NFTECHQ

Thursday 18 January 2018

ஜனவரி 18
தோழர் உயிரின்பன்
 நினைவு தினம்

சுதந்திரப் போராட்ட வீரர்.
கந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.
பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளின் மீது தாக்கம் கொண்டவர்.
பெரியாரின் ஆலோசனையை ஏற்று "நான் ஏன் நாத்திகன் ஆனேன்" என்று பகத்சிங் பற்றிய நூலை எழுதியவர்.
காந்தியம்,
காங்கிரஸ்,
சுயமரியாதை இயக்கம்
இப்படிப்பட்ட இய்க்கங்கள் மீது ஈடுபாடு கொண்டவர்.
உடன் நின்ற தோழர் ராமமூர்த்தியையும் இணைத்து
ஒன்றுபட்ட பொதுவுடைமை இயக்கத்தில்
இணைந்தார்.

தமிழ்மொழி மீது எல்லையற்ற காதல் கொண்டவர்.

இலக்கியங்கள் மீது பற்றும் அவை குறித்த அறிவும் பெற்றவர்.

பொதுவுடைமை இயக்கக் கூட்டங்க்களில் முதன்முதலில் இலக்கியம் பேசியவர்.

தொழிலாளர்களுக்காக,
விவசாயிகளுக்காக்,
விவசாயத் தொழிலாளர்களுக்காக
பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாத போராளி.

ஏறத்தாழ பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர்.

சுரண்டலுக்கு எதிராக போராடியவர்.

ஆயிரக்கணக்கானோருக்கு  மார்க்சியம் கற்றுத் தந்த ஆசான்.

மார்க்சிய வழியில் போராடும் முறைகளைதொழிலாளிகளுகுக் கற்றுத் தந்தார்.

எளிமைக்கு முதல் உதாரணமாய்த் திகழ்ந்தவர்.
18.01.1963ல் சென்னை தாம்பரத்தில் உயிரின்பனின்உயிர் பிரிந்த்து.
அவரது இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சத்திற்கு  மேல் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தமிழ்மொழியின் மீதிருந்த காதலால் சமஸ்கிருதப் பெயரான ஜீவானந்தம்  என்பதை "உயிரின்பன்"  என மாற்றிக் கொண்டார்.
உயிருள்ள வரை
உயிரின்பன் பாதையை

உள்ளத்தில் ஏந்தி வாழ்வோம்.

No comments:

Post a Comment