NFTECHQ

Thursday, 18 January 2018

ஜனவரி 18
தோழர் உயிரின்பன்
 நினைவு தினம்

சுதந்திரப் போராட்ட வீரர்.
கந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.
பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளின் மீது தாக்கம் கொண்டவர்.
பெரியாரின் ஆலோசனையை ஏற்று "நான் ஏன் நாத்திகன் ஆனேன்" என்று பகத்சிங் பற்றிய நூலை எழுதியவர்.
காந்தியம்,
காங்கிரஸ்,
சுயமரியாதை இயக்கம்
இப்படிப்பட்ட இய்க்கங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்.
உடன் நின்ற தோழர் ராமமூர்த்தியையும் இணைத்து
ஒன்றுபட்ட பொதுவுடைமை இயக்கத்தில்
இணைந்தார்.

தமிழ்மொழி மீது எல்லையற்ற காதல் கொண்டவர்.

இலக்கியங்கள் மீது பற்றும் அவை குறித்த அறிவும் பெற்றவர்.

பொதுவுடைமை இயக்கக் கூட்டங்க்களில் முதன்முதலில் இலக்கியம் பேசியவர்.

தொழிலாளர்களுக்காக,
விவசாயிகளுக்காக்,
விவசாயத் தொழிலாளர்களுக்காக
பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாத போராளி.

ஏறத்தாழ பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர்.

சுரண்டலுக்கு எதிராக போராடியவர்.

ஆயிரக்கணக்கானோருக்கு  மார்க்சியம் கற்றுத் தந்த ஆசான்.

மார்க்சிய வழியில் போராடும் முறைகளைதொழிலாளிகளுகுக் கற்றுத் தந்தார்.

எளிமைக்கு முதல் உதாரணமாய்த் திகழ்ந்தவர்.
18.01.1963ல் சென்னை தாம்பரத்தில் உயிரின்பனின்உயிர் பிரிந்த்து.
அவரது இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சத்திற்கு  மேல் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தமிழ்மொழியின் மீதிருந்த காதலால் சமஸ்கிருதப் பெயரான ஜீவானந்தம்  என்பதை "உயிரின்பன்"  என மாற்றிக் கொண்டார்.
உயிருள்ள வரை
உயிரின்பன் பாதையை

உள்ளத்தில் ஏந்தி வாழ்வோம்.

Wednesday, 17 January 2018

சத்தியாகிரகம்

அரசின் பணிகளுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது,
அரசின் ஆணைகளை ஏற்க மறுப்பது,
அரசின் அடக்குமுறையை அமைதி வழியில் எதிர்கொள்வது,
நோக்கங்கள் நிறைவேறும் வரை உறுதி கொண்ட நெஞ்சோடு
அற வழியில் அமைதியாகப் போராடுவது  

இதுவே சத்தியசோதனையில் சத்தியாகிரகம் பற்றி அண்ணல் சொல்லியுள்ளதன் சுருக்கமான சாராம்சம்.


31.01.2018 முதல் BSNL   அனைத்து அமைப்புகளின் சத்தியாகிரகம் துவங்குகிறது.
ஜனவரி 17
எம்.ஜி.ஆர் பிறந்த தினம்

தமிழக அரசியலில்
தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய,
ஏழை மக்களின் அன்பையும்
ஆதரவையும் பெற்ற
எம்.ஜி.ஆர்

பிறந்த தினம் இன்று.

Tuesday, 16 January 2018

இரங்கல்
பத்திரிக்கையாளர்,
ஓவியர்,
நாடக ஆசிரியர்,
பதிப்பாளர்,
அரசியல் விமர்சகர்,
தனது கருத்தை எவ்விடத்திலும் துணிச்சலுடன் சொல்லும் ஆற்றல் படைத்தவர்
என பன்முகத்தன்மையாளராக வாழ்ந்த
திரு ஞாநி
மறைந்தார்.

அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்

Saturday, 13 January 2018

இனிய
பொங்கல்

நல்வாழ்த்துக்கள்
ஜனவரி 13

தோழர் அஜாய்குமார் கோஷ்  நினைவு தினம்


ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக  சிறப்பாக பணியாற்றிய தோழர் அஜய் குமார் கோஷ்  நினைவு தினம் இன்றூ.

Friday, 12 January 2018

ஜனவரி 12
விவேகானந்தர் பிறந்த தினம்.


மதம், கடவுள், மனிதம் பற்றி விவேகானந்தர் சொன்ன கருத்துக்கள் இன்றைய சமூகமும், சமூகத்த்தை ஆளுபவர்களும்  மீண்டும் மீண்டும் அறிந்து புரிந்து நடப்பது சமூகத்துக்கு நன்மை விளைவிக்கும்.  

Thursday, 11 January 2018

ஜனவரி 11
திருப்பூர் குமரன் நினைவு தினம்

சென்னிமலையில் பிறந்து
செங்குருதி தந்து
செய்தற்கரிய தியாகங்கள் செய்த
கொடிகாத்த குமரனின் நினைவு தினம் இன்று.

குமரனின் நினைவு தினத்தை அரசு சார்பில் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று அத்தகைய நிகழ்வு எதையும் அரசு நடத்தவில்லை என சென்னிமலை மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


குமரனின் தியாகம் போற்றுவோம்.

Tuesday, 9 January 2018

அனைத்து சங்க அறைகூவல்

BSNL நிறுவனத்த்ன் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டம் 08.01.2018 அன்று டெல்லியில் FNTO சங்க அலுவலகத்தில் FNTO பொதுச்செயலாலர் தோழர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கருத்து பரிமாற்றங்களுக்குப் பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

ஒரு மனதான முடிவுகள்

மகாத்மாவின் மறைவு தினமான ஜனவரி 30 அன்று (30.01.2018) அண்ணலின் சமாதியில் அனைத்துச் சங்கத் தலைவர்களும் அஞ்சலி  செலுத்துதல்.

அன்று முதலே ஐந்து நாட்கள் தொடர்ந்து சத்தியாகிரகம்.


30.01.2018 அண்ணல் காந்தியடிகள் வழியில்
அதிகாரிகளும் ஊழியர்களும் லா;அவரையற்ற ஒத்துழையாமை இயக்கம் மற்றும் விதிப்படி வேலை

28.02.2016 டெல்லியில் சஞ்சார் பவன் (DOT அலுவலகம்) முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டம்.
ருவார காலத்திற்குள் அமைச்சரைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துதல்.
தனிடவர் நிறுவன அமைப்பு பிரச்னையை சட்ட ரீதியாக அணுகுதல்

கோரிக்கைகள்

01.01.2017 முதல் மூன்றாவது ஊதிய மாற்றத்தை 15 சத உயர்வுடன் அமல்படுத்து.

01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து.

தனி டவர் நிறுவன முடிவைக் கைவிடு.

ஓய்வு பெறும் வயது 60 என்பதை 58 ஆகக் குறைக்கும் முயற்சியைக் கைவிடு.

ஒன்றுபட்டு போராடுவோம்.
ஓரணியாய் எழுவோம்.

வெற்றி பெறுவோம்.
போக்குவரத்து ஊழியர் போராட்டம்.

இதைப் படித்தால்....
"நெஞ்சு பொறுக்குதிலையே" 
என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன

படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Monday, 8 January 2018

அகில இந்திய மாநாடு

நமது சங்கத்தின் அகில் இந்திய மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில்
எதிர்வரும் 2018 மார்ச் 14 முதல் 16 வாரை
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளைகளின் பொதுக்குழு நடத்தி சார்பாளர் தேர்வுகள் போன்ற பணிகளை விரைந்து முடித்திடல் வேண்டும்.


பயணத்துக்கான டிக்கெட் பதிவுகளை இதுவரை செய்யாதவர்கள் விரைந்து செய்ய வேண்டுகிறோம்.  

Sunday, 7 January 2018

ஜனவரி 7


தோழர் ஞானையா பிறந்த தினம்

Friday, 5 January 2018

ஓ.பி.குப்தா எனும்
ஒளிபவிளக்கு

ஜனவரி 6 - தியாக வரலாற்றின் நினைவு நாள்


அச்சம்  அகற்றிய தலைவன்.
ஆற்றல் ஊற்றெடுத்த  தலைவன்.
இடர்களைத் தடுத்திட்ட  
ஈடற்ற தலைவன்.
உண்மையை மட்டுமே உரைத்து
ஊழியர்களை முன்னேற்றிய தலைவன்.
எழுபது ஆண்டுகள் உழைத்து
ஏற்றங்ககள் பல தந்த தலைவன்.
ஐந்தாண்டு காலம்  ஓடிவிட்டன--நீயின்றி
ஒப்ப்ற்ற சிந்தனையாளனாய்
ஓங்கு புகழுடன் வாழும் தலைவன்  நீதானே... நீதானே...

இன்று பணியில் உள்ள 75 சத ஊழியர்களுக்கு வாழ்வென்ற ஒன்றை வழங்கிட்ட தோழர் குப்தாவின் ஐ ந்தாவது நினைவு தினம் இன்று.

ஓய்வு பெற்ற லட்சக்கணக்கானோருக்கு ஓய்வூதியம் பெற்றுத் தந்த இலட்சியத் தலைவன் தோழர் குப்தாவுக்கு  மீண்டும் மீண்டும் நன்றி சொல்வோம்

மீண்டும் ஆர்ப்பாட்டம்
தனி டவர் நிறுவனம் அமைக்கும்
முடிவை எதிர்த்து 08.01.2018 அன்று ஆர்ப்பாட்டம்.


அனைத்துச் சங்க   அறைகூவல்
வாழ்த்துக்கள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்
நிகழ்வுகள்

06.01.2018- தமிழ் மாநிலச் சங்கம் நடத்தும் மாவட்டச் செயலர்கள் கூட்டம்

06.01.2018- சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம் நடத்தும் தோழர் குப்தாவின் ஐந்தாவது நினைவஞ்சலிக் கூட்டம்


08.01.2018  - BSNL அனைத்துச் சங்கத் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்

Wednesday, 3 January 2018

விரைந்த செயல்பாடு தேவை

தனி டவர் கம்பெனி துவக்கும் அரசின் முடிவை எதிர்த்து டிசம்பர் 12, 13 தேதிகளில்
இரண்டு நாட்கள்  லட்சக்கணக்கான ஊழியர்களும் அதிகாரிகளும்
வேலைநிறுத்தம் செய்தனர்.

போராடியவர்களின் உணர்வை சிறிதும் மதிக்கவில்லை இந்த அரசு.

தனிடவர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு (CMD) திரு. அமித்   யாதவ் என்பவரை நியமனம் செய்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆழமாக விவாதித்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம்.


தோழர் குப்தா சில அனுபவங்களை விட்டுச் சென்றுள்ளார். அவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்.
தினமும் ஒருலட்சம் அபராதம்Tuesday, 2 January 2018

புத்தாண்டுப்பரிசு?!?!

தரைவழித்தொலைபேசியில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவச அழைப்புகள் தரப்பட்டு வந்தன.

இந்த வசதியை ஒரு காரணியாக வைத்தே கணிசமான வாடிக்கையாளர்கள்   தரைவழித்தொலைபேசி  இணைப்பை பயன்படுத்தி வந்தனர்.

இந்த வசதியை ஒரு காரணியாக வைத்தே புதிய இணைப்புகளையும் பெற்றனர்.

இந்த வசதியை ஒரு முக்கிய காரணியாக வைத்தே அதிகாரிகளும் ஊழியர்களும் புதிய இணைப்புகளுக்கான மார்க்கெட்டிங்க் செய்தனர்.

தற்போது இநத வசதி 01.01.2018 முதல் இரவு 10.30 மணியிலிருந்து காலை 6 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

இதுதான் ஒருவேளை புத்தாண்டுப் பரிசோ?


இதன் மூலம் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதே நமது கணிப்பு.
தோழர் பரதன்
15 வயதில் கம்யூனிஸ்ட் ஆகி,
மாணவர் பெருமன்றத்தில் பொறுப்பேற்று, முதுகலைப் பட்டமும் பிறகு சட்டமும் பயின்று,
1952
ம் ஆண்டிலேயே மகாராஷ்ட்ரா எம்எல்ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டு, தொழிலாளர்களைத்திரட்டி, போராடி, தொழிற்சங்கத் தலைவராகி, 
மார்க்சிய மெய்யியலில் நுண்புலமை கொண்டு சித்தாந்தவாதியாகி, 
வர்க்கம்-சாதி பிரச்சினைகளில் பெரும் பங்களிப்பைத் தந்து, 
கவித்துவமும் நையாண்டியும் தரவுகளும் எளிமையும் கொண்ட 
தீவிரச் சொற்பொழிவாளராக எழுத்தாளராகச் சலிக்காமல் உழைத்து, கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஏஐடியூசிக்கும் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து, உலகத்திலேயே 21ஆம் நூற்றாண்டில் முதலாவதாக கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தை எழுதித் திருத்திக் கொடையாகத் தந்த

தோழர் பரதனின்
2
ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று