NFTECHQ

Saturday 9 December 2017

வேலைநிறுத்தம்
தவிர்க்க முடியாததே

ஊதிய மாற்றத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணமுடியாதா? எதற்கு வேலைநிறுத்தம்?

பேச்சு  வார்த்தைக்கு சில அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதற்குப்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. தொழிற்சங்கங்களின் கருத்தையும் கேட்கவில்லை.CMD கனிவோடு இருக்கிறார். அமைச்சர் ஆதரவாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் எந்த ஒரு துவக்கமும் இல்லாமல் இருப்பது ஏன்?

அரசு எந்த உதவியும் செய்யாது என கை விரித்து விட்டது.
அத்தோடு "நிறுவனத்தின் கொடுக்கும் திறன், கொடுத்தபின் செலவைத் தாங்கும் திறன்" என்ற அம்சங்க்களோடு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அமைச்சரும் CMDயும் மாற்ற முடியுமா?

BSNL நிறுவனம் ஊதிய மாற்றத்துக்கான செலவைச் சமாளித்துக் கொள்ளும் என CMD எழுத்து பூர்வமாக்ச் சொன்ன பின்னரும் DOT அதை ஏற்காமல் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவிக்கிறது.

வேலைநிறுத்தம் என அறிவிப்பு கொடுத்த பிறகும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண மறுப்பது ஏன்?

ஆகவே சம்பள மாற்றத்துக்கான வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது. அனைத்து அமைப்புகளும் ஒன்றாக உறுதியுடன் போராடினால் மட்டுமே ஊதிய மாற்றம் என்ற கனவு நனவாகும்.

CMD செலவை BSNL சமாளித்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டதால் பிரச்னை தீராதா?

ஊதிய மாற்றம் என்பதில் CMD அவர்களின் அதிகார எல்லை அவ்வளவே. ஏனெனில் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் சம்பந்தப்பட்ட  அமைச்சகத்திடம் அனுமதி பெற்றே தீர வேண்டும். இது வழக்கமானது என்பதோடு மத்திய அமைச்சரவையின் முடிவும் அதுதான். நம்மைப் பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதி தர வேண்டும்.

போராடினால் நிச்சயம் பிரச்னை தீர்ந்து விடுமா?

இன்று பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் போராடித்தான்  பெற்றிருக்கிறோம். யாருடைய கருணையிலும் பெறவில்லை.

பெற்றுவரும் சம்பள்ம், பஞ்ச்சப்படி போறன்றவற்றிற்குப் பின்னால் சிலர் இன்னுயிரை இழந்துள்ளனர்என்பதை மறக்கக் கூடாது. பல தலைவர்களின் தியாக வாழ்வும் பின்னணியில் உள்ளது. முன்னேற்றம் என்பது தானாக வராது.

கடுமையான சூழ்நிலையில் ஒரு மாற்றத்துக்கான போராட்டம் இது என்ற உணர்வோடு களம் காண்போம்.


அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இதுவும் நமது நியாயமும் வெற்றியைப் பெற்றுத் தரும்.

No comments:

Post a Comment