NFTECHQ

Sunday, 22 April 2018

தகவல்
18.4.2018 அன்று  DPE  DOT க்கு  
கடிதம் அனுப்பியுள்ளது.
நிதி  கொடுக்கும் திறன், (AFFORDABILITY)
அதற்கு விதிவிலக்கு பெறுதல் போன்ற அம்சங்கள் குறித்து மத்திய அமைச்சரவைதான்
முடிவு செய்ய வேண்டும். BSNL க்கு விதிவிலக்கு பெற மத்திய அமைச்சரவைக்குத்தான் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.


Saturday, 21 April 2018


ஏப்ரல் 21
பாரதிதாசன் நினைவு தினம்


நேர்மை வளையுது

தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு
நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம்
பலியாச்சு - எங்கும்
வஞ்சகர் நடமாட வழியாச்சு!

சோகச் சுழலிலே
ஏழைச் சருகுகள்
சுற்றுதடா - கண்ணீர்
கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி
இரையாகுதடா - அன்பை
அதிகார வெள்ளம்கொண்டு
போகுதடா
பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா - நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா

Wednesday, 18 April 2018


மாவட்டச் செயற்குழு

ஒத்திவைக்கப்பட்ட மாவட்டச் செயற்குழு 19.04.2018 அன்று நடைபெறும்.

அனைவரும் வாரீர்

Saturday, 14 April 2018


ஏப்ரல் 14
அம்பேத்கர் பிறந்த தினம்
மதத்தின் பெயரால்
சாதியின் பெயரால்
மனிதத்தைச் சிதைக்கும்
மனிதவிலங்குகளை
ஒதுக்குவோம்.


வாழ்த்துக்கள்
அனைவருக்கும்
இனிய
சித்திரைத் திருநாள்
வாழ்த்த்க்கள்

Tuesday, 10 April 2018


மாவட்டச் செயற்குழு ஒத்திவைப்பு

இன்று நடைபெறவிருந்த மாவட்டச் செயற்குழுக் கூட்டம் தோழர் மாரிக்கண்ணு மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்டது.

மாவட்டச் செயாலர் நேற்று (09.04.2018) மாவட்டச் செயற்குழு குறித்து நினைவூட்டியபோது

"நான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மாவட்டச் செயற்குழு சிறக்க வாழ்த்துக்கள்" என தெர்வித்த தோழர் இன்று (10.04.2018) இல்லை.

"நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னூம் பெருமை படைத்தது இவ்வுலகு-" வள்ளுவர்


அஞ்சலி
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமைத்
தோழன் D.மாரிக்கண்ணு
இன்று (10.04.2018) காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை வருத்தத்துடன்  தெரிவிக்கிறோம்.

NFPTE அமைப்பில் E4 சங்கத்தைக் கட்டமைப்பதில் சிறந்த பணியாற்றிய தோழன். கவிந்தப்பாடி கிளையின் செயலராக பல ஆண்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்ட தோழன்.
ஈரோடு மாவட்ட NFTE இயகத்தின்  முன்னணித் தளபதி. தற்போது மவட்டச் சங்கத்தின்  அமைப்புச் செயலர்.. உடல்ந்லக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிலிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

தோழனின் மறைவுக்கு அஞ்சலி.

அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்

Sunday, 8 April 2018


தோழர் குப்தா  பிறந்த தினம்

ஏப்ரல் 8
ஏற்ற்ம் தந்த தலைவனின் 96ஆவது பிறந்த தினம்.
இன்றைக்கும்
என்றைக்கும்
அவர் காட்டிய வழிகள்
பொருத்தமானவையே.
அற்புதமான தலைவனின்
அரும்பெரும் சாதனைகளை
 நினைவில் கொள்வோம்.


மாவட்டச் செயற்குழு
நாள்  10.04.2018 செவ்வாட்க்கிழமை
காலம் காலை 10 மணி
இடம் டெலிபோன்பவன் ஈரோடு

தலைமை தோழர் பாலசுப்ரமணியன்

ஆய்படுபொருள்

அமிர்தசரஸ் அகில இந்திய மாநாடு  
2018- மாற்றல் கொள்கை அமலாக்கம்
ஊழியர் பிரச்னைகள்
இன்ன பிற

அனைவரும் வாரீர்

Thursday, 5 April 2018


மார்ச் மாதமும் மணிமகுடம்
சபாஷ் ஈரோடு

மார்ச் 2018ல் மற்ற நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்தின் பக்கம் ஈர்க்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஊழியர்கள் சிறப்புடன் பணியாற்றியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6,33, 400 வாடிக்கையளர்கள் மற்ற நிறுவனங்களிலிருந்து விலகி BSNL நிறுவனத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதில்  1,31,641 வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்துக்குள் இணைத்து மார்ச் 2018லும் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்று  சாதனை படைத்திருக்கிறது.

இந்த அற்புதமான பணியைச் செய்திட்ட ஈரோடு மாவட்ட ஊழியர்களை வாழ்த்தி பாராட்டுகிறோம்.


வாழ்த்துக்கள்
"ஏர்செல் நிறுவனத்தில் இருந்து BSNLக்கு மாறிவரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்து 5840சிம் கார்டுகள் விற்பனை செய்து தானே முன் வந்து செயல் பட்ட தோழர்களை நமது DGM(CFA)திருTR .ஆறுமுகம் அவர்களும் DE(EXTRANL) அவர்களும் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினர் ஊழியர்களை உற்ச்சாக படுத்திய  நமது அதிகாரிகளுக்கு நன்றிகள் பல. நற்சான்றிதழ்பெற்ற தோழர்களுக்கும் மற்றும் சான்றிதழ் பெறவில்லை என்றாலும் சிம் சேல்ஸ் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துகள் நன்றி பாராட்டுக்கள்

***தோழர் புண்ணிய கோட்டியின் முகநூல் பதிவிலிருந்து***

பாராட்டு பெற்ற தோழர்கள்
1.P.கதிர்வேல் JE
2.R.கணேசன் JE
3.B.மோகன்ராஜ் JE
4. G.வெங்கடேசன் JE
5.A.கண்டியண்ணன் JE
6. A.பத்மனாபன் TT
7.G.சண்முகசுந்தரம் TT
8.S.ஆனந்தன் TT
9.E.V.ராஜேந்திரன் TT
10.D.தினகரன் TT
11.R.காளிமுத்து TT
12.தம்பிக்கலை யன் TT
13.M.வீரன்  ATT


பாராட்டு பெற்ற தோழர்களுக்க்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
தோழர்களுக்கு உறுதுணையாக தோள்கொடுத்து பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றும் தோழர்களுக்கும் பாராட்டுக்கள்வாழ்த்துக்கள்
வேண்டுகோள்
மாவட்டம் முழுமையும் சிறப்புடன் பணியாற்றிய அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்க  வேண்டும்.

Tuesday, 3 April 2018


MNP நிலை மார்ச் 2018

மாவட்டம்
BSNL க்கு
உள்ளே
BSNL க்கு
வெளியே
நிகரம்
+/-
கோவை
108602
1738
106864
கடலூர்
24312
634
23678
குடந்தை
17332
443
16889
தர்மபுரி
26918
950
25968
ஈரோடு
131641
757
130884
காரைக்குடி
10601
388
10213
மதுரை
28014
911
27103
நாகர்கோவில்
29255
852
28403
நீகைரி
2912
246
2666
புதுவை
5444
413
5031
சேலம்
69862
1290
68572
தஞ்சை
23477
388
23089
திருச்சி
70781
679
70102
தூத்துக்குடி
19835
534
19301
நெல்லை
46238
980
45258
விருதுநகர்
7608
655
6953
வேலூர்
10568
1215
9353
மொத்தம்
633400
13073
620327

Monday, 2 April 2018


இரங்கல்

NFTE தமிழ் மாநிலச் செயலர் தோழர் நடராஜன் அவர்களின் தாயார் இயற்கை எய்தினார் என்பதை வருத்த்துடன் தெரிவிக்கிறோம்.

அவரது மறைவுக்கு நமது அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.

அன்னையை இழந்திருக்கும் தோழர் நடராஜன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, 31 March 2018


வாழிய பல்லாண்டு
31.03.2018 அன்று பணி ஓய்வு பெறும்
1.தோழர் M.பாஸ்கரன் கணக்கியல் அதிகாரி
2. தோழர் C. ரவிக்குமார் சீனியர் டெக்னிகல் சூப்பர்வைசர்
3.தோழர் N.ஆறுமுகம் டெலிகாம் டெக்னீசியன்
4. தோழியர் K.முத்துலட்சுமி டெலிகாம் டெக்னீசியன்
5. தோழியர் P.அருக்காணி டெலிகாம் டெக்னீசியன்
6. தோழர் K.C.ஜாய் டெலிகாம் டெக்னீசியன்
7.B. ஷாஜகான் டெலிகாம் டெக்னீசியன்
8. தோழர் M. சுப்ரமணியன்டெலிகாம் டெக்னீசியன்
9. தோழர் P. பாலகிருஷ்ணன் டெலிகாம் டெக்னீசியன்
10.S. வெங்கடசுப்புலட்சுமி உதவி டெலிகாம் டெக்னீசியன்
ஆகியோர்
 நலமுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்


0.3 சதவிகிதம்
01.04.2018 முதல் விலைவாசிப்படி 0.3 சதவிகிதம் உயரும்.

Friday, 23 March 2018


மார்ச் 23
பகத்சிங்- ராஜகுரு-சுகதேவ்
நினைவுதினம்
போராளிகளின்வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்து காட்டியவர்கள்.

Thursday, 22 March 2018


மார்ச் 22
உலக தண்ணீர் தினம்
அந்நாளில் நீர்நிலைகளை உயிரெனக் காத்தனர். இந்நாளில் ஏரி மூடி வீடு கட்டி பணம் பார்க்கிறார் கள். வெப்பமும் வறட்சியும் கைகோர்த்து நீரின்றி வாட்டுகிறது.

தண்ணிரைச் சேமிப்போம் என்பது மக்களுக்கான அறிவுரை.

ஆனால் மழை நீரைச் சேமிக்கும் திட்டம் உண்டா?

மழையால் மடியும் மக்களும் உண்டு. மழையின்றி மடியும் மக்களும் உண்டு. இந்த அவல நிலையை உருவாக்கியோர் தண்டனைக்குரியவர்களே.
நதிகளை இணைக்கும் திட்டம் என்பது தேர்தலின்போது மட்டும் வாக்குறுதிகளாய் வலம் வருகிறது.

குடிநீருக்காகவே ஒரு நாளின் பெரும்பகுதியச் செலவிட்டு வாழும் நிலை இங்கே.    

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தண்ணீரை தாரைவார்த்து பகல் கொள்ளையடிக்கும் பாதகர்களும் இங்கெ.

வீட்டுக்கு வீடு
கெருவுக்குத் தெரு
ஊருக்கு ஊர்
நாட்டுக்கு நாடு
என பிரச்னை உண்டாகி
மூன்றாவது உலகப்போர் உருவானால் அது தண்ணிருக்ககவே இருக்கும் என்கின்றனர் புவிசார் வல்லுநர்கள்.

என்ன செய்ய? இருப்பதைக் காத்து வாழ்பவதைத்தவிர வெறென்ன வழி நமக்கு.


அஞ்சலி
NFTE  பேரியக்கத்தின் கர்னாடக மாநிலத் தலைவரும், பெங்களுரில் இயக்கத்தை வலிமையுடன் வழிநடத்திய தளபதியுமான தோழர் கிருஷ்ணமோகன்  உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி ஆழ்ந்த  வருத்தமளிக்கிறது.

தோழரை இழந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கர்னாடக மாநில NFTE தோழர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைக் கணிக்கையாக்குகிறோம். தோழர் மோகனைன் மறைவுக்கு நமது செவ்வணக்கம்.


Wednesday, 21 March 2018


CHECK OFF SYSTEM என்றால் என்ன?

தொழிற்சங்க அங்க்கீகாரத் தேர்தலை CHECK OFF SYSTEM மூலம் நடத்தலாம் என்ற கருத்தை நிர்வாகம் 15.03.2018 அன்று தெரிவித்தது. இது குறிதது 30.03.2018க்குள் கருத்து தெரிவிக்குமாறு NFTE, BSNLEU, AIBSNLEA மற்றும் SNEA அமைப்புகளிடம் கேட்டிடுந்தது.

இது குறித்து மேலும் ஒரு விளக்கத்தை 21.03.2018 அன்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அது யாதெனில்

"சில மாநிலங்களிலிருந்து CHECK OFF SYSTEM  குறித்து  விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்காகவே இந்த விளக்கம். ஒவ்வொரு ஊழியரும் எந்த சங்கத்துக்கு சம்பளத்தில் சந்தா பிடித்தம் செய்யலாம் என்று எழுத்துபூர்வமாக வரையறுக்கப்பட்ட படிவத்தின் மூலமாக குறிப்பிட்ட அதிகாரியிடம்DDO-AO (DRAWAL) அளிக்கின்றனர். இந்த அடிப்படையில் ஊழியரின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் சந்தா பிடித்தம் செய்யப்படுகிகிறது. ஒரு ஊழியர் ஒரு சங்கத்திற்கு மட்டுமே சந்தா பிடித்தம் செய்ய விருப்பம் தெரிவிக்க முடியும். இந்தக் கணக்கீடுகளைச்  சேகரித்து அந்தத் தகவல்களின் அடிப்படியில் பெரும்பான்மைச் சங்கம்  எது என்பது முடிவு செய்யப்படும்"

**************************************************************************************
ஆகவே இது சொல்லும் செய்தி யாதெனில் உறுப்பினர் சர்பார்ப்புத் தேர்தல் என்ற ஒன்று வழக்கமான முறையில் நடக்காது. தேர்தலுக்கென்று சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலை கிடையாது. செலவும் கிடையாது.

பத்து நிமிடங்களில்மாவட்டத்திலுள்ள அதிகாரி தகவலைச் சேகரித்து மின்னஞ்சல் மூலம் மாநில அலுவலத்துக்கு அனுப்பி விடுவார்.

அதிகபட்சம் ஒருமணிநேரத்துக்குள் மநிலத்திலிருந்து கார்ப்பரேட் அலுவலத்திற்கு தகவல் அனுப்பப்பட்டு விடும்.

இது குறித்து தலைவர்கள் விவாதித்து நல்ல முடிவினை எடுப்பார்கள் .

Monday, 19 March 2018


வாழ்த்துக்கள் தோழ்ர் மதி
அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் உதவித்தேர்வு செய்யப்பட்ட தோழர் மதிக்கு ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மாநாடு சிறக்கவும், ஒருமித்த கருத்தை உருவாக்கி, ஒரு மனதான நிர்வாகிகள் தேர்வு நடைபெற ஒப்பற்ற பணிசெய்த தோழர் மதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் தோழ்ர் பழனியப்பன்
அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் உதவித்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தோழர் பழனியப்பனுக்கு ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


வாழ்த்துக்கள் தோழ்ர் காமராஜ்
அமிர்தசரஸ்  அகில இந்திய மாநாட்டில் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட தோழர் காமராஜுக்கு ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் தோழ்ர் செம்மலமுதம்

அமிர்தசரஸ்  அகில இந்திய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் செம்மலமுதத்துக்கு ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இரங்கல்
தஞ்சை முன்னாள் மாவட்டச்செயலரும்
அடிமட்ட ஊழியர்களின் வாழ்விற்காகப் போராடியவரும்
NFTE
இயக்கத்தின் தஞ்சைப்பகுதியின் 
தன்னிகரற்ற தலைவருமான
தோழர்.L.சந்திரபிரகாஷ் அவர்கள் 
18/03/2018
அன்று தனது 64வது வயதில் 
இயற்கை எய்தினார்.
அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.