NFTECHQ

Monday 31 July 2017

வாழிய பல்லாண்டு

இன்று பணிநிறைவு பெறும்
தோழியர் P.வசந்தி OS
தோழர் L.பரமேஸ்வரன்  TT
தோழர் K.நாகராஜன் JE
தோழர் P.ஜெகனாதன் TT
தோழர் S.மாணிக்கம் TT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ

வாழ்த்துகிறோம்.

Thursday 27 July 2017

பண்பாடும் பாரம்பரியமும்

1991ல் போபால் E3 அகில இந்திய மாநாடு.

அதற்குப் பிறகு   அடுத்த E3 அகில இந்திய மாநாட்டை தமிழகத்தில் நடத்துவது என்ற ஆலோசனை யை திருச்சியில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் முன்மொழியப்பட்டது.

அந்த ஆலோசனையை  அப்போதைய மாநில உதவிச் செயலர் தோழர் அபிமன்யூ ஏற்கவில்லை. அதற்குச் சில காரணங்கள் அவருக்கு இருந்தன.

ஆயினும் விவாதங்களுக்குப் பிறகு அகில இந்திய மாநாட்டை தமிழகத்தில் நடத்துவது என மாநிலச் செயற்குழு முடிவெடுத்தது.

அகில இந்திய  மாநாடு,
மாநில மாநாடு மற்றும் பிற நிகழ்வுகளை நடத்துவது குறித்து மாநிலச் செயற்குழுவில் விவாதித்து ஜனநாயக அடிப்படையில் செயல்படும் பண்பாடும் பாரம்பரியமும் தமிழ் மாநிலச் சங்கத்தில் இருந்தது.

ஆனால் இன்று...


தொடரும்
செய்தி


NFTE மற்றும் தோழமைச் சங்கத் தலைவர்கள் இன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் திரு ஆனந்த் ஜி கீத் அவர்களைச் சந்தித்தனர். மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பரிசீலித்து விரைவில் அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஏவுகணை நாயகன்.
எல்லோருக்கும் பிடித்தவர்.
எலாரையும் பிடித்தவர்.
என்பத்து நான்கு வயது வாழ்ந்தவர்.
எழுபத்து ஐந்தைக் கொண்டாட  விரும்பாதவர்.
ஏழ்மையில் உழன்றவர்
ஏற்றம் கண்சடவர்

இன்று அப்துல் கலாம் நினைவு தினம்

Friday 21 July 2017

ஏச்சுப்  பொழக்கும் பொழப்பே சரிதானா?
பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உட்பட 6 தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் 2010-11 மற்றும் 2014-15 ஆண்டுகளில் தங்கள் வருவாயை ரூ.61.064.5 கோடி அளவுக்கு தங்கள் வருவாயைக் குறைத்துக் காட்டியுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசுக்கு ரூ.7,697.6 கோடி குறைவான வருவாய் வந்துள்ளது.

வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது 6 நிறுவனங்களின் “சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொகையைக் குறைத்துக் காண்பித்தது ரூ.61,064.5 கோடியாகும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் ஆகிய இந்த 5 நிறுவனங்களுக்கான தணிக்கை ஆண்டுக் காலம் 2010-11 முதல் 2014-15 வரை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாறாக, சிஸ்டிமா ஷியாம் நிறுவனத்திற்கான தணிக்கை ஆண்டு 2006-07 முதல் 2014-15 வரையாகும்.

இந்தக் குறைந்த வருவாய் காட்டலினால் அரசுக்குச் சேர வேண்டிய தொகையில் ரூ.7,697.62 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மம்மி
ஒரு கல்லுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? நாம் தினமும் வளர்கிறோம். ஆனால், கல் அப்படியே இருக்கும். கல் மட்டுமல்ல, உயிரில்லாத எந்தப் பொருளுக்கும் வளர்ச்சி இல்லை. கல், மண், சிலை, படம், புத்தகம், மேஜை, வீடு, பேனா, பெட்டி என்று அனைத்துப் பொருட்களுக்கும் இது பொருந்தும். இப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், இந்த நிமிடமே உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

1835-ம் ஆண்டு என்ன நடந்தது தெரியுமா? பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு ஒரு பொருள் வந்துசேர்ந்தது. ஒரு பெரிய கறுப்புப் பெட்டி. கவனமாக உள்ளே எடுத்துச் சென்றார்கள். பெட்டியின் மேல்புறத்தில் அழகிய, வண்ணச் சித்திரங்கள் இருந்தன. அதே சமயம் அது மிகவும் பழைய பெட்டி என்பதால் உடைந்துவிடக் கூடாதே என்று பொறுமையாகப் பிரித்தார்கள். பெட்டிக்கு உள்ளே கரிய நிறத்தில் ஒரு மம்மி. அதாவது, பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு மனித உடல்.
பெட்டிக்கு உள்ளே இருந்த எகிப்திய எழுத்துகளை ஆராய்ந்தபோது பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தெரியவந்தன. பழங்கால எகிப்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் மம்மிதான் அது. அவர் பெயர், Hornedjitef. ஒரு கோயிலில் பூசாரியாக இருந்திருக்கிறார். மூன்றாம் தாலமி என்னும் மன்னரின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். அப்படியானால் இந்த மம்மியின் வயது கிட்டத்தட்ட 2,230 ஆண்டுகள்.

அடடா, ஒரு பழைய பெட்டிக்குள் இத்தனை வரலாறா என்று திகைத்து மேலும் ஆராய்ந்தார்கள். பல்வேறு வண்ணங்களில் பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் நிறைய எழுத்துகளும் ஓவியங்களும் காணப்பட்டன. பெட்டிக்கு உள்ளே மேல்புறத்தில் குட்டிக் குட்டி நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தன. மம்மிக்கு அருகில் இருந்த சிறிய கலை வேலைப்பாடு கொண்ட பொருட்கள் காணப்பட்டன. அவை என்ன? பழைய வரலாற்று நூல்களை எடுத்து வைத்துத் தேடியபோது, அவை மந்திர சக்தி வாய்ந்த தாயத்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டன.
இப்போது ஓரளவுக்கு அந்த மம்மியைப் பற்றி அவர்களுக்குப் புரிந்துபோனது.
அந்தப் பூசாரி மீண்டும் உயிருடன் திரும்ப ஆசைப்பட்டிருக்கிறார். எனவே, தன் உடலைக் கவனமாகப் பாதுகாக்கச் சொல்லி, தன்னுடைய உதவியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் பயபக்தியுடன் அவரைப் பதப்படுத்தியிருக்கிறார்கள்.

அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக கூடவே தாயத்துகளையும் வைத்திருக்கிறார்கள். திரும்பவும் உயிர் வருவதற்காகச் சில மந்திரங்களையும் பொறித்து வைத்திருக்கிறார்கள்.
ரொம்ப நன்றி மம்மி, உன்னிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம் என்று சொல்லி, பெட்டியைப் பூட்டி வைத்தார்கள் ஆய்வாளர்கள். பல ஆண்டுகள் கழிந்த பிறகு புதிய ஆய்வாளர்கள் வந்து திரும்பவும் பெட்டியைத் திறந்தார்கள். மீண்டும் முதலில் இருந்தே ஆராயத் தொடங்கினார்கள். மேலும் பல விஷயங்கள் கிடைத்தன. மம்மி இருந்தது ஒரு பெட்டியில் அல்ல. அது உண்மையில் ஒரு சிறிய உலகம்.

பெட்டியைத் திறந்தால் உள்ளே மேல்புறத்தில் வானம். அதனால்தான் அங்கே நட்சத்திரங்கள் வரைந்திருக்கிறார்கள். அங்கும் இங்குமாக உள்ள கோடுகள், சாதாரணக் கோடுகள் அல்ல, அது திசை காட்டும் ஓவியம். அதாவது, வரைபடம்.
மம்மி சொர்க்கத்துக்குப் போயாக வேண்டும். ஒருவேளை அதற்கு வழி தெரியாவிட்டால் அங்கும் இங்கும் அலையக் கூடாது அல்லவா? அதனால்தான் சொர்க்கத்துக்கு எப்படிச் செல்வது என்பதற்காக அந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இப்படியெல்லாமா யோசித்திருக்கிறார்கள்!
சரி, மம்மி நிறைய சொல்லிக் கொடுத்துவிட்டது, இனி மேற்கொண்டு திறக்கவேண்டியிருக்காது என்று நினைத்து பெட்டியை இறுக்கமாக மூடினார்கள். பல ஆண்டுகள் கழிந்தன. சில புதிய ஆய்வாளர்கள் மீண்டும் ஆர்வத்துடன் வந்து பெட்டியைத் திறந்தார்கள். இந்தமுறை மம்மியை வெளியில் எடுத்து நவீன அறிவியலைப் பயன்படுத்தி ஸ்கான் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு முக்கியமான தடயம் கிடைத்தது. மம்மியின் முதுகில் சில எலும்புகள் முறிந்திருந்தன. உயிருடன் இருந்தபோது அந்த மனிதனுக்கு முதுகு வலி இருந்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்.
உற்சாகத்துடன் மேலும் ஆராயத் தொடங்கினார்கள். இந்த முறை அவர்களுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. இவர் உயிருடன் இருந்தபோது என்ன சாப்பிட்டிருப்பார்? எந்த மாதிரியான ஆடையை அணிந்திருப்பார்? அவருக்கு எழுதப் படிக்கத் தெரியுமா? இசை பற்றியும் ஓவியம் பற்றியும் தெரிந்திருக்குமா? அவர் எவ்வளவு மணி நேரம் தூங்குவார்? அவருடைய வீடு எப்படி இருந்தது? அவர் என்ன மாதிரியான கடவுளை வணங்கியிருப்பார்? அவருக்குப் பல் வலி, தலை வலி எல்லாம் வருமா?

தெரியவில்லை. ஆனால் விடை தெரியும்வரை அவர்கள் தேடிக்கொண்டேதான் இருப்பார்கள். பாருங்கள், கிடைத்தது என்னவோ ஒரே ஒரு பெட்டிதான். ஆனால், அதை ஒவ்வொரு முறை திறக்கும்போதும் புதிது புதிதாக நிறைய கற்க முடிகிறது. முதல்முதலில் 1835-ம் ஆண்டு திறந்தபோது அந்த மம்மியைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. இப்போதோ நிறைய தெரிந்துகொண்டிருக்கிறோம். காரணம் நம்முடன் சேர்ந்து அந்தப் பெட்டியும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து பற்றிய நம் அறிவும் வளர்ந்திருக்கிறது, இல்லையா?

இந்தப்  பதிவைத் தந்து உதவிய தோழர் மாலி அவர்களுக்கு நன்றி

Thursday 20 July 2017

மத்திய அமைச்சரவை முடிவு
பொத்துத்துறை ஊழியர்களுக்கு 15 சதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் விபரங்க்கள் பின்னர்.

Wednesday 19 July 2017

சம்பள உயர்வு
இருபத்து நான்கு மணி நேரமும்
இடையறாது மக்கள் பணியாற்றும்
இருநூற்று 33 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்
இந்த மாதம் முதல் சம்பள உயர்வாம்.
இதுவரை மாதம்தோறும் பெற்றது 50000.
இந்த மாதம் முதல் பெறவுள்ளது 1,05,000
இனி உயர்வது மாதம் 50000.
இது மட்டுமல்ல
தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு 2 கோடி

என்பது இனி 2.5 கோடியாம்.

Saturday 8 July 2017

அஞ்சலி

தோழர் ஞானையா


NFPTE சம்மேளனத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தோழர்.

NFPTE சம்மேளனத்தில் பிளவு ஏற்பட்ட போது சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு மீண்டும் ஒரு மனதாக பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆழந்த அறிவாற்றலும்
அபாரமான நினைவாற்றலும் நிறைந்தவர்

நாற்பதுக்கும் மேற்பட்ட பயனுள்ள புத்தகங்களை எழுதியுள்ளார்.

வயதின் காரணமாக இயற்கையான உடல் சோர்வு இருந்தபோதும்சிந்தனையில் இளைஞனாக விளங்கினார்

சிறந்த சமூகச் சிந்தனையாளர்

மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் கலவி மையம் என்ற அமைப்பைத் துவங்கி ஏராளமான தோழர்களை அந்த இயக்கத்தில் இணைய வைத்தார்.

பல ஆண்டுகள் அந்த அமைப்பின் செயலாலராகப் பணியாற்றி தோழர் மதியிடம் அப்பொறுப்பைக் கொடுத்தார்.

97 ஆண்டுகள் வாழ்ந்து 08.07.2017 அன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டார்.

அவரது மறைவுக்கு நமது கொடி தாழ்ந்த அஞ்சலி.

தொழிலாளிகளுக்காக தன்னலம் துறந்து போராட வேண்டும் என்பதே அவர்   வாழ்வு தரும் பாடம். அதுவே இன்று பயில வேண்டிய பாடம்.

Friday 7 July 2017

என்ன கணக்கு


BSNL நிறுவன ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றத்தால்  ஏற்படும் செலவுகள் குறித்து DOT விபரங்களைக் கேட்டுள்ளது.

Wednesday 5 July 2017

சிறப்புடன் நடைபெற்ற பட்டினிப்போர்

03.07.2017 மற்றும் 04.07.2017 ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்ற பட்டினிப்போரில் NFTE, TEPU,SEWA அமைப்புகளைச் சார்நத் தோழியர்களும்  தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

03.07.2017 அன்று TEPU இயக்கத்தின் முன்னணித் தலைவர் தோழர் காசிராஜன் துவக்கி வைத்தார்.
தோழர்கள் மாலி, செல்வராஜன்
பரமேஸ்வரன் (மாவட்டச் செயலர் BSNLEU)
ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர்.

04.07.2017 அன்று  NFTE  மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி துவக்கிவைத்தார்.
கூட்டமைப்பைச் சார்ந்த முன்னணித் தோழர்கள் கருத்துரையாற்றினர்.

மலைவாழ்மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் தோழர் V.P. குணசேகரன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்றம் காண உழைத்திடும் தோழர் சிறுத்தைவளவன், தோழர் சுப்ரமணியம் (AIBSNLEA) தோழர் தனுஷ்கோடி  (AIBSNLEA) தோழர் V.சண்முகம் , (SNEA)
தோழர் T.P.பழனிசமி (SNEA) தோழர் பரமேஸ்வரன் (BSNLEU) ஆகியோர் வாழ்த்துரை வழங்க்கி சிறப்பித்தனர்.
NFTE மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு, TEPU மாவட்டச் செயலர் தோழர் ஷாஜகான் SEWA மாவட்டச் செயலர் தோழர் சதாசிவம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

வாழ்த்துரை வழங்கிய அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.

Monday 3 July 2017

பட்டினிப்போர்

மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான DPE வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிடக் கோரியும்,

மூன்றாவது  ஊதிய மாற்றத்துக்கான பேச்சு வார்த்தையை உடனே துவக்கக் கோரியும்

இன்றும் (03.07.2017)
நாளையும் (04.07.2017)
பட்டைனிபோரில்

திரளாகப் பங்கேற்பீர்.