினேன். இதை  வச்சிதான் சமாளிக்கனும். கையில்  இருக்கற  500 ரூபாயை  மாற்றி  வரலாம் என்றால்  கூட்டம் அதிகமாக  இருக்கிறது. வேலைக்குப் போயே  ஆகனும். என்ன செய்வது என்று  தெரியவில்லை" என்றார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும்,
கள்ளப் பொருளாதரத்தை அழிகவும்
தீட்டப்பட்ட திட்டமாம் இது.

கறுப்புப் பணம் என்பது
தங்கமாக உள்ளது.
மனைகளாகவும் கட்டிடங்களாகவும் உள்ளது.
பங்குகளாக உள்ளது.

கடவுளின் பத்து அவதாரங்கள்போல

500,1000 ரூபாய் நோட்டுகளாக    மட்டும் இல்லை.

இன்றைக்கு, கணக்கில் வராத தொகை சுமார் ரூ. 31.8 லட்சம் கோடி என்று ‘கிரிஸில்’ எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி நாட்டில் உள்ள்
500, 100 ரூபாய் நோட்டுக்களின்
மதிப்பு 14.5 லட்சம் கோடிதான்.
பண முதலைகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் பதட்டம் இல்லாமலும் உள்ளன.
சாதாரண,ஏழை எளிய மக்கள் படும் துயரமும்
அவார்களின் கண்ணீரும்

காலத்தே பாடம் புகட்டும்.
வங்கி ஊழியர் சங்க

தலைவர்  வெங்கடாசலம்



"பொதுமக்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு பொதுமக்கள் வங்கிகளில் குவிந்துள்ளதால்  வங்கிகளும் கடும்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தேவையான  அளவுக்கு வங்கிகளுக்கு  ரிசர்வ்  வங்கி  பணத்தை அனுப்பவில்லை.

ஓரளவு 2000  ரூபாய்  நோட்டுக்கள் வந்துள்ளன.

500 ரூபாய் புதிய  தாள்கள்  வரவில்லை.

100 ரூபாய்  தாள்களும் தேவைக்குக் குறைவாக  உள்ளது.

இதன்காரணமாக  இன்னும்  சில  நாட்களுக்கு இந்த நெருக்கடி  இருக்கும்"

இந்தியா முழுவதும் இரண்டு லட்சத்து  26 ஆயிரம் .டி.எம்- கள்  உள்ளன.

 தமிழகத்தில்  சுமார்  6 ஆயிரம் .டி.எம்-கள் உள்ளன.

ஊரகப்  பகுதிகளில் மட்டும்  சுமார்  80 ஆயிரம் .டி. எம்-கள்  உள்ளன.
இந்த  .டி.எம்-களின் இயல்பு நிலை திரும்ப
இன்னும் 15 நாட்களாவது ஆகும்.  

.டி.எம்- களை  ரீ டியூன்   செய்ய  வேண்டிய  பணி  உள்ளது  

அந்தப் பணி  முடிந்தால் மட்டுமே  இயல்பு நிலைக்குக்  கொண்டு வர முடியும்.  பொதுமக்களுக்கு இயல்பான  சேவையை  வழங்க  இன்னும் சில  நாட்கள்  ஆகும்.

ஒய்வு பெற்ற ஊழியர்களைப்  பணியமர்த்திப்  பணியைத் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.  

இன்று  அவர்கள்  இந்தப் பணியில் இணைய உள்ளனர்.

மேலும் வேலை நேரத்தை அதிகரித்துள்ளோம். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு  மட்டுமல்ல  

 வங்கி உழியர்களுக்கும்  மனஉளைச்சலைக்   கொடுத்துள்ளது"  என்றார்