NFTECHQ

Wednesday 22 March 2017

உலக தண்ணீர் தினம்
மார்ச் 22
தண்ணீர் இன்றி தள்ளாடும் தமிழ்க்குடிமக்கள்.
தண்ணியாலும் தள்ளாடும் தமிழ்க்"குடி"மக்கள்
தண்ணீர் கொடு என்கிறது உச்சநீதிமன்றம்
தண்ணீர தரமுடியாது என்கிறது கர்நாடகம்
தண்ணீர் தந்தது ஆந்திரம்
தண்ணீர் பாதியிலேயே பாய்ந்தது மறுபக்கம்.
தண்ணீர் தற்போது இல்லை என்று சொல்லி விட்டது ஆந்திரம்
தண்ணீரைத் தடுக்கிறது கேரளம்.
தண்ணீருக்காக தவிக்கிறது தமிழகம்

தமிழகம் மட்டுமல்ல
புவி முழுமையும்
தண்ணீருக்குப் பஞ்சம்தான்.
மூன்றாவது உலகப் போர்
மூண்டால் அது
தண்ணீருக்காகத்தான் என்கின்றனர்
தண்ணீர் கேட்டாலும்
கன்னடத்தில் உள்ள
தமிழன் அடிவாங்குகிறான்
தண்ணீரைக்கொடுத்தாலும்
கன்னடத்தில் உள்ள
தமிழன் அடிவாங்குகிறான்
தண்ணீரைச் சேமியுங்க்கள்
என்பது மக்களுக்குபோதனை
தண்ணீர் இருந்தால்தானே சேமிக்க
தாமிரபரணித் தண்ணீரை
தனியாருக்குத் தாரை வார்ப்பதை
எதிர்த்து மக்கள் போராட்டம்
தாமிரபரணித் தண்ணீரை
தனியாருக்குத் தாரை வார்ப்பதை
சரி என்கிறது  உயர்நீதி மன்றம்.
ஆக
தண்ணீர் என்பது
தங்கத்தின் விலையைக் கூட தொடலாம்.
நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்.
பணம் படைத்தவனுக்கு
எதற்கும் என்றைக்கும் பஞ்சமில்லை.
தண்ணீர் இல்லாவிட்டால் என்ன
பன்னீரைக் குடியுங்கள்
என்று கூட அறிவுரை வரலாம்

ஆளுவோரிடமிருந்து.

No comments:

Post a Comment