NFTECHQ

Thursday 24 August 2017

உச்சக்கட்ட அடாவடித்தனம்

வங்கி ஊழியர்கள் 22.08.2017 அன்று நாடு முழுமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

"வங்கிகள்  இணைப்பு கூடாது" என்பதும் ஒரு கோரிக்கை.

ஆனால் அடுத்த நாளே அதாவது    23.08.2017 அன்று மத்திய அமைச்சரவை கூடி வங்கிகள் இணைப்பை உடனடியாக அமலாக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்கிறது.  அதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு ரிசர்வ் வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.


அரசின் இப்படிப்பட்ட  போக்கு கண்டிக்கத்தக்கது.

Friday 18 August 2017

நன்கொடை?
2012-13 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் 5 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைத் தொகை ரூ.1,070.68 கோடி. இதில் 89% அதாவது ரூ.956.77 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அளித்த நன்கொடையாகும்.

இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடைகளில் பாஜக மட்டும் ரூ.705.81 கோடி பெற்றுள்ளது. அதாவது 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு இந்த நன்கொடையை அளித்துள்ளது.

ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்களின்படி கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகளில் மற்ற 4 கட்சிகள் பெற்றதவிட பாஜக 3 மடங்கு அதிக நன்கொடைகளைப் பெற்றுள்ளது. அடுத்ததாகப் பயனடைந்த தேசியக் கட்சி காங்கிரஸ், இது 167 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ.198.16 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

ஆவணண்ங்களின்படி பகுஜன் சமாஜ் கட்சி இந்தக் காலக்கட்டத்தில் ரூ.20,000த்துக்கும் மேல் நன்கொடையாகப் பெறவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கார்ப்பரே நிறுவனங்களிடமிருந்து ஆகக்குறைந்த தொகையான ரூ.18 லட்சம் கிடைத்துள்ளது. இதனை அளித்தது 17 நிறுவனங்கள்.
பாஜக, காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் கட்சிகளே அதிகம் இத்தகைய நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அதாவது என்னமாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதில்தான் சுவாரசியம் அடங்கியுள்ளது,

பெரும்பாலும் சுரங்கத்துறை, ரியல் எஸ்டேட், மின்சாரம், செய்தித்தாள்கள் மற்றும் பிற வர்த்தக ஆர்வ நிறுவனங்கள்தான் இந்த 3 கட்சிகளுக்கும் அதிக தொகையை நன்கொடையாக அளித்துள்ளன.
மொத்தம் 14 தொழிற்துறைகளிலிருந்தும் அதிக நன்கொடையைப் பெற்றுள்ளது பாஜகதான். இதில் ரியல் எஸ்டேட் துறை சுமார் ரூ.105.20 கோடி, சுரங்கம், கட்டுமானம், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் ரூ.83.56 கோடி, ரசாயனம் மற்றும் மருந்துற்பத்தி நிறுவனங்கள் ரூ.31.4 கோடி என்று பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளன
*********************************************
நமது கருத்து

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இவ்வாறு வெள்ளையாகவே நன்கொடயென்றால் கருப்பாக எவ்வளவு இருக்கும்?

கார்பரேட் நிறுவனங்களிடம் இவ்வாறு நன்கொட பெறும் கட்சி பொத்துத்துறை நிறுவனங் வளர உதவுமா?

வாழத்தான் விடுமா?

நமது ஒற்றுமை அதன் வழியான போராட்டங்கள் மூலமே பொத்துதுறைகளைக் காத்திட முடியும்.

Monday 14 August 2017

விடுதலைத் திருநாள்
வாழ்த்துக்கள்

சிறைக்குள் அடைக்கப்படனர்.
சிறையின் அறைக்குள்ளும்
சிறையின் வெளியிலும்
சித்ரவதைகளை அனுபவித்தனர்.

கொட்டடிச் சிறைக்குள்
கொடுமைகளின் கும்மாளம்.

எண்ணற்ற உயிர்ப்பலிகள்
ஏராளமான தியாகங்கள்

சுதந்திரம் வந்தது.
சுதந்திரம் பெற
சிறைக்குச் சென்று
சித்ரவதை கண்டு
இன்றும் வாழும் சிலருக்கும்
கோட்டை கொத்தளத்தில்
கொடியேற்றும்
வாய்ப்பற்ற நிலை.

ஆனால் ...
சிறைக்குள் இருக்க வேண்டியவர்களுக்கு
கோட்டை கொத்தளத்தில்
கொடியேற்றும் வாய்ப்பு.

கல்வி கற்க வந்த
பாரத மாதாவின்
பச்சிளம் குழந்தைகள்
கல்விக் கூடத்திலேயே
வெந்து செத்தார்கள்.

சாகடித்தவர்களுக்கு
சாதகமான தீர்ப்புக் காற்று.

சுதந்திரப் பிரதேசத்தில்
சுவாசம் தரும் காற்றின்றி
சுவாசத்தை இழக்கும்
பாரத மாதாவின்
பச்சிளம் குழந்தைகள்.

இப்படி பல சிந்தனைகள் நம
இதயத்தைச் சிதைத்தாலும்
நம்பிக்கைக் இழக்காமல்
நடைபோட வேண்டிய கட்டாயச் சூழல்.

எல்லாம் மாறும்
ஏற்றம் சேரும்.
உணர்வுகளை உள்ளுக்குள் வைத்து
அறிவைப் பயன்படுத்தி
நாட்டுக்கு ...
நாட்டு மக்களுக்கு...
நம்மால் ஆனதைச் செய்வோம்.

வேளிவியால் வந்த விடுதலையை
விடுதலையால் பெற்ற
உரிமைகள் காப்போம்.

அனைவருக்கும்
விடுதலயத் திருநாள்

வாழ்த்துக்கள்.

Wednesday 9 August 2017

இது மாற்றமா?

அமைச்சருடன் சந்திப்பு
BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 08.08.2017 அன்று டெல்லியில் BSNL ஊழியர்கள் அதிகாரிகள் தேசியகூட்டமைப்பு சார்பாக இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்ற மேலவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா அவர்களால் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்டது. NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில் கூட்டமைப்புத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் தோழர் குப்தா காலத்தில் நட்ந்ததில்லை.

பேச்சுவார்த்தை நடைபெறும்.
தேவையெனில் போராட்டம் நடைபெறும்.
உடன்பாடு வரும்.
உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

இது மாற்றமா?

Friday 4 August 2017


பவளவிழா வாழ்த்துக்கள்
அன்பு தோழர் ஆர்.கே. அவர்களுக்குக்கு உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். 


மிகச் சிறந்த தொழிற்சங்கப் போராளியாக செயல்பட்ட தோழர் ஆர்.கே. நாளை நடைபெறும் விழா சிறக்க வாழ்த்துக்கள்.