NFTECHQ

Tuesday 31 May 2016

பட்டாபிக்கு

வாழ்த்துக்கள்



நமது மாநிலச் செயலர்
தோழர் பட்டாபி
இன்று
இலாகா பணியிலிருந்து
ஓய்வு பெறுகிறார்.

அறிவார்ந்த தோழன்.
அங்கீகாரம் இல்லாத காலத்திலும்
துணிச்சலுடன் மாநிலச் செயலர்
பொறுப்பை ஏற்ற தோழன்.

ஊழியர் பிரச்னைகள் குறித்து
ஆழாமாகச் சிந்திக்கும் தோழன்.

ஏறத்தாழ 25 ஆண்டுகளாக
தனிப்பட்ட முறையில்
ஒரு நல்ல தோழனாக பழகியவர்.

பணி நிறைவுக்குப் பிறகு
தோழர் பட்டாபியின்
வாழ்வில் நலமும் மகிவும்
நிலைத்து நீடித்து
அவர் பல்லாண்டு வாழ
ஈரோடு மாவட்டச் சங்கம்
சார்பாக உளமார வாழ்த்துகிறோம்.

Monday 30 May 2016

வாழிய பல்லாண்டு

31.05.2016 அன்று பணி ஓய்வு பெறூம்


1.திருமோகன்.B                    DE
2.திரு தண்டபாணி K.K         CAO
3.திரு ரங்கசாமி.R                JTO
4.தோழியர் நிலைமதி S.P.   STS
5.தோழியர் ராஜம்மாள்.K     STS
6.தோழியர் அமிர்தம்மாள்.P  SSS
7.தோழியர் திரிபுரசுந்தரி.K          STS
8.தோழர் துரைசாமி.K          TTA
9.தோழர் ஆறுமுகம்..S         STS
10.தோழர் தங்கராஜ்.V                  TM
11.தோழர் சுப்ரமணியம்.R     TTA
12.தோழர் மணி.A                   TM
13.தோழர் சம்பத்குமார்.R       TM
14.தோழர் சுப்ரமணியம் E.K.    TM
15.தோழர் தங்க்கவேல்.M       TM
16.தோழர் வையாபுரிG.M.       TM
17.தோழர் முருகன்.K              TM
18.தோழர் வேலுசாமி.N          TM
19தோழர் சின்னசாமி.M          TM
20.தோழர் சம்பத்குமார்.M       TM
21.தோழர் பொன்னம்மாள்.M   RM
22.தோழர் விஜயன்.R              TM

ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
நிர்வாகத்துடன் சந்திப்பு

இன்று 30.05.2016 NFTE, TEPU, SEWA அமைப்புகளின் தலைவர்கள் திரு குமாரசண்முகம் (உதவிப்பொதுமேலாளர் நிர்வாகம்) அவர்களை சந்தித்தோம்.
2016 ஆம் ஆண்டுக்கான சுழல் மாற்றல் குறித்து விவாதித்தோம். விவாதம் சுமுகமாகவும், பயனுள்ளதாகவும், நம்பிக்கை தருவதாகவும் அமைந்தது.

சில விபரங்களைக்  கேட்டுள்ளோம்.
விபரங்களைப் பெற்று ஆய்வு செய்து மீண்டும் பேசுவோம்.

திருப்தியான, சுமுகமான முறையில் மாற்றல் பிரஸ்னை தீர்வு காணப்படும் என்பது நமது ஆழ்ந்த நம்பிக்கை.

Friday 27 May 2016

புதிய அமைப்பு உதயம்

27.05.2016 அன்று NFTE, TEPU மற்றும் SEWA அமைப்புகளின் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
தோழர் சிங் அவர்களைக் கன்வீனராகவும், தோழர் சுப்புராமன் அவர்களை தலைவராகவும், தோழர் பெருமாள் அவர்களை துணைக் கன்வீனராகவும் கொண்ட


"NATIONAL FORUM OF BSNL  WORKERS"

என்ற அமைபு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் தலைவர்கள் நமது CMD உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து கீழ்க்கண்ட பிரச்னைகளின் தீர்வுக்கு வலியுறித்தினர்.

78.2 சத விலைவாசிப்படி அடிப்படையில்
வீட்டு வாடகைப்ப்படி  வழங்க் வேண்டும்.

22.05.2016 அன்று நடைபெற்ற
JTO தேர்வு முடிவுகளை
உடனே வெளியிட வேண்டும்.
என வலியுறுத்தினர்


மாநில மாநாடு

தமிழ் மாநில மாநாடு ஜூலை 21 மற்றும் 22 தேதிகளல் வேலூரில் நடைபெறும் என மாநிலச் செயலர் அறிவிப்பு கொடுத்துள்ளார்.

மாநாடு வெல்லவும், எதிர்காலத்திலும் செயல்பாடு சிறக்கவும் வாழ்த்துகிறோம்.

Saturday 21 May 2016

WHAT NEXT

அடுத்து என்ன?

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் முடிந்தது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

NFTE மற்றும் BSNLEU
ஆகிய ய இரண்டு சங்கங்களுக்கும்
அங்கீகாரம் மற்றும் கவுன்சில்கள் குறித்து உத்தரவுகளும் வெளியாகி விட்டன.

தேர்தல் சமயத்தில் பிரச்சாரங்கள்
வெப்பத்தைக் காட்டிலும்
கடுமையாக இருந்தன.

தற்போதுள்ள
1,63,000 ஊழியர்களில் ஏறத்தாழ
ஒரு லட்சம் ஊழியர்கள்
தன்மானத்துடனும்
சுயமரியாதையுடனும் வாழ
கடந்த காலத்தில்
NFTE   சாதித்த
பல்வேறு அம்சங்கள்  சொல்லப்பட்டன.

நவீனமயம்,தொழில்நுடபவளர்ச்சி,
இலாகாவின் அமைப்பில் மாற்றம்
போன்றவற்றை
விவேகத்துடனும்,
புத்திசாலித்தனத்துடனும்
கையாண்டு ஊழியர்களின்
உரிமைகளையும் நலன்களையும்
காத்திட்ட வரலாறற்று
உண்மைகள் சொல்லப்பட்டன.

2004 முதல்
இளையவர்கள் முதல்
மூத்தவர்கள் வரை
அனைவரும் இழந்திட்ட
உரிமைகள் குறித்து
எடுத்துச் சொல்லப்பட்டன.

போனஸ்,
ஊதிய மாற்றத்தால்  ஏற்பட்ட இழப்புகள்,
பதவி உயர்வில் சொல்லப்பட்ட உரிமைகளும் பலன்களும் இல்லாமை,
ஊதிய தேக்கநிலை,
மருத்துவத் திட்டத்தினால் உண்டான
மன உலைச்சல்கள்
மாற்றல் கொள்கையால்
ஏற்பட்ட அவதிகள்
என   
பல்வேறு அம்சங்கள்
எடுத்து வைக்கப்பட்டன.

BSNLEU அவதூறுகளைஅள்ளி வீசியது.
நாகரீகமற்ற பொய்கள்
நாக்கு கூசாமல் சொல்லப்பட்டன.

ஊழியர்கள் தங்கள் விருப்பத்தை
வாக்குச்சீட்டில்
பதிவு செய்தனர்.

இரண்டாவது ஊதிய உயர்வைக் காலத்தே வாங்காமல் காலதாமதம்,
சம்பள விகிதங்கள்  குறித்து ஆராயாமல் உடன்பாடு,
NEEP  பதவி உயர்வுத் திட்டத்தில் கோட்டை விட்ட பல வரலாற்றுத் தவறுகள்,
2006ல் பென்ஷன்  பங்கீடு பற்றிய
உத்தரவு பற்றிய அக்கறையின்மை
இவற்றில் கவனம் செலுத்த இயலாத,
கவனம் செலுத்த தெரியாத
BSNLEU
49.41 சதவிகித வாக்குகளை
49.56 ஆக மாற்ற செலுத்திய
கவனம் அதீதமானது.

50 சதம் வாங்கி ஒரே சங்கமாக
வர இய்லாமல் போனமைக்கு
வருத்தபட வேண்டாம்
என ஆறுதல் சொலவது நமக்குப் புரிகிறது.

ஒற்றுமை என்பது
NFTE யின் ஒருகை ஓசையாகவே உள்ளது.

ஒற்றுமை என்பது உண்மையாகவும்,
உயிரோட்டமானதாகவும் இருக்க வேண்டும்.
ஊழியர் பிரச்னைகள்  தீர்க்கப்பட வேண்டும் எனபதில் உறுதி வேண்டும்.

ஒரு இயக்கத்தை அகற்ற வேண்டும்.
அந்த இயக்கத்தின் முயற்சியாலோ
அல்லது இணைந்தோ
எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு
வந்து விடக் கூடாது என்ற எண்னம் உள்ளவர்களுடன்
உளப்பூர்வமான ஒற்றுமை சாத்தியமா?

சிந்திக்க வேண்டிய தருணம்.
சிந்திப்போம்.

தோழர் குப்தா வழி காட்டியிருக்கிறார்.
ஒற்றுமையை உருவாக்குவதில்
அவருக்கு நிகர் அவரே
என்பதும் வரலாறு.

செப்டம்பர் 2000
ஒன்றுபட வேண்டும்
என்ற உணர்வு உடைய்வர்கள
ஒன்றுபடுத்தி போராடி
சாதிக்க முடியும்
என்பதும் தோழர் குப்தா
கற்றுத் தந்த பாடம்.

காலத்தின் தேவையை அறிவோம்.
19.05.2016 முதல் 18.05.2019 வரை உள்ள காலம் சவால்கள் பல நிறைந்தது.

அனைவரையும் இணைத்து
ஒற்றுமையை உருவாக்கி
சவால்களைச் சந்தித்து வெற்றி காண்போம்.

ஊழியர் நலனில் அக்கறை
உள்ள அமைப்புகளை இணைத்து போராடுவோம்.

3 ஆண்டு காலம்   என்பது விரைவில் முடிந்து விடும்.

எனவே செயல்பாட்டில்  அவசரமும் அவசியமும் தேவை.

இந்த கருத்துக்களில்  உடன்படுவோருக்கு நன்றி.
உடன்பட மறூப்போர் அறிவுரை கூறவும்.


பதவி உயர்வு பெற
வாழ்த்துக்கள்

22.05.2016 அன்று
JTO  தேர்வில் பங்குபெறும்
தோழர்கள் தோழியர்கள்
அனைவரும் வெற்றி பெற்று
பதவி உயர்வு பெற
உள்ளம் நிறைந்த
வாழ்த்த்க்கள்.

Friday 20 May 2016

ஆலோசனைக்குழு -உத்தரவு

அகில இந்திய அளவில்
நேசனல் கவுன்சில்,
மாநில அளவில்
மாநில் கவுன்சில்,

மாவட்ட அளவில்
லோக்கல் கவுன்சில்
அமைக்கப்படுவதற்கான
உத்தரவை நிர்வாகம்
19.05.2016 அன்று வெகளியிட்டுளது.

அனைத்து கவுன்சில்களிலும்
மொத்தம் 14 இடங்கள்.

இதில் NFTE இயக்கத்துக்கு
5 இடங்க்களும்
BSNLEU சங்கத்துக்கு
9 இடங்களும் கிடைக்கும்.

வாக்குகளின் அடிப்படையில்
கண்க்கீடு செய்யப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்துவோம்.

கவுன்சில் அமைப்பிற்கான உத்தரவைக் காண இங்கு கிளிக் செய்யவும்.



அங்கீகாரம்

வழங்கும் உத்தரவு

10.05.2016 அன்று BSNL நிறுவனத்தில்
உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் எந்த ஒரு சங்கமும்
50 சத வாக்குகளைப் பெறவில்லை.

எனவே முதல் இரண்டு இடங்களைப்  பிடித்த
NFTE மற்றும் BSNLEU ஆகிய இரண்டு சங்கங்க்களுக்கும் அங்கீகாரம் வழங்கி நிர்வாகம்
19.05.2016 அன்று உத்தரவிட்டுள்ளது.

19.05.2016 முதல் 18.05.2019 வரை
மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரம்
தரும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அங்கீகாரம் தரும் உத்தரவைக் காண இங்கு கிளிக் செய்யவும்

இது ஒரு வாய்ப்பு.
வாய்ப்பைப் பயன்படுத்தி
முன்னேறுவோம்.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்.

ஊழியர்களின் வாழ்வில்
முன்னேற்றம் காண்போம்.

NFTE இயக்கத்துக்கு என்று
ஒரு பாரம்பரியம் உண்டு.
ஒரு தனித்தன்மை உண்டு.
இந்த தனித்தன்மையையும்
பாரம்பரியத்தையும் காப்போம்.
அதுவெ நன்மை பயக்கும்.


Wednesday 18 May 2016

தோழர் மாலியை

வாழ்த்துவோம்


இன்று மே 18.
தோழர் மாலி பிறந்த தினம்.

நேற்று மே 17
தோழர் ஜெகன் பிறந்த தினம்.

17க்குப் பிறகு 18.

நிச்சயமாக இது ஒரு
உண்மையை உணர்த்துகிறது.

தோழர் ஜெகன் காலத்திலிருந்து
NFPTE மற்றும் NFTE இயக்கத்தின்
வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக
அர்ப்பணித்தவர் தோழர் மாலி.

இயக்கத்தில் சிக்கலா
இயக்கத்திற்குள் சிக்கலா
அனைத்தையும் தீர்க்க வழிகாணும்
தோழனாக மாலி செயல்பட்டார்.

கொண்ட கொள்கையில்
தெளிவோடும் உறுதியோடும்
வாழும் தோழன்.


நிறைகளை மனம் திறந்து
பாராட்டும் பண்பாளர்.

குற்றம் என்றால் அதைச்
செய்தவர் யார் எனினும்
முக்த்துக்கு நேராகச்
சொல்லி விடும் பண்பு மிக்கவர்.

தனக்குத் தீங்கு இழைத்தோரையும்
மன்னிக்கும் மனம் படைத்தவர்.

தோழர் மாலி இன்னும் பல ஆண்டு வாழ வேண்டும் என மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Tuesday 17 May 2016

தோழர் ஜெகன்

பிறந்த தினம்


உழைக்கும் வர்க்கத்தின்
உன்னதத் தலைவன்

இன்முகம் காட்டும்
இனிய தோழன்

தலைவனாய்
தோழனாய்
தொண்டனாய்
போராளியாய்
போற்றுதலுக்குரியவராய்
பண்பாளனாய்
வாழ்ந்திட்ட
தோழர் ஜெகன்
பிறந்த தினம் இன்று
மே 17
உலக தொலைத்
தொடர்பு தினம்

தந்தி என துவங்கி
ஒரு காலத்தில்
கற்பனைக்கும் எட்டாத
சாதனைகளை இன்று
படைத்திட்ட
தொலைத்தொடர்பு சேவை.


இன்னும் முன்னேறும்

Sunday 15 May 2016

நடிகர் சூர்யா
மன்னிப்பு கேட்டார்

"வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்குச் சென்றிருந்தேன். 15.05.2016 அன்று புறப்பட்டு சென்னை வந்து வாக்களிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வர இயலவில்லை. வாக்களிக்க இயலாமைக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறன்"
என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்றதால் நடிகர் சூர்யாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை.

அபபடி ஒரு கோரிக்கையையும் யாரும் வைக்கவில்லை.

அவரது தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையும் இல்லை.

அப்படிப்ப்ட்ட செயலை தேர்தல் ஆணையம்   செய்யவில்லை.

செய்யவும் முடியாது.

Saturday 14 May 2016

தேர்தல் முடிவுகள்
ஒரு பார்வை

ஈரோடு மாவட்டம்

ஆண்டு
மொத்த
வாக்குகள்
NFTE
%
EU
%
2013
1037
392
37.80
521
50.24
2016
780
315
40.38
391
50.12



தமிழகம்

மொத்த
வாக்குகள்
NFTE
%
EU
%
15605
6922
44.36
6178
39.6
12074
5584
46.25
4972
41.18


சென்னை தொலைபேசி
ஆண்டு
மொத்த
வாக்குகள்
NFTE
%
EU
%
2013
7984
2896
36.27
3038
38.05
2016
6047
2532
41.87
2209
36.53


அகில இந்தியா
ஆண்டு
மொத்த
வாக்குகள்
NFTE

EU
%
2013
204468
61915
30.28
99380
48.6
2016
163820
52367
31.97
81195
49.5