NFTECHQ

Friday 11 November 2016

ஏழை அழுத கண்ணிர்....

ஆசைகளைத் தவிர்த்து விட்டு வாழமுடியும்
பசியை  எப்படித் தவிர்த்து விட்டு  வாழ முடியும்  என்கிறார்கள்  சாமான்யர்கள் .

"என் குழந்தை சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த  உண்டியலை உடைத்துத்தான்   அடிப்படைத் தேவைகளுக்குப்  பயன்படுத்தி வருகிறேன்"  என்கிறார்  இல்லத்தரசியான   தன்யா .
------------------------------------------------------------------------------------------------
வீட்டு வேலை செய்து  குடும்ப பாரத்தைச் சுமக்கும்  பிரியா
"பொருளாதார கஷ்டம் என்பது எனக்குப் பழக்கம் தான் அவ்வப்போது கிடைக்கும் 500 , 1000- கையில்  வைத்துக்  கொண்டு சிக்கனமாக செலவு செய்து வந்தேன். இப்போது என் கையில் இருக்கும் 500 ரூபாய்  செல்லாது என்று சொல்லி இருப்பது  கஷ்டத்தை கொடுத்துள்ளது. இப்போது என் கணவருக்கும்  குழந்தைக்கும் உடம்பு சரியில்லை . 9-ம் தேதி ரொம்ப கடினமாக  கஷ்மாக இருந்தது.

10-ம் தேதி மாலை வேலை  செய்யற இடத்துல  காசு வாங்கினேன். இதை  வச்சிதான் சமாளிக்கனும். கையில்  இருக்கற  500 ரூபாயை  மாற்றி  வரலாம் என்றால்  கூட்டம் அதிகமாக  இருக்கிறது. வேலைக்குப் போயே  ஆகனும். என்ன செய்வது என்று  தெரியவில்லை" என்றார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும்,
கள்ளப் பொருளாதரத்தை அழிகவும்
தீட்டப்பட்ட திட்டமாம் இது.

கறுப்புப் பணம் என்பது
தங்கமாக உள்ளது.
மனைகளாகவும் கட்டிடங்களாகவும் உள்ளது.
பங்குகளாக உள்ளது.

கடவுளின் பத்து அவதாரங்கள்போல

500,1000 ரூபாய் நோட்டுகளாக    மட்டும் இல்லை.

இன்றைக்கு, கணக்கில் வராத தொகை சுமார் ரூ. 31.8 லட்சம் கோடி என்று ‘கிரிஸில்’ எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி நாட்டில் உள்ள்
500, 100 ரூபாய் நோட்டுக்களின்
மதிப்பு 14.5 லட்சம் கோடிதான்.
பண முதலைகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் பதட்டம் இல்லாமலும் உள்ளன.
சாதாரண,ஏழை எளிய மக்கள் படும் துயரமும்
அவார்களின் கண்ணீரும்

காலத்தே பாடம் புகட்டும்.

No comments:

Post a Comment