NFTECHQ

Friday 13 January 2017

மகிழ்ச்சியும்

ஆதங்கமும்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுமையும் மாணவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடனும் கோபத்துடனும் போராடி வருகின்றனர்.

தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் காக்கவும், மண்ணின் மாட்டுக்காளைகளைக் காக்கவும் அவர்கள் எழுச்சியுடன் போராடு வதைக் காணும்போது அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

மண்ணின் அடையாளம் மரித்துப் போகாமல் காக்க அவர்களின் உணர்வு பூர்வமான போராட்டம் உள்ள்த்தில் உவகையை  ஊற்றாகப் பெருக வைக்கிறது.

ஆனாலும்....


இப்படிப்பட்ட கோபம் அவர்களின் எதிர்கால வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கோபம பொங்கி எழவில்லையே என
எண்ணும் போது மனம் வருந்துகிறது.

மருத்துவக் கல்விக்கு இந்த ஆண்டு முதலும் பொறியியல் கல்விக்கு அடுத்த ஆண்டு முதலும் பொதுநுழைவுத் தேர்வு என்பது பெரு நகரம் முதல் சிறு கிராமம வரை சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவச் செல்வங்களின் வாய்ப்பு பறி போய் விடுமே என்ற பதைபதைப்பும்கவலையும் அவர்களுக்கு ஏற்படாததும், அதற்காக போராடாததும் வருத்தமளிக்கிறது.

மாண்வச் செல்வங்களின் பெற்றோர் பணமதிப்பு நீக்கத்தால் படும் அவதி குறித்து அக்கறையுடன் ஆர்ப்பரித்து அவர்கள் போராடாமல் இருப்பது ஏமாற்ரத்தையும் வருத்தத்தையும் தருகிறது.

இருப்பினும் அவர்களின் போராட்டம் ஒரு வகையில் மகிழ்ச்சியே.

ஏனெனில் அநீதி கண்டு அவர்கள் இனி வரும் காலத்தில் போராடுவர்கள் என்பது நம் நம்பிக்கை.

No comments:

Post a Comment