NFTECHQ

Wednesday 1 February 2017

ஐடியா, வோடபோன் கூட்டணி:
இந்திய டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் இணைந்திட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பல நாட்களாகச் செய்திகள் வருகிறது. இந்த

இரு நிறுவனங்களின் இணைப்பு இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிப்போடக்கூடியதாக இருக்கும் என்பதால் முதல் இடத்தில் இருக்கும் ஏர்டெல் நிறுவனமும் சரி, புதிதாய் களமிறங்கியுள்ள ஜியோவும் சரி கடுப்பில் இருந்த நிலையில் இச்செய்திகள் உண்மையாகியுள்ளது. உண்மையை உடைத்த வோடபோன் இரு நிறுவனங்கள் இணைப்பிற்காக வோடபோன் இந்தியா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வெளிப்படையாக அறிவித்து வோடபோன் உண்மையை உடைத்தது. இந்த இணைப்பின் மூலம் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வோடபோன் பெற உள்ளது.

இணைப்பு வோடபோன் இந்தியா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம் மத்தியிலான பேச்சுவராத்தையில், வோடாபோன் இந்தியா (இன்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் இதன் 42 சதவீத முதலீடு இதில் சேர்க்கப்படாது) நிறுவனத்தை முழுமையாக ஐடியா செல்லுலார் பங்குகள் வாயிலாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக வோடபோன் இந்தியா ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்குகளைப் பெற உள்ளது.  தற்போதைய நிலையில், ஏர்டெல் நிறுவனத்திடம் 27 கோடி வாடிக்கையாளர்களையும், ரிலையன்ஸ் ஜியோ 7.2 கோடி வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ள நிலையில் வோடபோன் மற்றும் ஐடியா இணைப்பில் இக்கூட்டணி நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 39 கோடியாக உயர்ந்து இந்திய சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்க உள்ளது. ஜியோ.. இந்திய

டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக அளவுகளின் படி 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைவதன் மூலம் டெலிகாம் சந்தையில் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோவின் வர்த்தக வாய்ப்பும் வளர்ச்சியும் அதிகளவில் குறையவாய்புள்ளது. ஏர்டெல் வோடபோன் மற்றும் ஐடியா கூட்டணி நிறுவனம் முதல் இடத்தைப் பிடிக்கும், ஜியோவின் விரைவான வளர்ச்சி மற்றும் ஏர்செல் இணைப்பின் மூலம் ஜியோ கூட்டணி 2வது இடத்தைப் பிடிக்க உள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 3வது இடத்திற்குச் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய திருப்பம்: வோடபோன் மற்றும் ஐடியா கூட்டணி இந்திய டெலிகாம் சந்தையில் புதிய திருப்பத்தைக் கொண்டு வரப் போகிறது. இன்றைய நிலையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கவில்லை என்றால் சந்தையில் நிலைத்திருக்க முடியாது. இதுவே சிறப்பான சேவை அளிக்க முக்கியக் காரணமாக அமையும். 


No comments:

Post a Comment