NFTECHQ

Saturday 31 December 2016

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழிய பல்லாண்டு

31.12.2016 அன்று பணி ஓய்வு பெற்ற
தோழர் J.ராஜமனோகரன் TT
நலமும்  மகிழ்வும் பெற்று

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
நேர்மையற்றவர்கள்
இன்று ஓய்வூதியம் பெறும் நாள்.
சென்ற மாதம் ரூ.8000/- ஓய்வூதியம் வழங்கிய
ஈரோடு தலைமை அஞ்சல் நிர்வாகம்
இன்று வெறும் ரூ.2000/- மட்டும் தர முடியும் என்றது.

ஓய்வூதியர்கள் திரண்டு சாலை மறியலுக்கு புறப்பட்டனர். செய்தி அறிந்து காவல்துறை தலையிட்டது. அஞ்சல், வங்கி நிர்வாகிகளுடன் பேசினர். வங்கி நிர்வாகம் கூடுதல் நிதி அளிக்க சம்மதித்தது. அஞ்சல் நிர்வாகம் ரூ.5000/- ஒப்புக்கொண்டு வழங்கியது.

மிக மூத்தவர்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்கப்படவில்லை.


 நாடு மிக நன்றாக இருப்பதாக பேட்டி அளிப்பவர்கள் நேர்மை இல்லாதவர்கள்.

Friday 30 December 2016

குறைகிறது
01.01.2017 முதல்
விலைவாசிப்படி
0.8 சதம் குறையும்

என்பது கனக்கீடு.
போராட்டங்கள் சடங்காகிறதா?

500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என 08.11.2016 அன்று அறிவிக்கப்பட்டது.

மக்கள் அல்லலுற்றனர்.

நேர்மையாக உழைத்து சம்பாதித்த சொந்தப் பணத்தைப் பெற மக்கள்
மாளாத் துயருக்கு ஆளாகினர்.

வங்கிகளில் வரிசையில் நின்ற போதே நூற்றுக்கனக்கான இந்திய
மக்கள் இன்னுயிரை இழந்தனர்.

லடசக் கணக்க்கில் தொழிலாளர்கள்
வேலை இழந்தனர்.

மாதச் சம்பள்ம் ,ஓய்வூதியம் பெறுவோரையும் இப்பிரச்னை விட்டு வைக்கவில்லை.

அவர்களுக்கு நவம்பர் மாதம் பத்தாயிரம் ரூபாய் முன்பனமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பி.எஸ்.என். எல் ஊழியர்களுக்கு
அதுவும் இல்லை என ஆனது.

08.11.2016 இந்தக் கொடுமைகளுக்கான
அறிவிப்பு வந்தது.

ஆனால் 44 நாட்கள் கழித்து நமது தமிழ் மாநில அமைப்பு 22.11.2016 அன்று
ஒரு ஆர்ப்பாட்ட அறைகூவல் விடுத்தது.

போராட்டங்கள் காலத்தே நடத்தினால்
அதற்கு ஈர்ப்பு இருக்கும்.

இப்படிப்பட்ட காலம் கடந்த இயக்கங்கள் உணர்த்துவது என்ன?

போராட்டங்கள் சட்ங்குகளாகிப் போனதோ என்பதுதான்.

அதுவும் நமது அமைப்பிலா?

இதை  விமர்சனம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஆதங்கம் என்று எடுத்துக் கொள்வதா?
அவரவர் மனதை பொறுத்தது அது.


இதில் ஏதேனும் ஒன்று மனதில் எழுவது நல்லது.
மாவட்டச் செயற்குழு


29.12.2016 அன்று அந்தியூரில் மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி செயற்குழுவைத் துவக்கி வைத்தார்.

மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு ஆய்படு பொருள் பற்றி எடுத்துரைத்து இன்றைய சூழல் குறித்து உரையாற்றினார்.

மாவட்ட மாநாட்டுக்குப் பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு. இதில் இதுநாள் வரையான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுக் கணக்கை முன்னாள் பொருளாளர் தோழர் ராஜேந்திரன்   பொருளர் தோழர் மெளனகுருசாமியிடம் வழங்கினார்.

கிளைச் செயலர்கள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள் ஊழியர் பிரச்னைகள் மற்றும் அமைப்பின் வளர்ர்ச்சி குறித்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் மருத்துவச் சிகிச்சை குறித்த பிரச்னைதான் பிரதானமாக இருந்தது.

கேபிள், ட்ராப் வயர், இன்ஸ்ட்ரூமெண்ட் பற்றாக்குறை வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

ஹங்க்கமா பிரச்னையால் தொலைபேசி இணைப்புகள் சரண்டர் ஆகும் நிலை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

பிரச்னைகளை உரிய மட்டத்தில் விவாதித்து தீர்வு காண  முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்டச் செயலர் தனது தொகுப்ப்ரையில் தெரிவித்தார்.

செயற்குழுவைச் சிறப்பாக நடத்த உதவிட்ட அந்தியூர் தோழர்களுக்கு பாராட்டுக்கள்
அந்தியூர் கிளை மாநாடு
29.12.2016 அன்று அந்தியூர் கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கீழ்க்கண்டோர் ப்திய நிர்வாகிகளாக  ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்
தோழர் நாகராஜன் TT

உதவித் தலைவர்
தோழர் நல்லசாமி TT

செயலர்
தோழர் செல்வராஜ் TT

உதவிச்செயலர்
தோழர் சந்தானம் TT

பொருளர்
தோழர் அசோகன் TT

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

அந்தியூர் துணைக்கோட்டப் பொறியாளரும்

SNEA மாவட்டச் செயலருமான திரு.துரை அவர்கள் கிளை மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினார்.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தோழர் செல்வராஜன்,(AITUC) தோழர் நல்லுசாமி ஆகியோர் உரையாற்றினர்.

Wednesday 28 December 2016

மாவட்டச் செயற்குழு
அந்தியூர் கிளை மாநாடு

நாள்  29.12.02016

இடம் அந்தியூர் தொலைபேசி நிலையம்

அனைவருனம் வருக

Monday 26 December 2016

அமைக்கப்பட்டது

ஊதிய மாற்றக்குழு

நமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் குறித்த பேச்சு வார்த்தைக்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்ற்கான உத்த்ரவு  26.12.2016
அன்று  வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகத்தரப்பு உறுப்பினர்கள்
1. திருமதி அனுராதா பண்டா PGM (FP)- தலைவர்
2. திருமதி மது அரோரா GM (Estt) உறுப்பினர்
3. திருமதி R.D.சரண் GM(EF) உறுப்பினர்
4.திரு A.M. குப்தா GM (SR) உறுப்பினர்
5. A.K.சின்ஹா DGM (SR)  செயலர்

குழு அமைக்கப்பட்டாலும், DPE அமைப்பின் வழிகாட்டுதல்  வந்த பின்னரே குழுவின் பணிகள் துவங்கும் என் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கம்  சார்பில் பங்கு பெறும் உறுப்பினர்கள் பெயர் இல்லாமலேயே இந்த் உத்தரவு பெளியிடப்பட்டுள்ளது.

உரிய அதிகாரியின் அனுமதி பெற்று தேவைப்பட்டால் பேறு யாரையேனும் குழுவின் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 25 December 2016

குற்றமும்

தண்டனையும்

நாட்ட்டையும்,
நாட்டின் வளங்களையும்,
அதிகாரத்தைப்
பயன்படுத்தி அள்ளி அள்ளிக்
கொள்ளையடிப்போர் பலர்.

அவர் தம் பெரிய மற்றும் சின்ன வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனைகள்
நடப்பது வழக்கம்மான ஒன்று.

வருமானவரித்துறை,
மத்திய புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகள் மிக நுணுக்கமாக தங்கள் நுண்ணறிவைப் பயன்படுத்தி
கயவர்களின் இடங்களில்
சோதனை செய்கின்றனர்.
இது மிகவும் சரியான,
தேவையான நடவடிக்கையே.

ஆனால்.....
சாதாரண ஊழியர்கள் தவறு செய்தால்
தண்டனைகள் பாய்கின்றன.

மிகப்பெரிய, மிகச்சிறிய அதிகாரிகள்
குற்றம் புரிந்தால்,
சோதனைகள் நடந்தால் பரபரப்பான செய்திகள்
ஏராளமாக உலா வருகின்றன.

அதற்குப் பிறகு என்ன நடக்கிறதோ யாம் அறியோம்.

மழையில் நனைந்த பட்டாசின் கதையாகி விடுகிறது.

தனியாகவோ, கூட்டாகவோ ஏதோ
செய்து தப்பித்து விடுகிர்கள்.

நமது நிறுவனத்தில் கூட இப்படிப்பட்ட
நிகழ்வுகளைப் பார்த்து இருக்கிறோம்.

தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற நிலை என்பது உறுதியானால் மட்டுமே குற்றங்கள்
இல்லாத நிலை உருவாகும்.

இல்லையெனில் சில நாட்களுக்கு ஊடகங்களில் பரபர செய்திகள் கிடைப்பது மட்டுமே மிஞ்சும்.

அது மட்டுமல்ல மக்கள் வைத்திருக்கும்
கொஞ்ச நம்பிக்கையும் நாசமாய்ப் போகும்.
                கீழ்வெண்மணி


எரிந்த நெருப்பின்
அணையாத கங்குகளாக,
தியாக சின்னங்களாக
கீழ் வெண்மணியில் நிலைத்து
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
கூலி உயர்வு கேட்டு மரித்த போராளிகள்.
அவர்கள் உயிர் நீத்த

48வது ஆண்டு தினம் இன்று.

Saturday 24 December 2016

இனிய
கிருஸ்துமஸ்

வாழ்த்துக்கள்


பெரியார் நினைவு தினம்

டிசம்பர் 24

தொலைபேசி குறித்து பெரியார்


இங்கிருந்து கொண்டே பட்டினத்துக்கு டெலிபோன் (தொலை பேசி) மூலம் பேசலாம். இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியிலிருந்து வடகோடி இமயமலை அடி வாரத்தில் உள்ளவரிடம் பேசலாம். ஆங்கில நாட்டுடன் பேசலாம்.

இவைகள் என்ன? மாயமா! மந்திரமா! மாயா ஜாலமா! அல்லது யாராவது நடுவில் இருந்துகொண்டு தவம் செய்கிறார்களா? மந்திரம் ஜெபிக்கிறார்களா? ஒன்றுமே இல்லை! அவைகள் (மந்திரம், தவம்) அத்தனையும் பித்தலாட்டம் என்பதை நிரூபிக்கவே இவ்வித அற்புதங்கள் தோன்றி இருக்கின்றன. எல்லாம் பகுத்தறிவு சக்திதான். இவைகள் அத்தனையும் பகுத்தறிவால் உண்டானவை. இப்படி மனிதன் பகுத்தறிவின் தன்மையால் மிக முன்னேற்றமடைந்து கொண்டு போகிறான். இந்த நிலைமை இன்னும் எவ்வளவு தூரத்தில் போய் முடியுமோ தெரியவில்லை. அவ்வளவு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது."


எம்.ஜி.ஆர்
நினைவு தினம்

டிசம்பர் 24

ஏழை மக்களின் உணர்வுகளையும்
அவர்களின் தேவைகளைகளையும்
புரிந்து அறிந்து அரசியல் நடத்தியவர்.


Friday 23 December 2016

உலக விவசாயிகள் தினம்
டிசம்பர் 23
வயிற்றுக்குச் சோறிட்டு
வாழ்வுக்கு வழி செய்யும்

விவசாயிகளை
நன்றியோடு
வணங்குவோம்.

சேற்றில் கைவத்து
சோற்றுக்கு வழி செய்யும்
விவசாயி இன்று
விஷ மருந்துப் பாட்டில்களில் கைவைத்து
விலைமத்திப்பில்லா தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் விபரீதங்கள்  விவரிக்க முடியாத சோதனையாகி விட்டது.

விவசாயிகளின் வாழ்க்கையில்

விளையாடுவோர் உருப்பட முடியாது.
தயவு செய்து
தவறாமல் வாசிக்கவும்

தலைமைச் செயலாளருடன் ஒரு சந்திப்பு!

உள்ளாட்சிகள் தொடருக்காகக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு முன்பாக தலைமைச் செயலாளரைச் சந்தித்துவிடுங்கள் என்றார் பேராசிரியர் பழனிதுரை. அலைபேசி எண்ணையும் அளித்தார். 'பேசக்கூடத் தேவையில்லை. நேராக தலைமைச் செயலகத்துக்குச் சென்றுவிடுங்கள்' என்றார்.
அலைபேசியில் அழைத்தேன். முதல் மணியோசையிலேயே எடுத்தார். 'தாரளமாக வாருங்கள்' என்றார். எப்போது என்றதற்கு, 'எப்போது வேண்டுமானாலும்' என்றார்.
மறுநாள் காலை தலைமைச் செயலகத்தில் காவலர்களை எதிர்கொண்டோம்.
'தி இந்து' என்று தொடங்கியபோதே இடைமறித்து, எனது பெயர் உள்ளிட்ட விவரங்களைச் சொன்னவர்கள், தலைமைச் செயலாளர் அறைக்கு அனுப்பி வைத்தார்கள். 9 மணிக்கு ஒருவர் வந்தார். காவலாளிகள் சல்யூட் அடித்த பின்பே அவர் தலைமைச் செயலாளர் என்று புரிந்தது. அழைப்பு வந்தது.
பேட்டி என்றதும், 'என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்' என்றார். பேட்டியாகத் தொடங்கியது, உரையாடலாக நீண்டது. ஒருகட்டத்தில் அது விவாதமானது. கேள்விகளை கவனத்துடன் எதிர்கொண்டார். தீர்க்கமாகப் பதிலளித்தார். மாநிலத்தின் உச்ச பொறுப்பிலிருக்கும் ஓர் உயர் அதிகாரியுடனான சம்பிரதாய சந்திப்பாக அமையவில்லை அது. நிபந்தனைகளற்ற நட்புடனான சந்திப்பைப் போல அமைந்தது அது. ஊழல் தொடர்பான பேச்சு வந்தபோது, ஊழலைக் கடுமையாக விமர்சித்தார். 'யார் செய்தாலும் தவறுதான். அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி' என்றவர் சில விஷயங்களைக் குறிப்பிட்டார். லேசான அதிர்ச்சியுடன் 'இதையும் பிரசுரிக்கலாமா?' என்று கேட்டபோது, 'உண்மையை பிரசுரிப்பதில் என்ன சங்கடம்?' என்றார்.
சுமார் இரண்டு மணி நேரம். அறைக்கதவு திறந்தே கிடந்தது. இடையிடையே அலுவலர்கள் வந்து சென்றார்கள். என்னிடம் பொறுத்துக்கொள்ளும்படி சைகையில் தெரிவித்துவிட்டு, கோப்புகளில் கையெழுத்திட்டார். பலவற்றை திருத்தமிட்டுத் திருப்பி அனுப்பினார். ஆசிரியர்கள் வந்தார்கள். விவசாயிகள் வந்தார்கள். அழுக்கு வேட்டி, தோளில் துண்டுடன் சிலர் பேசிவிட்டுச் சென்றார்கள்.
வந்தவர்கள் எவரிடமும் பயமில்லை, பவ்யமில்லை, குனியவில்லை. குழையவில்லை, கைகட்டி வாய் பொத்திப் பேசவில்லை. உயரதிகாரியின் பேச்சை மறுத்துப் பேசும் ஜனநாயகம் அங்கே இருந்தது. நியாயமான மறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வும் அங்கே இருந்தது. வந்தவர்கள் எல்லோருக்கும் சலிக்காமல் பதில் அளித்தார். சந்திக்க வந்தவர்கள் எவரும் எங்கேயும் காத்திருக்கவில்லை. உதவியாளர்களிடம் நேரம் கேட்டு முன்பதிவு செய்யவில்லை. சிலர் அந்த அறைக்குள் இருக்கும் இருக்கையில் நன்றாக சாய்ந்து, கால்நீட்டி அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறிச் சென்றார்கள்.
அரசு உயர் அதிகாரிகளுக்காக பங்களாக்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் தலைமைச் செயலாளருக்கான பங்களா பெரியது; நவீனமானது. ஆனால், இவர் நகரின் நெரிசலான பகுதியிலிருக்கும் தனது சிறிய ஓட்டு வீட்டிலிருந்தே தினசரி அலுவலகம் வந்து செல்கிறார். அந்த வீடும் அவர் வாங்கியதில்லை. அவரது பெற்றோர் வாங்கியது. மரியாதை நிமித்தம், சம்பிரதாய நிமித்தம் என்பதற்கெல்லாம் அங்கே இடமில்லை. தார்மிகம் தர்மம் மட்டுமே கோலோச்சுகிறது. ஏனெனில் அது கேரளம். ஆனால், நான் சந்தித்த அதிகாரி விஜயானந்த் ஒரு தமிழர். குமரி மாவட்டம், தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்தவர்!

- டி.எல்.சஞ்சீவிகுமார் தமிழ் இந்து 23.12.2016

Wednesday 21 December 2016

தகவலுக்காக

செப்டம்பர் 2016 கணக்குப்படி
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட
அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை  1761

அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகள் 6


அங்கீகாரம் பெற்ற மாநிலக்கட்சிகள் 48.

நன்கொடை

 

ரூ.20,000-த்துக்கும் மேலான நன்கொடைகளில் தேசிய கட்சிகள் பெற்ற தொகை ரூ.102 கோடி: பாஜக முதலிடம்  



ரூ.20,000த்துக்கும் மேலான நன்கொடைகள் பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்ற நிலையில் இத்தகைய நன்கொடைத் தொகைகள் தேசியக் கட்சிகளுக்கு ரூ.102 கோடி வரை வந்துள்ளதாக ஜனநாயகச் சீர்த்திருத்த கூட்டமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை இணைந்து வெளீயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இத்தொகையில் பாஜக ரூ.76.85 கோடி வரை நன்கொடை பெற்றுள்ளது, அதாவது 613 நன்கொடைகள் மூலம் இந்தத் தொகை பாஜக-வுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 918 நன்கொடையாளர்கள் மூலம் ரூ.20.42 கோடி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
 

ரூ.20,000த்துக்கும் குறைவான நன்கொடைகள் ஆய்வுகளுக்குள் வராது. இதனையடுத்தே ரூ.2000த்துக்கும் மேலான பெயரில்லாத நன்கொடையினை மத்திய அரசு தடை செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
 

இந்த அறிக்கை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த கணக்கு விவரங்களின்படி சேகரிக்கப்பட்டதாகும். 2015-16-ல் ரூ.20,000த்துக்கும் அதிகமாக நன்கொடை பெறாத கட்சி பகுஜன் சமாஜ் கட்சியாகும்.
 

2014-15அ-ஐ ஒப்பிடும்போது 2015-16-ல் நன்கொடைகள் 84% குறைந்துள்ளது, அதாவது தொகைரீதியாக ரூ.528 கோடி குறைந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 

2014-15-ல் பாஜக பெற்ற நன்கொடை மதிப்பு ரூ.437.35 கோடி, இது 2015-16-ல் ரூ.76.85 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுகளுக்கிடையே பாஜக-வின் நன்கொடை 156% அதிகரித்தது. காங்கிரஸ் கட்சியின் நன்கொடை தொகை இதே காலக்கட்டத்துக்கிடையில் 137% அதிகரித்தது.
 

இந்த அறிக்கையில் நன்கொடை பற்றி பூர்த்தியடையாத தகவல்களையும் அரசியல் கட்சிகள் அளித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
 

இவ்வகையில் காங்கிரஸ் கட்சி பெற்ற ரூ.8.11 கோடி நன்கொடையை வழங்கியவர்களின் பான் எண்கள் இல்லை. பாஜக தான் பெற்ற 2.19 கோடிக்கான நன்கொடையை வழங்கியவர்களின் பான் எண்களை தரவில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday 19 December 2016

மாற்றல் கொள்கையில்
 ஒரு மாற்றம்

பி எஸ் என் எல் ஊழியர் மாற்றல் கொள்கையில் கீழ்க்கண்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஒரு ஊழியர் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ, இன்னொரு மாநிகத்த்திற்கோ அதிகபட்சமாகஐந்து வருடங்கள் மாற்றல் பெறலாம்.

Sunday 18 December 2016

கூலித் தொழிலாளியும்

ஒரு கோடி ரூபாயும்


மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில், கூலி தொழிலாளி ஒருவர் கணக்கில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக  வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில், நவம்பர் 9ஆம் தேதியில் இருந்து நவம்பர் 17 ஆம் வரை உங்கள் வங்கி கணக்கில்  ரூ.1,00,10,000 டெபாசிட் ஆகியுள்ளது. பான் கார்டும் சமர்பிக்கபடவில்லை. எனவே வருமான வரித்துறையிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதிர்ச்சியடைந்த தொழிலாளி பதறிப் போய் வங்கிக்கு சென்று புகார் அளிளித்துள்ளார். ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள், நவம்பர் மாதம் அவர் டெபாசிட் செய்த ரூ.10,000 தொகையை தவறாக  ரூ.1,00,10,000 என தவறாக பதிவிட்டுள்ளனர். இதுவே பிரச்சனைக்கு காரணமாக இருந்துள்ளது.

Friday 16 December 2016

அஞ்சலி

கறுப்புப் பணத்தை இழுக்க,
கள்ளப்பனத்தை ஒழிக்க,
ஊழல் லஞ்சத்தை வேரறுக்க,
தீவிரவாதத்தை அழிக்க
500  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று நவம்பர் 8 அன்று அறிவித்தார் பிரதமர் மோடி.

இதன் விளைவாக
பணம் பெற வங்கிகளிலும்
ஏடிஎம் வாசல்களிலும்
வரிசையில்
காத்துக் கிடந்த் போது நூற்றுக்கணக்கான் இந்தியர்கள்  தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

"நாட்டு மக்கள் அனைவருமே இராணுவ வீரர்களைப் போல் கறுப்பப்ன ஒழிப்புப் போரில் ஈடுபட்டுள்ளனர்"  என்கிறார் பிரதமர்.


பிரதமர் சொல்லும் போரில் உயிரிழந்த அந்த நூற்றுக்கணக்கான இந்திய தேசத்து மக்களுக்கு நமது அஞ்ச்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.

Thursday 15 December 2016

நல்வினை
ஆற்றிய நல்ல உள்ளங்களுக்கு
நன்றி நன்றி நன்றி

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும்
அதிகாரிகள் மற்றும்
ஊழியர்களில்
91 சதவிகிதம் பேர்
15.12.2016 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுமையும் இந்த வீச்சு இருக்கும்.

நிறுவனத்தின் நலன் காக்க போராடிய அனைவரையும் உளமாரப் பாராட்டுகிறோம்.

தலைவர்களின் அறைகூவலை ஏற்று போராடிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

போராடியவர்களின் உணர்வுகளப்  புரிந்து

தலைவர்கள் தக்க நடவ்டிக்கை எடுக்க வேண்டும்.

Tuesday 13 December 2016

15.12.2016
ஒரு நாள்
வேலைநிறுத்தம்
மத்திய அரசே

பி எஸ் என் எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 65000 செல் டவர்களைப் பிரித்து ஒரு துணை நிறுவனத்தைத் துவக்காதே.

இந்தத் திட்டத்தைக் கைவிடு

என வலியுறுத்தி

15.12.2016 அன்று
ஒரு நாள் வேலை நிறுத்தம்

அதிகாரிகள் மற்றும்
ஊழியர்கள் சங்கங்கள்
அனைத்தும் இந்த் வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளன.

நிறுவனத்தின் நலன் காக்கவும்
ஊழியர் ந்லன் காக்க்கவும்
இந்த வேலைநிறுத்தத்தில்

அனைவரும் தவறாது பங்க்கேற்க வேண்டுகிறோம்.
நபிகள் நாயகம்
பிறந்த நாள்


அன்பு
கருனை
சகோதரத்துவம்
மனிதநேயம்
இவற்றை உலக மக்களுக்குப் போதித்த
நபிகள் நாயகம்
பிறந்த நாள் இன்று.




பி.எஸ்.என்.எல்

செல்லிடப்பேசி சேவைகள் பாதிப்பு கை கொடுத்த பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி சேவை

By DIN  |   Published on : 13th December 2016 03:42 AM  |
"வர்தா' புயல் காரணமாக, சென்னையில் திங்கள்கிழமை செல்லிடப்பேசி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.ஆனாலும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசி பலருக்கு கை கொடுத்தது.
தரைவழி தொலைபேசியில் இருந்து மற்றொரு தரைவழி தொலைபேசிக்கு பேசி விவரங்களைத் தெரிவிக்கவும், மின்சார விநியோகம் இருந்த பகுதிகளில் இணையதள வழியே தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பி.எஸ்.என்.எல். சேவை பெரிதும் பயன்பட்டது.
கடந்த ஆண்டைப் போன்று, இந்த ஆண்டு மழை பெய்தாலும் செல்லிடப்பேசி சேவைகள் பாதிக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், வர்தா புயல் காரணமாக சென்னையில் திங்கள்கிழமையன்று பெரும் சூறாவளி காற்று வீசியது.
புயல் கரையைக் கடந்த நேரத்தில் கடுமையாக காற்று வீசிய காரணத்தால், செல்லிடப்பேசி சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.பிற்பகல் 3 மணியில் இருந்து தனியார் செல்லிடப்பேசி சேவைகள் முற்றாக முடங்கின.
கைகொடுத்த தரைவழி சேவை: தனியார் செல்லிடப்பேசி சேவைகள் முடங்கினாலும், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவை தொடர்ந்து கொண்டே இருந்தது.
பி.எஸ்.என்.எல். இணைப்பு கொண்ட தரைவழி தொலைபேசியில் இருந்து மற்றொரு தரை வழி தொலைபேசிக்கு பேசவும், செல்லிடப்பேசிக்கு பேசவும் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. இதனால், தரைவழி இணைப்பு கொண்ட தொலைபேசிகளுக்கு திங்கள்கிழமையன்று பெரும் வரவேற்பு இருந்தது.


நன்றி தினமணி