NFTECHQ

Friday 17 February 2017

938 மதிப்பெண்ணுக்கு
மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு

NFTCL காரைக்குடி தமிழ் மாநில மாநாட்டில் ESI இணை இயக்குனர் உயர்திரு கணேசன் அவர்கள் பங்கேற்று ESI திட்டம் குறித்து மிக விரிவாக எடுத்துரைதார்.

ESI திட்டத்தில் இணைந்துள்ளவர்களுக்கு
மருத்துவ வசதி,
அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி,
பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டல் கிடைக்கும் விடுப்பு மற்றும் மருத்துவ வசதிகள்,
பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு மற்றும் மருத்துவ வசதிகள்,
மனைவியின் பிரசவ காலத்தில் கனவணுக்குக் கிடைக்கும் விடுப்பு,
என பல்வேறு திட்டங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.

அவர் கூறிய ஒரு செய்தி

"ESI திட்டத்தில் இணைந்துள்ள ஒரு தொழிலாளி என்னைச் சந்தித்து மிக்க நன்றி எனக் கூறினார். எதற்கு எனக் கேட்டேன். எனது பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது அதற்காகத்தான் என்றார். என்ன மதிப்பெண் என்று கேட்டேன். 938 என்று சொன்னார்."

அவர் மேலும் தனது உரையில் "938 மதிப்பெண் பெற்றவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது சாத்தியமல்ல.
ESI திட்டத்தில் இணைந்துள்ளவர்களின் குழந்தைகளுக்கு 20 சத ஒதுக்கீடு உண்டு. அதனால்தான் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தது" என்று கூறினார்.


ESI திட்டத்தில் உள்ள பல்வேறு திட்டங்க்களையும் வசதிகளையும் அவர் அழகு தமிழில் அருமையாக எடுத்துரைத்தார்.

No comments:

Post a Comment