NFTECHQ

Monday 13 March 2017

4ஜி சேவை தொடங்கும் பி.எஸ்.என்.எல்.!


வருகிற 2017-18 நிதியாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் சுமார் 28,000 டவர்களை அமைத்து, 4ஜி சேவையை அறிமுகப்படுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அரசு கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் வருகையைத் தொடர்ந்து நாட்டில் 4ஜி பயன்பாடு அதிகரித்துவருவதால், பி.எஸ்.என்.எல். நிறுவனம்மும் 4ஜி சேவை வழங்க முடிவெடுத்துள்ளது. அதற்காக, நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்குவதற்கான செல்போன் டவர்களை அமைத்து தனது சேவையை விரிவுபடுத்தவுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘பி.எஸ்.என்.எல். நிறுவனம் 8ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்தின்படி, அனைத்து 2ஜி டவர்களுக்கு மாற்றாக நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய டவர்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த டவர்களைக் கொண்டு 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை வழங்க முடியும். மேலும் அடுத்த 2017-18 நிதியாண்டின் இறுதிக்குள் குறிப்பிட்ட சில பகுதிகளில் 4ஜி சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, 3ஜி அலைக்கற்றையின் ஒரு பகுதியை 4ஜி சேவைக்காக பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. இந்த டவர்கள் அமைக்கும் பணிகளில் ஐரோப்பாவைச் சேர்ந்த நோக்கியா, எரிக்ஸன் மற்றும் சீனாவின் இசட்.டி.. ஆகிய நிறுவனங்கள் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளன. இதில் குறைந்த டெண்டர் தொகை கோரும் நிறுவனத்துக்கு இந்த டவர் அமைக்கும் பணி ஒப்படைக்கப்படும். முதற்கட்டமாக மேற்கு மற்றும் தென் பகுதிகளிலும் பின்னர் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்என்று கூறினார்.

No comments:

Post a Comment