NFTECHQ

Saturday 29 April 2017

திருச்சி மாவட்டத் தலைவர்
தோழர் சுந்தரம்
அவர்களுக்கு
இன்று 29.04.2017
கரூரில் பணி நிறைவு பாராட்டு விழா

பாராட்டு விழா சிறக்க வாழ்த்துகிறோம்.

இயக்கத்தின் வளர்ச்சிக்கும்
ஊழியர்களின் நலனுக்கும்
ஓயாது உழைத்திட்ட
தோழர்  சுந்தரம் அவர்களின்
 பணி ஓய்வுக்காலம்
நலமுடனும்
மகிழ்வுடனும்

பயனுடனும் அமைய வாழ்த்துகிறோம்.

Monday 24 April 2017

தோழர் பாபநாசம் 
பணிநிறைவு பாராட்டு விழா

28.04.2016


நெல்லை தந்த தோழன்
நெஞ்சங்களில் நிறைந்த தோழன்
நீதியின் வழியில் நின்ற தோழன்
நியாயத்தின் நிழலாய் வாழும் தோழன்
நெறிமுறைகளின் வழி நிற்கும் தோழன்

தோழனின் பாராட்டு விழா
சிறக்க வாழ்த்துகிறோம்

பணி ஓய்வுக்காலம்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பயனுடனும்
பல்லாண்டு அனமய
ஈரோடு மாவட்டச் சங்கம்
சார்பாக மனம் நிறைய
வாழ்த்துகிறோம்.

Saturday 22 April 2017

கருணைத் தொகை

பணியில் இருக்கும்போது உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு கருணைத் தொகை வழங்க்குவதற்காக "Benevolent Fund" என்ற ஒரு திட்டத்தை உருவாக்க பி எஸ் என் எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக் ஒரு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஊழியர்கள் மாதம் தோறும் ஒரு தொகையைச் செலுத்த வேண்டும். இது சம்பள்த்தில் பிடிக்கப்படும். இந்த நிதியிலிருந்து உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்மப்த்துக்கு கருணைத்தொகை வழங்கப்படும்.

மாதம் எவ்வளவு தொகை பிடிக்கலாம், கருணைத்தொகை எவ்வளவு வழங்கலாம் என்பது குறித்து கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு நிர்வாகம் கேட்டுள்ளது.


இத்திட்டம் கருணை அடிப்படயில் பணி  வழங்குதலில்  மேலும்  சிக்கலைஉருவாக்குமா? 

Friday 21 April 2017

பாவேந்தர்

பாரதிதாசன்

நினைவுதினம்


ஏப்ரல் 21



சாய்ந்த தராசு


வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்!

ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதை
இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ?

கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ - புவி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?

சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத்
தீர்கஎனும் இந்த லோகமே - உரு
அற்றொழிந் தாலும்நன் றாகுமே!

காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன்
காணத்தகுந்தது வறுமையாம் - அவன்
பூணத் தகுந்ததும் பொறுமையாம்!

அன்பெனச் சொல்லியிங் காதிமுதற் பேத
வன்மை வளர்த்தனர் பாரிலே - அதன்
பின்புகண் டோம்இதை நேரிலே

மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்
வாழை யிலைமுற்றும் நறுநெய்யாயம் - இது
மிக்குயிர் மேல்வைத்த கருணையாம்

கோயிலிலே பொருள் கூட்டும் குருக்களும்
கோதையர் தோளினிற் சாய்கின்றார் - இங்கு
நோயினிலே மக்கள் மாய்கின்றார்

கோரும் துரைத்தனத்தாரும் பெரும் பொருள்
கொண்டவர்க்கே நலம் கூட்டுவார் - உழைப்
போரிடமே கத்திதீட்டுவார்

மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மாநிலம் தந்ததில் வஞ்சமோ? - பசி
மிக்கவரின் தொகை கொஞ்சமோ?

Thursday 20 April 2017

GPF
பிரச்னை தீருமா?

இந்த மாதம் GPF பணம் கிடைக்குமா என்று ஒவ்வொரு மாதமும் கேள்விகள் எழுகின்றன்.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யும் DOT CELL அமைப்பே இனி GPF பட்டுவாடாவையும் செய்யும் என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

ஊழியர்கள் ESS எனப்படும் ONLINE மூலம் விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி அதனை ஒப்புதல் செய்து நேரடியாக DOTCELLக்கு E-MAIL மூலம் அனுப்பிவிடுவார். DOTCELL நேரடியாக ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வைப்புநிதியை வரவு வைத்துவிடும். 

இந்தப்பணி இரண்டு கட்டமாக அமுல்படுத்தப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 2017க்குள்  12 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏனைய மாநிலங்களிலும் அமுல்படுத்தப்படும். தமிழகம் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தில் உள்ளது. வைப்புநிதி DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்வதன் மூலமாக ஊழியர்கள் விரைவாக பட்டுவாடா பெறமுடியும். ஆனால் தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம்  பெற
முடியுமா என்பதற்குக் காலம்தான்  விடை காணும்.

Thursday 13 April 2017

அண்ணல் அம்பேத்கர்
பிறந்த தினம்

ஏப்ரல் 14


இனிய
தமிழ்ப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்


இந்தியாவின் துயர நாள்

13.04.1019








இந்தியாவின் துயர நாள்
13.04.1019




ஜாலியன் வாலாபாக்கில் படுகொலைகள் நடந்த தினம்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 389 இந்திய மக்கள் கொல்லப்பட்டதினம்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் இவர்கள். 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.

வெள்ளையனின் ரெள்லட் சட்டத்தை எதிர்த்து நடபெற்ற போராட்டத்தில் இந்த துயரம் நடைபெற்றது.

எந்த விசாரணையும் இன்றி ஒருவரைத் தண்டிக்கும் உரிமையை இச்சட்டம் தந்தது.

இந்தச் சட்டத்தைத்தான் கொடுங்க்கோலன் டயர் பயன்படுத்தினான். கொன்று குவித்தான்.

இப்படியெல்லம் துன்பங்க்களுக்கு ஆளாகி, இன்னுயிரை ஈந்து சுதந்திரம் பெறப்பட்டது.

ஆனால் இன்று மக்களை 4000, 3000, 2000 என விலை கூவி வாங்கும் அவலம்.

ஆனால்...
மக்கள் சக்தி நிச்சயம் ஒரு நாள் திரளும்.
நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழும்.
மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் பிறந்த நாள்

ஏப்ரல் 13





நாடு கெட்டுப் போகுது
பாடுபட்டுக் காத்த
நாடு கெட்டுப் போகுது

கேடுகெட்ட கும்பலாலே

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... 
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...

திருப்தி தரும் தீர்ப்பு

ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் வரவேற்கத்தக்க ஒரு தீர்ப்பினை வழங்க்கியுள்ளது.

நிரந்தரப் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களைப் பணியில் அமர்தக் கூடாது என ராஜஸ்தான் மாநில அரசுக்கு
அந்த மாநில உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவையெனில் நிரந்தரமாக ஊழிடர்களைப் பணியில் அமர்த்தா வேண்டும்.

தோழர் மதியின் முகநூலில் இருந்து



Welcome Judgment of Rajasthan High Court :

The High Court of Rajasthan In Jaipur has in a far-reaching judgment restrained the State Government of Rajasthan from hiring employees/ workers on contract for Permanent Posts. 

The justice Sanjeev Prakash Sharma in his judgment has reflected the trade Unions view that for regular and permanent jobs one should not employ labourers on Contract in whatever name and manner. Only to deny the statutory and agreed benefits of a regular employees the managements in both Public/ Private sector are indulging in this type of malpractice and anti- labour practices.

 If needed new recruitment of regular employees must be resorted instead of going in to outsourcing method. NFTCL always insisted that a contract Labour doing a regular and continuous job in any telecom company must be made permanent and regularised and extended all the benefits of a regular employee including Pay / DA/ Increments etc besides Terminal Benefits. We hope days are not far off when NFTCL realises this dream of all Contract Labourers.

ஒப்பந்த ஊழியர்களின் கனவுகளை NFTCL நனவாக்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் தோழர் மதி குறிப்பிட்டுள்ளார்.

Wednesday 12 April 2017

நித்தம் நித்தம்
மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகளில் தினசரி மாற்றம்.

இதனடிப்படையில் சோதனை முயற்சியாக பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி மாற்றும் திட்டம் முதன் முதலாக புதுச்சேரி, விசாகப்பட்டணம், ஆந்திரா, ராஜஸ்தானின் உதய்பூர், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படும்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.

தனி ஒரு மனிதனுக்கு கொள்ளை லாபம் இல்லையெனில் இந்திய மக்களை வதைத்திடுவோம் என்கிறது இந்திய அரசு.

Tuesday 11 April 2017

ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவப்படி

நிதிச்சுமை என்ற காரணம் காட்டி மருத்துவப்படி வழங்குவது நிறுத்தப்பட்டது.

11.04.2017 அன்று நிர்வாகம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி,

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவப்படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற மாதத்தில் பெற்ற அடிப்படைச் சம்பளம் மற்ரும் விலைவாசிப்படியில் பாதி மருத்துவப்படியாக வழங்கப்படும்

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப்படி வழங்கப்படும்.


ஆறு மாதம் கழித்து இந்த முடிவு குறித்து நிர்வாகம் பரிசீலிக்குமாம்.

Saturday 8 April 2017

தோழர் குப்தா பிறந்த தினம்
ஏப்ரல் 8

இந்திய தொழிற்சங்க வரலாற்றில்
ஒப்பில்லாத தலைவனாய்...
தொண்டனாய்.. தோழனாய்...
பல வரலாற்றுச் சாதனைகளைப்
படைத்திட்ட
தோழர் குப்தாவின்
96 ஆவது
பிறந்த தினம் இன்று.
நன்றி சொல்ல உனக்கு

வார்த்தை இல்லை தோழனே.

Thursday 6 April 2017

நம்மாழ்வார்
பிறந்த தினம்
ஏப்ரல் 6
இந்த நாளில் அவரது சில கருத்துக்கள்
 “அவர்கள் மாறுவார்களா இல்லையா என்பது என் பிரச்னையல்ல, நான் அவர்களிடம் உண்மையைச் சொல்கிறேனா இல்லையா என்பதும் மாற்று வழிகளைக் காட்டுவதும்தான் என் வேலை”
 “என் வேலையே தற்சார்பு வாழ்வுக்கானதுதானே. அப்புறம் நான் ஏன் உலகமயத்தைத் தனியாக எதிர்க்க வேண்டும்?”
“உலகமயத்துக்கு மாற்று உள்ளூர்மயம். ஒன்று வேண்டாம் என்று சொல்லி வெற்றிடமாக்க முடியாது. எதையேனும் கொண்டு நிரப்ப வேண்டும். அது எது, எத்தகையது என்றால், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்”
“நீங்கள் வண்ணத்தில் போஸ்டர் அடித்தால் அவன் பல வண்ண போஸ்டர் அடித்து மயக்குவான். உங்களால் அவனின் ஆயுதத்தைத் தூக்க முடியாது. உங்களுடையது சுவர் விளம்பரமாக இருந்தால்? நம்மளவுக்கு அவனால் கீழிறங்க முடியாது. உங்களது ஆயுதம் எதிரியால் எடுத்தாள முடியாததாக இருக்க வேண்டும்”

நம் இலக்கு பெரிது.. எவரையும் இழந்துவிட முடியாது” 

Wednesday 5 April 2017

டெலிகாம் டெக்னீசியன்-
இலாகா தேர்வு

டெலிகாம் டெக்னீசியன்
(டெலிகாம் மெக்கானிக்)
பதவிகளுக்கான இலாக்காத்தேர்வு
09/07/2017
அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
S.S.L.C., தேர்ச்சி பெற்ற RM/GR’D ஊழியர்கள் தேர்வெழுதலாம்.
விண்ணப்பிக்கும் நாள் : 01/06/2017
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24/06/2017
தேர்வுக்கட்டணம் 
ரூ.750/= பொதுப்பிரிவினர்
ரூ.500/= SC/ST பிரிவினர்.
தமிழகம் மற்றும் 
சென்னைத்தொலைபேசிக்கும் சேர்த்து
சென்னையில் தேர்வு நடைபெறும்.
தேர்வு நேரம் : 10.00 to 12.30 
2.30
மணி நேரம்..
இலாக்காப்பயிற்சி = 50 மதிப்பெண்கள்
பொது அறிவியல் மற்றும் கணிதம் = 50 மதிப்பெண்கள்


ஈரோடு மாவட்டத்தில் ஓரிருவருக்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்த வாய்ப்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday 4 April 2017

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கியுடன் ஐந்து அசோசியேட் வங்கிகள் இணைப்பினையொட்டி ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் 55 வயது நிரம்பியவர்கள் மனுச்செய்ய அறிவிக்கப் பட்டது.

12,500 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு தகுதி இருந்தும் 2800 ஊழியர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இணைப்பு ஊழியர்களையும் சேர்த்து
மொத்தம் 2,70,011 ஊழியர்கள்,
37கோடி வாடிக்கையாளர்கள்,
24000 கிளைகள்,
59000 ATMகள்,
26 லட்சம் கோடி டெபாசிட்டுகள் உள்ளதாக

மேனேஜிங் டைரக்டர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

Monday 3 April 2017

வாழ்த்துகிறோம்

11.12.2016 அன்று நடைபெற்ற
JTO தேர்வில்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த
கீழ்க்கண்டோர்
வெற்றி பெற்றுள்ளனர்.

1.தோழர் வசந்தகுமார்.J
2. தோழர்   குமரேசன் J
3.தோழியர் சுமாசாந்தி S M
4. தோழர்  கஜேந்திரகுமார்
4. தோழர்  மகேந்திரன் S
5. தோழர்  தினேஷ் S
6. தோழர்  சுகுமார் G
7. தோழியர்  வித்யா G
8. தோழியர்  சுகன்யா K M
9. தோழர்  அருண்குமார் C
10. தோழர்  சந்திரசேகரன் B
11. தோழர் மருதகுமார் M V
13. தோழர் அருண்குமார்  M
14. தோழர்  சுதாகரன் P
15. தோழர்  ரமேஷ் C
16. தோழர்  சரவணகுமார் B
17. தோழர்  ஆனந்தன்
18. தோழியர்  ஷர்மிளாபானு J
19. தோழர்  வேல்முருகன்

ஆகிய அனைவருக்கும்
மாவட்டச் சங்கத்தின்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஈரோடு மாவட்டத்தில்
தேர்வு எழுதிய அனைவரும்
வெற்றி பெற்றுள்ளனர்

 என்பது மகிழ்ச்சிக்குரியது.

Sunday 2 April 2017

மாவட்டச் செயற்குழு தீர்மானங்கள்

30.03.2017 கோபி மாவட்டச் செயற்குழு தீர்மனங்கள்

மத்திய சங்கத்தை மாவட்டச் செயற்குழு வலியுறுத்தும் தீர்மானங்கள்.

1. மூண்றவது ஊதிய மாற்றத்தை 31.03.2018க்குள் பெற்றுத்தர வேண்டும்.

2. பரிவு அடிப்படையிலான பணியை மதிப்பெண் மூலம் கணக்கிடும் முறையை ரத்து செய்ய வேண்டும். இந்த முடிவு எடுக்கப்படும் வரை 55 மதிப்பெண்கள் என்ற வரம்பை 45 ஆகக் குறைக்க வேண்டும்.


3. 2015-16 ஆம் ஆண்டுக்கான போனஸை மேலும் தாமதமின்றிப் பெற்றுத்தர வேண்டும். 
பேங்க் ஆப் பரோடா புரபேஷனரி ஆபிஸர் வேலைவாய்ப்பு...
பேங்க் ஆப் பரோடாவில் உள்ள புரபேஷனரி ஆபிஸர் பணிக்கு 400 காலியிங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

01.05.2017 ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

வேலையின் தன்மை - புரபேஷனரி ஆபிஸர்

கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வேலை இடம் - இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. அதில் 55% மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். (எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50% மார்க் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்)

வயது வரம்பு - 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (02.04.1989க்கு பின் பிறந்தவர்கள் மற்றும் 01.04.1997க்கு முன் பிறந்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்)

தேர்ந்தெடுக்கப்படும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முறை - எழுத்துத்தேர்வு 2மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும். ரீசனிங் - 50 கேள்வி (50 மார்க்) அளவு - 50 கேள்வி (50 மார்க்) பொது விழிப்புணர்வு (வங்கி தொழில் தொடர்பான) - 50 கேள்வி (50 மார்க்)
ஆங்கில மொழி - 50 கேள்வி (50 மார்க்) மொத்தம் 200 கேள்விகள் 200 மார்க்குகளுக்கு கேட்கப்படும்.

இதற்கு இரண்டு மணி நேரம் கொடுக்கப்படுகிறது.

விளக்கமான வகை - (டிஸ்கிரிப்டிவ் பேப்பர் 30 நிமிடம் நடைபெறும்)
ஆங்கிலம் மொழியில் - 2 கேள்வி (50 மார்க்) கேட்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் - ரூ. 750/- பொதுப்பிரிவினரிடம் வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

முக்கிய தேதிகள் - விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் - ஏப்ரல் 1ல் இருந்து மே 1ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுச்சீட்டு - 12.05.2017 தேதி ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நடைபெறும் நாள் - 27 மே 2017 எழுத்துத் தேர்வு நடைபெறும். மேலும் தகவல்களுக்கு இணைதள முகவரியை அனுகவும்.

விருப்பமுள்ள நமது தோழர் தோழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பப் பயன்படுத்திக் கொள்ள்லாம்.

Saturday 1 April 2017

மாவட்டச் செயற்குழு

30.03.2017 அன்று கோபியில் மாவட்டச் செயற்குழு காலை 10 மணிக்குத் துவங்கி மாலை 5 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

கோபி கிளைத்தோழர்கள் கிளைச்செயலர் தோழர்  முருகசாமி தலைமையில் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

மாவட்டத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் செயற்குழுவை மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.

மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி செயற்குழுவைத் துவக்கி நல்லதொரு உரையாற்றினார்.

மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு ஆய்படுபொருளை அறிமுகப்படுத்தியும், இன்றைய சவால்கள், பிரச்னைகள் குறித்து உரையாற்றினார்.

கிளைச்செயலர்களும், மாவட்டச் சங்க நிர்வாகிகளும் தங்கள் கருத்துககளையும், ஊழியர் பிர்ச்னைகளையும், துறை வளர்ச்சிக்கான தேவைகளையும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அவர்கள் தங்கள் கருத்துக்களை காலவரையின்றி ஜனநாயக அடிப்படையில் சுதந்திரமாக எடுத்துரைக்க தலைமை     எப்போதும் போல் முழுமையான வாய்ப்பளித்தது.

தோழர்களின் முதிர்ச்சியான உரைகள் மகிழ்வைத் தந்தது.

AITUC மவட்டச் செய்லர் தோழர் செல்வராஜன் தனது வாழ்த்துரையில் நாட்டின் இன்றைய சூழல், நமது கடமைகள் குறித்து எடுத்துரைத்தார்.


தோழர் அருணகிரி நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது.