NFTECHQ

Friday 21 July 2017

ஏச்சுப்  பொழக்கும் பொழப்பே சரிதானா?
பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உட்பட 6 தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் 2010-11 மற்றும் 2014-15 ஆண்டுகளில் தங்கள் வருவாயை ரூ.61.064.5 கோடி அளவுக்கு தங்கள் வருவாயைக் குறைத்துக் காட்டியுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசுக்கு ரூ.7,697.6 கோடி குறைவான வருவாய் வந்துள்ளது.

வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது 6 நிறுவனங்களின் “சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொகையைக் குறைத்துக் காண்பித்தது ரூ.61,064.5 கோடியாகும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் ஆகிய இந்த 5 நிறுவனங்களுக்கான தணிக்கை ஆண்டுக் காலம் 2010-11 முதல் 2014-15 வரை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாறாக, சிஸ்டிமா ஷியாம் நிறுவனத்திற்கான தணிக்கை ஆண்டு 2006-07 முதல் 2014-15 வரையாகும்.

இந்தக் குறைந்த வருவாய் காட்டலினால் அரசுக்குச் சேர வேண்டிய தொகையில் ரூ.7,697.62 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment